"நான் முதல்வன் குளறு படி! நக்கீரனால் கிடைத்த மார்க்!' என்ற தலைப்பில் கடந்த ஆகஸ்ட் 17-20 இதழில் செய்தி வெளியிட்டிருந்தோம். அச்செய்தி குறித்து முதல்வர் அலுவலகத்திலிருந்து உயர்கல்வித்துறை அமைச்சரிடம் விசாரித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து வேலூரிலுள்ள ஆர்.ஜே.டி. நேரடியாக திருவண்ணாமலை கலைஞர் கருணாநிதி அரசு கலைக் கல்லூரிக்கு வந்து 21ஆம் தேதி கல்லூரி முதல்வர் கணேசனிடம் விசாரணை நடத்தினார். விசாரணையின்போது, நாம் செய்தியில் குறிப்பிட்டிருந்தது உண்மை எனத் தெரியவந்தது.

Advertisment

இதுபற்றி நம்மிடம் பேசிய கல்லூரி ஊழியர்கள் சிலர், "அவர் இந்த கல்லூரியின் முதல்வரானபின், இங்கு அரசியல் செய்யத் தொடங்கியதால் இந்த மூன்றாண்டுகளில் கல்லூரியின் தரம் குறைந்து 300வது இடத்துக்கு போய்விட்டது. அ.தி.மு.க.வை சேர்ந்த முன்னாள் அமைச்சரும், போளூர் தொகுதி எம்.எல்.ஏ.வுமான அக்ரி.கிருஷ்ணமூர்த்தியை சந்தித்து சால்வை அணிவித்தார். இதேபோல் வி.சி.க. தலைவர் திருமாவளவன், திருவண்ணாமலை தொகுதி எம்.பி. அண்ணாதுரை ஆகியோரிடமும் சிறப்பாகப் பணியாற்றுவ தாகக் கடிதம் வாங்கி வைத்துக்கொண்டார். கட்சி நிர்வாகிகள் யாராவது கல்லூரிக்குள் சிபாரிசுக்கு வந்தால் 'இதோ பாருங்க, உங்க கட்சித் தலைவரே எனக்கு பாராட்டுச் சான்றிதழ் தந்துருக்காங்க' எனக் கூறுவார்.

Advertisment

ss

சென்னை பல்கலைக்கழகத்தின் தொலைதூரக் கல்வி மையத்தின் தேர்வு மையமாக அரசு கல்லூரி இருந்துவந்தது. தேர்வு மையமாக இருக்க விரும்பவில்லையென்று கடிதம் அனுப்பினார். இதனைப்பார்த்து அதிர்ச்சியாகி, இவரை சென்னை பல்கலைக்கழக அதிகாரிகள் கேள்வி எழுப்பியதும், மன்னிப்பு கேட்டார். அரசுத்துறையில் புரமோஷனுக்காக தேர்வு எழுதுபவர்களிடம் பணம் வாங்கிக்கொண்டு தேர்வெழுத வைத்தார். தொலைதூரக் கல்வியில் டிகிரி தேர்வு எழுதியவர்களிடம், பேப்பருக்கு இவ்வளவெனப் பணம் வாங்கிக்கொண்டு தேர்வெழுதச்செய்தார். இதில் பணம் பங்கு பிரிப்பதில் தகராறு வர, முதல்வரை ஸ்டடி சென்டர் நடத் துபவர் அசிங்க அசிங்கமாகத் திட்டிச்சென்றார். சமீபத்தில் சுதந்திர தின விழாவை முன்னிட்டு கவர்னர் டீ பார்ட்டி தந்தபோது அதில் கலந்துகொண்டு, அவரை வணங்குவது போல் போட்டோ எடுக்கச்செய்து வாட்ஸப் குரூப்களில் பரப் பினார். இப்படி பல குற்றச்சாட்டுகள் அவர்மீது உயர்கல்வித் துறை அமைச்சகத்துக்கு சென்றன. இவர் மீதான குற்றச் சாட்டுகள் குறித்து அதிகாரிகள் யார் கேள்வி கேட்டாலும், "நான் மாற்றுத்திறனாளி, என்னை டார்ச்சர் செய்கிறார்கள்' என்று மாற்றுத்திறனாளி அலுவலகத்துக்கு, கலெக்டர் அலு வலகத்துக்கு புகாரனுப்பி மிரட்டுவார். இவரால் மாணவ, மாணவிகளின் கல்வி தான் பாதித்தது. நக்கீரன் செய்தி மூலமாகத்தான் ஒரு மாற்றம் வந்துள்ளது'' என்றார்கள்.

நக்கீரன் செய்தி உட்பட அவர் மீதான குற்றச்சாட்டு கள் குறித்த அறிக்கை உயர்கல்வித் துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து கணேசன் இடமாற்றம் செய்யப்பட்டு ரேவதி என்பவர் புதிய முதல்வராக்கப்பட்டுள்ளார்.

Advertisment