கடந்த 2020 ஏப்ரல் 29- மே 1 இதழில் "இன்னொரு பொள்ளாச்சி! ஆளுந்தரப்பு பின்னணியில் பெண் களை மயக்கி ஆபாச வீடியோ-ப்ளாக்மெயில்! சிக்கிய காமுகன்!'’ என்னும் தலைப்பில், நாகர்கோவில் காசி நடத்திய பெண்கள் வேட்டை குறித்து முதன் முதலில் அம்பலப் படுத்தியது நக்கீரன். கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த முழு ஊரடங்கைக் கடைப் பிடித்து கடைகள் அடைக்கப்பட்டு மக்கள் வீட்டுக்குள் முடங்கிய நிலையிலும்கூட, ‘காசி எத்தனை கொடூரமான காமுகன்?’ என்பதைப் புலனாய்வு செய்து, கவர்-ஸ்டோரியாக நக்கீரன் இணையத்தில் தொடர்ந்து வெளியிட் டோம். ஊரடங்கு தளர்வான நிலையில், நக்கீரன் இதழிலும் காசி விவகாரத்தை அட் டைப்படக் கட்டுரை களாக வெளியிட்டு வந்தோம்.
காசி வழக்கை முதலில் விசாரித்த காவல்துறையும் சரி.. சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாறிய பிறகும் சரி.. ‘ஏதோ ஒரு செல்வாக்கில் காசி தப்பிவிடக் கூடாது’ என்று புலனாய்வுத் தகவல் களை அள்ளிக் கொட்டி, காவல் துறையின் விசா ரணையை முடுக்கி விட்டு, காசி சிறைக்குள் தள்ளப் படும்வரை நக்கீரன் காட்டிய வேகமே, அந்த வழக்கில் அவனுக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை வாங்கித் தந்திருக்கிறது.
பாளையங்கோட்டை சிறையிலிருந்து நாகர்கோவில் மகிளா கோர்ட்டுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்துவரப்பட்ட காசி, வெள்ளை வேட்டி, வெள்ளைச் சட்டை, வெள்ளை மாஸ்க் அணிந்து அர சியல்வாதி கெட்டப்பில் இருந்தான். தன்னை வேடிக்கை பார்த்தவர்களை இரு கைகளாலும் கும்பிட்டபடியே கோர்ட்டுக்குள் நுழைந்தான். தண்டனை விபரத்தை மகிளா கோர்ட் நீதிபதி ஜோசப்ஜாய் அறிவித்தபோது, கைகளால் முகத்தைத் துடைத்தபடியே சோர்வானான். காசியைப் பார்ப்பதற்கு அவனுடைய பெற்றோரோ, உறவினர்களோ கோர்ட்டுக்கு வரவில்லை.
பெண் மருத்துவர், பள்ளி, கல்லூரி மாணவிகள், இளம்பெண்கள், குடும்பப் பெண்கள் என நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களைச் சீரழித்து வீடியோவும் எடுத்து மிரட்டிய காசிக்கு 7 வழக்குகளில் ஜாமீன் கிடைத்த நிலையில், 22 வயது இளம்பெண் நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் பதிவான பலாத்கார வழக்கில் மட்டும் ஜாமீன் கிடைக்கவில்லை. அந்த வழக்கில்தான் 3 பிரிவுகளின் கீழ் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. பலாத்கார குற்றத்துக்காக சாகும்வரை ஆயுள் தண்டனை மற்றும் அபராதம் ரூ.1 லட்சம், இளம்பெண்ணை அந்தரங்க வீடியோ எடுத்த குற்றத்துக்காக 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் ரூ.10,000 அபராதம், கொலை மிரட்டல் விடுத்த குற்றத்துக்காக மூன்றாண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு, ஏககாலத்தில் இந்த தண்டனையை அனுபவிக்கவேண்டு மெனத் தீர்ப்பில் குறிப்பிடப் பட்டுள்ளது.
தன் வலையில் வீழ்த்திய இளம் பெண்களிடம், 10 ரூபாய் நாணயம் அளவில் பின்பக்க இடுப்பில் ஆர்ட் டின் சிம்பலை டாட்டூவாக போட வைத்திருந்தான் காசி. அவர்களில் பலர் திருமணமான நிலையிலும் கூட, நிம்மதி இழந்து தவிக்கின்றனர். "காசிக்கு சிறையில் ஆயுள் தண்டனை என்றால், எங்களுக்கோ வீட்டுக்குள் ஆயுள் தண்டனை...'’என புலம்புவ தாக காசியின் நட்பு வட்டத்திலிருந்து தகவல் கசியும்போது... இவனுக்கு இந்த தண்டனை போதாது’ என்றே பலருக்கும் மனது அடித்துக்கொள்கிறது.