"கிளுகிளு உலக மான குளுகுளு கொடைக் கானல்!' என்ற தலைப்பில் பிப். 12-14 தேதியிட்ட நமது நக்கீரனில் செய்தி வெளியானதுமே மலைப் பிரதேசம் முழுவதும் பரபரப்பானது. இதழ் வெளியான மறுநாளே போதை ஸ்பாட்டான குண்டுப்பட்டி கிராமத் திற்கு விசிட் அடித்து, லோக்கல் மக்களின் கொந்தளிப்பையும் போதைக் கும்பலின் நெட் ஒர்க்கையும் "போதை இளசுகள்! டெண்டுக்குள் சீரழியும் பெண்கள்! தமிழக பயங்கரம்!'’ என்ற தலைப்பில
"கிளுகிளு உலக மான குளுகுளு கொடைக் கானல்!' என்ற தலைப்பில் பிப். 12-14 தேதியிட்ட நமது நக்கீரனில் செய்தி வெளியானதுமே மலைப் பிரதேசம் முழுவதும் பரபரப்பானது. இதழ் வெளியான மறுநாளே போதை ஸ்பாட்டான குண்டுப்பட்டி கிராமத் திற்கு விசிட் அடித்து, லோக்கல் மக்களின் கொந்தளிப்பையும் போதைக் கும்பலின் நெட் ஒர்க்கையும் "போதை இளசுகள்! டெண்டுக்குள் சீரழியும் பெண்கள்! தமிழக பயங்கரம்!'’ என்ற தலைப்பில் பிப். 15-18 தேதியிட்ட இதழிலும் பதிவு செய்திருந்தோம்.
இந்த பரபரப்பு அடங்குவதற்குள், "பூம்பாறையில் "க்ளப் இந்தியா' என்ற பெயரில் சொகுசு விடுதி நடத்தும் கலை நிகழ்ச்சி பிப்.13—லிருந்து 16-வரை நடைபெறும்' என்ற அறிவிப்பால் கேரளா, ஆந்திரா, கர்நாடகா போன்ற வெளி மாநிலங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் வந்திருந்த 500-க்கும் மேற்பட்டோர் அங்கு குவியத் தொடங்கினார்கள்.
கலை நிகழ்ச்சினா ஒரு நாள்தானே, இதென்ன மூணுநாள் என சந்தேகப்பட்ட டி.எஸ்.பி. ஆத்மநாதன், இன்ஸ்பெக்டர் ராஜசேகர் ஆகியோர் 50 பேர் கொண்ட போலீஸ் படையுடன் பூம்பாறைக்குச் சென்று அனைவரையும் திருப்பி அனுப்பினார்கள். இதனால் மனம் நொந்த போதை பார்ட்டிகளின் பிரஷ்ஷரால் மதுரை ஐகோர்ட்டுக்குச் சென்று நிகழ்ச்சி நடத்த அனுமதி வாங்கி வந்தது க்ளப் இந்தியா.
இதை உடனடியாக தெரிந்துகொண்டு அதிர்ச்சியான எஸ்.பி. சக்திவேல், டி.எஸ்.பி. ஆத்மநாதனைத் தொடர்பு கொண்டு, உடனே போய் ஸ்டே வாங்குமாறு உத்தரவிட்டார். குண்டுப் பட்டியில் டெண்ட் அடித்து போதை ஆட்டம் போட்டதையும் செக்ஸ் டூரிஸ்ட் ஸ்பாட்டாக கொடைக்கானலை மாற்றும் கும்பலின் அட்டகாசத்தையும் அம்பலப்படுத்திய நமது நக்கீரனின் செய்தியை மதுரை ஐகோர்ட்டில் சமர்ப்பித்து ஸ்டே வாங்கியது காவல்துறை.
இது குறித்து டி.எஸ்.பி. ஆத்மநாதனிடம் நாம் பேசியபோது, ""சரியான நேரத்துல எங்க எஸ்.பி. சார் சுதாரிச்சு எங்களுக்கு உத்தர விட்டதாலதான் எங்களால் ஸ்டே வாங்க முடிஞ்சது. இந்த ஸ்டேயை வாங்குவதற்கு முக்கிய காரணம் நக்கீரன் செய்திதான். இனிமேல் இந்த மலைப் பகுதியில் இருக்கும் ரிசார்ட்டுகள், நட்சத்திர ஓட்டல்களில் எந்தவிதமான கலை நிகழ்ச்சிக்கும் அனுமதி கொடுக்க மாட்டோம். போதையில் இளைஞர்களும் இளம் பெண்களும் சீரழிவதை தடுத்தே தீர்வோம்'' என்றார் உறுதியுடன்.
-சக்தி