எந்தச் சூழலிலும் சூழ்ச்சிகளை சட்டப் போராட்டத்தின் மூலம் வென்றெடுக்கும் நக்கீரன், இந்தமுறையும் அதை நீட்டித்திருக்கிறது. சமூகநீதியை நோக்கிய நக்கீரனின் தீராத முழக்கத்திற்கு, பலம்சேர்க்கும் விதமாக தொடர்ந்து ஆதரவுக் குரல்கள் நீள்கின்றன.
உண்மையை எழுதியதால் கைது! -பிரசாந்த் பூஷன், மூத்த வழக்கறிஞர்
தமிழக அரசியலில் நடந்த மிகப்பெரிய ஊழல் முறைகேடுகளை, புலனாய்வு மூலம் வெளிக்கொண்டு வந்தவர் மூத்த பத்திரிகையாளர் நக்கீரன்கோபால். கல்லூரி மாணவிகள் பாலியல் இச்சைகளுக்காக அழைக்கப்பட்ட விவகாரத்தில், தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித்திற்கு தொடர்பிருப்பதாக எழுதியதற்காக அவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். வியப்பு...!
நக்கீரன் எப்போதும் வெற்றிபெறும்! -இரா.ஜவஹர், மூத்த பத்திரிகையாளர்
பத்திரிகைகள் எடுத்துக்கொள்ளும் உரிமைகளை அரசு விரும்பாவிட்டாலும், அவை ஆபத்தானவை என்று கருதினாலும், பத்திரிகைச் சுதந்திரத்தில் அரசு தலையிடுவது தவறு’’ என்று ஜவஹர்லால் நேரு கூறினார்.
ஆனால், இன்று தமிழ்நாட்டில் இயல்பான பத்திரிக

ஆனால், இன்று தமிழ்நாட்டில் இயல்பான பத்திரிகைச் சுதந்திரத்தைக்கூட ஒடுக்குவதற்கு அரசு முயற்சிக்கிறது. கைது செய்யப்பட்டுச் சிறையில் இருக்கும் நிர்மலாதேவி தனக்குக் கவர்னர் மாளிகையுடன் நெருக்கம் உண்டு என்று கூறியிருக்கிறார். இந்தச் செய்தியை நக்கீரன் வெளியிட்டது. இது தவறான செய்தி என்று இப்போது கவர்னர் மாளிகை அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்த மறுப்பை அப்போதே நக்கீரனுக்கு அளித்திருந்தால் நக்கீரன் அதையும் வெளியிட்டிருக்கும். எப்போதுமே இரு தரப்பையும் கேட்டுச் செய்தி வெளியிடுவதுதான் நக்கீரனின் வழக்கம்.
ஆனால், அமைச்சர் அல்லது கவர்னர் மாளிகையில் விளக்கம் கேட்டால் பதில் தருவதில்லை. பிரச்சனை தீவிரமடைந்த பிறகு பதறுகிறார்கள். சம்பந்தமில்லாத சட்டப்பிரிவில் வழக்குப்பதிவு செய்து, அவசரகதியில் நக்கீரன் கோபாலைக் கைதுசெய்தார்கள். இதை எதிர்த்து ஒட்டுமொத்த தமிழகமும் கொதித்தெழுந்தது. நக்கீரன் கோபாலைச் சிறையிட மறுத்த நீதிமன்றம், ஜாமீனில் விடுதலை செய்தது. ஜெயலலிதா ஆட்சியின் கடும் தாக்குதல்களையே எதிர்கொண்டு வெற்றிபெற்ற நக்கீரன், இப்போதும் வெற்றி பெற்றுள்ளது. இனிமேலும் வெற்றிபெறும்.
உஷ்ணமான புரோகித்! -அருள் எழிலன், ஆவணப்பட இயக்குனர்
தமிழ் புலனாய்வு இதழியலில் நக்கீரனின் பணி ஆழமானது. இதனால் நக்கீரன் இதழும் அதன் ஆசிரியர் கோபால் உள்ளிட்டோரும் சந்தித்த நெருக்கடிகள் கொஞ்சநஞ்சமல்ல. ஜெயாவின் ஆட்சிக்காலத்தில் உயிர்ப்பலிகளும் உண்டு. இப்போது நிர்மலாதேவி விவகாரத்தில் சிக்கியிருக்கும் ஆளுநர், "இதுபற்றி யாரும் பேசக்கூடாது' என விரும்புகிறார். நக்கீரன் இதழ் தொடர்ந்து நிர்மலாதேவி விவகாரத்தில் கவனம் செலுத்தி, அவரது வாக்குமூலத்தை வெளியிட்டதுதான் பன்வாரிலால் புரோகித்தை உஷ்ணமாக்கியிருக்கிறது.
நம்பிக்கையின் ஒளி நக்கீரன்! -டான் அசோக், எழுத்தாளர்
அடக்குமுறையும், அத்துமீறலும் ஆட்சி செய்யும்போது எங்காவது சிறு நம்பிக்கையாக ஓர் ஒளிக்கீற்று தோன்றும். நக்கீரன் அப்படித்தான் எப்போதும் இருந்திருக்கிறது. பெருமுதலாளிகளின் ஊடகங்கள் எல்லாம் ரஃபேல் ஊழலில் இருந்து கவர்னரின் லீலைகள் வரை பேசாமல் இருக்கும் சூழலில், ஒரு மின்மினிப்பூச்சியாக வெளிச்சம் கொடுத்துக் கொண்டிருந்த நக்கீரனையும் அணைக்கவேண்டும் என அடிமையரசு முடிவெடுத்திருக்கிறது. ஆனால், முன்காலங்களில் ஃபாசிஸ்ட் ஜெயலலிதா ஒவ்வொருமுறையும் அந்த மின்மினிப் பூச்சியை அழிக்க முயற்சி செய்தபோதெல்லாம், அது ட்ராகனாக மாறி இன்னும் அதிக வெளிச்சத்துடன் நெருப்பைக் கக்கியிருக்கிறதேயொழிய அணைந்த வரலாறு ஒருபோதுமில்லை; இனியும் அப்படித்தான்.
ஆளுநர் என்ன கடவுளா?-சங்கர், சவுக்கு இணையதளம்
துணைவேந்தர்கள் நியமனத்தில் முறைகேடு நடந்திருப்பதாக ஆளுநர் குற்றம்சாட்டிக்கொண்டிருக்கும் அதேவேளையில், ஒரு பத்திரிகையின் ஆசிரியர், ஆளுநரைப் பற்றி கட்டுரை வெளியிட்டதற்காக கைது செய்யப்பட்டிருக்கிறார். பன்வாரிலால் புரோகித் தன்னைக் கடவுள் என்றும், இந்த மாநில அரசை அவரது அடிமை என்றும் நினைத்துக்கொண்டிருக்கிறார்.
பாசிச நடைமுறை! -பூவுலகின் நண்பர்கள்
இது ஜனநாயக நாடு. ஆள்பவர்களைக் கேள்வி கேட்கும் அதிகாரம் எல்லோருக்கும் வழங்கியுள்ளது இந்திய அரசியல் அமைப்பு சட்டம். அதுவும் குறிப்பாக... பத்திரிகைகளுக்கு அந்த தார்மீக கடமையும், உரிமையும் உள்ளது. செய்தி வெளியிட்டதற்காக தேசத்துரோக பிரிவின் கீழ் கைதுசெய்வது பாசிச நடைமுறையேயாகும். மக்களுக்கு ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கையை சிதைக்கும் வழிமுறையே இந்த கைது நடவடிக்கை.
பயமுறுத்தவே கைது! -சிவில் உரிமைகளுக்கான மக்கள் ஒன்றியம் (பி.யூ.சி.எல்.)
எல்லாவற்றுக்கும் கைது, சிறைவைப்பு என்பதை தமிழக அரசின் காவல்துறை தொடர்ந்து செயல்படுத்தி வருவது, ஜனநாயக விரோதச் செயல்பாடாகும். நக்கீரன்கோபால் மீது ஆளுநர் அலுவலகம் புகார் அளித்தால்கூட, அவர்மீது வழக்குத் தொடுக்கலாமே தவிர கைதுசெய்ய முடியாது. இது அரசின் அடக்குமுறைப் போக்கைக் காட்டுகிறது. ஆளுநர் துணைவேந்தர் பதவியில் லஞ்சம் பெறப்பட்டுள்ளது என்பதை வெளிப்படையாக குற்றம்சாட்டியும், யார்மீதும் அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. ஆனால், அதிகாரத்தில் உள்ள ஆளுநர் குறித்த கட்டுரை வெளியிட்டதற்காக நக்கீரன்கோபாலை கைது செய்தது கண்டிக்கத்தக்கது. விமானநிலையத்தில் கைதுசெய்வது என்பது ஒரு அச்சத்தைப் பொதுவெளியில் உருவாக்கவே தவிர, வேறெதற்கும் இல்லை.
-தொகுப்பு: மதி