"செஞ்சவனெல்லாம் வெளியே ‘ஹாயா’ இருக்கான். சதிபண்ணி நம்மை இப்படி உள்ளே தள்ளிட்டாங்களே என்று சிறைக்குள் சிலநாட்கள் தூங்காமல் அழுதுகொண்டிருப்பேன். தவறே செய்யாமல் சிறையில் இருந்த நாட்கள் கொடுமை யிலும் கொடுமை''’என்றார் நிர்மலாதேவி வழக்கில் கைதாகி 10 மாதங்கள் சிறையிலிருந்த முருகன்.

murugan

கடந்த 20 ஆம் தேதி மதுரை மத்திய சிறையிலிருந்து முருகனும், கருப்பசாமியும் ஜாமீனில் விடுதலை ஆனார்கள். அவர் களுடைய மனைவி மற்றும் குழந்தைகள் வரவேற்றனர். வெளியே வந்த முருகன் நக்கீரனிடம் பேசினார்…

""வெளியே வந்துவிட்டேனே தவிர, இன்னமும் உயிர்ப்பயம் இருக்கத்தான் செய் கிறது. சிறையிலேயே மிரட்டியவர்கள் வெளியே எந்தப் பாது காப்பும் இல்லாமல் இருக்கும் என்னை முகிலனைப்போல கடத்தமாட் டார்கள் என் பது என்ன நிச்சயம்? நிர் மலாதேவி வாயைத் திறந் தால் தமிழகமே ஆட்டம் காணும். எனக்கு தெரிந்து நக்கீரனில் இதுவரை வெளி வந்த அனைத்து செய்தியுமே உண்மைதான். சிறையில் இருக்கும்போது பத்திரிகை களை உறவினர்கள் கொண்டுவந்து கொடுப் பார்கள். நடந்தவற்றை அப்படியே எழுதி யிருக்கிறார்களே என்று ஆச்சரியப் படுவேன். இன்னும் கொஞ்சநாள் பொறுங் கள். நீதியின் முன் உண்மைகள் வெளி வரும்.

Advertisment

"எனக்கு மேலே உள்ளவர்களைக் காப்பாற்றவே என்னைப் பலிகடா ஆக்கி னார்கள். கலைச்செல்வன், ஒரு உயரதிகாரி, ஒரு அரசியல்வாதி, டெல்லி தொடர்புடையவர் என்ற நான்குபேருக்குப் பதிலாக வேறு நான்கு பேரை சொல்லுங்கள்' என்று நிர்பந்தம் செய்தார்கள். "உங்களை தேசவிரோத சட்டத்திலா கைது செய்கிறோம். சும்மா கையெழுத்துப் போடுங்கள்' என்று கட் டாயப்படுத்தி வாங்கினார்கள். சிறைக்கு வந்தபிறகுதான் இங்கேயே நம்மை ஏதோ செய்துவிடுவார்களோ என்ற பயத்தைக் காட்டினார்கள். வெளியிலிருந்து என்னைப் பார்க்க வருகிறவர்களும் வேறு வழக்குகளில் சிறைக்கு வருகிறவர்களும் செய்தித்தாள்களில் வரும் செய்திகளை சொல்லும்போது அதிர்ச்சியாக இருக்கும். இந்த விவகாரத்தில் கவர்னர் பெயரெல்லாம் இருப்பதால்தான் அரசியல் அழுத்தம் தரப்படுகிறது, எங்களுக்குப் பிணை மறுக்கப்படுகிறது, நக்கீரன் ஆசிரியர் கைது செய்யப்படுகிறார் என்று புரிந்ததும் வழக்கின் சீரியஸ்னெஸ் விளங்கியது. வழக்கு நடப்பதால் வெளியில் சொல்ல முடியாமல் தவிக்கும் உண்மைகளை விரைவில் சொல் வேன்''’என்றார்.

-அண்ணல்