ன்லைன் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தமிழகத்தை ஆட்டிப்படைக்கும் சர்வதேச போதை மருந்துக் கடத்தல் கும்பலை, நக்கீரன் கொடுத்த க்ளூ உதவியால் சென்னை போலீஸார் கைதுசெய்துள்ளனர்.

actionreport

சர்வதேச பயங்கரவாதக் கும்பலுக்கு பணம் திரட்ட தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்தும் ஒரு போதை நெட்வொர்க்கைப் பற்றியும், அதில் தொடர்புடைய ஒரு நபரைப் பற்றியும் நக்கீரன் (ஜுலை 4-6) இதழில் வீடியோ ஆதாரத்துடன் செய்தி வெளியிட்டிருந்தோம். "சர்வதேச போதைக் கும்பலின் பிடியில் தமிழக இளசுகள்' என்ற தலைப்பில் வெளியான அந்தச் செய்தி போலீஸ் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Advertisment

actionreport

போலீஸுக்கு நெருக்கடி அதிகரித்தது மட்டுமல்ல, நக்கீரனுக்கும் பல வழிகளில் மிரட்டல்கள் வந்தன. ஆனால், அந்தச் செய்தியின் உண்மைத் தன்மையை புரிந்துகொண்ட சென்னை அடையாறு மாநகர காவல் துணை ஆணையர் செஷாங் சாய் தனிப்படை ஒன்றை அமைத்தார். இது கடற்கரைச் சாலையில் பார்ட்டிக்கு போய்வரும் இளசுகளை கண்காணித்து வந்தது.

இந்நிலையில், வடமாநிலத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவன் அளவுக்கு அதிகமான போதை மருந்து உபயோகித்ததால் உயிருக்கு ஆபத்தான நிலையில் சென்னை அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.

Advertisment

அந்த மாணவனுக்கு ஆபத்தான நிலையைக் கடந்து நினைவு திரும்பியதும், அவனிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். அப்போது, அவன் ஆன்லைன் மூலமாக போதைப்பொருள் வாங்கி பயன்படுத்தியது தெரியவந்தது. அவனுக்கு ஆன்லைன் மூலம் போதைப்பொருள் விற்றவனை, தகவல் தொழில்நுட்ப நிபுணர்கள் உதவியோடு திருவான்மியூர் காவல் ஆய்வாளர் கிறிஸ்டின் ஜெயசீல் கைது செய்தார். இந்தப் பின்னணி குறித்து கிறிஸ்டின் ஜெயசீல் நக்கீரனிடம் பேசினார். அவர் சொன்ன திடுக்கிடும் தகவல்கள் நம்மை தலைசுற்ற வைத்தன.

actionreport

""பாதிக்கப்பட்ட மாணவன் போதைமருந்து வாங்கிய ட்ரீம் மார்க்கெட் இணையத்தை நாங்கள் ஃபாலோ செய்தோம். பல செக்யூரிட்டியைக் கடந்து திருவான்மியூர் வால்மீகிநகரில் போதைப் பொருளை சப்ளை செய்ய வந்தவனை மடக்கிப் பிடித்தோம். அவன் சொன்ன தகவல்கள் எங்களைக் கிறுகிறுக்க வைத்துவிட்டது. அந்த அளவுக்கு தொழில்நுட்பம் வளர்ந்திருக்கிறது. கைதுசெய்யப்பட்டவனின் பெயர் நிகில் திவாரி. உ.பி.மாநிலத்தை சேர்ந்தவன். திருவான்மியூர் ராஜாஜி நகரில் அபார்ட்மெண்ட் வீடெடுத்து தங்கியிருக்கிறான். அவனுடைய வீட்டை சோதனையிட்டதில், எம்.டி.எம். போதை பவுடர், எக்டேசி என்ற மாத்திரை வடிவ போதைப்பொருள், எல்.எஸ்.டி. என்ற திரவ வடிவ போதை மருந்து ஆகியவற்றை கைப்பற்றினோம். பல லட்சம் ரூபாய் மதிப்பிலான போதைப் பொருட்கள் அவனிடம் இருந்தன.

எம்.சி.ஏ. பட்டதாரியான இவன், இரண்டு ஆண்டுகளுக்கு முன் ஸ்மார்ட் டெக் என்ற ஐ.டி.கம்பெனியில் வேலைக்கு சேர்ந்திருக்கிறான். அப்போது போதைக்கு அடிமையானதால் வேலையை இழந்தான். பணமே இல்லாமல் தவித்த சமயத்தில் தொழில்நுட்ப அறிவைப் பயன்படுத்தி, சர்வதேச கடத்தல் கும்பல் பயன்படுத்தும் ரகசிய இணையம் மூலம் இந்தியாவில் தடைசெய்யப்பட்ட பிட் காயின் எனப்படும் ஸ்கிரிப்டோ கரன்சியை பயன்படுத்தி வெளிநாட்டில் இருந்து கொரியர் மூலம் போதைப்பொருட்களை இறக்குமதி செய்தான். அதை, கல்லூரி மாணவர்கள், பணக்கார வீட்டுப் பிள்ளைகள், ஐ.டி. ஊழியர்களுக்கு சப்ளை செய்திருக்கிறான்''’என்றார்.

actionreport

அடையாறு காவல் துணை ஆணையர் செஷாங் சாய் நம்மிடம் பேசும்போது… “"நக்கீரனுக்குத்தான் முதல் கிரெடிட்' என்று சொல்லிவிட்டு, ""நக்கீரன் செய்தியை க்ளூவாக வைத்துத்தான் சர்வதேச கடத்தல் கும்பல் பயன்படுத்தும் ஆன்லைன் கடத்தலை கண்டுபிடித்துள்ளோம். டார்க் வெப் என்ற இணையம் இன்றைக்கு சர்வதேச கடத்தல்காரர்களின் முக்கியத் தளமாக இருக்கிறது. உடல்உறுப்புகள், வைரம், போதைப்பொருள் என எல்லாவற்றையும் இதன்மூலம் கடத்துகிறார்கள்.

நிகிலிடம் கைப்பற்றிய எம்.டி.எம்.ஏ. போதைப் பொருளை பயன்படுத்தினால் 20 மணிநேரம் களைப்பே தெரியாமல் டான்ஸ் ஆடலாமாம். அதுபோலவே, எக்டேசி போதைமருந்தை கூல்டிரிங்ஸில் கலந்து பயன்படுத்தினால் தன்னை சுற்றி என்ன நடக்கிறது என்பதே தெரியாது. எல்.எஸ்.டி. என்பது ஸ்டாம்ப் வடிவத்திலும், திரவ வடிவத்திலும் இருக்கும். பிட்காயின் எனப்படும் ஸ்கிரிப்டோ கரன்சியைப் பயன்படுத்தி, நெதர்லாந்து, ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான், தாய்லாந்து போன்ற நாடுகளில் இருந்து நிகில் போதைப் பொருட்களை வாங்கியிருக்கிறான். இந்தப் போதைப் பொருட்கள் தங்கத்தைவிட பலமடங்கு விலை அதிகம். ஒரு கிராம் 7 ஆயிரம் முதல் 12 ஆயிரம் வரை இருக்கும். நக்கீரனுக்கு ஸ்பெஷல் தேங்க்ஸ்''’என்று முடித்துக் கொண்டார்.

-அரவிந்த்