Advertisment

நக்கீரன் செய்தி எதிரொலி! ஆக்ஷனில் இறங்கிய ராணுவ அமைச்சகம்!

millatry-camp

"ராணுவத்தினர் கொதிப்பு' என்ற தலைப்பில் மார்ச் 18-20 தேதியிட்ட நக்கீரனில் ராணுவத்தினருக்கான கேன்ட்டீன் இடமாற்றம் செய்யப்பட்ட முறைகேடு தொடர்பாக செய்தி வெளியிட்டிருந்தோம்.

Advertisment

பாளையங்கோட்டை நகரில் 28 ஆண்டுகளாக ராணுவத்தினர் கேன்ட்டீன் இயங்கியது. இந்நாள், முன்னாள் ராணுவத்தினர், பாதுகாப்பு அமைச்சகம் தொடர்பான அதிகாரிகளின் குடும்பங்கள் பயன்படும் வகையில் நகரின் மையத்தில் இது செயல்பட்டது. ஆ

"ராணுவத்தினர் கொதிப்பு' என்ற தலைப்பில் மார்ச் 18-20 தேதியிட்ட நக்கீரனில் ராணுவத்தினருக்கான கேன்ட்டீன் இடமாற்றம் செய்யப்பட்ட முறைகேடு தொடர்பாக செய்தி வெளியிட்டிருந்தோம்.

Advertisment

பாளையங்கோட்டை நகரில் 28 ஆண்டுகளாக ராணுவத்தினர் கேன்ட்டீன் இயங்கியது. இந்நாள், முன்னாள் ராணுவத்தினர், பாதுகாப்பு அமைச்சகம் தொடர்பான அதிகாரிகளின் குடும்பங்கள் பயன்படும் வகையில் நகரின் மையத்தில் இது செயல்பட்டது. ஆனால், கேன்ட்டீன் மேலாளர் ராமசுப்பு இதை ஆள் நடமாட்டமில்லாத, போக்குவரத்துக்கு சிரமமான பகுதிக்கு மாற்றினார்.

Advertisment

millatry-camp

தனக்கு நெருங்கிய உறவினரின் ஆதாயத்துக்காக கூடுதல் செலவு செய்து மேற்கொண்ட இந்த இடமாற்றம் ராணுவத்தினரின் கொந்தளிப்புக்கு காரணமாகியது. இதில் ஏராளமான முறைகேடும் நடந்திருப்பதாக தெரியவந்தது.

இதுகுறித்து நக்கீரன் விரிவான செய்தி வெளியிட்டது. அந்தச் செய்தி உடனடியாக பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமனின் பார்வைக்கு சென்றது. அதையடுத்து, அவர் உடனடியாக நடவடிக்கைக்கு உத்தரவிட்டார். எனவே, பாளையங்கோட்டை கேன்ட்டீனுக்கு பொருள்கள் அனுப்புவதை சென்னை ராணுவ கண்டோன்மெண்ட் நிறுத்தியது. அதைத்தொடர்ந்து கேன்ட்டீன் மீண்டும் பழைய இடத்துக்கே மாற்றப்பட்டது. ஏப்ரல் 5-ஆம் தேதிமுதல் அங்கு இயங்கத் தொடங்கியதால் ராணுவத்தினர் மகிழ்ச்சி அடைந்தனர்.

கேன்ட்டீன் இடமாற்றம் தொடர்பான முறைகேடுகளை இரண்டு ராணுவ விஜிலென்ஸ் அதிகாரிகள் மற்றும் ஒரு வழக்கறிஞர் குழு ஆய்வு செய்கிறது. இதில் ராமசுப்புவின் பல முறைகேடுகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறதாம்.

இதுகுறித்து முன்னாள் ராணுவத்தினர் நலச் சங்கத்தின் பொறுப்பாளரான ஜெபமணி நம்மிடம் கூறியது...…

""குறிப்பாக, பாளையிலிருந்து தாழையூத்துக்கு பொருள்கள் லோடிங் செய்த வகையில் 1 லட்சத்து 86 ஆயிரம் ரூபாய் என்று கணக்கு எழுதியிருந்தார். ஆனால், தாழையூத்திலிருந்து பாளைக்கு மீண்டும் பொருள்களை லோடிங் செய்தபோது வெறும் 27 ஆயிரம் ரூபாய் மட்டும் ஆகியிருந்தது. மேலும், ராணுவ லாரியை எப்.சி. செய்யாமலேயே, பழைய ஆவணங்களைத் திருத்தி 50 ஆயிரம் ரூபாய் எடுக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. கூலியாட்கள் வகையில் 40 ஆயிரம் ரூபாய் கையாடல் செய்யப்பட்டிருந்தது'' என்றார்.

ராணுவ அமைச்சர் நிர்மலா சீதாராமனின் உடனடி அதிரடி நடவடிக்கைக்கு நக்கீரனின் பாராட்டுகள்.

Ministry of Defense
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe