"ஒரு குறிப்பிட்ட செய்தியை அது வெளிவரும் முன்னரே தடை செய்ய எவ்வித முகாந்திரமும் இல்லை. செய்தி வெளியீட்டிற்கு அப்பால், இதுகுறித்து தேவையானால் நடவடிக்கை எடுக்கலாமே தவிர, வெளியீட்டிற்கு முன்னரே தடை விதிக்க முடியாது. அதேபோல, ஒரு மரணதண்டனை கைதியின் வாழ்க் கைச் சரித்திரத்தை, பத்திரிகையில் வெளியிடுவதை அரசோ, அலு வலர்களோ தடை செய்ய முடி யாது''’’

-ஆட்டோ சங்கர் தொடர் வெளியான சமயத்தில் அதிகாரத் திமிரின் கொடூரமான கரங்கள் பத்திரிகை சுதந்திரத்தை நசுக்கப் பார்த்தன. ஆனால், அந்த அதிகாரத் திமிரை எதிர்த்து நடத்திய சட்டப்போராட்டத்தில் இந்திய பத்திரிகை உலகமே கொண்டாடும் இப்படியொரு தீர்ப்பை உச்சநீதிமன்றத்தில் பெற்றுக்கொடுத்தது நக்கீரன். இதுதான் இன்றளவும் ஊடகத்துறைக்கான சட்ட வழிகாட்டி.

supremecourt

Advertisment

எப்போதும்போல, தனக்கான சட்டப் போராட் டத்தில் ஒட்டுமொத்த கருத்து சுதந்திரத்திற்கு அண்மையில் மற்றுமொரு வெற்றியை ஈட்டித் தந்திருக்கிறது உங்கள் நக்கீரன்.

முன்பெல்லாம் போலீஸ் ஒருவரை கைது செய்து கொண்டுபோனால் அவரைப் பற்றிய விவரம் கிடைக்கவே நாளாகும். லாக்கப்பில் வைத்து போலீஸ் நடத்தும் கொடூரத் தாக்குதலில் கைதிகள் உயிரிழப்பதும், அந்த மரணத்தை தற்கொலையாக பதிவு செய்வதும் போலீஸ் வாடிக்கையாக இருந்தது.

மேற்கு வங்கத்தில் இலவச சட்ட உதவி மையம் நடத்திய டி.கே.பாஸு என்ற சமூக ஆர்வலர், அங்கு நடைபெற்ற லாக்கப் மரணங்கள் குறித்து உச்சநீதி மன்றத்தில் ஒரு வழக்கைத் தொடுத்தார். அந்த வழக்கை விசாரித்த 1996 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 18 ஆம் தேதி உச்சநீதிமன்ற நீதிபதிகள் குல்திப் சிங், ஏ.எஸ்.ஆனந்த் உள்ளிட்டோர் அடங்கிய அமர்வு வரலாற்றுப் புகழ்மிக்க தீர்ப்பை வழங்கியது.

Advertisment

judgeanandvenkateshஒருவரை கைது செய்வதற்கு முன்னும் பின்னும் போலீஸார் கடைப்பிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறை களை அந்த தீர்ப்பில் நீதிபதிகள் குறிப்பிட் டார்கள்.

இந்திய வழக்கறிஞர் களின் பாராட்டுக்குரிய அந்த வழிகாட்டு முறை களை சாமானியர் தொடர்பான வழக்குகளில் காவல்துறையினர் பின்பற்றுவது இல்லை என்று சொல்லப்பட்டாலும், இன்றுவரை அது ஒரு சட்டப் பாதுகாப்பாக இருக்கிறது என்பதுதான் உண்மை.

1996-ல் வரலாறு படைத்த அந்த உச்சநீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகு, சமீ பத்தில் நமது நக்கீரன் ஆசிரியர் அவர்கள் கைது செய்யப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் தமிழ் நாடு காவல்துறைத் தலைவருக்கு புதிய வழி காட்டு நெறிமுறைகளை அமல்படுத்தும்படி ஆணையிட்டுள்ளது. இது நக்கீரனின் சட்டப் போராட்டத்தால் கிடைத்த இன்னொரு வரலாற்றுப் பதிவு ஆகும்.

2018-ஆம் ஆண்டு அக்டோபர் 9-ஆம் தேதி காலை புனே செல்வதற் காக சென்னை விமான நிலையம் சென்ற நமது நக்கீரன் ஆசிரியரை எந்தக் காரணமும் சொல்லாமல், எங்கே அழைத் துச் செல்கிறோம் என்ற விவரமும் சொல்லாமல் தமிழ்நாடு காவல்துறை கைது செய்தது. ஆளுநர் மாளிகையின் புகாரைத் தொடர்ந்து இந்திய தண்டனைச் சட்டம் 124-வது பிரிவின்படி அவர் கைது செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி தமிழ்நாடு பரபரப்பானது. இதன் உச்சகட்டமாக, நமது நக்கீரன் ஆசிரியரை ரிமாண்ட் செய்ய முடியாது என்று சென்னை எழும்பூர் நீதிமன்ற மாஜிஸ்திரேட் கோபிநாத் உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை ரத்துசெய்யக் கோரி தமிழக அரசு சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கின் விரிவான விசாரணையின்போது நமது வழக்கறிஞர் பி.டி. பெருமாள், தனது வாதத்தில் சில ஐயப்பாடுகளை முன்வைத்தார்.

நக்கீரன் செய்திக்காக கவர்னர் மாளிகையில் பணிபுரியும் ஒருவர் எந்தவித எழுத்துப்பூர்வமான அங்கீகாரமும் இல்லாமல் புகார் கொடுக்க முடியுமா? நக்கீரன் செய்தியை கவர்னர் படித்தாரா என்ற தகவல் புகாரில் இடம் பெறாத தால், கவர்னர் கூறித்தான் இந்தப் புகார் கொடுக்கப் பட்டுள்ளதா? புகாரில் கொடுக்கப்பட்டுள்ள செய்தி உண்மையிலேயே நக்கீரன் பத்திரிகையில் வெளிவந் துள்ளதா? நக்கீரன் செய்தி யால் கவர்னர் எந்தெந்தப் பணிகள் செய்ய முடியாமல் போயின? என்பது பற்றி யெல்லாம் புகாரில் எதுவும் குறிப்பிடப்படவில்லை. எனவே இந்தக் கேள்வி களுக்கெல்லாம் விடை காணும் விதத்தில் போலீஸார் எந்தவிதமான அடிப்படை விசாரணையும் மேற்கொள் ளாமல் கவர்னர் மாளிகையிலிருந்து நக்கீரன் ஆசிரியர் மீது இந்திய தண்டனைச்சட்டம் 124-வது பிரிவின்படி வழக்குப் பதியவேண்டும் என்ற உத்தரவுடன் கொடுத்த புகாரை போலீஸ் அப்படியே நிறைவேற்றியுள்ளது. பல செய்திகள் வெளிவருவதை தடுக்கும் நோக்கில் செய்யப் படும் பழிவாங்கும் செயல் இது. போலீஸார் முறையான விசாரணை மேற்கொண் டிருந்தால் இந்தப் புகாருக்கு நக்கீரன் மீது அவதூறு வழக்கு மட்டுமே பதிவு செய்ய முடியும்'' என்ற அறிவுரையை புகார் தாரருக்கு வழங்கி, "நக்கீரன் ஆசிரியரை கைது செய்ததை தவிர்த்திருக்கலாம்' என வாதிட்டார்.

ptperumalஇந்த வழக்கில் உத்தரவு வழங்கிய உயர்நீதிமன்ற நீதியரசர் ஆனந்த் வெங்கடேஷ் அவர்கள், ""சட்டத்தை அமல்படுத்தும் விதத்தில் எழும்பூர் 13-வது நீதிமன்ற மாஜிஸ்திரேட் செயல்பட்டுள்ள நடவடிக்கைகளில் உயர்நீதி மன்றம் தலையிடவேண்டிய அவசியம் இல்லை'' என்று கூறி மாஜிஸ்திரேட்டின் நடவடிக்கை களைப் பாராட்டியதோடு, அரசு தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவு பிறப் பித்தார். அந்த உத்தரவில், வருங்காலங்களில் தமிழக காவல்துறை ஒருவரை கைது செய்வதற்கு முன் பின்பற்ற வேண்டிய புதிய நெறிமுறைகளை அமல்படுத்தும்படி காவல்துறைக்கு அறி வுறுத்தியிருந்தார். ""இந்த புதிய நடைமுறைகள் மூலம் ஜாமீன் கோரியும், முன்ஜாமீன் கோரியும் நீதிமன்றங்களில் குவியும் மனுக்கள் பெருமளவு குறைய வாய்ப்பு உள்ளது'' எனவும் கூறினார்.

அதற்காக டெல்லி உயர்நீதி மன்றம் தயார்செய்த மாதிரி நடை முறைகளைக் கடைப்பிடிக்கும்படி உத்தரவிட்டார். அதாவது "குற்றம் சாட்டப்பட்டவருக்கு சிஆர்.பி.சி. 41ஏ பிரிவின் கீழ் சம்மன் கொடுத்து விசாரிக்கலாம்' என்றார். அதன்பேரில் கடந்த புதன்கிழமையே தமிழக காவல்நிலையங்களுக்கு டி.ஜி.பி. சர்குலர் அனுப்பிவிட்டதாக கூடுதல் அரசு வழக்கறிஞர் தெரிவித்தார்.

அதாவது, "குறைவான தண்டனையும், கைது செய்ய அவசியமும் இல்லாத வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவரை விசாரணைக்கு அழைக்கும் நோட்டீஸ் அனுப்பினால் போதுமானது' என்று அந்த சர்குலரில் கூறப்பட்டுள்ளது. டி.ஜி.பி. அனுப்பிய வழிகாட்டு நடைமுறைகளில் நீதிபதி சில திருத்தங்களைச் செய்து அவற்றை 4 ஆம் தேதி திங்கள் கிழமை முதல் அமல்படுத்தும்படி உத்தரவிட்டார்.

இந்த வழிகாட்டு நடைமுறைகளில் முக்கியமானது, 7 ஆண்டுகள் மற்றும் அதற்கு குறைவான தண்டனை பெறக்கூடிய குற்றங்களில் குற்றம்சாட்டப்பட்டவர் குற்றத்தை செய்திருப் பார் என்று போலீஸ் அதிகாரி நம்புவது மட்டுமே கைது செய்ய போதுமானது இல்லை. சிஆர்.பி.சி. 41(1)(பி)(ண்ண்)ன்படி அ) குற்றம்சாட்டப் பட்டவர் இன்னொரு குற்றத்தைச் செய்து விடாமல் தடுக்கவோ, ஆ) குற்றம் குறித்து முறையான விசாரணைக்காகவோ, இ) குற்றம் சாட்டப்பட்டவர் சாட்சிகளை கலைத்து விடாமல் தடுக்கவோ, ஈ) குற்றம்சாட்டப் பட்டவர் மிரட்டியோ, ஆசைகாட்டியோ சாட்சிகளை வளைப்பார் என்றாலோ, உ) குற்றம்சாட்டப்பட்டவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காகவோ மட்டுமே கைது செய்ய வேண்டும்.

குற்றம்சாட்டப்பட்டவரை கைதுசெய்ய அவசியம் இல்லாத வழக்குகளில் சிஆர்.பி.சி. 41ஏ படி நடவடிக்கை எடுக்கலாம். அதாவது, குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட இடத்தில் தனக்கு முன் ஆஜராகும் படி குற்றம்சாட்டப்பட்டவருக்கு நோட்டீஸ் அனுப்பி அவரது சட்ட உரிமைகள் பாதிக்காத வகையில் விசாரணையை மேற்கொள்ளலாம். வழக்கு பதிவுசெய்த இரண்டு வாரங்களுக்குள் இந்த நோட்டீஸ் அனுப்பப்பட வேண்டும்; அதன் நகல் சம்பந்தப்பட்ட காவல் எல்லைக்கு உட்பட்ட மாஜிஸ்திரேட்டுக்கும் அனுப்ப வேண்டும்.

கைது செய்துவிட்டு ஆதாரங்களைத் தேடுவதற்கு பதிலாக, ஆதாரங்களுடன் கைது செய்து ரிமாண்ட் செய்வதற்கு இந்த வழிகாட்டு நெறிமுறைகள் பயன்படும் என்று கூறப்படுகிறது. இந்த வழிகாட்டு நெறிமுறைகளை குற்றம்சாட் டப்பட்டவர்கள் தவறாக பயன்படுத்தினால் அது குற்றமாக கருதப்பட்டு நடவடிக்கை எடுக்கப் படும். இப்படி பல நெறிமுறைகள் வாயிலாக கருத்துரிமைக்கு குரல் கொடுக்கும் அனை வருக்கும் சட்ட பாதுகாப்பு கிடைத்துள்ளது.

இதன்மூலம் போலீஸ் அத்துமீறல்கள் கட்டுப்படுத்தப்பட்டு, பொய் வழக்குகள் தவிர்க்கப்படுவதோடு தனி மனித உரிமை பாதுகாக்கப்படும் என பெருமையோடு நம்புகிறது நக்கீரன்.