Advertisment

நிர்வாண வாக்கிங்! பிரபல மருத்துவமனையில் ஷேம்ஷேம் ராக்கிங்!

hh

சியாவிலேயே புகழ்பெற்ற வேலூர் சி.எம்.சி. மருத்துவமனையில், கல்லூரி வளாகத்திலேயே மாணவ, மாணவி யருக்கான தனித்தனி விடுதிகள் உள்ளன. கடந்த அக்டோபர் 9-ஆம் தேதி, கல்லூரி வளாகத்தில் ஜூனியர் மாணவர்களை சீனியர் மாணவர்கள் மிகமோசமான முறையில் ராக்கிங் செய்த வீடியோ சமூக வலைத் தளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் படத்தில் ஒரு காட்சியில், ஜட்டி யோடு அனைவர் முன்பும் நடனமாட வேண்டுமென்று ஜூனியர் மாணவர் களை ராக்கிங் செய்வதாக வரும். வேலூர் சி.எம்.சி.யில், அதையெல்லாம் மிஞ்சும்வகையில், ஜூனியர் மாணவர்களை ஜட்டியோடு ஹாஸ்டல் புல்வெளியைச் சுற்றி ஓடவைத்து, அவர்கள்மீது தண்ணீரை பீய்ச்சி அடிப்பது, இரண்ட

சியாவிலேயே புகழ்பெற்ற வேலூர் சி.எம்.சி. மருத்துவமனையில், கல்லூரி வளாகத்திலேயே மாணவ, மாணவி யருக்கான தனித்தனி விடுதிகள் உள்ளன. கடந்த அக்டோபர் 9-ஆம் தேதி, கல்லூரி வளாகத்தில் ஜூனியர் மாணவர்களை சீனியர் மாணவர்கள் மிகமோசமான முறையில் ராக்கிங் செய்த வீடியோ சமூக வலைத் தளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் படத்தில் ஒரு காட்சியில், ஜட்டி யோடு அனைவர் முன்பும் நடனமாட வேண்டுமென்று ஜூனியர் மாணவர் களை ராக்கிங் செய்வதாக வரும். வேலூர் சி.எம்.சி.யில், அதையெல்லாம் மிஞ்சும்வகையில், ஜூனியர் மாணவர்களை ஜட்டியோடு ஹாஸ்டல் புல்வெளியைச் சுற்றி ஓடவைத்து, அவர்கள்மீது தண்ணீரை பீய்ச்சி அடிப்பது, இரண்டு மாணவர்களை கட்டிப்பிடித்து இடுப்பில் அருவருப் பாக இடிக்கச் செய்வது, சேற்றில் படுத்து உருளச் செய்வது என மோசமாக ராக்கிங் செய்த வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.

Advertisment

hh

ராக்கிங் கொடுமைக்கு ஆளான மாணவர்கள் கல்லூரி நிர்வாகத்திடம் புகார் தரப் பயந்துகொண்டு, ஒன்றிய அரசின் மருத்துவத்துறைக்கான ராக்கிங் தடுப்புப் பிரிவுக்கு மின்னஞ் சலில் புகார் அனுப்பியுள்ளார்கள். அதில், "ராக்கிங் ஃபங்ஷன் என ஒன்றை விடுதியில் நடத்து கிறார்கள். அக்டோபர் 9ஆம் தேதி நடந்த ராக்கிங்கில், அறைக் குள் ஜூனியர் மாணவர்களை நிர்வாணமாக நிறுத்தினார்கள். விடுதி வராண்டாவில் நிர்வாணமாக நடக்கவைத்தார்கள். சீனியர் மாணவர்கள் ஒவ்வொருவரும் ஜூனியர் மாணவர்களைத் தேர்வு செய்து, தங்கள் அறைக்குள் பாலியல்ரீதியாகப் பயன்படுத்தினாôர்கள், என்ன நடந்தாலும் வெளியே சொல்லக்கூடாது என மிரட்டி, ஆணுறுப்பில் அடிக்கிறார்கள். ஹாஸ்டல் கேன்டீனில், டைனிங் டேபிளில் ஜூனியர்கள் உட்கார சீனியர்கள் அனுமதி தரவேண்டும். கேண்டீனில் என்ன சாப்பிடவேண்டும் என்பதை சீனியர்களே முடிவுசெய்வார்கள். சாப்பிட, சாப்பிட்டு முடிக்க என ஒவ்வொன்றுக்கும் சீனியர்களிடம் அனுமதி வாங்கவேண்டும். இவற்றை மீறினால் அடிக்கிறார்கள். நவம்பர் 5-ல் அடுத்த ராக்கிங் டே என சொல்லப்பட்டுள்ளது'’என்று தெரிவித்துள்ளார்கள்.

இந்தப் புகார் தமிழக மருத்துவக்கல்விப் பிரிவுக்கு அனுப்பப்பட்டு, அங்குள்ளவர்கள், சி.எம்.சி மருத்துவக் கல்லூரி முதல்வர் சாலமன் சதீஷ்குமாரிடம் இதுகுறித்து கேள்வி எழுப்பியுள்ளனர். இந்த விவகாரத்தை மூடிமறைக்கும்படி மாணவர்களை கல்லூரி நிர்வாகம் மிரட்டியுள்ளது. நியாயம்வேண்டி, "சி.எம்.சி. வேலூர் ஸ்டூடன்ஸ்'’ என்கிற பெயரில், டுவிட்டரில் நவம்பர் 6-ம் தேதி இரவில் ராக்கிங் வீடியோவை வெளியிட்ட பின்பே இவ்விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தது. வீடியோ வைரலாகி பலதரப்பிலும் கேள்விகள் எழும்பியதால், நெருக்கடியைத் தாங்கமுடியாத சி.எம்.சி. நிர்வாகம், நவம்பர் 9-ம் தேதி 7 சீனியர் மாணவர்களை சஸ்பெண்ட் செய்துள்ளதாக அறிவித்தது.

hh

சி.எம்.சி. பணியாளர்கள் சிலரிடம் பேசியபோது, “"மருத்து வக் கல்லூரி தொடங்கிய ஐடா ஸ்கட்டர், மருத்துவம் படிப்பவர் கள் பொறுமை, சேவை, கண்ணி யம், கருணையுடன் நடந்து கொள்ள வேண்டும் என்பதை முதல் பாடமாக வைத்தார். அப்படிப்பட்ட கல்லூரியில், உடன் படிக்கும் மாணவ -மாணவிகளிடம் எப்படி நடந்துகொள்ள வேண் டும் என்பதை கற்றுத்தருவதில்லை. மாணவர்கள் விடுதியில் நடப்பது தான் தற்போது வெளியே தெரிந் துள்ளது, மாணவிகள் விடுதியில் நடப்பது வெளியே வரவில்லை. கல்லூரியில் இருந்து 100 மீட்டர் தொலைவில்தான் பாகாயம் காவல் நிலையம் உள்ளது. ஆனால் புகார் தர நிர்வாகம் அனுமதிக்காது'' என்றார்கள்.

சி.எம்.சி. கல்லூரி முதல்வர் சாலமன் சதீஷ்குமாரை நாம் தொடர்புக்கொண்டபோது, "சார் மீட்டிங்ல இருக்கார்'’என்றார்கள். பி.ஆர்.ஓ.வை தொடர்புக்கொண்ட போது நமது லைனை எடுக்க வில்லை. விளக்கம் அளித்தால் வெளியிடத் தயாராகவுள்ளோம்.

nkn121122
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe