பா.ஜ.க.வின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் நடத்திய விருந்து விழாவில் எடப்பாடி கலந்துகொண்டார். பா.ஜ.க.வைச் சேர்ந்த பெரும்பான்மையினர் கலந்துகொண்டார் கள். ஆனால் முன்னாள் மாநிலத் தலைவர் தலைமையிலான ஒரு டீம் நயினாரின் அந்த விருந்து விழாவை புறக்கணித்தது. விரைவில் நயினார் நாகேந்திரன் மாற்றப்படுவார் என்கிற செய்தி பெரிய அளவில் பா.ஜ.க. வட்டாரங்களில் பேசப் படுகிறது. இதில் முக்கியமான விவகாரம் ஓ.பி.எஸ். தொடர்பானது. ஓ.பி.எஸ். மூன்றாவது முறையாக ஸ்டாலினை சந்தித்துவிட்டு வந்தபிறகு, "நான் பிரதமருடன் ஓ.பி.எஸ்.ஸை சந்திக்க வைக்கிறேன்'' என நயினார் நாகேந்திரன் பேட்டியளித்தார். அதற்கு பதிலளித்த ஓ.பி.எஸ்., பிரதமரை சந்திப்பதற்காக அவர், நயினார் நாகேந்திர னுக்கு போன் செய்த விவ ரத்தையும் நயினாருக்கு ஓ.பி.எஸ். அனுப்பிய மெசேஜ்களையும் ஸ்கிரீன் ஷாட்டாக வெளியிட் டார். இது சமூக வலைத் தளங்களில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. 

நயினார் பொதுவாக தனக்கு வரும் போன்களை அவர் அட்டெண்ட் செய்யமாட் டார். அவரது மகன்கள் மூலமாகத்தான் யாராக இருந்தாலும் நயினாருடன் பேச முடியும். கட்சி யில் யார் சேர வேண்டுமானாலும் நயினாரின் மகன்கள் மூலமாகத்தான் நயினாரை அணுக முடியும். மகன்கள் மூலமாக நயினாரை அணுகிய அமர் பிரசாத் ரெட்டிக்கு நல்ல பதவியை போட்டுத்தந்தார் நயினார். இப்படி நயினாரின் தொலைபேசித் தொடர்பு படுவீக்காக இருப்பதை ஓ.பி.எஸ்.சின் ஸ்கிரீன்ஷாட் சமூக வலைத்தள பதிவு வெளிச்சம்போட்டுக் காட்டியது. 

nayanar1

Advertisment

ஓ.பி.எஸ்.சுக்கும் பா.ஜ.க.விற்கும் இடையே சில முரண்பாடுகள் ஏற்கெனவே எழுந்திருந்தது. ஓ.பி.எஸ்.ஸின் சிங்கப்பூர் மற்றும் மலேசியா விசிட்டுகள் சில வாரங்களுக்கு முன்பு நடந்தது,  அந்த விசிட்டுகளின்போது நடந்த பணப்பரிமாற்றங் கள் பற்றி வந்த ரகசியத் தகவல்கள் ஓ.பி.எஸ்.ஸை நேரடியாக கூப்பிட்டு பிரதமர் அலுவலகமே கண்டிக்கும் நிலையில் இருந்தது. ஓ.பி.எஸ். தங்களது அணியில் இருக்க வேண்டுமா, வேண்டாமா என ஓ.பி.எஸ்.ஸுக்கு எதிராக நெகட்டிவ்வாக முடிவெடுக்கும் மனநிலையில் பா.ஜ.க. வந்தது. இதைத் தெரிந்துகொண்ட நயினார் ஓ.பி.எஸ். -பிரதமர் சந்திப்பு தொடர் பாக ஓ.பி.எஸ்.ஸிடமிருந்து வந்த போன்கால்களை தவிர்த்திருக்கிறார். அத்துடன் ஓ.பி.எஸ். -பிரதமர் சந்திப்பை எடப்பாடியும் விரும்ப வில்லை. அதனால் ஓ.பி.எஸ்.ஸுக்கு நயினாரும் முதுகைக் காட்டி யிருக்கிறார். 

ஓ.பி.எஸ்.ஸுக்கு நெருக்கமான இரண்டு பத்திரிகையாளர்கள் மூலம் நடிகர் விஜய் தரப்பிடம் ஓ.பி.எஸ். பேசிவந்தார். விஜய் தரப்பும் ஓ.பி.எஸ்.ஸுக்கு கிரீன் சிக்னல் தரவில்லை. அதனால் முதல்வரை மூன்றுமுறை நேரடியாக சந்தித்துப் பேசி, விஜய் தரப்புக்கும் பா.ஜ.க. மற்றும் எடப்பாடி ஆகியோருக்கும் தன்னுடைய பலத்தைக் காட்ட நினைத்தார் ஓ.பி.எஸ். ஒரே நாளில் இரண்டு முறை நடந்த முதல்வருடனான சந்திப்பை வைரலாக்கினார்.

இந்நிலையில் நயினாருக்கு எதிராக ஓ.பி.எஸ்., டி.டி.வி.தினகரன், சசிகலா என அனைவருமே கதறத் தொடங்கினர். டாக்டர் கிருஷ்ணசாமியும் இந்த அலைவரிசையில் சேர்ந்து கொண்டார். ஏற்கெனவே பா.ஜ.க. முன்னாள் தலைவர், நாகேந்திரனை கடுமையாக எதிர்த்துவருகிறார். நாகேந்திரன் மாநிலத் தலைவராக ஆனபிறகு எடப்பாடியைத் தவிர வேறு யாருடனும் இணக்கமாக இல்லை. ஓ.பி.எஸ். உட்பட மூன்று கூட்டணிக் கட்சிகள் பா.ஜ.க.விற்கு எதிராகப் போய்விட்டன. எனவே நயினாரை மாற்றிவிட்டு மாநிலத் தலைவர் பதவிக்கு குஷ்பு, சரத்குமார் ஆகிய இருவரில் ஒருவரை கொண்டுவரலாம் என பா.ஜ.க. மேலிடம் ஆலோசித்து வருகிறது. நயினாரின் தி.மு.க. எதிர்ப்பும் வலுவாக இல்லை என்பதுவும் ஒரு காரணமாக பா.ஜ.க. வட்டாரத் தில் கூறப்படுகிறது. 

Advertisment

இந்த அசைவுகளைத் தெரிந்துகொண்ட நயினார், ஓ.பி.எஸ்.ஸிடம் "நீங்க முதல்வரா இருக்கும்போது நான் மந்திரியா இருந்தவன். நம்ம ரெண்டுபேரும் ஒரே சமூகம். அதனால போன் விசயத்த எல்லாம் பெருசா ஆக்காதீங்க'’என பேசியிருக்கிறார். அத்துடன் பா.ஜ.க. மேலிடம் ஓ.பி.எஸ். மீது கோபமாக இருப்பதற்கான காரணத் தையும் சுட்டிக்காட்டியிருக்கிறார். இதுபற்றி  எடப் பாடியிடமும் விருந்து நடந்தபோது விவாதித்திருக் கிறார் நயினார். எடப்பாடி நயினாரிடம், “"நான் பொதுச்செயலாளர் இல்லையென உரிமையியல் நீதிமன்றத்தில் வந்த தீர்ப்பைச் சொல்லி, அதுபற்றிய வழக்குகளை அவரை வாபஸ் வாங்கச் சொல்லுங்கள். கட்சி ஆலோசகராக பதவியளித்து, நான் அ.தி.மு.க.வில் ஓ.பி.எஸ்.சை சேர்த்துக் கொள்கிறேன்'’என சொல்லியிருக்கிறார். ஆக.. “"விரைவில் அ.தி.மு.க.வில் ஓ.பி.எஸ். சங்கமம் ஆவார். நயினார் தனது மாநிலத் தலைவர் பதவியையும் காப்பாற்றிக் கொள்வார். நயினாரை மாற்ற பா.ஜ.க. முன்னாள் தலைவர் எடுக்கும் முயற்சிகள் வீணாகப் போகும்'’என்கிறது கமலாலய வட்டாரங்கள்.   

________________________


இறுதிச் சுற்று!
முதல்வர் பெருமிதம்!

nayanarbox

சென்னையைப் போல மற்ற மாவட்டங் களிலும் தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்த, கடந்த ஆண்டு முடிவு செய்திருந்தது தி.மு.க. அரசு. அதன்படி, சென்னையை அடுத்து முதன்முறையாக தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டை தூத்துக்குடியில் திங்கள்கிழமை (4-7-2025) தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின். இதற்கு முன்னதாக, தூத்துக்குடியில் வியட்நாமை சேர்ந்த வின்பாஸ்ட் நிறுவனத்தின் மின்சார கார் உற்பத்தித் தொழிற்சாலையை திறந்துவைத்து, விற்பனையையும் தொடங்கிவைத் தார். இந்த விழாவில் பேசிய முதல்வர் ஸ்டாலின், "வாகன உற்பத்தியில் இந்தியாவின் தலைநகராக விளங்குகிறது தமிழ்நாடு. 3,500 பேருக்கு வேலை வாய்ப்பை அளிக்கும் வகையில் வின் பாஸ்ட் நிறுவனத்தின் ஆலை அமைந்துள்ளது. இதற்காக 1,300 கோடி முதலீட்டை செய்திருக்கிறது இந்த நிறுவனம்'' என்று பெருமிதப்பட்டார். முதலீட்டாளர் கள் மாநாட்டில், சுமார் 32,000 கோடி முதலீட் டிற்காக தொழில் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் போட்டுக்கொண்டுள்ளது தமிழக அரசு.

-இளையர்