Advertisment

பெண் கொலையில் விலகாத மர்மம்! பற்றி எரியும் நாமக்கல் கிராமம்!

dd

ர்ம நபர்கள் சிலர் துணியை பெட்ரோலில் நனைத்து தீ வைத்து, கொட்டகைக்குள் வீசியுள்ளனர். தீ 'மளமள'வென பரவியதில், உள்ளே அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்த வடமாநிலத் தொழிலாளர்கள் ராகேஷ், சுக்ராம், யஷ்வந்த், கோகுல் பலத்த காயமடைந்தனர்.

Advertisment

கரூர் அரசு மருத்துவமனையில் அவர்கள் சேர்க்கப்பட்டனர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து ஏ.டி.ஜி.பி. சங்கர், மேற்கு மண்டல ஐ.ஜி. சுதாகர் தலைமையில் சேலம் சரக டி.ஐ.ஜி. விஜயகுமார் (பொறுப்பு), நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்.பி.க்கள் உள்பட 800-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் அந்த கிராமத்தில் குவிக்கப்பட்டனர்.

Advertisment

dd

ஆனால் இந்த தீவைப்பு சம்பவம் ஒன்றும் புதிதாக நடக்கவில்லை. கடந்த மார்ச் மாதத்திலிருந்து இப்போது வரை திடீர் திடீரென்று குடியிருப்புகள் மீது தீ வைப்பது, பெட் ரோல் குண்டுகள் வீசுவது என ஏழெட்டு முறை நடந்திருப்பதாகவும், அடுத்து யார் வீட் டில் தீ வைப்பார் களோ என கிலியில் தூக்கம் தொலைத்துக் கிடப்பதாகவும் சொல்கிறார்கள் கிராம மக்கள். இந்த சம்ப வங்களின் பின்னணி யில் ஒரு இளம்பெண் கொலையும் இருப்ப தாகக் கூறப்படுகிறது. அதைப்பற்றி நேரடி விசாரணையில் இறங் கினோம்.

ஜேடர்பாளையம் அருகேயுள்ள வீ.கரப் பாளையத்தைச் சேர்ந்தவர் விவேகானந் தன். இவருடைய மனைவி நித்யா. இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். கடந்த மார்ச் 11-ஆம் தேதி மாலை, வீட்டிலிருந்து கூப்பிடு தொலைவி லுள்ள பகுதியில் வழக் கம்போல் ஆடுகளை மேய்த்துக்கொண்டிருந் தார். மாலை 5.50 மணியளவில் ஆடுகள் மட்டுமே வழிதெரிந்து வீட்டுக்குச் சென்ற டைந்த நிலையில் நித்யா வீடு திரும்ப வில்லை.

அவரைத் தேடி விவேகானந்தனும், அவருட

அவரைத் தேடி விவேகானந்தனும், அவருடைய அண் ணன் பூபதியும் மேய்ச் சல் நிலப்பகுதிக்குச் சென்றனர். அங்கே, ஓடை சேற்றில் அலங் கோலமான நிலையில் நித்யா சடலமாகக் கிடந்தார். கழுத்து, முகம், மார்புப் பகுதி களில் சில காயங்கள் இருந்தன. நைட்டி, உள்ளாடைகள் கிழிக்கப்பட்டு இருந்தன. மர்ம நபர்கள் அவரை பாலியல் பலாத்காரம் செய்து, கழுத்தை நெரித்து கொலை செய்திருப்பதும், சடலத்தை முள்புதர் வழியாக "தரதர'வென்று இழுத்துச்சென்று அங்குள்ள ஓடை சேற்றில் வீசிவிட்டுச் சென்றிருப்பதும் தெரியவந்தது.

ff

நாமக்கல் அரசு மருத்துவமனையில் மார்ச் 12-ஆம் தேதி நித்யாவின் சடலம் தடயவியல் மருத்துவர் ரகுதீபன் தலைமையில் உடற்கூராய்வு செய்யப்பட்டது. அவருடைய உடலில் முள்கீறல்கள், நகக்கீறல்கள் என 38 இடங்களில் காயங்கள் இருந்தன. கழுத்தை இறுக்கிக் கொலைசெய்திருப்பதும் தெரியவந்தது.

இதுதொடர்பாக, நித்யாவின் கணவரின் அண்ணனும், கரப்பாளையம் கிளை தி.மு.க. செயலாளருமான பூபதியிடம் பேசினோம்.

"என் தம்பி மனைவி நித்யா கொடூரமாக கொல்லப்பட்டதன் பின்னணியில், வடமாநிலத் தொழிலாளர்களுக்கு தொடர்பு இருக்கலாம் என சந்தேகப்படுகிறோம். இதே பகுதியில், கொங்கு வெள்ளாளக் கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்த சதாசிவம் வெல்ல ஆலை நடத்திவருகிறார். அந்த ஆலக்கொட்டகையில் வேலை செய்துவரும் வடமாநிலத் தொழிலாளர்களில் 3 பேர், அடிக்கடி எங்கள் தோட்டம் அருகேயுள்ள ஏரி, விவசாயக் கிணறுகளில் மீன்பிடிக்க வருவார்கள். மற்றவர்களுடைய தோட்டத்துக் குள் புகுந்து அவர்கள் மீன்பிடிக்கச் செல்வதால், நானே பலமுறை அவர்களை சத்தம்போட்டு விரட்டிவிட்டிருக்கிறேன்.

அவர்கள் மீது சந்தேகம் இருப்பதாக காவல்துறையில் கூறியதையடுத்து, சம்பவத் தன்று சதாசிவத்தின் கரும்பு ஆலைக்கு பரமத்திவேலூர் காவல் ஆய்வாளர் சுரேஷ் விசாரிக்கச் சென்றார். அதற்குள் அவருடைய செல்போனுக்கு யாரிடமிருந்தோ ஏதோ தகவல் வர, அவர் விசாரணைக்குச் செல்லாமல் பாதியிலேயே திரும்பிவிட்டார்.

dd

நித்யா கொல்லப்பட்ட அன்றே, சதாசிவம் ஆலக்கொட்டகையில் வேலை செய்துவந்த சந்தேகத்திற்குரிய மூன்று வடமாநிலத் தொழிலாளர்களை காவல்துறையினர் பத்திரமாக சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைத்துவிட்டனர்.

அதன்பிறகுதான் உண்மைக் குற்றவாளி களைக் கைது செய்யக்கோரி நாங்கள் நாமக்கல் அரசு மருத்துவமனை, ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தினோம். இந்த நிலையில் தான் சதாசிவம் கரும்பாலையில் வேலை செய்துவந்த நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த 17 வயது சிறுவன் தான், நித்யாவை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்தவன் என்று கூறி, ஒருவனை கைது செய்தனர்.

நித்யா படித்த பட்டதாரி பெண் மட்டுமல்ல, நல்ல திடகாத்திரமான பெண்ணும்கூட. கைது செய்யப்பட்ட சிறுவன், உண்மைக் குற்றவாளி என்றே வைத்துக்கொண்டாலும், அவன் ஒருவனால் மட்டும் இத்தகைய கொடுங்குற்றத்தில் ஈடுபட்டிருக்க முடியாது. மேலும் சிலருக்கு தொடர்பு இருக்கக்கூடும் என சந்தேகிக்கிறோம்.

நித்யாவின் கொலையை மையப்படுத்திதான் மர்ம நபர்கள் தீ வைப்பு சம்பவங்களில் ஈடுபடுவதாகவும், சாதி மோதல் அபாயம் உள்ளதாகவும் சிலர் பரப்பிவிடுகின்றனர். அதை நாங்கள் நம்பவில்லை,'' என்கிறார் பூபதி.

நித்யா கொலைவழக்கில் உண்மைக் குற்ற வாளிகளை கைது செய்யக்கோரி, பாதிக்கப்பட்ட குடும்பத்துடன் இணைந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், தமிழ்நாடு விவசாயிகள் சங்கமும் தொடர்ந்து போராடிவருகின்றன.

இதுதொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாமக்கல் மாவட்ட செயற்குழு உறுப்பினர் தங்கமணியிடம் கேட்டோம்.

ff

"கடந்த பிப்ரவரி இறுதியில், திருப்பூரில் வடமாநிலத் தொழிலாளர்கள் தாக்கப்பட்டதாக வதந்தி கிளம்பியதும், அதன் தொடர்ச்சியாக இங்கிருந்து கொத்துக் கொத்தாக வடமாநிலத் தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு கிளம்பிச் சென்றனர். அந்த காலகட்டத்தில் தான் நித்யாவின் கொலையும் நடந்தது.

அப்படியான சூழலில் சதாசிவத்தின் ஆலக்கொட்டகை யில் வேலை செய்துவரும் வடமாநிலத் தொழிலாளர்கள் 3 பேரை நித்யா கொலைவழக்கில் கைதுசெய்திருந்தால், மாநில அளவில் இந்த விவகாரம் சர்ச்சை ஆகக்கூடும் என காவல்துறை கருதியிருக்கலாம். இந்த சம்பவத் திற்குப் பிறகுதான், கடந்த மார்ச் 15-ஆம் தேதி, வெள்ளாள கவுண் டர் சமூகத்தைச் சேர்ந்த ஊர் கொத்துக்காரர் என்கிற சக்திவேல், ஆலக்கொட்டகை உரிமையாளர் சதாசிவம் வீடுகளில் மர்ம நபர்கள் தீ வைத்தனர்.

அதன்பின், கடந்த ஏப். 14-ஆம் தேதி தமிழ்நாடு விவசாயி கள் சங்கத் தலைவர் குழந்தைவேல், இதே ஊரைச் சேர்ந்த பூங்கோதை ஆகியோரின் வீடுகள் மீது பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன. குழந்தைவேலின் வீட்டில் வீசப்பட்ட பெட்ரோல் குண்டு வெடிக்காததால், அவருடைய தோட்டத் தில் ஏப். 27-ஆம் தேதி மர்ம நபர்கள் தீ வைத்துள்ளனர். இதில் பவர் டிரில்லர், நீர்ப்பாசன பைப்புகள் என 11 லட்ச ரூபாய் பொருள்கள் தீக்கிரையாயின.

வடகரையாத்தூர் ஊராட்சிமன்ற முன்னாள் தலைவர் பூங்கொடி வைத்தியநாதன், பால் கூட்டுறவு சங்க செயலாளர் பழனிசாமி வீடுகளுக் கும் தீ வைக்கப்பட்டுள்ளன. ஒரு தனியார் பள்ளிப் பேருந்துக்கும் மர்ம நபர்கள் தீ வைத்துள்ளனர்.

கடைசியாக மே 13-ஆம் தேதி நள்ளிரவு, முத்துசாமியின் ஆலக்கொட்டகை குடியிருப்புக்கும் தீ வைத்துள்ளனர். இப்படி தொடர்ச்சியாக தீ வைப்பு சம்பவங்கள் நடந்தும், இதில் தொடர்புடைய குற்றவாளிகள் ஒருவர்கூட கைதுசெய்யப்படாதது மர்மமாக இருக்கிறது.

dd

ஆலக்கொட்டகை உரிமையாளர்கள் 50 பேரிடம் தலா 2 லட்சம் வீதம் ஒரு கோடி ரூபாய் வசூலித்துக்கொண்டு, காவல்துறையினர் நித்யாவின் கொலை விவகாரத்தில் ஒருதலைப்பட்சமாக நடந்துகொள்வதாகவும் பேச்சு உலா வருகிறது. கைதுசெய்யப்பட்ட 17 வயது சிறுவன்கூட உண்மையான குற்றவாளிதானா என்பது சந்தேகம்தான்,'' என்கிறார் தங்கமணி.

இந்த களேபரங்களுக்கு இடையே, மே 16-ஆம் தேதி, நித்யா கொலை வழக்கை சி.பி.சி.ஐ.டி. காவல்துறைக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளார் டி.ஜி.பி. மேலும், வழக்கை சரியாகக் கையாளவில்லை எனக்கூறி, பரமத்திவேலூர் காவல் ஆய்வாளர் சுரேஷ் பாலக்கோடுக்கு இடமாற்றம் செய்யப் பட்டுள்ளார்.

முத்துசாமியின் ஆலக்கொட்டகையில் தீ வைக்கப்பட்ட சம்பவத்தில் காயமடைந்த நான்கு பேரில், ஒடிஸாவைச் சேர்ந்த ராகேஷ், மே 17-ஆம் தேதி அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதுதொடர்பாக மேற்கு மண்டல காவல்துறை ஐ.ஜி. சுதாகரிடம் கேட்டபோது, ''நித்யா கொலைக்குப் பிறகு, இரண்டு சமுதாய மக்களிடையே மோதல் அபாயம் இருந்துவந்தது. அதனால்தான் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த கொலைவழக்கில், 17 வயது சிறுவனை கைது செய்திருக்கிறோம். அவன் உண்மையான குற்றவாளிதான்.

நித்யாவின் உடலிலிருந்து எடுக்கப்பட்ட விந்தணு மாதிரியும், கைது செய்யப்பட்ட சிறுவனின் விந்தணுக்களும் ஒத்துப்போவது முதல்கட்ட பரிசோதனையில் உறுதிப்படுத்தப் பட்டுள்ளது. இந்த கொலையில் மேலும் சிலருக்கு தொடர்பு இருக்கலாம் என கூறப்படுவதால், அதுகுறித்தும், தீவைப்பு சம்பவங்கள் குறித்தும் விசாரித்து வருகிறோம்'' என்றார்.

nkn240523
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe