Advertisment

ஸ்ரீமதி மரணத்தில் அவிழும் மர்மம்! -பர்த்டே பார்ட்டியில் கறி விருந்து!

ss

ள்ளக் குறிச்சி பள்ளி மாணவி ஸ்ரீமதி விஷயத்தில் பல உண்மைகள் ஒவ்வொன் றாக வெளிவரத் தொடங்கி யுள்ளது. "பள்ளி மாணவி தற்கொலை செய்துகொண்டார். இந்த பள்ளிக்குள் மாணவி தற்கொலை செய்துகொண்டபோது பர்த்டே பார்ட்டி ஒன்றும் நடக்கவில்லை'யென பள்ளி நிர்வாகமும் போலீசாரும் மறுத்து வந்தனர். அதுபற்றி சின்ன சேலம் பகுதியில் பிரபல சமூக சேவகரான பாபு என்பவரிடம் கேட்டோம். "12-ந் தேதி இரவு அந்த பள்ளியில் ஒரு பெரிய விழா நடந்திருக்கிறது. அதற்காக சின்னசேலம் பகுதியில் இறைச்சிக்கடை நடத்திவரும் சக்தி என்பவரிடம் 20 கிலோ மட்டன், சிக்கன் என இறைச்சி வாங்கப்பட்டுள்ளது. 20 கிலோ இறைச்சி என்றால் குறைந்தது 100 பேருக்கு பரிமாறப்படும்.

Advertisment

srimathi

பிரியாணியாகவோ மற்ற பொருட்களாகவோ அவற்றை தயார் செய்த சமையல் ஆட்கள் மதியமே வந்திருந்து அந்த இறைச்சியை தயார் செய்திருக்கிறார்கள். அதி.மு.க. ஒன்றிய கவுன் சிலராக இருக்கக்கூடியவரும் கோகுல்ராஜ் கொலைவழக்கில் குற்றவாளியாக சிறை தண்டனை அனுபவித்துக் கொண்டிருக்கும் யுவராஜுக்கு நெருக்கமானவருமான ராஜசேகரன் மற்றும் அவரது மகன்கள் இந்த கொண்டாட் டங்களில் பங்கெடுத் திருக்கிறார்கள் என நா

ள்ளக் குறிச்சி பள்ளி மாணவி ஸ்ரீமதி விஷயத்தில் பல உண்மைகள் ஒவ்வொன் றாக வெளிவரத் தொடங்கி யுள்ளது. "பள்ளி மாணவி தற்கொலை செய்துகொண்டார். இந்த பள்ளிக்குள் மாணவி தற்கொலை செய்துகொண்டபோது பர்த்டே பார்ட்டி ஒன்றும் நடக்கவில்லை'யென பள்ளி நிர்வாகமும் போலீசாரும் மறுத்து வந்தனர். அதுபற்றி சின்ன சேலம் பகுதியில் பிரபல சமூக சேவகரான பாபு என்பவரிடம் கேட்டோம். "12-ந் தேதி இரவு அந்த பள்ளியில் ஒரு பெரிய விழா நடந்திருக்கிறது. அதற்காக சின்னசேலம் பகுதியில் இறைச்சிக்கடை நடத்திவரும் சக்தி என்பவரிடம் 20 கிலோ மட்டன், சிக்கன் என இறைச்சி வாங்கப்பட்டுள்ளது. 20 கிலோ இறைச்சி என்றால் குறைந்தது 100 பேருக்கு பரிமாறப்படும்.

Advertisment

srimathi

பிரியாணியாகவோ மற்ற பொருட்களாகவோ அவற்றை தயார் செய்த சமையல் ஆட்கள் மதியமே வந்திருந்து அந்த இறைச்சியை தயார் செய்திருக்கிறார்கள். அதி.மு.க. ஒன்றிய கவுன் சிலராக இருக்கக்கூடியவரும் கோகுல்ராஜ் கொலைவழக்கில் குற்றவாளியாக சிறை தண்டனை அனுபவித்துக் கொண்டிருக்கும் யுவராஜுக்கு நெருக்கமானவருமான ராஜசேகரன் மற்றும் அவரது மகன்கள் இந்த கொண்டாட் டங்களில் பங்கெடுத் திருக்கிறார்கள் என நான் சந்தேகப்படு கிறேன்.

Advertisment

ஏனென்றால், யுவ ராஜுக்கு நெருங்கிய நண்பர் இந்த பள்ளித் தாளாளர் ரவிக்குமார். ரவிக்குமாரும் ராஜசேகரனும் இணைந்து யுவராஜ், கோகுல்ராஜ் கொலை வழக்கில் தேடப்பட்டபோது அவரை இந்த பகுதிகளில் உள்ள காடுகள் அடர்ந்த கிராமங்களில் வைத்துதான் பாதுகாத்தார்கள். அதனால் ராஜசேகர் யுவராஜுக்கு மிகவும் நெருக்கமானவர். ஸ்ரீமதி அம்மா, பள்ளி நிர்வாகத்திடம் பேரம் பேசியதாக போலீஸ் தரப்பு, ஊடகங்கள் மூலம் ஒரு படம் வெளியிட்டது. அந்த படத்தில் மகாபாரதி பள்ளி நிர்வாகி மோகன் மற்றும் ராஜசேகர் ஆகியோர் அமர்ந்து ஸ்ரீமதி அம்மாவுடன் பேசிக் கொணடிருக்கிறார்கள். அந்த படத்தின் தொடர்ச்சியாக வெளியிடப்பட்ட இன்னொரு படத்தில் ராஜசேகர் தொலைபேசியில் யாருடனோ பேசிக் கொண்டிருக்கிறார்.

ஸ்ரீமதியின் மரணம் நிகழ்ந்தவுடன் அவரது அம்மா சின்னசேலம் காவல்நிலையத்துக்கு வந்து, எனது மகள் கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளாள் என புகார் கொடுத்தார். அதை அங்கிருந்த ஆய்வாளர் ஏற்க மறுத்தார். சந்தேக மரணம் என்றே வழக்கை பதிவு செய்தார்.

ஸ்ரீமதியின் மரணம் நிகழ்ந்தவுடன் சின்னசேலம் பகுதியில் உள்ள ஒரு பிரபல வழக்கறிஞர் வீட்டில் கொங்கு வேளாளர் கவுண்டர் இனப் பிரமுகர்கள் கலந்து கொண்ட கூட்டம் நடந்தது. அந்த கூட்டத்தில் ஸ்ரீமதியின் மரணத்தை எப்படி திசை திருப்புவது என ஆலோசனை நடத்தப்பட்டது.

அந்த ஆலோசனையில்தான் வழக்கறிஞர் ஒரு யோசனையை தெரிவித்தார். அதன்படியே ஸ்ரீமதிக்கும் இரண்டு பள்ளிச் சிறுவர்களுக்கும் இடையே காதல் என கட்டுக்கதை கட்டமைக்கப் பட்டது. அதற்கு ஆதாரமாக சின்னசேலம் பகுதியிலிருந்து கள்ளக்குறிச்சி பகுதி வரை கண்காணிப்பு கேமராக்களில் ஸ்ரீமதியின் பிணம் கொண்டு செல்லும் காட்சிகளை காவல்துறை அழித்தது.

srimathi

அந்த ஆலோசனைக் கூட்டத்தில் எடுத்த முடிவுகளின்படி, கொங்கு பகுதியில் இருக்கக்கூடிய கவுண்டர் இன மக்களிடம் ஒரு பெரிய நிதிவசூல் நடத்தப்பட்டது. சாக்கு மூட்டைகளில் ஏராளமான பணம் ரவிக்காக திரட்டப்பட்டது. ரவியைக் காப்பாற்ற திரட்டப்பட்ட அந்த பணம் சாக்குமூட்டைகளில் வைக்கப்பட்டிருந்ததை நானே பார்த்தேன்'' என்கிறார் பாபு.

ஸ்ரீமதி விஷயம் பற்றி நம்மை சந்தித்த விடுதலை சிறுத்தை இயக்கத்தின் கடலூர் மாவட்ட தலைவர் திராவிடமணி "போலீசார் ஸ்ரீமதி விஷயத்தில் உடனடியாக நடவடிக்கை எடுக்காததற்கு என்ன காரணம் என, கலவரம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கவில்லை யென கள்ளக்குறிச்சி மாவட்டத்திலிருந்து மாற்றப்பட்ட கலெக்டர் மற்றும் எஸ்.பி. ஆகியோரது வட்டாரங்களில் கேட்டோம்.

வழக்குப் போட தயாராக இருந்தோம். ஆனால் பள்ளி நிர்வாகத்தின் மீது எந்த வழக்கும் போடக்கூடாது என மேலிடத்தில் இருந்து சொன்னார்கள் என மாற்றப்பட்ட எஸ்.பி.யும் கலெக்டரும் சொல் கிறார்கள்'' என்கிறார்.

ஸ்ரீமதிக்காக போராடும் சேலம் மனித உரிமை ஆர்வலர் தமயந்தி, "சின்னசேலம் பகுதியில் இருக்கும் ஒரு வழக்கறிஞர் அந்த பள்ளிக்கு ஆதரவாக கிரிமினல் தனமான யோசனைகளை தெரிவித்து வருகிறார் என்பது எங்களுக்குத் தெரியும்.

இந்த யோசனைகள் எந்த அளவுக்கு இருக் கிறதென்றால், தற்பொழுது சேலம் செவ்வாய் பேட்டை காவல்நிலையத்தில் ஜாமீன் நிபந்தனை யின் பேரில் கையெழுத்து போட்டு வரும் ஆசிரியை கிருத்திகா தனது சொந்த பெற்றோர் களையே "என்னை பார்க்க நீங்கள் வர வேண்டாம். நான் பள்ளி நிர்வாகத்துடன் இருக்கிறேன். அவர்கள் என்னை பார்த்துக் கொள்வார்கள்' என சொல்வதிலிருந்து தெரிகிறது'' எனத் தெரிவித்தார்.

இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட ஆய்வாளர் ஒருவர், ஒரு சில மாதங்களில் ஓய்வுபெறும் நிலையில் தனது சொந்த ஊரில் பிரமாண்டமாக வீடு கட்டும் வேலைகளை துவங்கியுள்ளார். இதற்கிடையே சென்னையிலுள்ள குழந்தைகள் நல வாரியம் தமிழக டி.ஜி.பி.க்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. அந்த கடிதத்தில் "அனுமதியில்லாமல் ஹாஸ்டலை நடத்தி ஸ்ரீமதியின் மரணத்திற்கு காரணமான பள்ளி நிர்வாகத்தின் மேல் நடவடிக்கை எடுக்கவேண்டும்' எனக் குறிப்பிட்டுள்ளது.

இந்தத் தகவலை ஸ்ரீமதியின் அம்மாவுக்கும் குழந்தைகள் நல வாரியம் தெரிவித்துள்ளது. அவர்கள் தங்களது சுப்ரீம் கோர்ட் வழக்கில் குழந்தைகள் நல வாரியம் அனுப்பிய கடிதத்தை சேர்த்துள்ளார்கள்.

ஆசிரியர்கள் மீது பழிபோட்டு சிம்பிளாக மறைத்துவிடலாம் என பள்ளி நிர்வாகம் முதலில் திட்டமிட்டது. சின்னசேலம் பகுதியில் உள்ள அந்த வழக்கறிஞர் கூறிய ஆலோசனைகளின்படிதான் காதல், பெற்றோருடன் சண்டை ஆகிய விவகாரங்கள் சேர்க்கப்பட்டன. நக்கீரனின் தொடர் புலனாய்வில் பல தகவல்கள் பூதாகரமாக வெளிப்பட்டதன் விளைவாகத்தான் சி.சி.டி.வி. பதிவுகளை அதே வழக்கறிஞர் ஆலோசனையின் பேரில் பள்ளி நிர்வாகம் வெளியிட்டுள்ளது என்கிறார்கள் ஸ்ரீமதியின் மரணத்தைப் பற்றி ஆராயும் சின்னசேலம் பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள்.

nkn210922
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe