திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பாச்சலூர் மலை கிராமத்தில் இருக்கும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், பாச்சலூர் மற்றும் கரடி பாறை, நடுங்கல், குரங்கணி பாறை, கரடிகாடு, கொடவப்பாறைஆகிய மலை கிராமங்களை சேர்ந்த மாணவ மாணவிகள் 106 பேர் படித்து வருகிறார்கள். அதே பகுதியைச் சேர்ந்த சத்யராஜ் -பிரியதர்சினி தம்பதிகளுக்கு இரண்டு பெண் குழந்தைகளும், ஒரு ஆண் குழந்தையும் உள்ளது. இந்த மூன்று பிள்ளைகளும் அதே பள்ளியில் படித்துவருகிறார்கள். இதில் இரண்டாவது மகளான ஒன்பது வயதான பார்வதி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) ஐந்தாம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 15-ம் தேதி வழக்கம்போல் பள்ளிக்குச் சென்ற மாணவி பார்வதி, மதிய இடைவெளியின்போது காணவில்லை என்பதைக் கண்ட அக்கா அருகே உள்ள வீட்டுக்கு சென்று பார்த்துவிட்டு, மறுபடியும் ஸ்கூலுக்கு வந்து தேடும்போதுதான்... பள்ளியின் பின்புறத் தில் தீயில் எரிந்து கருகிய நிலையில் முணு முணுத்தவாறே கிடந்த தங்கையைக் கண்டு கதறி அழுது தோட்டத்தில் வேலை பார்த்து வந்த தந்தை சத்யராஜிடம் போய் கூறியிருக்கிறார்.
தகவல் கேட்ட

தகவல் கேட்டு பதறியபடி பள்ளிக் கூடத்துக்கு வந்த பெற்றோர்களும், உறவினர் களும் பிள்ளையை தூக்கிக்கொண்டு ஒட்டன் சத்திரம் மருத்துவமனைக்கு கொண்டுவரும் வழியிலேயே பார்வதியின் உயிர் பிரிந்ததைக் கண்டு கதறித் துடித்துவிட்டனர். அதைத் தொடர்ந்து பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். "ஒரு பச்சைக் குழந்தையை ஈவு இரக்கமின்றி எரித்துக் கொலை செய்த குற்றவாளிகளை உடனே கைது செய்ய வேண்டும் இல்லை என்றால் குழந்தையின் உடலை வாங்கமாட்டோம்' என்று கூறி பெற்றோரும் உறவினர்களும் போராட்டத்தில் குதித்தனர்
இந்த விஷயம் எஸ்.பி. சீனிவாசனுக்கும். தொகுதி எம்.எல்.ஏ.வான ஐ.பி. செந்தில் குமாருக்கும் தெரியவே, உடனே மருத்துவ மனைக்கு வந்து மாணவியின் பெற்றோரையும், உறவினர்களையும் சமாதானப்படுத்தி, "கூடிய விரைவில் குற்றவாளியை பிடிப்போம்' என்று உறுதி கூறியதின் பேரில் போராட்டம் கைவிடப்பட்டு மாணவியின் உடலை வாங்கிச் சென்று அடக்கம் செய்தனர்
அதைத்தொடர்ந்து திண்டுக்கல் டி.ஐ.ஜி விஜயகுமாரி. எஸ்.பி. சீனிவாசன், ஏ.டி.எஸ்.பி. லாவண்யா மற்றும் டி.எஸ்.பி.கள், இன்ஸ்பெக்டர்கள் என பத்துக்கும் மேற்பட்ட அதிகாரிகள் பாச்சலூர் மலை கிராமத்துக்குச் சென்று பல்வேறு கோணங்களில் அதிரடியாக விசாரணை செய்து வருகிறார்கள். இதில் முதல் கட்டமாக பள்ளித் தலைமையாசிரியர் முருகன் மற்றும் மணிவேல்ராஜன், ராஜதுரை ஆகிய மூன்று ஆசிரியர்களிடமும் ஒரு டீம் தீவிர விசாரணை மேற்கொண்டது.
"பள்ளிக்கூடத்தின் பின்புறத்தில் என் மகள் உடல் கருகிய நிலையில் கிடந்த இடத்தில் அருகே தீப்பெட்டியும், மண்ணெண்ணெய் பாட்டிலும் கிடந்தது. அந்த அளவிற்கு படுபாவிகள் என் மகளை எரித்துக் கொலை செய்து இருக்கிறார்கள். வேறு ஒரு இடத்தில் எரித்துக் கொண்டு வந்து இங்கு போட்டிருக்கிறார்கள். இதற்கு முழுகாரணம், பிள்ளைகளை கவனிக்கத் தவறிய ஆசிரியர்கள் தான். இங்கு பணிபுரியும் சில ஆசிரியர்கள் மேலேயும் எங்களுக்கு சந்தேகம் இருக்கு. அவர்களை உடனடியாக கைது செய்யவேண்டும், தவறினால் முதல்வர் வரை சென்று புகார் மனு கொடுக்கக் கூட தயங்கமாட்டேன். அதுலயும் என் மகள் தற்கொலை செய்துகொண்டு இருப்பாள் என்ற புரளியையும் பரப்பி வருகிறார்கள். அப்படி ஒரு எண்ணம் எல்லாம் பிஞ்சுக் குழந்தைகள் மனதில் இருக்காது'' என வருத்தத்துடன் கூறினார் பார்வதியின் தந்தையான சத்யராஜ்.
இது சம்பந்தமாக மலைக்கிராமத்தில் முகாமிட்டு விசாரணை நடத்திவரும் ஏ.டி.எஸ்.பி. லாவண்யாவிடம் கேட்டபோது... "மாணவி பார்வதி உடல் கருகிக் கிடந்ததை அங்கு படிக்கக்கூடிய பெரும்பாலான மாணவ-மாணவிகள் பார்த்து கதறி அழுது இருக்கிறார்கள். அதன்மூலம் அந்த மாணவ -மாணவிகள் மனதளவிலும் பாதிக்கப்பட்டு இருந்தனர்.
அவர்களிடம் நடந்த விவரங்களை அன்பாகக் கேட்டோம்.
மாணவி பார்வதி நல்ல படிக்குமா? உங்க ளுக்கெல்லாம் பிரண்டா? நீங்கள் பார்த்து இருக் கிறீர்களா? என்று கேட்ட தற்கு, எந்த ஒரு பயமும் இல்லாமல் வீட்டில் பெற் றோர்கள் உறவினர்களிடம் எப்படி சகஜமாக பேசு வார்களோ அதுபோலவே பல மாணவிகள் பார்த்ததாக வும், பல மாணவிகள் பார்க்கவில்லை என்றும், அந்த மாணவி இறந்ததை பார்த்ததிலிருந்து எங்க ளுக்கு பயமாக இருக்கிறது, இனிமேல் ஸ்கூலுக்கு போக மாட்டோம் என்று கூறினார்கள். அவர்களுக்கு அட்வைஸ்செய்து மனநிலையை மாற்றி வருகிறோம்.'' என்றார்.
இது சம்பந்தமாக நாம் மேலும் மலை கிராம மக்களிடம் விசாரித்தபோது, "இந்தப் பள்ளிக்கூடத் தில் எந்த ஒரு அடிப்படை வசதியும் கிடையாது. ஆசிரியர்களே காலதாமதமாக பெயர் அளவிலேயே வந்துவிட்டு போகிறார்கள். இறப்பதற்கு மூன்று நாட்களுக்கு முன்பு அந்த மாணவி பள்ளிக் கூடத்துக்கும் டீயூசனுக்கும் போகமாட்டேன் என்று அடம் பிடித்திருக்கிறார். அப்பொழுது பெற்றோர் கள்தான் அந்த மாணவியை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்திருக்கிறார்கள். அப்படியென்றால் பள்ளிக்கூடத்தில் ஏதாவது ஒரு சம்பவத்தை இந்த மாணவி பார்த்திருக்கலாம். இந்த நிலையில்தான் பள்ளிக்கூடத்தின் பின்புறத்தில் அந்த பச்சை மண்ணை படுபாவிகள் எரித்துக் கொலை செய்து விட்டார்கள். அப்படி இருந்தும் குற்றவாளிகளை போலீசார் பிடிக்காமல் மெத்தனம் காட்டி வருகிறார்கள்'' என்றனர்.
இதற்கிடையே பள்ளியைச் சுற்றியுள்ள மலை கிராம மக்கள், "தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பமாட்டோம். குழந்தைகளுக்கு தகுந்த பாதுகாப்பு வேண்டும்' என போராட்டத்தில் குதித்துள்ளனர்.
மலை கிராம மாணவி சாவில் மர்மம் நீடித்துக்கொண்டே வருவதால் காக்கிகளும் திணறிவருகிறார்கள்.