Advertisment

ஈஷாவிலிருந்து ஓடி மாயமான இளம்பெண்! தவிக்கும் கணவர்..!

esha

ஷாவிலிருந்து யோகா உடையுடன், காலில் செருப்பில்லாமல் தலைதெறிக்க ஓடி மாயமான இளம்பெண்ணின் சி.சி.டி.வி. காட்சிகளால் மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார் ஜக்கி வாசுதேவ்.

Advertisment

பொதுவாகவே, "என்னுடைய மகள் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டிருக்கின்றார். என்னுடைய மகன், மகள் அல்லது கணவன் மனைவி மாயமாகியிருக்கின்றார்கள், என்கின்ற மாயம், மரணம் போன்ற வார்த்தைகளை ஈஷாவிலிருந்து பிரிக்க முடியாது. அந்த வகையில், இந்த முறை புகாரளித்திருப்பது மாயமான பெண்ணின் கணவரான பழனிக்குமார்.

Advertisment

esha

"எனக்கு சொந்த ஊர் மதுரை. வேலைக்காக திருப்பூர் வந்தபோது, கோவை யைச் சேர்ந்த சுபஸ்ரீயை காதலித்தேன். அப்பொ ழுதே ஈஷா மீது மிகுந்த ஈடுபாடு இருவருக்கும் உண்டு. இரு வீட்டார் சம்மதத்துடன் எங்க ளுடைய திருமணம் கூட ஈஷாவிலுள்ள லிங்கபைரவி முன்னால்தான் நடந்தது. அவினாசியில் வசித்தாலும், மாதத்திற்கு ஒரு முறை யாவது ஈஷா மையத்திற்கு இருவரும் வந்து செல்வது உண்டு. இது இப்படி யிருக்கையில், கடந்த 11-12-2022 அன்று துவங்கும் சைலன்ஸ் வகுப்பில் கலந்து கொள்ள சுபஸ்ரீ ஈஷாவிற்கு செல்லவிருப்பதாக தெரி வித்தார். "ஒருவாரம் நடை பெறும் இந்தப் பயிற்சிக்கு மனதளவிலும், உட லளவிலும் வலிமை வேண்டும். அப்பொழுது தான் இந்த ப

ஷாவிலிருந்து யோகா உடையுடன், காலில் செருப்பில்லாமல் தலைதெறிக்க ஓடி மாயமான இளம்பெண்ணின் சி.சி.டி.வி. காட்சிகளால் மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார் ஜக்கி வாசுதேவ்.

Advertisment

பொதுவாகவே, "என்னுடைய மகள் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டிருக்கின்றார். என்னுடைய மகன், மகள் அல்லது கணவன் மனைவி மாயமாகியிருக்கின்றார்கள், என்கின்ற மாயம், மரணம் போன்ற வார்த்தைகளை ஈஷாவிலிருந்து பிரிக்க முடியாது. அந்த வகையில், இந்த முறை புகாரளித்திருப்பது மாயமான பெண்ணின் கணவரான பழனிக்குமார்.

Advertisment

esha

"எனக்கு சொந்த ஊர் மதுரை. வேலைக்காக திருப்பூர் வந்தபோது, கோவை யைச் சேர்ந்த சுபஸ்ரீயை காதலித்தேன். அப்பொ ழுதே ஈஷா மீது மிகுந்த ஈடுபாடு இருவருக்கும் உண்டு. இரு வீட்டார் சம்மதத்துடன் எங்க ளுடைய திருமணம் கூட ஈஷாவிலுள்ள லிங்கபைரவி முன்னால்தான் நடந்தது. அவினாசியில் வசித்தாலும், மாதத்திற்கு ஒரு முறை யாவது ஈஷா மையத்திற்கு இருவரும் வந்து செல்வது உண்டு. இது இப்படி யிருக்கையில், கடந்த 11-12-2022 அன்று துவங்கும் சைலன்ஸ் வகுப்பில் கலந்து கொள்ள சுபஸ்ரீ ஈஷாவிற்கு செல்லவிருப்பதாக தெரி வித்தார். "ஒருவாரம் நடை பெறும் இந்தப் பயிற்சிக்கு மனதளவிலும், உட லளவிலும் வலிமை வேண்டும். அப்பொழுது தான் இந்த பயிற்சியை செய்ய முடியும்' என அவள் சொன்ன தால், "எதுக்குப்பா.? இன்னொரு நாள் இந்த பயிற்சியை மேற்கொள்ளலாம்' என்றேன். அவள் ஏற்கனவே கடந்த 4 வருடத்திற்கு முன்பு இதே பயிற்சியை செய்திருப்பதாகக் கூறியதால், சம்மதம் தெரிவித்திருந்தேன். 11-ஆம் தேதி துவங்கிய பயிற்சி 18-ஆம் தேதி முடிவடையும் என்பதால், ஞாயிற்றுக்கிழமையன்று எனது மனைவியை அவினாசிக்கு அழைத்து செல்ல ஈஷா மையத்திற்கு வந்து, வெளியில் காத்திருந்தேன். மாலைவரை மனைவி வராததால், சந்தேகமடைந்து ஈஷா மையத்திற்குள் சென்று விசாரிக் கையில், அவர் காலையிலேயே சென்றுவிட்டதாகக் கூறினார் கள். அதற்கு அத்தாட்சியாக சி.சி.டி.வி. காட்சி ஒன்றை காண்பித்தார்கள். அதில் காலை 9.30 மணியளவில் சுபஸ்ரீ அவளுடைய எந்தப் பொருளையும் எடுக்காமல், யோகா உடையுடன் காலில் செருப்பு கூட இல்லாமல் வெளியேறிய காட்சி பதிவாகியிருந்தது'' என்கிறார் சுபஸ்ரீயின் கணவர் பழனிக்குமார்.

dddd

ஆலந்துறை காவல்நிலையமோ, அவசர அவசரமாக பழனிக்குமாரிட மிருந்து புகாரை வாங்கி, வழக்காகப் பதிவு செய்தது. அதில், "சுபஸ்ரீ கலந்துகொண்ட சைலன்ஸ் வகுப்பு காலை 11 மணிக்கு முடிவடையும் என்பதால் அவரை அழைத்துச்செல்லக் காத்திருந்தேன். பிற்பகல் 3 மணி வரையும் அவர் வராததால் ஈஷா மையத்தினரிடம் விசாரிக்கையில், சுபஸ்ரீ சர்ப்பவாசல் வழியாக காலை 9.30 மணிக்கு வெளியேறியது தெரியவந்தது. மேலும் விசாரிக்கையில், "என்னுடைய கணவருக்கு பேச வேண்டுமென ஒரு பெண் மொபைலை வாங்கிப் பேசியதாக' அந்த ஊரைச் சேர்ந்த நபர் ஒருவர் தெரிவித்தார். அதன்பின் தொடர்ச்சி யாக விசாரிக்கையில், சுபஸ்ரீ கால் டாக்சியில் ஏறி செம்மேடு முட்டத்து வயலில் இறங்கியதாகக் கூறப்படுகின்றது'' என்கின்றது புகார் விபரம். இதற்கு உறுதுணையாக தலை தெறிக்க சுபஸ்ரீ ஓடிவரும் சி.சி.டி.வி. காட்சிகள் இணைக்கப்பட்டுள்ளது.

மாயமான சுபஸ்ரீயின் நண்பரோ, "இயற்கையிலேயே சுபஸ்ரீ ரொம்ப சாதுவானங்க. பல வருடங்களாக ஈஷாவிற்கு அடிக்கடி போய் வருவாங்க. இந்த சைலன்ஸ் வகுப்பில் கலந்து கொள்ளுமுன் யார், யார் பயிற்சி வகுப்பில் கலந்து கொள்கிறார் கள் என லிஸ்ட் தயாரிக்கப்பட்டு அவங்களுக்குத் தனியாக அடையாள அட்டை கொடுக்கப்பட்டி ருக்கும். அதுபோக, அவர் கொண்டுபோன உடைமைப் பொருட்கள் மையத்தில் தனியாக சேகரிக்கப்பட்டு வைக்கப்பட்டிருக்கும். சுபஸ்ரீ யோகா உடையுடன் வெளியேறிய அன்று அவருடைய உடலில் அடையாள அட்டை இல்லை. வெளியில் வரும்பொழுது அவருடைய உடமைகளான துணிகள், மொபைல் போன், பர்ஸ், செருப்பு இவைகளையும் அவர் எடுத்து வரவில்லை. சர்ப்பவாசல் வழியாக 9.30 மணிக்கு வெளியேறியதாக கூறப்படும் ஈஷாவின் சி.சி.டி.வி. காட்சிகளில், யோகா உடையைத் தவிர வேறெதுவும் இல்லை. அங்கிருந்து செம்மேடு வரை ஓடியே சென்றிருக்கின்றார். அதற்கு அந்த பகுதிகளில் உள்ள சி.சி.டி.வி. காட்சிகளே சாட்சி.

ee

பிற்பகல்வரை நடக்கும் பயிற்சி முகாமை விட்டு முன்னரே வெளியேறக் காரணம் என்ன? தலைதெறிக்க ஓடி வரும் நிலைக்கு அங்கு என்ன நடந்திருக்க வேண்டும்? அவரின் நிலைதான் என்ன? உயிரோடுதான் இருக்கின்றாரா? என்ற கேள்விகள் எங்களிடம் இருக்கின்றன' என்கிறார் அவர்.

dd

இதுகுறித்து பேசிய ஈஷாவில் பணியாற்றிய ஒருவரோ, "அவனவன் தன்னுடைய மன அழுத்தம் குறையணும்னு உள்ளே வந்தால், இங்க இருக்கிறதும் போய்விடும். சைலன்ஸ் பயிற்சி எனும் 7 நாள் பயிற்சி மரண வேதனைக்கு ஒப்பானது. சொல்லி மாளாது. பாப ஸ்பந்தனா, சூன்ய தியானம் மற்றும் அட்ட யோகா உள்ளிட்ட பயிற்சிகளை முடித்தால், உங்களை சத்குருவே சந்திப்பார் என ஆர்வத்தைத் தூண்டிவிட்டு, "யாருக்கும் கிடைக்காத கடவுள் நம்மை சந்திக்கவுள்ளார்' என்கின்ற மாயையை தனக்குள் விதைத்துக் கொள்ள... அவர்களை ஜக்கியும் சந்தித்து, "உன்னுடைய ஆராவுடன் கலந்துவிட்டேன். நீ எனக்கு சொந்தமானவள்' எனக்கூறி சம்பளமில்லாத வேலை ஆட்களாக, தன்னுடைய ஏவல் நாய்களாக பணிபுரிய வைப்பது ஜக்கியின் தந்திரம். இது தெரிந்துதான் அந்த பெண் தப்பித்திருக்க வேண்டும்'' என்கிறார் அவர்.

இது குறித்து ஈஷா தரப்பு இதுவரை முறைப்படி விளக்கம் ஏதும் அளிக்கவில்லை.

____________

தமிழக அரசுக்கு நன்றி!

ss

நமது நக்கீரனில் கோவை மாவட்டச் செய்தியாளராக பணிபுரிந்தவர் அருள்குமார். கடந்த ஜனவரி மாதம் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனளிக்காமல் காலமானார்.

நக்கீரனில் 20 ஆண்டு காலமாக பத்திரிகையாளராகப் பணியாற்றிய அருள்குமா ரின் குடும்பத்திற்கு, தமிழக அரசின் நிவாரண உதவியைப் பெறும் நடவடிக்கை நக்கீரன் மூலம் எடுக்கப்பட்டது. செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், கோவை பி.ஆர்.ஓ. செந்தில் அண்ணா ஆகியோரின் ஒத்துழைப்பு மற்றும் தொடர் முயற்சியால், அருள்குமார் குடும்பத்திற்கு அரசின் நிவாரண உதவி ஐந்து லட்சம் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. அதன்படி, டிசம்பர் 20-ஆம் தேதி, கோவை மாவட்ட ஆட்சியர் டாக்டர் சமீரன், மறைந்த பத்திரிகையாளர் அருள்குமாரின் மனைவியிடம் ஐந்து லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங் கினார். கோவை பி.ஆர்.ஓ. செந்தில் அண்ணா உடனிருந்தார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும், செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அவர்களுக்கும், நக்கீரன் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறது.

nkn241222
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe