Advertisment

மர்ம நடமாட்டம்! வைரக்கல் வேட்டை! -புலிகள் வனப்பகுயில் கிலி!

ff

டந்த 14-ஆம் தேதி, நெல்லை மாவட்ட களக்காடு நகரில் ஏகத்துக்கும் திரண்ட விவசாயிகள், ஆர்ப்பாட்டத்தில் குதித்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார்கள்.

Advertisment

தென்மேற்கு மலைத் தொடர்ச்சியில் இருக்கும் களக்காடு புலிகள் காப்பகம் பிரசித்தி பெற்றது.அடாவடியாகச் செயல்படும் இதன் துணை இயக்குனர் ராமேஸ்வரன் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றுதான் அவர்கள் போராட்டத்தில் குதித்தனர்.

gg

எதற்கிந்தப் போராட் டம் என களத்தில் இருந்த விவசாயிகள் சிலரிடம் விசாரித்தபோது... "தடை செய்யப்பட்ட இந்த மலைப் பகுதியில் மர்ம நபர்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கிறது. கடந்த மாதம் களக்காடு கார் டிரைவர்கள் இரண்டு பேர் ஓட்டிவந்த கார்களில், ஆண்களும் பெண் களுமாக 10 பேர், தடை செய்யப்பட்ட இந்த மலைப் பகுதிக்குச் சென்றிருக்கிறார் கள். அதை அவர்கள், பெருமையாகத் தங்களின் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவு செய்ததால்தான் இந்த விவகாரம் வெளியே வந்தது. இதையடுத்து அந்த டிரை வர்கள் விசாரிக்கப்பட்டார் கள். அப்போது அவர்கள், "எங்களை அந்த 10 பேரையும் அழைத்து வரச்சொன்னதே வனத்துறை துணை இயக்கு னர்தான். அதனால்தான் தடை செய்யப்பட்ட பகுதி யில் உள்ள தலையணை, கருமாண்டியம்மன் கோவில் ஆகிய பகுதியில் அவர்கள் அனைவரையும் கொண்டுவந்து விட்டோம். அவர் களில்

டந்த 14-ஆம் தேதி, நெல்லை மாவட்ட களக்காடு நகரில் ஏகத்துக்கும் திரண்ட விவசாயிகள், ஆர்ப்பாட்டத்தில் குதித்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார்கள்.

Advertisment

தென்மேற்கு மலைத் தொடர்ச்சியில் இருக்கும் களக்காடு புலிகள் காப்பகம் பிரசித்தி பெற்றது.அடாவடியாகச் செயல்படும் இதன் துணை இயக்குனர் ராமேஸ்வரன் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றுதான் அவர்கள் போராட்டத்தில் குதித்தனர்.

gg

எதற்கிந்தப் போராட் டம் என களத்தில் இருந்த விவசாயிகள் சிலரிடம் விசாரித்தபோது... "தடை செய்யப்பட்ட இந்த மலைப் பகுதியில் மர்ம நபர்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கிறது. கடந்த மாதம் களக்காடு கார் டிரைவர்கள் இரண்டு பேர் ஓட்டிவந்த கார்களில், ஆண்களும் பெண் களுமாக 10 பேர், தடை செய்யப்பட்ட இந்த மலைப் பகுதிக்குச் சென்றிருக்கிறார் கள். அதை அவர்கள், பெருமையாகத் தங்களின் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவு செய்ததால்தான் இந்த விவகாரம் வெளியே வந்தது. இதையடுத்து அந்த டிரை வர்கள் விசாரிக்கப்பட்டார் கள். அப்போது அவர்கள், "எங்களை அந்த 10 பேரையும் அழைத்து வரச்சொன்னதே வனத்துறை துணை இயக்கு னர்தான். அதனால்தான் தடை செய்யப்பட்ட பகுதி யில் உள்ள தலையணை, கருமாண்டியம்மன் கோவில் ஆகிய பகுதியில் அவர்கள் அனைவரையும் கொண்டுவந்து விட்டோம். அவர் களில் ஒரு சாமியாரும் இருந்தார். ரெண்டுநாள் அங்கேயே இருந்துவிட்டு நாங்கள் மட்டும் திரும்பிவந்துவிட்டோம். சாமியாரும் மற்றவர்களும் காட்டுக்குள் எங்கே போனார்கள் என்று தெரி யாது' என்று அவர்கள் சொல்லியிருக்கிறார்கள். சாமியார் உள்ளிட்ட அந்த 10 பேரையும் தடை செய்யப்பட்ட வனப்பகுதிக்குள் வனத்துறை அதிகாரி ராமேஸ்வரன் எப்படி அழைத்தார்? இதில் ஏதோ மர்மம் இருக்கிறது. இதுபோன்ற மர்ம சம்பவங்களுக்கு அவர் காரணமாக இருக் கிறார். அதோடு, வனத்திலும் முறைகேடுகள் அதிக மாக நடக்கிறது. இது குறித்து, கடந்த மாதம் விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டத்தில், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலத் துணைத் தலைவர் பெரும்படையார், மாவட்டக் கலெக்டர் விஷ்ணு விடம் புகார் கூறி மனு கொடுத்தும், இதுவரை எந்தவித நடவடிக்கையும் இல்லை. அதனால்தான்... இந்த ஆர்ப்பாட்டம்''’என்றார்கள் எரிச்சலாக.

கீழ வடகரை அப்பாத்துரை கணேசன், பாலன் உள்ளிட்ட விவசாயிகளோ, "களக்காடு மலையை ஒட்டிய தடை செய்யப்பட்ட பகுதியில், திருவாவடுதுறை ஆதீனமடத்திற்குச் சொந்தமான நிலங்கள் இருக்கின்றன. அதைக் குத்தகைக்கு எடுத்து பல விவசாயிகள் நெல் மற்றும் வாழை உள்ளிட்டவற்றை பயிர் செய்கிறார்கள். அந்த விவசாயிகள் அந்தப் பகுதிக்குப் போவதற்குக் கூட வனத்துறையில் அனுமதி வாங்கியாகணும். அந்தப் பகுதியில் திடீர் திடீர்னு வர்ற காட்டு யானைகளும், பன்றிகளும் பயிர்களை நாசம் பண்ணுது. ஏற் கனவே இருந்த வனத்துறை அதிகாரிகள் பாதிக்கப் பட்ட விவசாயிகளுக்கு நஷ்ட ஈடு வாங்கிக் குடுத்த தோடு, வனவிலங்குகள் வராமல் பயிர்களுக்கு வேலி போட்டுத் தடுத்தார்கள். ஆனால் இப்ப உள்ள டி.டி.ராமேஸ்வரன், இது எதையுமே செய்யாமல் விவசாயிகளை அலைக்கழிக்கிறார்''” என்கிறார்கள்.

Advertisment

ff

களக்காடு வனத்திற்குள் மேற்கொள்ளப்படும் பணிகளுக்கான காண்ட்ராக்ட்டுகளை டி.டி. ராமேஸ்வரனின் மைத்துனரே எடுத்திருக்கிறாராம். வாய்க்கால் அமைத்ததாகவும், வேலிகள் போடப்பட்டதாகவும் சொல்லப்பட்டாலும் கோடிக்கணக்கில் இறைக்கப்பட்ட அந்த வேலைகள் எந்த அளவிற்கு நடந்திருக்கிறது என்ற கேள்வி களும் எழுந்திருக்கின்றன. இரண்டு மாதம் முன்பு அது தொடர்பான சில பில்களைப் பார்த்து சந்தேக மடைந்த வனத்துறை சூப்பிரண்டண்ட் ராஜ பாண்டி, அவற்றை பாஸ் பண்ண முடியாது என்று சொல்ல, ஆத்திரப்பட்ட டி.டி. அவரைத் தாக்க முயன்றாராம். அவரிடமிருந்து தப்பிய சூப்பிரன் டண்ட் ராஜபாண்டி, களக்காடு காவல் நிலை யத்தில் டி.டி. மீது புகார் கொடுத்திருக்கிறாராம்.

இதற்கிடையே, களக்காடு மலையின் தென்பகுதியில் உள்ள, பேச்சிப்பாறை பெருஞ்சாணி அணைப் பகுதியிலிருந்து, களக்காடு வனப்பகுதிக் குள் திடீர் திடீர் என ஊடுருவும் சில மர்ம கும்பல் கள், மலைப்பகுதியைத் தோண்டி, விலைமதிப்பு மிக்க வைரக்கற்களை எடுத்துச் சென்றதாக ஒரு தகவல் பரவ, இதையடுத்து விவசாயிகள் புகார் கொடுக்க, களக்காடு மலைப்பகுதியை உயரதிகாரி களின் குழு ஒன்று ஆய்வு செய்தது. அப்போது வைரக் கற்களை எடுக்க 32 குழிகள் தோண்டப்பட்டதை அறிந்து அவர்கள் அதிர்ந்து போனார்களாம்.

ff

இந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் 10-ஆம் தேதி முதலிருப்பான் ஃபீட்டில் ஒருவர் முகம் சிதைக்கப்பட்டு செத்துக் கிடந்திருக்கிறார். அதுகுறித்து முறையான நடவடிக்கை கூட எடுக்கப்படவில்லையாம். இந்த வனத்துறை அதிகாரி ராமேஸ் வரன் பற்றி கலெக்டரிடம் புகார் கொடுத்த விவசாயிகள் சங்கப் பிரமுகரான பெரும்படையாரிடம் நாம் கேட்டபோது, "களக் காடு புலிகள் காப்பகத் துணை இயக்குனர் ராமேஸ்வரன் மற்றும் அந்த மலைப்பகுதியில் நடக்கும் மர்ம நபர்களின் நடமாட்டம் பற்றி விசாரிக்கணும். இது தொடர்பாகப் பதிவான சி.சி.டி.வி. கேமரா காட்சிகளையும் ஆய்வுக்கு உட்படுத்தணும். அவர் பற்றி விசாரணை நடத்தணும்னு கலெக்டரிடம் நான் புகார் கொடுத்தேன். ஆனால் கலெக்டரோ, நான் கொடுத்த புகாரை அந்த ராமேஸ்வரனுக்கே அனுப்பி வச்சிருக்கார். இதன்பிறகு, அவர் அலுவலகத்தில் இருந்து பேசிய பாலமுருகன் என்பவர், குற்றசாட்டுக்கான ஆதாரங்கள் இருக்குதான்னு என்னிடம் கேட்கிறார். அதிகாரிகளின் அசட்டையைக் கண்டித்துதான் ஆர்ப்பாட்டத்தில் குதித்தோம்''’என்கிறார் காட்டமாக.

இந்தப் புகார்கள் குறித்து புலிகள் காப்பக துணை இயக்குனர் ராமேஸ்வரனிடம் நாம் கேட்டபோது... “

"விவசாயிகள் பலர் ஆதீனத்துக்கும் அரசுக்கும் சொந்த மான இடத்தை ஆக்கிரமிச்சிருக்காங்க. அதனால் அவர்களுக்கு நஷ்டஈடு கொடுக்க முடியாத நிலை. வனத்தில் பறவைகளைக் கணக்கெடுக்க வந்தவர்கள்தான், வாடகைக் காரில் வந்தார்கள். அதில் எந்த மர்மமும் இல்லை. அதேபோல், கொரோனா காலம் என்பதால் வனத்தில் சின்ன சின்ன மெயின்டனன்ஸ் வேலை கள்தான் நடந்தது. சூப்பிரண்டண்ட் ராஜபாண்டிக்கு கண் பார்வை சற்று மங்கல். அவரைத் தாக்க முயன்றதாகச் சொல்லப் படுவதில் உண்மை எதுவும் இல்லை. அதுபோன்ற சம்பவம் நடக்கவில்லை. அதேபோல், மலை மீது சுற்றிவந்த ஒரு முதியவர் தான் பட்டினியால் இறந்திருக்கிறார். முறைப்படி காவல்துறைக் குத் தெரியப்படுத்தப்பட்டுள்ளது. அவர்கள் சொன்னதுபோல் வனத்தில் எந்த முறைகேடும் நடக்கவில்லை''’என்கிறார்.

மர்ம நபர்களின் நடமாட்டம், வைரக்கல் வேட்டை, மர்ம சடலம் என்றெல்லாம் அந்த வனப்பகுதியைச் சுற்றிலும் முற்றுகையிட்டிருக்கும் மர்மத்தையும் திகிலையும் நீக்க, அதிகாரிகள் முன்வரவேண்டும்.

nkn121022
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe