துறையூர் அருகேயுள்ள பகளவாடி கிழக்குத் தெருவைச் சேர்ந்தவர் கிருஷ்ணன். அவரது மனைவி சம்பூர்ணம். அதே ஊரைச் சேர்ந்தவர் ராஜா மனைவி பெரியம்மாள். இருவரும் எங்கு போனாலும் ஒன்றாகச் செல்வார்களாம். இந்நிலையில் இவர்கள் இருவரும் சடலங்களாக பெருமாள்மலை அடிவாரம் பகுதியில் ஒரு புதரில் அழுகிய நிலையில் கிடந்தது கண்டறியப் பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக அந்த பகுதியில் ஆடு மேய்த்தவர்கள் கொடுத்த தகவலின் பேரில் துறையூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திவருகிறார்கள்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/police_121.jpg)
இது குறித்து நாம் விசாரணையில் இறங்கினோம். கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பே இவர்கள் இருவரும் அடிக்கடி வீட்டிலிருந்து வெளியேறி ஒரு வார காலத்திற்கு ஊரெல்லாம் சுற்றித் திரிந்துவிட்டு மீண்டும் வீடு திரும்புவதை வழக்கமாக வைத்துள்ளனர். இந்நிலையில், பெரியம்மாளின் மகன் இவர்களின் போக்கைக் கண்டித்து கடுமையாக திட்டி உள்ளார். ஆனால் அவர்கள் தொடர்ந்து இதேபோன்ற நடவடிக்கையில் ஈடுபட்டுவந்த நிலையில், கடந்த ஒன்றாம் தேதி வழக்கம்போல் இவர்கள் வீட்டிலிருந்து வெளியே சென்றிருக் கிறார்கள். இருவருமே ஒன்றாக விஷம் அருந்திவிட்டு மலையடி வாரத்தில் உள்ள புதரில் மயங்கி விழுந்து இறந்துள்ளனர். அது புதர்ப்பகுதி என்பதாலும், இவர்கள் இருவரும் இப்படி காணாமல்போவது வழக்கம் என்பதாலும் யாரும் இவர்களைத் தேட முற்படவில்லை. இந்நிலையில், ஆடு மேய்ப்பவர்கள் தான் கடந்த ஐந்தாம் தேதி, இவர்களது உடல் அழுகிய நிலையில் கிடப்பதை கண்டறிந்துள்ளது.
இவர்கள் இருவரைப் பற்றியும் கிராமத்தில் விசாரிக்கும் போது, இருவரும் கணவரை இழந்தவர்கள் என்பதால் ஒருவருக்கொருவர் நண்பர்களாக ஆதரவாக இருந்துவந்தது தெரிகிறது. சேர்ந்துதான் கோவிலுக்கு செல்வார்கள், அவ்வப்போது ஒரு வார காலத்திற்கு காணாமல் போய்விடுவார்கள், மீண்டும் வீட்டிற்கு திரும்புவார்கள் என்று கூறினர். காவல் துறை யினரோ, நடந்தது தற் கொலையா? கொலையா? இதற்கு யார் காரணம்? இவர்கள் இருவரும் ஓரினச் சேர்க்கை யாளர்களா? என்ற கோணங் களில் விசாரணை நடத்து கிறார்கள். அவர்கள் பாலியல் தொழிலுக்கு சென்று வந்ததாக வும் கூறப்படுவதால் அதுகுறித் தும் விசாரித்துவருகிறார்கள்.
தங்கள் மீது கிராம மக்க ளிடம் தவறான கண்ணோட்டம் ஏற்பட்டதால் மனம் தாங்காமல் இருவரும் விஷம் குடித்து இறந்திருக்கலாமோ? அல்லது தங்களுடைய தவறு கிராம மக்களுக்குத் தெரிந்ததால் தற் கொலை முடிவுக்குச் சென்றார் களா என, இறப்பிற்கான காரணம் காவல்துறை விசா ரணையின் இறுதியில்தான் தெரியவரும்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2023-02/police-t.jpg)