துரையில், அனைத்து பத்திரிகைகளுக்கும் நவம்பர் 13 அதிகாலை போலீஸ் தரப்பிலிருந்து ஒரு செய்தி தரப்பட்டது. அதன் சுருக்கம் இதுதான்:…

மதுரை, அண்ணாநகர் செண்பகத்தோட்டத்திலுள்ள மீனவர் சங்கக் கட்டடமருகே நவம்பர் 13 அதிகாலை ஒரு பெண்ணை, அப்பகுதியைச் சேர்ந்த ரவுடி "குருவி' விஜய் கற்பழிக்க முயன்றபோது, அந்தப் பெண் கூச்சலிட்டுள்ளார். அக்கம் பக்கத்திலுள்ளவர்கள் 100-க்கு போன் செய்ததால்... சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசாரைப் பார்த்ததும், குருவி mmவிஜய் மற்றும் அவனது கூட்டாளிகள் அவர்களைத் தாக்க முயன்றனர். அச்சமயம் போலீசார் சுட்டதில் ரவுடி குருவி விஜய்க்கு காலில் காயம் ஏற்பட்டது. ரவுடி குருவி விஜய், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் தற்போது சிகிச்சை பெற்றுவருகிறார். விஜய்யிடமும் அவரது கூட்டாளிகளிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரை கலெக்டர் அலுவலக வாசலில் குருவி விஜயின் தாய் கண்ணகி, சகோதரி லாவண்யா, உறவுக்காரப் பெண்கள் அனைவரும் வந்து, "என் மகனை எங்க வீட்டு வாசல்ல வைச்சு கண் முன் னாலே சுட்டாங்க. ரத்தம் வழிய வழிய உடலை ஜீப்புல போட்டுக் கொண்டு போனாங்க'” என்று முறையிட்டு காப்பாற்றும்படி கோரி னர்.

நாம் அவர்களிடம் என்ன நடந்தது என்று கேட்டோம்.

Advertisment

விஜய்யின் தாய் கண்ணகி பதற்றம் அடங்காமலே பேசினார். "இரவு 11:30 மணிக்கு எங்க வீட்டுக்கு வந்த போலீஸார், என் மகனை வழிப்பறி வழக்கு விசயமா விசாரிக்கணும்னு அழைச்சுட்டுப் போனாங்க. நானும் என் மகள் லாவண்யாவும் கூடவே அண்ணா நகர் காவல் நிலையத்திற்குப் போனோம். "வீட்டுக்குப் போங்க, இரவு 12:30 மணிக்கு உங்க மகனை விசாரிச்சு அனுப்பிடுவோம்'னு சொன்ன தால, நம்பி வீட்டுக்கு வந்தோம். இரவு 2:00 மணி பக்கம் வீட்டு முன்னால போலீஸ் ஜீப் வந்த சத்தம் கேட்டு மாடியிலிருந்து எட்டிப் பார்த்தோம். அப்போ என் மகனோட இன்னொரு பையனையும் இழுத்து வந்தாங்க. நான் என்ன விஷயம் என பார்க்க கீழே வந்தேன். அதற்குள்ளேயே துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டது. நான் கதவைத் திறந்து வெளிய வர்றதுக்குள்ள, ரத்தம் சொட்டச் சொட்ட என் மகனைத் தூக்கி போலீஸ் ஜீப்பில் போட்டாங்க. நான் கத்திக்கிட்டு ஓடி வரும்போது தடுத்து, என்னைத் தள்ளி விட்டுட்டு ஜீப் பறந்துடுச்சு. பின்னாலயே ஓடி அண்ணா நகர் காவல் நிலையத்திற்குப் போனோம். அங்க யாரும் இல்லை. எங்களை வெளியே போன்னு துரத்தினாங்க. வேறு வழியின்றி கலெக்டர் அய்யாவைப் பார்த்து முறையிட வந்தோம்'' என்று அழுதபடி சொன்னார்.

குருவி விஜய்யின் சகோதரி லாவண்யா வோ, "எங்க அண்ணனுக்கு இரண்டு நாளா காய்ச்சல். அன்னைக்கு முழுக்க வீட்டுலதான் இருந்தான். போலீஸ் புதுசா கதைகட்டி, ஏதோ ஒரு பெண்ணை நடுரோட்டில கற்பழிக்க முயன்றதாவும்... அதைப் பார்த்து யாரோ போலிஸுக்கு தகவல் கொடுத்ததால போலீஸ் வந்து காப்பாற்றும்போது, அவன் போலீஸைத் தாக்கியதாவும் அதனால காலில் சுட்டதாகவும் கதை சொல்றாங்க. சம்பவம் நடந்தது இரவு 2:30-க்கு. நடுராத்திரி எந்த பொண்ணு கடைக்குப் போகும். ஏதாவது லாஜிக் இருக்கா?… திடீரென இரவு 11:30-க்கு எங்க அண்ணனை சந்தேக கேஸ், சும்மா விசாரித்துவிட்டு விட்டுருவோம்னு கூட்டிப்போனாங்க. நாங்களும் கூடவே போனோம். காவல் நிலையத்தில இருந்தோம்.

ff

Advertisment

அங்கிருக்கும் சி.சி.டி.வி. கேமராவில இதெல்லாம் பதிவாகியிருக்கும். அப்படியிருக்க... இவங்க சொல்லும் சம்பவம் எப்ப, எப்படி நடந்தது. எல்லாம் கட்டுக்கதை. எங்க வீட்டு வாசல்ல வைச்சு எங்க கண் முன்னாடியே அண்ணனை ஏன் சுட்டாங்க?… அதற்கு என்ன காரணம் எதுவும் தெரியல''’என்று ஆவேசமாகச் சொன்னார் லாவண்யா.

இதுகுறித்து அண்ணா நகர் காவல்நிலையத்தைத் தொடர்புகொண் டோம்.

அங்கிருந்த காவலர், “"இன்ஸ் பெக்டர் மற்றும் சப் இன்ஸ்பெக்டர் சிவராமகிருஷ்ணன் இருவரையும் ரவுடி விஜய் கல்லால் தாக்கியதால் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார்கள். விஜய்யும் அங்குதான் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளான்'' என்று ரத்தினச் சுருக்கமாக முடித்துக் கொண்டார்.

ff

ரவுடிகளை ஒடுக்க வேண்டிய கட்டாயம் மதுரை போலீசாருக்கு இருக்கிறது. மக்களின் அமைதியான நடமாட்டமே காவல் துறையின் இலக்கு. எனினும், நடுராத்திரி கற்பழிப்பைத் தடுத்த போலீஸ், அதிகாலை 6:00 மணிக்கு அவசர அவசரமா செய்தியை பத்திரிகைகளுக்கு அனுப்பிய வேகத்தை எண்ணும்போதுதான் கொஞ்சம் ஆச்சரியம் பிறக்கிறது?