Advertisment

என் கட்சிக்காரங்களே என்னைக் காட்டிக் கொடுத்துடுவாங்க! - கதறும் அமர் பிரசாத் ரெட்டி

annamalai

வீரப்பன் ஆபரேஷனைப் போன்ற மிகப்பெரிய தேடுதல் வேட்டையை காவல்துறை அமர் பிரசாத் ரெட்டிக்காக சமீப காலமாக நடத்திக்கொண்டி ருக்கிறது. கோட்டூர்புரத்தைச் சேர்ந்த சித்ராதேவி, ஆண்டாள் ஆகியோர் பா.ஜ.க.வின் மாவட்ட நிர்வாகிகள். இவர்களிடம் கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டியை தொடங்கி வைக்க வருகை தந்த பிரதமரை வரவேற்க பெண்கள் கூட்டத்தை அழைத்துவரும் பொறுப்பு தரப்பட்டது. பிரதமரை வர வேற்பதற்காக பொதுமக்களைத் திரட்டும் பொறுப்பை நிர்வகித்த பா.ஜ.க. விளையாட்டுப் பிரிவின் நிர்வாகியான அமர்பிரசாத் ரெட்டி, அதற்காக ஒரு பெரும் தொகையைக் கொடுத்தார். ஆனால், பிரதமர் வந்தபோது கூட்டம் கூடவில்லை.

Advertisment

annamalai

டென்ஷனான பா.ஜ.க. மாநிலத் தலைவர், அமர்பிரசாத் ரெட்டியை திட்டினார். ரெட்டி ஆண்டாள் குரூப்புக்குப் பணம் விநியோகம் செய்த தனது டிரைவர் ஸ்ரீதரை திட்டினார். ஸ்ரீதர் நேரடியாகப் போய் ஆண்டாளிடம் வாக்குவாதம் செய்தார். அது கைகலப்பானது. ஆண்டாளின் மண்டை உடைந் தது. உடனே அவரை போலீசுக் குப் போகவிடாமல் தடுத்து பா.ஜ.க. நிர்வாகியா

வீரப்பன் ஆபரேஷனைப் போன்ற மிகப்பெரிய தேடுதல் வேட்டையை காவல்துறை அமர் பிரசாத் ரெட்டிக்காக சமீப காலமாக நடத்திக்கொண்டி ருக்கிறது. கோட்டூர்புரத்தைச் சேர்ந்த சித்ராதேவி, ஆண்டாள் ஆகியோர் பா.ஜ.க.வின் மாவட்ட நிர்வாகிகள். இவர்களிடம் கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டியை தொடங்கி வைக்க வருகை தந்த பிரதமரை வரவேற்க பெண்கள் கூட்டத்தை அழைத்துவரும் பொறுப்பு தரப்பட்டது. பிரதமரை வர வேற்பதற்காக பொதுமக்களைத் திரட்டும் பொறுப்பை நிர்வகித்த பா.ஜ.க. விளையாட்டுப் பிரிவின் நிர்வாகியான அமர்பிரசாத் ரெட்டி, அதற்காக ஒரு பெரும் தொகையைக் கொடுத்தார். ஆனால், பிரதமர் வந்தபோது கூட்டம் கூடவில்லை.

Advertisment

annamalai

டென்ஷனான பா.ஜ.க. மாநிலத் தலைவர், அமர்பிரசாத் ரெட்டியை திட்டினார். ரெட்டி ஆண்டாள் குரூப்புக்குப் பணம் விநியோகம் செய்த தனது டிரைவர் ஸ்ரீதரை திட்டினார். ஸ்ரீதர் நேரடியாகப் போய் ஆண்டாளிடம் வாக்குவாதம் செய்தார். அது கைகலப்பானது. ஆண்டாளின் மண்டை உடைந் தது. உடனே அவரை போலீசுக் குப் போகவிடாமல் தடுத்து பா.ஜ.க. நிர்வாகியான வி.பி. துரைசாமிக்குச் சொந்தமான மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. சம்பவம் நடந்த இரண்டு நாட்களுக்குப் பின் ஆண்டாளும் சித்ராதேவியும் கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் ரெட்டி மீது புகார் கொடுத்தார்கள். போலீசார் தீண்டாமைக் கொடுமைக்கு எதிரான பிரிவு, பெண்கள் வன்கொடுமைக்கு எதிரான பிரிவு மற்றும் கொலை முயற்சி ஆகிய பிரிவுகளில் ரெட்டி மீது வழக்குப்பதிவு செய்தார்கள்.

ஏற்கெனவே அவர் மீது போடப்பட்ட வழக்குகளில் ஜாமீன் பெற்றிருந்த ரெட்டி, அந்த நிபந்தனைகளை மீறி தாக்குதல் நடத்தினார் என்பதால் வழக்கு சீரியஸ் ஆனது. வழக்கைப் பற்றிக் கவலைப்படாமல் பா.ஜ.க. தலைவருடன் யாத்திரையில் ஜாலியாகச் சுற்றித்திரிந்த ரெட்டியைப் பிடிக்க சென்னை நகரப் போலீஸ் முனைப்புக் காட்டியது. பா.ஜ.க. தலைவர் அவரை கருப்பு முருகானந்தத்திடம் ஒப்படைத்து தஞ்சைக் கடற்கரையில் வைத்து பாதுகாக்க உத்தரவிட்டார். "பா.ஜ.க. மாநிலத் தலைவரை நம்ப முடி யாது. எம்.பி. தேர்தலில் கிருஷ்ண கிரியில் நான் போட்டியிடுவதற்கு எதிராக வேலை பார்க்கிறார். என்னைப் போலீசில் பிடித்துக் கொடுத்துவிட்டு எம்.பி. சீட் இல்லை எனச் சொல்லிவிடுவார்'' என, தனக்கு நெருக்கமான வர்களிடம் புலம்பிவிட்டு சொந்த ஊரான ஆந்திராவுக்கு ஓடினார் ரெட்டி. ஆந்திராவுக்குச் சென்ற போலீஸ் அங்கிருந்து அவர் மும்பைக்கு ஓடி விட்டதாக கண்டுபிடித்தது. மும்பைக்குப் போனபோது அவர் குஜராத் துக்கு ஓடிவிட்டதாகத் தெரிந்தது. குஜராத்துக்கு போன போலீஸ், அவர் அங்கிருந்தும் தப்பி விட்டதை அறிந்து ரெட்டியைக் கண்டுபிடிக்க தேடிக் கொண்டி ருக்கிறது.

Advertisment

பொதுவாக "என் மீது கை வைத்துப் பார்' என எப்போதும் சவால்விடும் ரெட்டி, தலை மறைவாக இருக்கும் இடத்திலிருந்து தனக்கு நெருக்கமானவர் களிடம் பேசிவருகிறார். அவருக்கு கிடைக்கவேண்டிய எம்.பி. சீட் கிடைக்க வில்லையென்றால் பா.ஜ.க.வில், தான் செல்லாக்காசாகி விடுவோம் என்பதை உணர்ந்த ரெட்டி, மாநிலத் தலைமைக்கும் அகில இந்தியத் தலைமைக்கும் தொடர்ந்து பேசி ddஆக்டிவ்வாக அரசியல் செய்து வருகிறார். அத்துடன் தனக்கு நெருக்கமான யூ டியூபர்களிடமும் பேசுகிறார். யூ டியூபர் களிடம் அவர் இருக்கும் இடத்தைச் சொன்ன ரெட்டி, “இதை பா.ஜ.க. மாநிலத் தலைவருக்கு சொல்லிவிடாதீர்கள். அவர் என்னைக் காட்டிக் கொடுத்துவிடுவார்''’எனப் புலம்பியிருக்கிறார்.

ஒரு குற்றவாளியைப் பிடிக்க வேண்டுமென்றால் அவருக்கு நெருக்கமானவர்களைப் போலீசார் வளைப்பார்கள். அப்படி அவரது குடும்பம் எங்கே இருக்கிறது என்று போலீஸ் தேடிப்போனபோது அவர்களும் வீட்டைக் காலி செய்துவிட்டு தலைமறைவாகி இருந்தனர். தலைமறைவாக இருந்தபடியே வழக்கறிஞர் பால் கனகராஜ் மூலம் முன் ஜாமீன் கேட்டு நீதியரசர் நிர்மல்குமார் பொறுப்பு வகிக்கும் கோர்ட்டில் மனு போட்டிருக்கிறார் ரெட்டி. அந்த மனுவில் தலைமறைவாக இருந்தபடியே கையெழுத்தும் போட்டிருக்கிறார்.

நொந்துபோன போலீசார், தமிழகம் முழுவதும் அவருக்கு நெருக்கமானவர்களிடம் அவரது இருப்பிடத்தைக் கேட்டு தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இதற்காக மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. மூன்றுக்கும் சேர்த்து ‘பெப்பே’ காட்டிவரும் ரெட்டியிடம் கோடிக்கணக்கில் பணம் கொட்டிக்கிடக்கிறது. அந்தப் பணத்தை வைத்துதான் ‘"என் மண் என் மக்கள்'’ யாத்திரை நடக்கிறது. அதன் செலவுகளுக்காக அமலாக்கத்துறை, வருமானவரித்துறை, சி.பி.ஐ. போன்ற அமைப்புகளின் பல அதிகாரிகளையும் மிரட்டி பணம் வாங்குவதுதான் ரெட்டியின் தொழில். இப்படி ஒரு மட்டமான ஆளை நாங்கள் பார்த்ததேயில்லை'' என்கிறார்கள் அவனைத் துரத்திக்கொண்டி ருக்கும் போலீசார்.

“ரெட்டி விடாமல் ஓடிக்கொண்டிருக்கிறார். போலீஸ் துரத்திக்கொண்டிருக்கிறார்கள். அவர் இருக்கும் ஒவ்வொரு இடத்திற்கும் போலீஸ் போவதற்கு முன்பே அவர் எஸ்கேப் ஆகிவிடுகிறார். தலைமறைவாக இருக்கும் ரெட்டியை எம்.பி. வேட்பாளர் ஆக்குவது என பா.ஜ.க.வில் ஒரு டீம் முனைப்புடன் செயல்படுகிறது. அரசியலில் எவற்றிற்கெல்லாம் ஒரு மனிதன் புகழ் பெறக் கூடாதோ அத்தனை கெட்ட விசயங்களிலும் அடிபட்ட நபர் இந்த அமர் பிரசாத் ரெட்டி. தமிழகத்தின் முதல் தலைமறைவு எம்.பி. வேட்பாளர் என்கிற பெருமையையும் அமர் பிரசாத் ரெட்டி பெறுவாரா என்பது உயர்நீதிமன்றத்தில் அவரது ஜாமீன் மனு மீதான தீர்ப்பின்படியே அமையும்” என்கிறார்கள் பா.ஜ.க.வினர்.

nkn070224
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe