தமிழ்த் தேச தன்னுரிமைக் கட்சியின், தமிழ் மக்கள் தன்னாட்சி மாநாடு, ஜூலை 24 அன்று அதன் தலைவர் வியனரசுவின் தலைமையில் பாளையில் நடைபெற்றது. மாநாட்டில், மாநில அரசுக்கான தன்னாட்சியை வெளிப்படுத்தும் வகையில், அதிகாரத் தைத் தன் பக்கம் குவித்து வைத்திருக்கும் மத்திய அரசைக் குறிவைத்தே அனல் பறக்கும் வகையில் பலரும் பேசினர். மத்திய, மாநில உளவு அமைப்புகளால் இந்த மாநாடு உற்றுக் கவனிக்கப்பட்டது.
"மதத்தின் பெயரால், சாதியின் பெயரால் மக்களைப் பிரித்துப் பார்க்கிறார்கள். ஆனால் வரி என்று வரும் போது இனம் பார்ப்பதில்லை. அரசு ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 49 ரூபாய் வரி வசூலிக்கிறது. அந்த வகையில் டூவீலர் வைத்திருக்கும் ஒருவர் மாதம் 1500 ரூபாய் வரியாகச் செலுத்தவேண்டிய துள்ளது. இந்த வரி எங்கே போகிறது? ஒன்றிய அரசுக்குத்தானே? நாமக்கல்லில் மட்டும் 3 லட்சம் கார்கள் ஓடுகின்றன. மாதம் எத்தனை லட்சங்கள் வரியாகப் போகிறது யோசித்துப் பாருங்கள்' என்பதே பேச் ச
தமிழ்த் தேச தன்னுரிமைக் கட்சியின், தமிழ் மக்கள் தன்னாட்சி மாநாடு, ஜூலை 24 அன்று அதன் தலைவர் வியனரசுவின் தலைமையில் பாளையில் நடைபெற்றது. மாநாட்டில், மாநில அரசுக்கான தன்னாட்சியை வெளிப்படுத்தும் வகையில், அதிகாரத் தைத் தன் பக்கம் குவித்து வைத்திருக்கும் மத்திய அரசைக் குறிவைத்தே அனல் பறக்கும் வகையில் பலரும் பேசினர். மத்திய, மாநில உளவு அமைப்புகளால் இந்த மாநாடு உற்றுக் கவனிக்கப்பட்டது.
"மதத்தின் பெயரால், சாதியின் பெயரால் மக்களைப் பிரித்துப் பார்க்கிறார்கள். ஆனால் வரி என்று வரும் போது இனம் பார்ப்பதில்லை. அரசு ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 49 ரூபாய் வரி வசூலிக்கிறது. அந்த வகையில் டூவீலர் வைத்திருக்கும் ஒருவர் மாதம் 1500 ரூபாய் வரியாகச் செலுத்தவேண்டிய துள்ளது. இந்த வரி எங்கே போகிறது? ஒன்றிய அரசுக்குத்தானே? நாமக்கல்லில் மட்டும் 3 லட்சம் கார்கள் ஓடுகின்றன. மாதம் எத்தனை லட்சங்கள் வரியாகப் போகிறது யோசித்துப் பாருங்கள்' என்பதே பேச் சாளர்களின் மையப்புள்ளியாக இருந்தது.
"இப்போது மாநிலங் கள் தன்னாட்சி பற்றி பேச ஆரம்பித்துவிட்டன. ஐ.நா. சபையின் ஆர்ட்டிகிள் 12 உட்பிரிவு (1)ன் படி ஒரு பரப்பில் வாழ்கிற மக்களின் பண்பாடு, கலாச்சாரம், அர சியல் மற்றும் தன் னாட்சி காப்பாற்றப் பட வேண்டும். மக்களின் எண்ணம், அவர்களின் விருப்பத்திற்கேற்ப ஆட்சி நடத்தப்பட வேண்டும் என்கிறது. மத்தியில் கூட்டாட்சி. மாநிலத்தில் சுயாட்சி என்பது பேச்சோடு போய்விட்டது''’என ஐ.நா.வில் பேசியுள்ள ஜீவாகனி வலியுறுத்தியபோது, கூட்டம் உன்னிப்பாகக் கவனித்தது.
சமூக செயற்பாட்டாளரான சுகந்தி, "தமிழ்நாடு தமிழருக்கே. இந்த மண்ணின் மைந்தன் நான். நாம்தான் ஆள வேண்டும். தன்னாட்சி வேறு, சுயாட்சி வேறல்ல. இரண்டும் ஒன்றுதான். 2026-ல் தமிழ்நாடு தமிழருக்கே என்ற நிலை வரும். சட்டமன்றங்களில், தீர்மானங்களால் ஏமாற்றப்பட்டுள்ளோம். அணை மசோதா வந்தால் தண்ணீர் கிடைக்காமலே போய்விடும். 3600 கிலோமீட்டர் கடல் அதானிக் குக் குத்தகை வழியில் சொந்தமாகிவிட்டது. அங்கே போய் தமிழன் மீன் பிடிக்க முடியுமா? இது ஒரு அரசாங்கம் செய்யவேண்டிய காரியமா? நம்முடைய உரிமைகள் நம்மைவிட்டுப் போகிறது. நீட் வேண்டுமா, வேண்டாமா? என தீர்மானிக்க முடியவில்லை. ஒவ்வொரு மசோதாவிலும் நம் உரிமைகள் மறுக்கப்படுகிறது. வரலாற்றை மீண்டும் உருவாக்கவேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. அரசியல், பண்பாடு கலாச்சாரம் காப்பாற்றப்பட வேண்டும். அதிகாரம் முழுவதையும் மத்திய அரசு எடுத்துக்கொண்டால் மாநிலத்தில் எப்படி ஆட்சி நடத்துவது?''’என்று காட்டமாகப் பேசினார்.
தமிழ்த் தேசிய கிறிஸ்தவ இயக்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளரான மை.பா.ஜேசுராஜன் நேரிடை யாகவே மத்திய அரசைக் குறிவைத்தார். "காங்கிரஸ் செய்த தவறைவிட பா.ஜ.க. அரசு அதிகமாகவே தவறு செய்கிறார்கள். இந்திய தேசம் மிகப்பெரிய சந்தை. அதில் இரண்டு பேருக்கு மட்டுமே லாபம். இந்துத் துவாவுக்கு ஒரு மாற்று வேண்டும். மதமும் சாதியும் திணிக்கப்படுகிறது''’என்ற அவரின் உரை வீச்சுக்கு அரங்கம் அதிர்ந்தது. தமிழக மக்கள் தன்னாட்சி மாநாட் டில் தாமிரபரணி ஆற்றுநீர் உரிமை, வெள்ள நீர்க் கால்வாய் திட்டம், மதுக்கடைகள் மூடல், அயல் மாநில வணிகர்களுக்குத் தடை, அயலார் குடியேற்றத் தடுப்பு உள்ளிட்ட 26 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மேலும் தமிழர் தன்னுரிமைப் பேரறிவிப்பாக, புதிய அரசமைப்புச் சட்டத்தின்கீழ் ஒன்றிய அரசுக்கு வெளிநாட்டு உறவு, படைத்துறை, (பாதுகாப்பு) ஒன்றிய அளவிலான செய்தி மற்றும் போக்குவரத்து, நாணய அச்சடிப்பு ஆகிய துறைகள் மட்டுமே அளிக்கப்பட வேண்டும். மற்ற அதிகாரங்கள் அனைத்தும் மொழிவழித் தேசிய இன அரசுகளுக்கே வழங்கப்பட வேண்டும் என தன்னாட்சியை வலி யுறுத்துவதாக இருந்தது. தலைமை உரையாற்றிய சீமான், "தமிழ்த் தேசிய அரசியல் கொள்கை தான் என் உயிர். அதற்காகத்தான் பூலித்தேவன், வேலுநாச்சியார், அழகுமுத்துக்கோன் போன்ற நம் முன்னோர்கள் போராடியுள்ளனர். அதை நாம் முன்னெடுக்க வேண்டும். தமிழ்த் திருத்தாய் பெற்ற தமிழ்நாடு. இது என் தேசம். உரிமை களைக் கேட்டால் கிடைக்காது... போராடித் தான் பெறவேண்டும். இயற்கை குடிச்சுக்கோ, குடிச்சுக்கோன்னு தூய நீரா கொட்டுது. அதை கர்நாடகாக்காரன் ஒரு ஓரமா கொண்டுபோயி வச்சுக்கிட்டு கோடி கோடியாய் விலை பேசுறான். மனித உடலுக்கு ரத்தநாளம் போல, நதிகள் நாட்டுக்கு ரத்த நாளம். அது எனக்குத் தான்றான்.
கல்வி, ஒன்றியம் கையில். அதனால்தான் மாநிலங்களுக்குத் தன்னாட்சி வேண்டும்னு சொல்றோம். என் நிலம், என் இனம், என் உரிமை. ஆனா இங்க தொட்டதெற்கெல்லாம் ஜி.எஸ்.டி. வரி. சாலை வரி, வீட்டு வரி, தண்ணி வரி, எல்லாத்துக்கும் வரி, 90 லட்சம் கோடி, ஒன்பதாயிரம் கோடின்னு வரி. 75 விழுக்காடு வரியாகப் போகிறது. எட்டு ஆண்டுகளில் அம்பானியையும் அதானியையும் வளர்த்து விட்டார்கள். சட்டங்கள், திட்டங்கள், அந்த நாட்டு மக்களுக்காக, அவர்கள் எண்ணப்படி இருக்கவேண்டும். ஒடுக்கப்பட்ட தேசிய இனங்கள் விடுதலை பெறவேண்டும்''’என கரகோஷங்களுக்கிடையே பேசினார்.