இது எங்க நிலம்! மல்லுக்கட்டும் மந்திரி குடும்பம் Vs த.பா. குடும்பம்!

land

நில விவகாரத்தில் சாதாரணப்பட்ட இரண்டு குடும்பங்கள் மல்லுக்கட்டினாலே விஷயம் விவகாரமாகிவிடும். அரசியலில் பிரபலமான ரெண்டு ஆளுமைகளின் பெயர் அடிபட்டால் விஷயம் சாதாரணமாகவா இருக்கும்? இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான தா.பாண்டியன்- அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பெயர்தான் தமிழகத்தை சில நாட்களாக கலக்கிக்கொண்டிருக்கிறது.

தா.பாண்டியனும் அமைச்சர் சீனிவாசனும் ஹாட்டான அறிக்கைகளை வெளியிட்டு அரசியல் களத்தையே சூடாக்கிக்கொண்டிருக்க, என்னதான் நடக்கிறதென அறிய நாம் களத்தில் இறங்கினோம்.

land

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகேயிருக்கும் டேவிட் பண்ணை பிரபலமானது. கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக் குழு உறுப்பினரான தோழர் பாண்டியனின் தந்தைதான் இந்த டேவிட் (தமிழ் உச்சரிப்பில் தாவீது). தா.பாண்டியனுடன் பிறந்தவர்கள் ஆறு ஆண்கள், இரண்டு பெண்கள். தனக்குச் சொந்தமான 22 ஏக்கர் நிலத்தை தனது வாரிசுகளுக்கு சரிசமமாகப் பிரித்துக்கொடுத்திருந்தார் டேவிட்.

தா.பாண்

தா.பாண்டியனின் மகன் டேவிட் ஜவஹரிடம் எங்கே தொடங்கியது இந்த நிலப்பிரச்சனை எனக் கேட்டபோது, “""தாத்தா டேவிட் எல்லோருக்கும் நிலத்தை சமமா பிரிச்சுக் கொடுத்திருந்தார். வெளியாட்கள் உள்ளே வந்தால் டேவிட் பண்ணை என்ற பெயர் போய்விடுமென, அப்பாவுடன் பிறந்தவர்கள் நிலத்தை விற்கப் போனபோது அனைத்து நிலத்தையும் வாங்கியிருந்தார். அப்போது சித்தப்பா டி.எஸ்.ராஜன் குடும்பம் குடியிருக்க வீடில்லாமல் கஷ்டப்பட, பண்ணையைப் பார்த்துக்கொள்ள அவர்கள் விருப்பப்பட்டபோது அப்பா ஒப்புக்கொண்டார்.

thapaஅப்புறம் "அந்த நிலங்களை நாங்களே வைத்துக்கொள்கிறோம்' என்று கூறி 16 லட்சத்துக்குப் பேசினார்கள். அதையும் முழுதாகத் தரவில்லை. கொஞ்சம் கொஞ்சமாக பணத்தைக் கொடுத்ததால் பத்திரம் எழுத தாமதமானது. இந்த நிலையில் பண்ணையிலுள்ள தேக்கு, தென்னை மரங்களை வெட்டி பண்ணையையே மொட்டையாக்கி வந்தனர். விஷயம்தெரிந்து அப்பா, பணத்தை திரும்பக் கொடுத்து அவர்களை காலிசெய்யச் சொன்னார்.

அவர்களைக் கூப்பிட்டுப் பேசும்போதுதான் அப்பகுதியிலுள்ள பணச்செல்வம் என்பவரிடம் நிலத்தைக் காட்டி நாலு லட்சம் வாங்கி வீடாக பதிந்திருப்பது தெரியவந்தது. 12 லட்சத்தை சித்தப்பாவிடமும் 4 லட்சத்தை பணச்செல்வத்திடமும் கொடுத்து கணக்கை நேர்செய்தார். மீண்டும் காலிசெய்யச் சொன்னபோது எங்கப்பாவின் கையெழுத்தைப் போலியாகப் போட்டு 22 ஏக்கரை அவர்களுக்கே விற்றுவிட்டதாக பொய்யான ரிக்கார்டைக் காட்டினார்கள். போலீசுக்குப் போனதும், கைதுக்குப் பயந்து பண்ணையைவிட்டு பயந்தோடிவிட்டனர்.

சமீபத்தில் சித்தப்பா ராஜன் இறந்தபோது அவரை இங்கே அடக்கம் செய்யவந்தனர். கோர்ட்டில் அனுமதி வாங்கி அடக்கம் செய்யவந்தவர்கள், எங்க அத்தை வீட்டில் சின்னம்மாவை தங்கவைத்து காலிசெய்யாமல், இரண்டே கால் ஏக்கர் நிலத்தையும் ஆக்கிரமித்தார்கள். கோர்ட்டுக்குப் போனதில் முறையான ரிக்கார்டும் காட்டாமல், வாய்தாவுக்கும் வராததால் 2017-ல் எங்களுக்குச் சாதகமாக தீர்ப்பு வந்தது. பண்ணையைச் சுற்றி கம்பிவேலிபோட்டு அவர்களை காலிசெய்ய முயன்றபோது, பிரச்சனை செய்தனர். உசிலம்பட்டி போலீஸில் புகார்செய்தோம்.

கடந்த 29-ஆம் தேதி ஜே.சி.பி.யை வரவழைத்து கம்பிவேலி போடமுயன்றபோது, இன்ஸ்பெக்டர் மாடசாமி அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் உத்தரவு எனச்சொல்லி அதை தடைசெய்தார். எங்களிடம் 22 ஏக்கருக்கான முறையான ஆவணங்கள் இருக்கிறது. தேவையென்றால் அவர்கள் கோர்ட்டில்போய் ஸ்டே வாங்கி வரட்டும்''’என்கிறார்.

தா.பாண்டியனின் சகோதரரான டி.எஸ்.ராஜனுக்கு மூன்று மகன்கள். இதில் மூன்றாவது பையனான ஜெபராஜுக்குத்தான் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், தன் மகளை திருமணம் செய்து கொடுத்திருக்கிறார்.

minister-srinivasanசீனிவாசனின் மருமகனான ஜெபராஜனோ, “18 லட்சம் வாங்கிக்கிட்டுதான் பண்ணையை எங்களிடம் ஒப்படைத்தார்கள். போர்போட்டது விவசாய பராமரிப்புச் செலவென 7 லட்சம் செலவழித்தோம். கட்சிக்காரர்கள் சிலர் இந்தப் பகுதியில் நல்ல விலை வருகிறதென ஏற்றிவிட்டதால், பண்ணையைத் திரும்பக் கேட்டார். கொடுத்த காசு, செலவழித்த காசுமாக 25 லட்சத்தைக் கேட்டால், "11 லட்சம் மட்டும் கொடுத்துவிட்டு மீதியுள்ள பணத்துக்கு வீட்டையும் வீட்டைச் சுற்றி ரோட்டோரத்தில் இருக்கும் இரண்டே கால் ஏக்கரையும் வைத்துக்கொள்ளுங்கள்' என்றார். பெரியப்பா மேல் இருந்த மரியாதையால் பத்திரம் எழுதிப் பதியவில்லை. நிலத்துக்கு வரி, ரசீது எல்லாம் எங்கள் பேரில்தான் இருக்கிறது. ஒருகட்டத்தில் நிலம் எங்களுக்குச் சொந்தம் என கோர்ட்டில் வழக்குப் போட்டோம். எங்கள் வக்கீல் சரிவரப் போகாததால் வழக்கு தள்ளுபடியாகிவிட்டது. மேல்முறையீடு செய்திருக்கோம். அப்படியிருக்க எங்க நிலத்தையும் சேர்த்து கம்பி வேலிபோட முயற்சிசெய்ததால் போலீஸில் புகார் கொடுத்தோம். எங்க குடும்ப பிரச்சினைல மாமா ஒருபோதும் தலையிட்டதில்லை''’என்கிறார்.

அந்த வீடு எங்க அக்காவுக்குச் சொந்தம். பொய்யான தகவலைப் பரப்பி நிலத்தை அபகரிக்கப் பார்ப்பதாக’’ சொல்கிறார் தா.பாண்டியன். அமைச்சர் சீனிவாசனிடம் விளக்கம் கேட்க பலமுறை முயன்றபோதும் லைனில் கிடைக்கவில்லை.

-சக்தி

nkn110119
இதையும் படியுங்கள்
Subscribe