Advertisment

முட்டல் மோதல் ! தஞ்சை தமிழ் பல்கலைக்கழக சர்ச்சை

s

மிழ் வளர்ச்சிக்காகவும், தமிழ் ஆராய்ச்சிக்காகவும் உருவாக்கப்பட்ட தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம், தற்போது ஊழலில் சிக்கித் தவிக்கிறது. 2017-2018ஆம் ஆண்டில் பேராசிரியர்கள் நியமனம் உள்பட அனைத் திலும் முறைகேடு. "தகுதியானவர்களைத் தவிர்த்துவிட்டு தகுதியற்றவர்களுக்கு பணி நியமனம் வழங்கியுள்ளனர். பட்டியலின ஆராய்ச்சி மாணவர்களுக்கான ஊக்கத்தொகை யை காணவில்லை... -இதுபோன்ற பல்வேறு முறைகேடுகளை அப்போதைய தமிழக அரசின் தலையீட்டால் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரிக்க முடியாமல் தவித்தது.

இந்நிலையில், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் சமூகஆர்வலரும் வழக்கறிஞருமான நெடுஞ்செழியன் வழக்கு தொடுத்து விசாரணைக்கான ஆணையைப் பெற்றார். அதன் பிறகும் சிண்டிகேட் விசாரணைக்கு ஒத்துழைப்பு கொடுக் காததால் மீண்டும் நீதிமன்றம் சென்றபிறகே லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணைக்கு சிண்டிகேட் ஒத்துழைத்தது. தற்போது பேராசிரியர்கள், பணியாளர்கள் நியமனத்தில் நடைபெற்ற முறைகேடுகள் கண்டறியப்பட்டுள்ளன.

Advertisment

tt

2017-2

2017-2018 காலகட்டத்தில் பேராசிரியர்கள், இணை பேராசிரியர்கள், உதவிப் பேராசிரியர் கள் என சுமார் 40 பேரை நியமனம் செய்துள்ளனர். அதில் பெரும்பான்மையோர் முறையான கல்வித் தகுதியில்லாதவர்கள். ஒரு பெண் பேராசிரியர், திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தில் பணிகேட்டு விண்ணப் பிக்கிறார். அங்கு தகுதியில்லாமல் நிராகரிக்கப் பட்டவர், தமிழ் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருக்கிறார்.

அருந்ததியர் இட ஒதுக்கீட்டில் பட்டியலினத்தவரை நியமிக்கிறார்கள். குறைந்தது 3 பேராவது நேர்காணலில் கலந்துகொள்ள வேண்டுமென்ற சிண்டிகேட் தீர்மானத்துக்கு புறம்பாக, இரண்டுபேரை மட்டுமே வைத்து கண்துடைப்பாக நேர்காணல் நடத்தி பணி வழங்கப்பட்டுள்ளது. வயது வரம்பும் மீறப்பட் டுள்ளது. சம்பந்தமில்லாத துறைகளில் பேராசிரியர்களை நியமித்துள்ளனர். வேலை யில்லாமல் இருந்தவருக்கு பல்கலைக்கழகம் டி.டி. மூலம் சம்பளம் அனுப்பியுள்ளது. கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினராக இருந்தவ ருக்கு பேராசிரியர் பணியாணை வழங்கப் பட்டுள்ளது. இப்படியான முறைகேடுகளைக் கேள்வியெழுப்பிய சிவகுமார் என்ற ஆராய்ச்சி மாணவர் மீது புகாரளித்து, சிறைக்கு அனுப்பி, அவரது படிப்பையும் முடித்து வைத்து விட்டார்கள்.

Advertisment

பல்கலைக்கழகத்தின் சில பேராசிரியர்கள்.. "2017-2018ல் துணைவேந்தராக இருந்தவர் ஜி.பாஸ்கரன். பதிவாளர் முத்துக்குமார், பதிவாளர் பி.ஏ. சக்திசரவணன், தொலை நிலைக் கல்வி இயக்குநர் என்.பாஸ்கரன். இவர்களின் காலத்தில்தான் இந்த முறைகேடுகள் நடந்தன. அதேபோல கடந்த துணைவேந்தர் திருவள்ளுவன், வெளிநாடுகளில் வகுப்பு நடத்தியதாகவும், அங்கீகாரமில்லாத படிப்புகளை நடத்தி பட்டம் வழங்கியதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தது. இந்த முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பல வருடங்களாக வழக்கறிஞர் நெடுஞ்செழியன், நீதிமன்றம், ஆளுநர் மாளிகை என போராடிக் கொண்டிருந்தார்.

tt

இந்நிலையில், கடந்த அக்டோபர் 20ஆம் தேதி துணைவேந்தர் திருவள்ளுவன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். தொடர்ந்து ஓய்வு நீதிபதி ஜெயச்சந்திரன் தலைமையில் விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. விசாரணை தொடங்கவுள்ளது. துணைவேந்தர் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட நிலையில், தொழில் மற்றும் நில அறிவியல் துறை பேரா சிரியர் சங்கர் பொறுப்பு துணைவேந்தராக நியமனம் செய்யப்பட்டார். பொறுப்பு பதிவாளர் தியாகராஜனுக்கும், பொறுப்பு துணைவேந்தர் சங்கருக்கும் மோதல்கள் அதிகரித்த நிலையில்... பொறுப்பு துணைவேந்தர் சங்கரை நீக்கிவிட்டு, பல்கலைக்கழக ஆட்சிக்குழு உறுப்பினர் பாரதஜோதியை பொறுப்பு துணைவேந்தராக நியமனம் செய்வதாக, பொறுப்பு பதிவாளர் தியாகராஜன் ஒரு அறிக்கை வெளியிட்டார். அதே நாளில், தியாகராஜனை பதிவாளர் பொறுப்பிலிருந்து நீக்கிவிட்டு, அயல்நாட்டு தமிழ்க் கல்விதுறை இணை பேராசிரியர் வெற்றிச்செல்வனை பொறுப்பு பதிவாளராக நியமனம் செய்வதாக சங்கர் ஒரு அறிக்கையை வெளியிட்டார்!

rrஇருவரும் மாறி மாறி நீக்கிக்கொண்ட தால், பரபரப்பான சூழலில் பல்கலைக்கழகத்தில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. இந்நிலையில், புதிய பொறுப்பு பதிவாளர் வெற்றிச்செல்வன் திங்கள்கிழமை பதவியேற்றுக் கொள்ள பதிவாளர் அறைக்கு வந்தபோது, பதிவாளர் அறையைப் பூட்டிவிட்ட தியாகராஜன், மற் றொரு அறையில் தனது ஆதரவு பேராசிரியர்களுடன் அமர்ந் திருந்தார்.

அதையடுத்து போலீசார் பாதுகாப்புடன் பல்கலைக்கழக பணியாளர்கள் பூட்டை உடைத் தனர். அதன்பிறகு வெற்றிச்செல்வன் பொறுப்பு பதிவாளராக பதவியேற்றுக்கொண்டார். இதனால் மேலும் பரபரப்பு பற்றிக்கொண்டது.

தஞ்சை, தமிழ் பல்கலைக்கழகத்தில் கடந்த பல வருடங்களாக இதுபோல முட்டல் மோதல்கள், முறைகேடுகள் அதிகரித்துக் கொண்டே வருவதால் ஆய்வு மாணவர்களின் நிலை மிகவும் பரிதாபமாக உள்ளது. 40 பேராசிரியர்கள், பணியாளர்கள் நியமனத்தில் நடந்துள்ள முறைகேடுகளை விரைந்து விசாரணை செய்து நடவடிக்கை எடுத்தால் மட்டுமே இதுபோன்ற முறைகேடுகளையும் மோதல்களையும் தவிர்க்க முடியும்'' என்கிறார்கள்.

இந்த அசாதாரண சூழ்நிலையில் ஆளுநர் மாளிகையும் விசாரணையை தாமதம் செய்து வருவதால் மேலும் மேலும் மோதல்கள்தான் உச்சம் தொடும் என அச்சப்படுகிறார்கள்.

nkn040125
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe