Advertisment

சிதைக்கப்பட்ட சிறுமிகள்! அதிர வைக்கும் எப்ஸ்டீன்  பைல்சில் மோடி பெயர்!

epstein

"எப்ஸ்டீன் ஃபைல்களில் மோடியின் பெயர்? பதிலளிக்குமா பா.ஜ.க.?'’ என்ற தலைப்பில் கடந்த டிசம்பர் 06-09 இதழில் வெளியான கட்டுரையில், சிறுமிகளைப் பாலியல் கடத்தல் மற்றும் சுரண்டலில் ஈடுபடுத்திய அமெரிக்க குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீனைச் சுற்றியுள்ள ஆவணங்களில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்க முயன்றதாகக் கூறப்படும் குறிப்புகள் தொடர்பான சர்ச்சைகள் குறித்து நாம் எழுதியிருந்தோம்.  அதேபோல், முன்னாள் மத்திய அமைச்சர் ஹர்தீப்சிங் புரியுடன் எப்ஸ்டீனுக்கு தொடர்புகள் இருந்ததாகச் சொல்லப்படும் பதிவுகள் அரசியல் வட்டாரத்தில் எழுப்பிய கேள்விகளையும் சுட்டிக்காட்டியிருந்தோம். இந்த விவகாரம் குறித்து மக்களிடையே எழுந்த சந்தேகங் களுக்கு பிரதமர் நாடாளுமன்றத்தில் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தோம்.

Advertisment

இந்நிலையில், கடந்த 3-ஆம் தேதி  நாடாளுமன்றத்தில் ஜனாதிபதியின் உரை மீதான விவாதத்தின்போது எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்திக்கு பேச அனுமதி வழங்கப்படாதது புதிய அரசியல் சர்ச்சையை ஏற்படுத்தியது. வெளிநாட்டு அழுத்தங்களால் பிரதமர் சமரசம் செய்துகொண்டார் என்றும், எப்ஸ்டீன் தொடர்பான ஆவணங்களில் பெயர் இடம் பெற்றதாக எழுந்த விவாதம், அதானி மீதான அமெரிக்க வழக்குகள், இந்தியா -அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் மற்றும் தேசிய பாதுகாப்பு சூழ் நிலைகள் ஆகியவை ஒன்றோடொன்று தொடர்புடையவை என்றும் அவர் பேசத் திட்டமிட்டிருந்ததாக காங்கிரஸ் தரப்பு கூற, ஆயிரக்கணக்கான கோடிகளில் உருவாக்கப்பட்ட மோடியின் பிம்பம் உடைந்துபோகும் என்ற பயமே இந்தத் தடைக்கு காரணம்’என ராகுல்காந்தியும் குற்றம்சாட்டினார்.

Advertisment

உலக சர்ச்சையில் மோடி பெயர்!

உலகளவில் கவனம் பெற்றுள்ள எப்ஸ்டீன் தொடர்பான ஆவணங்களில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த செல்வாக்குமிக்க நபர்கள் குறித்த குறிப்புகள் இடம்பெற்றுள்ளன. அந்த வரிசையில் இந்திய பிரதமர் குறித்த குறிப்பும் இருந்ததாக வெளிவந்த தகவல்கள் இந்திய அரசியல் வட்டாரத்தில் விவாதத்தை ஏற்படுத்தின. குறிப்பாக, 2017ஆம் ஆண்டு பிரதமர் மேற்கொண்ட இஸ்ரேல் பயணம் சர்ச்சையைத் தீவிரப்படுத்தியது.

ஆனால், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் இந்த குற்றச்சாட்டுகளைத் தெளிவாக மறுத்தது. பிரதமர், எப்ஸ்டீனை சந்தித்ததாகவோ, எந்தவித தொடர்பும் வைத்திருந்ததாகவோ கூறப்படும் தகவல்களில் உண்மை இல்லை என்று

"எப்ஸ்டீன் ஃபைல்களில் மோடியின் பெயர்? பதிலளிக்குமா பா.ஜ.க.?'’ என்ற தலைப்பில் கடந்த டிசம்பர் 06-09 இதழில் வெளியான கட்டுரையில், சிறுமிகளைப் பாலியல் கடத்தல் மற்றும் சுரண்டலில் ஈடுபடுத்திய அமெரிக்க குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீனைச் சுற்றியுள்ள ஆவணங்களில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்க முயன்றதாகக் கூறப்படும் குறிப்புகள் தொடர்பான சர்ச்சைகள் குறித்து நாம் எழுதியிருந்தோம்.  அதேபோல், முன்னாள் மத்திய அமைச்சர் ஹர்தீப்சிங் புரியுடன் எப்ஸ்டீனுக்கு தொடர்புகள் இருந்ததாகச் சொல்லப்படும் பதிவுகள் அரசியல் வட்டாரத்தில் எழுப்பிய கேள்விகளையும் சுட்டிக்காட்டியிருந்தோம். இந்த விவகாரம் குறித்து மக்களிடையே எழுந்த சந்தேகங் களுக்கு பிரதமர் நாடாளுமன்றத்தில் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தோம்.

Advertisment

இந்நிலையில், கடந்த 3-ஆம் தேதி  நாடாளுமன்றத்தில் ஜனாதிபதியின் உரை மீதான விவாதத்தின்போது எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்திக்கு பேச அனுமதி வழங்கப்படாதது புதிய அரசியல் சர்ச்சையை ஏற்படுத்தியது. வெளிநாட்டு அழுத்தங்களால் பிரதமர் சமரசம் செய்துகொண்டார் என்றும், எப்ஸ்டீன் தொடர்பான ஆவணங்களில் பெயர் இடம் பெற்றதாக எழுந்த விவாதம், அதானி மீதான அமெரிக்க வழக்குகள், இந்தியா -அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் மற்றும் தேசிய பாதுகாப்பு சூழ் நிலைகள் ஆகியவை ஒன்றோடொன்று தொடர்புடையவை என்றும் அவர் பேசத் திட்டமிட்டிருந்ததாக காங்கிரஸ் தரப்பு கூற, ஆயிரக்கணக்கான கோடிகளில் உருவாக்கப்பட்ட மோடியின் பிம்பம் உடைந்துபோகும் என்ற பயமே இந்தத் தடைக்கு காரணம்’என ராகுல்காந்தியும் குற்றம்சாட்டினார்.

Advertisment

உலக சர்ச்சையில் மோடி பெயர்!

உலகளவில் கவனம் பெற்றுள்ள எப்ஸ்டீன் தொடர்பான ஆவணங்களில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த செல்வாக்குமிக்க நபர்கள் குறித்த குறிப்புகள் இடம்பெற்றுள்ளன. அந்த வரிசையில் இந்திய பிரதமர் குறித்த குறிப்பும் இருந்ததாக வெளிவந்த தகவல்கள் இந்திய அரசியல் வட்டாரத்தில் விவாதத்தை ஏற்படுத்தின. குறிப்பாக, 2017ஆம் ஆண்டு பிரதமர் மேற்கொண்ட இஸ்ரேல் பயணம் சர்ச்சையைத் தீவிரப்படுத்தியது.

ஆனால், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் இந்த குற்றச்சாட்டுகளைத் தெளிவாக மறுத்தது. பிரதமர், எப்ஸ்டீனை சந்தித்ததாகவோ, எந்தவித தொடர்பும் வைத்திருந்ததாகவோ கூறப்படும் தகவல்களில் உண்மை இல்லை என்றும், அதிகாரப்பூர்வ வெளிநாட்டுப் பயணத்தைத் தவிர மற்ற குறிப்புகள் ஆதாரமற்றவை என்றும் விளக்கம் அளிக்கப்பட்டது. 

இந்த மறுப்பை ஏற்க மறுத்து ராகுல் காந்தி தொடர்ந்து கேள்வி எழுப்பியதால், பா.ஜ.க. தரப்பில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. "சரணடைந்த மோடி'’கோஷங்களால் ஏற்பட்ட அமளியின் காரணமாக, 4-ஆம் தேதி பிரதமர் உரையாற்றாமல் மக்களவை ஒத்தி வைக்கப்பட்டது. 

epstein1

குற்றச்சாட்டுகளின் மையமான பாலியல் தீவு!

அமெரிக்க நீதித்துறை, ஜெஃப்ரி எப்ஸ்டீன் தொடர்பான விசாரணை ஆவணங்களில் இருந்து சுமார் 30 லட்சம் பக்கங்களை வெளியிட்டுள்ளது. நீதிமன்ற பதிவுகள், சாட்சியங்கள் மற்றும் பல்வேறு குற்றச்சாட்டு தகவல்களை உள்ளடக்கிய 
இந்த வெளியீட்டில் சுமார் 2,000 வீடியோக்களும் 1,80,000 புகைப்படங்களும் இடம்பெற்றுள்ளன. இந்த ஆவணங் களில், எப்ஸ்டீனுடன் தொடர்புவைத்தி ருந்ததாக உலகப் பிரபலங்களின் பெயர்     களும் காணப்படுகின்றன. அவற்றில் பில் கிளிண்டன், டொனால்ட் ட்ரம்ப், இளவரசர் ஆண்ட்ரூ, மிக் ஜாகர், டயானா ராஸ், கெவின் ஸ்பேசி, கிரிஸ் டக்கர், ரிச்சர்ட் பிரான்சன், எலான் மஸ்க், பில் கேட்ஸ், லாரி சம்மர்ஸ் மற்றும் எஹுத் பராக் உள்ளிட்டோர் குறிப்பிடப்பட்டுள்ளனர். மேலும், எப்ஸ்டீனின் தனியார் தீவான “லிட்டில் செயிண்ட் ஜேம்ஸ்” பல குற்றச்சாட்டுகளின் மையமாக ஆவணங்களில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. எப்ஸ்டீன் வழக்குடன் தொடர்புடைய அரசிடமிருந்த தகவல்களை பொதுமக்களுக்கு வெளியிட வேண்டும் என்ற சட்டத்தின் அடிப்படையில்  இதனை வெளியிட்டுள்ளனர்.  

கரீபியன் கடலில் அமைந்த தனியார் நிலப்பகுதியான லிட்டில் செயின்ட் ஜேம்ஸ், அமெரிக்க விர்ஜின் தீவுகளின் ஒரு பகுதியாகும். 1998 முதல் 2019 வரை எப்ஸ்டீனின் கட்டுப்பாட்டில் இருந்த இந்தத் தீவில்தான் குறைந்த வயதுடைய சிறுமிகள் பாலியல் சுரண்டலுக்கு ஆளாகியுள்ளனர். 

 செயின்ட் தாமஸ் கடற்கரையிலிருந்து சுமார் இரண்டு மைல் தொலைவில் அமைந் துள்ள இந்தத் தீவு, அதிகாரமும் செல்வாக்கும் உள்ளவர்கள் வருகைதந்த தனியார் ஓய்வு மையமாக இருந்தது. இங்கு இளம்பெண்கள் மீதும் பாலியல் துஷ்பிரயோகம் நடந்ததால்  ‘"பாலியல் தீவு'’ என்ற கெட்ட பெயரைச் சம்பாதித்தது. 2019-ல் எப்ஸ்டீன் மரணமடைந்த பிறகு, இந்த இடமும் அருகிலுள்ள கிரேட் செயின்ட் ஜேம்ஸ் தீவும் விற்கப்பட்டது.  அதிகாரமும் பணமும் தவறாகப் பயன் படுத்தப்பட்டதால், இந்தத் தீவு உலகளவில் சர்ச்சையின் அடை யாளமாகப் பார்க் கப்படுகிறது.  

"என் மகள் வயதுள்ள சிறுமிகள்''’
-மெலிண்டா வேதனை!

பில்கேட்ஸ் இதற்குப் பதிலளிக்க வேண்டும்’ என்று கொந்தளித்துள்ள அவருடைய முன்னாள் மனைவி மெலிண்டா, "எப்ஸ்டீன் தொடர்பான கோப்புகளில் வெளியாகி யுள்ள புகைப்படங்களும், வீடியோக்களும் என்னை அதிர்ச்சியிலும் ஆழ்ந்த வேதனையிலும் ஆழ்த்தி யுள்ளது. இந்த விவ காரத்தில் தொடர்புடைய பில்கேட்ஸ் உள்பட அனைவரும், இதுகுறித்து எழும் ஒவ்வொரு சந் தேகத்திற்கும் பதில் சொல்லவேண்டும். எந்தச் சிறுமியும் அனுபவிக் கக்கூடாத கொடுமைகளை, எப்ஸ்டீனும் அவனுடைய கூட்டாளிகளும் அரங் கேற்றியுள்ளனர். என் மகள் வயதில் உள்ள அச்சிறுமிகளைப் பார்க் கும்போது இதயம் நொறுங்கிப் போனது''’ என்று ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருக்கிறார். 

epstein3

"அவனுக்குத் தேவை குழந்தைகள்தான்...'’
’-மனிதநேயத்தை உலுக்கும் சாட்சிகள்!

மெலிண்டா குறிப்பிட்டது போலவே பாதிக்கப்பட்ட பெண்களும் தங்களது மன வேதனையைப் பொதுவெளியில்  பகிர்ந் துள்ளனர்.   

epstein2

மெரினா லாசெர்டா:  சமீபத்தில் வெளியான அந்த எப்ஸ்டீன் கோப்புகள் என் முகத்தில் அறைந்தது போலிருக்கிறது. 

அதிகார வர்க்கத்தைப் பாதுகாத்துவிட்டு எங்களைப் போன்ற பாதிக்கப்பட்டவர்களின் வாழ்க்கையை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை. என் இருண்ட காலம் எனக்கு 14 வயதாக இருக்கும்போதே தொடங்கிவிட்டது. அதற்கு முன்பே என் 8 வயதில் ஸ்டெப் ஃபாதரால் இழைக்கப்பட்ட பாலியல் கொடுமைகள் என்னை உள்ளுக்குள் உடைத்துப் போட்டிருந்தன. வறுமையும், குடியேறி என்ற அடையாளமும், சமூகப் பாதுகாப்பு எண் இல்லாத நிலையும் என்னை எப்ஸ்டீனின் அந்த மன்ஹாட்டன் மாளிகைக் குள் தள்ளியது. மசாஜ் அறை என்ற பெயரில் இருள்சூழ்ந்த அந்த அறைக்குள் நான் எதிர்பார்க்காத வன்கொடுமைகள் என் மீது ஏவப்பட்டன. ஏற்கனவே வன்முறையைச் சந்தித்திருந்ததால் என்னால் எதையும் எதிர்க்க முடியவில்லை. அங்கு என்னைப் போன்ற நூற்றுக் கணக்கான சிறுமிகள் வந்து போவதைப் பார்த்திருக்கிறேன், எப்ஸ்டீனைப் பொறுத்தவரை நாங்கள் வெறும் பொருட்கள் மட் டுமே. எனக்கு 17 வயதானபோது "உனக்கு வயதாகி விட்டது, இனி உன்னால் ஆகப் போவது ஒன்றும் இல்லை' என்று கூறி என்னை வெளியே எறிந்தான். அவனுக்குத் தேவைப்பட்டது குழந்தைகள் மட்டுமே தவிர பெண்கள் அல்ல.

டிலா டேவிஸ்:  நான் அவனிடம் சிக்கிக்கொண்டபோது எனக்கு வயது 17தான், ஆதரவற்ற நிலையில் தனியாக இருந்த என் பலவீனத்தைப் பயன்படுத்திக்கொண்டு ஜெஃப்ரி எப்ஸ்டீன் என்னை வேட்டை யாடினான். அந்தப் புகைப்படத்தில் ஹெலிகாப்டரில் நான் சிரித்துக் கொண்டி ருப்பது எனக்கு இன்றும் வலிக்கிறது. 

epstein4

ஏனெனில் எனக்காக அவன் தீட்டியிருந்த கொடூரமான திட்டங்கள் அப்போது சிறுமியாக இருந்த எனக்குத் தெரிந் திருக்கவில்லை. நியூயார்க், நியூ மெக்சிகோ, புளோ ரிடா, வர்ஜின் தீவுகள் என அவன் என்னை எங்கு அழைத்துச் சென்றானோ அங்கெல்லாம் நான் பாலியல் ரீதியாகச் சிதைக் கப்பட்டேன். அவன் என்னைத் தன் பாலியல் ஆசைக்கான ஒரு பொருளாக மட்டுமே பார்த்தான், அந்த அத்துமீறல்கள் என்னை நிலைகுலையச் செய்தன. இப்போது நான் இங்கே நிற்பது என்னைப் போன்ற பாதிக்கப்பட்டவர்கள் பயத்தை வென்று பேசவேண்டும் என்பதற்காகத்தான், மறைக்கப்பட்ட உண்மைகளை வெளிச்சத்திற்குக் கொண்டு வருவதுதான் என் மனதைச் சுத்தப்படுத்தும் மருந்தாக இருக்கிறது.''

எப்ஸ்டீன் ஃபைல்களில் இடம் பெற்றுள்ள பெயர்கள் அனைத்தும் நேரடிச் சாட்சியங்கள் அல்ல, அவை வெறும் விசாரணைக் குறிப்புகளாகக் கூட இருக்கலாம். ஆனால், சிறுமிகளை வேட்டையாடிய ஒரு காமுகனின் தொடர்புகள் பட்டியலில் ஒரு நாட்டின் பிரதமருடைய பெயர் கசிவதே அந்தப் பதவிக்கு நேர்ந்த இழுக்கு. 

epstein5

மிரட்டலான தொனியில் தனது இஷ்டப்படி டிரம்ப், மோடியை ஆட்டுவிப்பதும், அதி முக்கியமான வர்த்தக ஒப்பந்தத்தில் அவசரக் கதியில் கையெழுத்திட்டு அடி பணிவதும்,  ரஷியா போன்ற நட்பு நாடுகளின் அதிருப்தியைச் சம்பா தித்துக்கொள்வதும், அவர்மீது  ஏற்கனவே நிலவி வந்த சந்தேகத்தை  மேலும் வலுப்படுத்துகிறது. 

உலக அரங்கில் இந்திய தேசத்தின் கௌரவம் சிதைக்கப்பட்டு, தேசிய அரசியலை நிலைகுலையச் செய்துள்ள இந்தச் சூழல், நம் தேசத்திற்குத் துடைக்க முடியாத ஒரு கறை!


_________________
இரட்டை வாழ்க்கை!

மூகத்தில், 60-70 வயதுக்குப் பிறகும் பெண் துணை இல்லாமல் பிரம்மச்சரியம் கடைப்பிடிக்கும் மனிதர்களைப் பற்றிய பல கேள்விகள் எழுகிறது. உதாரணமாக, “அவர்களின் உடல் இச்சைகள் என்ன?’அல்லது “சராசரி மனிதனால் உடலும் உணர்ச்சிகளும் கட்டுப்படுத்தப்படுமா?” என்பது போன்ற கேள்விகள். பிரம்மச்சரியம் என்பது உடல் இச்சைகள் முற்றிலும் இல்லாமை அல்ல; அது, உடல் ஆசைகளை அடக்கி, அவற்றை கட்டுப்படுத்தி வேறு வழிகளில் செலுத்துவதாகும்.

நீண்ட கால முழு பிரம்மச்சரியம் சராசரி மனிதருக்கு மிகவும் கடினம், மேலும் எல்லா மனிதர்களும் ஒரே மாதிரி பிரம்மச்சரியத்தை கடைப்பிடிக்க முடியாது. சிலர் ஆன்மிக வாழ்க்கை, தியானம், சேவை, ஒழுக்கமான பழக்கவழக்கங்கள் மூலம் தங்களின் எண்ணங்களையும் உணர்ச்சிகளையும் கட்டுப்படுத்துகிறார்கள். சிலர் வெளிப்படையாக பிரம்மச்சரிய வாழ்க்கை வாழ்வது போல் தோன்றினாலும், உள்ளுக்குள் கடுமையான மனப்போராட்டத்தை அனுபவிக்கிறார்கள். உணர்ச்சிகளை அடக்குவது, மன அழுத்தம், கோபம், இரட்டை வாழ்க்கை போன்ற பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். அடக்கப்பட்ட உணர்ச்சிகள் பின்னர் தவறான நடத்தையாக வெளிப்படும் அபாயம் உள்ளது. திருமணம் செய்யாமலோ, துணை இல்லாமலோ வாழ்வதும் ஒரு வாழ்க்கைத் தேர்வு தான். ஆனால் தன் உணர்ச்சிகளை உண்மையாக எதிர்கொண்டு, பொறுப்புடன் வாழ்வதே உண்மையான ஒழுக்கம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

____________
அதிகாரத்தின் அருவருப்பான முகம்!

பெடோபைல்   (Pedophile)   என்பது ஒரு மனநிலையைக் குறிக்கும் சொல். சம வயதுள்ள எதிர்பாலினத்துடன் இயல்பான உறவு கொள்ளும் திறமையோ மனநிலையோ இல்லாதவர்கள், உறவுக்காக சிறுமிகளைத் தேர்வுசெய்கிறார்கள். ஆனால் அந்த மனநிலையைச் செயலாக மாற்றினால், அது கடுமையான குற்றம் மற்றும் சட்டப்படி தண்டனைக்குரியது.

பணமும் அதிகாரமும் கையிலிருக்கும் சில மனிதர்கள் சிறுமிகளுக்கு இழைக்கும் பாலியல் குற்றங்கள் எந்த வகையிலும் “பொழுதுபோக்கு” அல்ல. அது அவர்களுடைய அதிகார வெறி, யாரும் தங்களைத் தடுக்க முடியாது என்ற அகம்பாவம், மற்றவர்களின் வேதனையை உணராத மனநிலை ஆகியவை சேர்ந்து உருவாகும் கொடூரமான அத்துமீறல்.  பணமும் செல்வாக்கும் இருப்பதால், தங்களைக் காத்துக்கொள்ள முடியும்; குற்றம் செய்தாலும் தப்பித்துவிடலாம் என்ற எண்ணம் இவர்களுக்கு வலுவாக இருக்கும்.  இதனால் பாதிக்கப்பட்டவர்கள் பயத்தால் மௌனமாக இருக்கவேண்டிய நிலையும் ஏற்படும். ஆகவே இது சாதாரண இன்பத் தேடல் அல்ல -மனிதத்தன்மை குறைந்து, அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தும் ஆபத்தான செயலே. அனைத்துச் செல்வந்தர்களும் இப்படி இருப்பார்கள் என்று சொல்ல முடியாது. அதிக வசதிகளால் வாழ்க்கையைச் சலிப்பாக உணர்பவர்கள், சாதாரண விஷயங்களில் திருப்தி அடையாமல், ஆபத்தான அனுபவங்களைத் தேடு கிறார்கள்.  எதிர்ப்பு சொல்லமுடியாத சிறுமிகள் மீது ஆதிக்கம் செலுத்தி கட்டுப்படுத்துவது, பாலியல் விருப்பத்தைவிட அதிகார வெறியுடைய செயலாகும்.  

nkn070226
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe