திராவிட இயக்கம் பற்றியும் அதன் தலை வர்கள் பற்றியும் தொடர்ந்து புத்த கங்களை வெளி யிட்டு வரும் நக்கீரன் பப்ளி கேஷன்ஸின் புதிய வெளியீடு இது.

தனது ஆட் சிக்காலத்தின் முதல் 100 நாட்களில் காட்டிய செயல்திறத்தால் மக்களின் நம்பிக்கைக் குரியவராய்-இந்திய அளவில் கவனம் பெற்றவராய்த் திகழும் முதல்வர் மு.க.ஸ்டாலினின் உழைப்பு- பொறுமை-அரசியல் பணிகள்- தலைமைப் பண்பு பற்றிய நிகழ்வுகளின் தொகுப்பு. இதனை எழுதி யிருப்பவர் நக்கீரன் பொறுப்பாசிரியர் கோவி.லெனின்.

ss

புத்தகத்தின் முதல் படியை நக்கீரன் ஆசிரியரும் பொறுப்பாசிரி யரும் முதல்வரை அவரது முகாம் அலுவலகத்தில் சந்தித்து வழங்கினர். மகிழ்ச்சியுடன் அதனைப் பெற்றுக்கொண்டார் முதல்வர். தி.முக. இளைஞரணிச் செயலாளரும் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதி எம்.எல்.ஏ.வுமான உதயநிதியிடமும் இந்தப் புத்தகம் வழங்கப்பட்டது.

இது குறித்து உதயநிதி தனது ஃபேஸ்புக்-ட்விட்டர் பதிவுகளில், "திராவிட இயக்கத்தின் வரலாறை, சாதனையை அதன் தேவையை தன் எழுத்தால் இளைய தலைமுறைக்கு கொண்டு சேர்க்கும் கோவி. லெனின் அவர்கள் நம் தலைவர் பற்றி எழுதியுள்ள "முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் பெயர் அல்ல... செயல்' புத்தகத்தை பெற்றுக்கொண்டேன். அண்ணனுக்கு என் அன்பும், நன்றியும்'' என குறிப்பிட்டுள்ளார்.

கவனத்தை ஈர்த்திருக்கும் இந்தப் புத்தகத்தை தி.மு.க. தொண்டர்களும் பொதுமக்களும் ஆர்வத்துடன் கேட்டு வாங்குகின்றனர். கலைஞரின் மகனாக இருந்தாலும் கட்சியில் ஒரு தொண்டனைப் போல கடும் பயணம் மேற்கொண்டே முதலமைச்சர் பொறுப்புக்கு வந்திருக்கிறார் மு.க.ஸ்டாலின். அவரது பாதை, பயணம், சவால்கள், அவற்றைக் கடந்த சாதனை, பாடுகள் ஆகியவற்றை விளக்குகிறது இந்நூல்.

தரமான தயாரிப்பாக-ஆர்ட் பேப்பரில் 16 பக்க வண்ணப் படங்களுடன் நக்கீரன் பப்ளிகேஷன்ஸ் வெளியிட்டுள்ள இந்தப் புத்தகத்தின் விலை ரூ.200

இந்நூலை

Nakkheeran Publications,

105 Jani Jahan Khan Road,

Royapettah

Chennai#600 014 என்ற முகவரியில் பெறலாம்.

Advertisment

புத்தகத்தை ஆன்லைனில் ஆர்டர் செய்ய: https://bit.ly/3D4MZwM

G Pay மூலமும் வாங்க முடியும்.

தொடர்புக்கு: -044 43993000, 9677981373

Advertisment