Advertisment

முருகர் சிலையை வைத்து தில்லாலங்கடி!  -குவாரி சர்ச்சை பின்னணி!

murugan

ல ஏக்கர் நிலத் தையும், கல் குவாரியையும் கைப்பற்ற போலி முருகர் சிலையை வைத்து மக்களின் நம்பிக்கை யோடு விளையாடிய சம்பவம் மக்களிடம் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.

Advertisment

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அருகேயுள்ளது கரடிக்குடி கிராமம். அந்த ஊரின் ஊராட்சி மன்றத் தலைவர் கிரிதரன், "என் கனவில் முருகர் அடிக்கடி வருகிறார். மண்ணுக்குள் இருக் கிறேன்.., தோண்டியெடுத்து கோவில் கட்டுன்னு சொன்னார்' எனச் சொல்லிவந்துள்ளார். திடீரென கடந்த ஜூலை 17-ஆம் தேதி ராஜமாணிக்கம் என்பவருக்கு அருள்வந்ததாக சொல்லி ஊரின் ஒதுக்குப்புறத்திலுள்ள குன்றில் இரண்டு பாறை களுக்கு நடுவில் மண்ணை கைகளால் கிளறியதில் இரண்டு அடி உயரத்துக்கு ஒரு முருகர் சிலை தென் பட்டுள்ளது. பாதிக்கு மேல் தோண்டமுடியவில்லை எனச்சொல்லி அங்கேயே வைத்து பூஜைசெய்து சாமிகும்பிடத் துவங்கியுள்ளனர். 

Advertisment

அடுத்தடுத்த நாட்களில் தகவல் பரப்பப்பட்டு காஞ்சிபுரம், திர

ல ஏக்கர் நிலத் தையும், கல் குவாரியையும் கைப்பற்ற போலி முருகர் சிலையை வைத்து மக்களின் நம்பிக்கை யோடு விளையாடிய சம்பவம் மக்களிடம் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.

Advertisment

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அருகேயுள்ளது கரடிக்குடி கிராமம். அந்த ஊரின் ஊராட்சி மன்றத் தலைவர் கிரிதரன், "என் கனவில் முருகர் அடிக்கடி வருகிறார். மண்ணுக்குள் இருக் கிறேன்.., தோண்டியெடுத்து கோவில் கட்டுன்னு சொன்னார்' எனச் சொல்லிவந்துள்ளார். திடீரென கடந்த ஜூலை 17-ஆம் தேதி ராஜமாணிக்கம் என்பவருக்கு அருள்வந்ததாக சொல்லி ஊரின் ஒதுக்குப்புறத்திலுள்ள குன்றில் இரண்டு பாறை களுக்கு நடுவில் மண்ணை கைகளால் கிளறியதில் இரண்டு அடி உயரத்துக்கு ஒரு முருகர் சிலை தென் பட்டுள்ளது. பாதிக்கு மேல் தோண்டமுடியவில்லை எனச்சொல்லி அங்கேயே வைத்து பூஜைசெய்து சாமிகும்பிடத் துவங்கியுள்ளனர். 

Advertisment

அடுத்தடுத்த நாட்களில் தகவல் பரப்பப்பட்டு காஞ்சிபுரம், திருப்பத்தூர் மாவட்டங்களிலிருந்து ஆயிரக்கணக்கான மக்கள் முருகனை தரிசிக்க வந்துள்ளனர். அந்த இடம் பள்ளிகொண்டாவை அடுத்த கொல்லமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த நடராஜன் மனைவி கஸ்தூரிக்குச் சொந்தமானது. பல ஆண்டுகளுக்கு முன்பு கரடிக்குடிக்கு வந்து நிலங்களை வாங்கி தனது நிலத்திலுள்ள பாறைக் குன்றுகளை வெட்டி ஜல்லியாக்கி அரசு அனுமதிபெற்று விற்பனை செய்யத் தொடங்கி பெரியள வில் லாபம் சம்பாதித் துள்ளார். அவரது குவாரி அருகேதான் முருகர் சிலை கண்டெடுக்கப்பட்டது. ஏ.டி. எஸ்.பி. பாஸ்கரன் தலைமை யில் 100-க்கும் மேற்பட்ட போலீ ஸார் பாதுகாப்பில் அங்கிருந்து அச்சிலையை அகற்றி தங்களுடனே கொண்டுசென்றுவிட்டனர் வருவாய்த் துறையினர். 

murugan1

இதுகுறித்து இடத்தின் உரிமை யாளர் நடராஜனைச் சந்தித்து நாம் பேசியபோது, “"நான் கொல்லமங்கலம் ஊராட்சி மன்றத் தலைவராகவும், மாதனூர் ஒன்றியக்குழு கவுன்சிலராகவும் இருந்திருக்கேன். தொழில்ல நட்டம் வந்ததால குவாரி தொழிலை நிறுத்திட்டேன். குவாரி இருக்கற 40 ஏக்கர் இடம், விவசாய நிலம் 10 ஏக்கர், ஜே.சி.பி, ஹிட்டாச்சி, லாரிகள், டாரஸ்கள்ன்னு அனைத்தையும் விற்க முடிவுசெய்தேன். 

நான் இதெல்லாம் விற்கிறேன்னு ஆரம்பிச்ச பிறகுதான், எங்க சொந்த இடத்துல இருக்கற குன்றுல முருகர் சிலை கண்டுபிடிச்சதா சொல்லி அங்கயே முருகரை வச்சி வணங்கினாங்க. கலெக்டரை சந்திச்சி மனு தந்தோம், வருவாய்த் துறை, தொல்லியல்துறை அதிகாரிகள் ஆய்வுக்கு வந்தாங்க. ரிசல்ட்ல அது புதிய சிலைன்னு தெரியவந்ததால ஆகஸ்ட் 1-ஆம் தேதி முருகர் சிலையை எடுத்துக்கிட்டுப் போய்ட்டாங்க. நான் விசாரிச்சவரைக்கும் அந்த சிலை திருவண்ணாமலை மாவட்டம் போளூர் மொடையூர்ல 4 பேர் வாங்கியிருக்காங்க, வித்தவரே சொன்னது''’ என்றார் வேதனையான குரலில். 

murugan2

இதுகுறித்து ஊராட்சி மன்றத் தலைவர் தி.மு.க. கிரிதரனிடம் நாம் கேட்டபோது, “"முருகர் என் கனவுல 3, 4 மாசமாக வந்து சொல்லிக்கிட்டே இருந்தாரு. அதுக்குப்பிறகுதான் ஒருத்தர்மேல அருள்வந்து முருகரே வழிகாட்டினாரு. முள்புதரா கிடந்த குன்றுமேலேபோய் தோண்டினோம் சிலை கிடைச்சது, நம்பிக்கையோ வழிபட வந்தவங் களுக்கு நல்ல பலன் தந்தது. நடராஜனிடமே கோவில் கட்ட ஒரு சென்ட் இடம் கேட்டோம், அவர் பதிலே சொல்லலை. அதிகாரிகள் வந்து எடுத்துக்கிட்டுப் போய்ட்டாங்க. அது புது சிலையா, பழைய சிலை யான்னு எனக்குத் தெரியாது. சிலையைத் தாங்க நாங்க பட்டா இடத்துல வச்சி கோவில் கட்டி சாமி கும்பி டப்போறோம் அப்படின்னு கேட்டிருக்கோம், நடராஜன் இடம் விற்கிறாருன்னு எனக்குத் தெரியாது, அவர் இடத்தை அவர் விற்பதை நான் ஏன் தடுக்கப்போறேன். அவரென்ன இந்த ஊரா? இங்கவந்து தொழில் செய்யறாரு, அந்த நிலம் அவருதுன்னு சொல்றாரு, அதிகாரிங்க சொல்லலாம், அக்கம்பக்கம் இருக்கற இடம் டி.சி. நிலமா இருக்கும்போது அவர் இடம் மட்டும் எப்படி பட்டா இடமா இருக்கும்? விதியை மீறி பாறை வெட்டியெடுத்தாருன்னா அவர் மகன் சுபாஷ், அரசாங்கத்துக்கு 12 கோடி பணம் கட்டணும். அவர் தொழில்ல நாங்க எதுவும் தலையிடல''” என்றார்.

நடராஜனின் கல்குவாரி அருகே அ.தி.மு.க. வேலூர் புறநகர் மா.செ. வேலழகன், தொழிலதிபர் சேகர்ரெட்டி உட்பட நான்கு பேரின் கல்குவாரிகள் உள்ளது. அதில் அ.தி.மு.க. மா.செ. குவாரி மட்டும் விதியைமீறி செயல்படுவதாகக் கூறப்படுகிறது. புராதன சின்னங்கள் இருக்கும் இடத்திலிருந்து 300 மீட்டர் சுற்றளவில் குவாரி நடத்தமுடியாது என்பதால் நடராஜனின் குவாரிக்கு அருகில் முருகர் சிலையை வைத்து அந்த இடத்தை விற்கமுடியாத படி தில்லாலங்கடி வேலைசெய்துள்ளார்கள், இதன்பின்னால் பெரிய அரசியல் பிரமுகர் இருக்கிறார் என்கிறார்கள் விவரமறிந்தவ ர்கள். தற்போது, தி.மு.க. மா.செவும், அணைக்கட்டு எம்.எல்.ஏ.வுமான நந்தகுமார் மூலமாக மாவட்ட ஆட்சியரிடம் சிலையைக் கேட்டுள்ளனர். அதேபோல் இந்துமுன்னணி நிர்வாகிகள் உள்ளே நுழைந்து அதிகாரிகளை மிரட்ட சிலையைத் தரமுடியாது எனச் சொல்லியுள்ளதாகத் தெரிகிறது. 

nkn200825
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe