ள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை காணொலி வாயிலாக முதல்வர் ஸ்டாலின் சந்தித்துக் கொண்டிருக்கிறார். அ.தி.மு.க. வெற்றி பெறக்கூடாது என்பதில் தெளிவாக இருக்கும் ஸ்டாலின் தி.மு.க.வினருக்கும் பல கட்டளை களை ரகசியமாக பிறப்பித்துக் கொண்டிருக்கிறார். அதில் முக்கியமானது எனக்கு இந்த உள்ளாட்சி தேர்தலைவிட அடுத்து வரக்கூடிய பாராளு மன்றத் தேர்தல்தான் முக்கியம். உள்ளாட்சித் தேர்தலில் ஏதாவது தவறு நடந்து அது வருகின்ற பாராளுமன்றத் தேர்தலை பாதிக்கக்கூடாது. மக்களிடம் செல்லுங்கள். வாக்குகளை கோரிப் பெறுங்கள். எந்த விதத்திலும் சமூகவிரோதச் செயல்களில் தி.மு.க.வினர் ஈடுபட்டார்கள் என்கிற செய்தி வரக்கூடாது என கடுமையாக எச்சரித்திருக்கிறார்.

lbelection

அத்துடன், காவல்துறை அதிகாரிகளை அழைத்து அ.தி.மு.க.வில் போட்டியிடும் வேட்பாளர்களின் சமூக விரோத பின்னணியை ஆராயச் சொல்லியிருக்கிறார்.

அதற்கு முக்கியமான சில காரணங்கள் இருக்கிறது. சென்னைக்கு பக்கத்தில் உள்ள காஞ்சிபுரம் மாவட்டத்தில் ரவுடிகளை அடக்க வெள்ளத்துரை என்கிற காவல்துறை அதிகாரியை நியமிக்க வேண்டுமென காவல் துறையிலிருந்து கோரிக்கை வர, அவரை நியமிக்க உத்தரவிட்டார் ஸ்டாலின்.

அந்த வெள்ளத்துரையின் மேல் ஏகப்பட்ட மனித உரிமை மீறல் வழக்குகள் இருக்கிறது. அந்த வழக்குகளை பா.ஜ.க.வைச் சேர்ந்த ஒருவர் பயன்படுத்திக் கொண்டார். அதன்மூலம் வெள்ளைத்துரையை அவர்கள் மிரட்டினார்கள். அந்த மிரட்டலுக்கு பயந்து போகும் வெள்ளத்துரை படப்பை குணாவை கோர்ட்டில் சரணடைய உதவி செய்தார்.

Advertisment

lb1

தொடர்ந்து அவரது கூட்டாளிகள் போந்தூர் சேட் உள்பட ரவுடிகளிடம் படப்பை குணா ஸ்டைலிலேயே சரணடைந்தார்கள். இதற்கு ஒரு பெரிய தொகை காவல்துறைக்கு கொடுக்கப்பட்டது என காஞ்சிபுரம் தி.மு.க. வி.ஐ.பி.கள் ஸ்டாலினிடம் புகார் செய்தார்கள்.

உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன் சென்னை மடிப்பாக்கத்தில் தி.மு.க.வைச் சேர்ந்த செல்வம் என்பவர் கொலை செய்யப்பட்டார். அதில் அ.தி.மு.க.வைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் சம்மந்தப் பட்டிருக்கிறார்.

இந்த ராதாகிருஷ்ண னை பா.ஜ.க.வைச் சேர்ந்த ஒருவர்தான் காப்பாற்றி உள்ளார். இப்படி ரவுடிகள், போலீசார் என்கவுண்ட்டர் செய்த பிறகும் தைரியமாக செயல்படுவது அவர்களுக்கு ஆதரவாக பா.ஜ.க. நிற்பது போன்ற தகவல்கள் ஸ்டா லினை கவலைகொள்ள வைத்தது.

இந்நிலையில் அவரது சொந்த தொகுதியான கொளத்தூர் தொகுதியில் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி என்கிற அ.தி.மு.க.வைச் சேர்ந்தவர் நாகராஜன் என்கிற கொளத்தூர் தொகுதி தி.மு.க. செயலாளரை எதிர்த்துப் போட்டியிடுகிறார்.

Advertisment

dd

இந்த கிருஷ்ணமூர்த்தி ஒரு பிரபல ரவுடி. ரவுடித்தனம் செய்யும் பிரபலங்களைக்கூட துப்பாக்கி காட்டி மிரட்டுபவர். கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது, இப்போது தி.மு.க. வேட்பாளராக போட்டியிடும் நாகராஜனை கத்தியால் குத்த முயற்சி செய்தார். இப்படி உள்ளாட்சித் தேர்தலில் தலைவிரித்தாடும் ரவுடியிஸத்தை எதிர்க் கட்சிகளான அ.தி.மு.க., பா.ஜ.க. ஆகியவை பயன்படுத்தியிருக்கின்றன என்பதை அறிந்து அவர்கள் மேல் பாய போலீசுக்கு உத்தரவிட்டிருக்கிறார் ஸ்டாலின்.

அதேநேரம் தி.மு.க.வினர் சமூக விரோதச் செயல்களில் ஈடுபடக்கூடாது என அவர்களையும் எச்சரித்திருக்கிறார் என்கிறார்கள் தி.மு.க.வைச் சேர்ந்தவர்கள்.

ff

இந்நிலையில், அ.தி. மு.க.வின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ்., இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி தி.மு.க.வுக்கு போட்டியாக தேர்தல் பிரச் சாரத்தை மேற்கொண்டாலும் உள்ளாட்சித் தேர்தலில் போட்டி யிடக்கூடியவர்களுக்கு அ.தி.மு.க. தலைமை எம்.ஜி.ஆர்.-ஜெ. ஆகியோரின் காலகட்டத்தில் கொடுக்கும் நிதியை இந்த முறை தரமுடியாது என இருவரும் கைவிரித்து விட்டார்கள்.

அதேபோல் உள்ளாட்சித் தேர்தலில் அ.தி.மு.க.வின் செயல்பாடுகளைக் கண்காணிக்க மாநிலம் முழுவதும் பொறுப் பாளர்களை நியமித்தார்கள். அ.தி.மு.க. தலைமை சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களுக்கு உள்ள மாநகராட்சிகளுக்கு யாரையும் பொறுப்பாளர்களாக நியமிக்க வில்லை.

அதற்கு நாங்கள்தான் காரணம். நாங்கள் எடப்பாடியை மிரட்டி பணிய வைத்து விட்டோம் என சென்னை மண்டலத்தைச் சேர்ந்த அ.தி.மு.க. மா.செ.க்களான ராஜேஷ், பாலகங்கா, வெங்கடேஷ்பாபு, விருகை ரவி, ஆதிராஜாராம் ஆகியோர் கட்சிக்காரர்களிடம் கூறிவருகிறார்கள்.

இதுபற்றி எடப்பாடியிடம் அ.தி. மு.க.வினர் புகார் செய்ய அதற்கு பதிலளித்த எடப்பாடி "நானும்தான் அவர்களை திட்டி அனுப்பினேன். அவர்கள் தி.மு.க.வின் சேகர்பாபுவோடு அண்டர்ஸ்டாண்டிங் போட்டுக்கொண்டு செயல்படுகிறார்கள். உள்ளாட்சித் தேர்தல் முடிந்ததும் இந்த ஐந்து மா.செ.க்களும் மாற்றப்படப் போகிறார்கள். அதற்காகத்தான் உள்ளாட்சி மன்றத் தேர்தலில் எந்த பொறுப்பாளரையும் சென்னை மண்டலத்திற்கு நாங்கள் போடவில்லை'' என விளக்கமளித்துள்ளார்.

இதற்கிடையே, கோவை மாநகராட்சியை அ.தி.மு.க. கைப்பற்றி தீரவேண்டும் என அமைச்சர் வேலுமணி களமிறங்கியுள்ளார். இதற்கு ஒரு சுவாரசியமான பின்னணியை அ.தி.மு.க.வினர் சொல்கிறார்கள்.

கோவையில் வேலுமணிக்கு நெருக்கமான சந்திரசேகரன் குடும்பத்தைச் சேர்ந்த சர்மிளாவை மேயராக்க வேலுமணி களத்தில் இறங்கியுள்ளார். கோவை மாநகராட்சி தொகுதிகளில் பார்க்கிங் காண்ட்ராக்ட் உள்பட பல காண்ட்ராக்ட்டுகளை வேலுமணி நடத்தி வருகிறார். அவற்றை பாதுகாக்க வேண்டுமென்றால், கோவை மாநகராட்சியை அ.தி.மு.க. கைப்பற்ற வேண்டும். எனவே கோவை, திருப்பூர் மற்றும் எடப்பாடியின் சொந்த மாவட்டமான சேலம் ஆகியவற்றில் அ.தி.மு.க. தீவிரமாக களம் காண்கிறது.

dfadf

வேலூரைப் பொறுத்தவரை முன்னாள் அமைச்சர் வீரமணி வெற்றி பெறுவதற்கு எதையும் செய்யவில்லை என்கிற குரல்கள் அ.தி.மு.க.வில் எதிரொலிக்கிறது.

மொத்தமுள்ள 60 வார்டுகளில் 10 வார்டுகளில் கூட அ.தி.மு.க. ஜெயிக்காது என்கிறார்கள் வேலூர் அ.தி.மு.க.வினர். பா.ஜ.க.வை பொறுத்தவரை கன்னியா குமரியில் நல்ல ரிசல்ட்டை எதிர்பார்க்கிறது.

அதுதவிர, நெல்லை, தென்காசி, ஓசூர் போன்ற பகுதிகளில் பா.ஜ.க. நிறைய வாக்குகள் வாங்கும் என அதன் தேர்தல் பொறுப்பாளரான பொன்.ராதாகிருஷ்ணன் பேசி வருகிறார்.

சென்னை நகரில் சேகர்பாபுவின் சொந்த தொகுதியான துறைமுகத்தில் வட இந்தியர்கள் நிரம்பிய 2 வார்டுகளை கைப்பற்றுவோம் என பா.ஜ.க.வினர் சூளுரைத்திருக்கிறார்கள்.

இப்படி உள்ளாட்சித் தேர்தல் களம் ஒருபக்கம் கொலைக்களமாகவும் இன்னொரு பக்கம் பணக்களமாகவும் மாறி இருக்கிறது.