"தமிழக சட்டமன்றத்தில் இயற்றப்பட்ட ‘நீட் விலக்கு மசோதாவை நிராகரித்த மத்திய அரசை கண்டிக்கவேண்டும்' என்ற எதிர்க்கட்சித்தலைவர் மு.க. ஸ்டாலினின் கோரிக்கையை துணை முதல்வர் ஓ.பி.எஸ். சட்டமன்றத்தில் நிராகரித்தது கல்வியாளர்கள், மருத்துவத் துறையினர் மத்தியில் மட்டுமல்ல தமிழக மாணவர்கள், பெற்றோர் களிடமும் பலத்த சர்ச்சையையும் கண்டனத்தையும் உருவாக்கியிருக்கிறது.

neetஏழை எளிய கிராமப்புற மாணவர்களின் டாக்டர் கனவை குழிதோண்டி புதைக்கும் நீட் தேர்வு என்பதால் ஏற்கனவே கடைப்பிடித்துவரும் +2 மதிப்பெண் அடிப்படையிலேயே மருத்துவப் படிப்பிற்கான மாணவர்களை சேர்த்துக்கொள் கிறோம் என்றும், ‘நீட் தேர்வு தமிழகத்திற்குத் தேவையில்லை’ என்றும் தமிழக சட்டசபையில் அனைத்து எம்.எல்.ஏ.க்களும் இணைந்து 2017 பிப்ரவரி மாதம் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அத்தீர்மானம் ஆளுநர் மூலம் இந்தியக் குடியரசுத்தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பப் பட்டது. ஆனால், நீண்ண்ண்ண்ட நாட்கள் ஆகியும் அதன் நிலை என்ன? என்றே தெரியாமல் கிணற்றில் போடப்பட்ட கருங்கல்போல் கிடந்ததால் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி. டி.கே. ரங்கராஜன் இதுகுறித்து, குடியரசுத் தலைவருக்கு கடிதம் அனுப்பினார். அப்போதுதான், "தமிழக அரசின் நீட் குறித்த சட்டமசோதாக்கள் எங்களுக்கு வந்துசேரவே இல்லை'’என்று பதில் கடிதம் அனுப்பியது குடியரசுத்தலைவர் அலுவலகம். அப்படியென்றால், அந்த மசோதாக்கள் எங்கே உள்ளன? என்று ஷாக்கான பொதுப்பள்ளி களுக்கான மாநில மேடை பொதுச்செயலாளர் கஜேந்திரபாபு, தமிழ்நாடு பள்ளி பெற்றோர் நலச் சங்கங்களின் கூட்டமைப்பு உள்ளிட்ட சமூக அமைப்புகள் 2017 ஆம் ஆண்டு உயர்நீதிமன்றத் தில் பொதுநல வழக்கு தொடுத்தன.

அந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், சுப்பிரமணியபிரசாத் ஆகியோர்முன் விசா ரணைக்கு தற்போதுதான் வந்தது. இதற்குப் பதில் அளித்த மத்திய அரசுத்தரப்போ, ""2017 செப்டம் பர் 18-ந் தேதி குடியரசுத்தலைவர் ரஒபஐ ஐஊகஉ -அதாவது நிறுத்திவைத்துள்ளார்'' என்று பதிலளித்தது. அப்போது, "என்ன காரணம்?' என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பியபோது "ரிஜக் டெட்'’ அதாவது "நிராகரித்துவிட்டார்' என்று மத்திய அரசுத்தரப்பு வழக்கறிஞர்கள் பதில் அளித்தார்கள். இதுகுறித்து, வரும் ஜூலை 16-ஆம் தேதிக்குள் அஃபிடவிட் தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Advertisment

இதுபற்றி, நம்மிடம் பேசும் முன்னாள் நீதியரசர் அரிபரந்தாமன், ""கல்வி என்பது பொதுப்பட்டியல் என்பதால் மத்திய அரசின் பட்டியல் போலவும் மாநில அரசே தேவையில்லை என்றும் ஆகிவிட்டது. மாநில அரசை கலைத்துவிட்டு நேரடியாக மத்திய அரசே தனது கண்ட்ரோலில் எடுத்துக்கொள்ள லாமே?''’என்று ஆதங்கப்பட்டவர், ""பொதுப் பட்டியலில் இருந்தால் மத்திய அரசோ மாநில அரசோ இரண்டுபேரும் சட்டம் இயற்றலாம். மத்திய அரசு ஏற்கனவே ஒரு சட்டம் இயற்றியிருந்தாலும் மாநில அரசு சட்டம் இயற்றமுடியும். அப்படி இயற்றும்போது மத்திய அரசு ஒப்புதல் கொடுக்கவேண்டும். காரணம், உங்கள் சட்டம் உங்களுக்கு! எங்கள் சட்டம் எங்களுக்கு! என்பதுதான் பொதுப்பட்டியல். கல்வியும் சுகாதாரமும் பொதுப்பட்டியலில் உள்ளன. மாநில அரசு ஒரு சட்டத்தை இயற்றும்போது அதிலுள்ள மாற்றுக் கருத்துகளை சுட்டிக்காட்டி விவாதிக்கமுடியுமே தவிர சட்டத்தையே நிராகரிக்க முடியாது.

நுழைவுத்தேர்வை வேறு முறையில் நாங்களே நடத்திக்கொள்கிறோம் என்கிறோம். இதை அவர்கள் நிராகரிக்க முடியாது. ஜல்லிக்கட்டு பொதுப்பட்டியலில் உள்ளது. உச்சநீதிமன்றம் ஜல்லிக்கட்டை மிருகவதை என்றாலும் போராட்டம் நடத்தியதும் அனுமதி கொடுத்ததுபோல் இதற்கும் அனுமதி கேட்கிறோம். இதை நிராகரித்த மத்திய அரசை கண்டிக்காமல் தமிழக அரசு neetexamசீராய்வு மனு போடுவதால் எப்போது தீர்ப்பு வரும் என்று சொல்லமுடியாது. தமிழகத்துக்கு எதிரான நீட் தேர்வைக் கொண்டுவரும் மத்திய அரசை கண்டிக்கிறீர்களா? வரவேற்கிறீர்களா? என்பதுதான் கேள்வி. ஜெயலலிதா இருந்திருந்தால் கண்டனத் தீர்மானம் போட்டிருப்பார்''’என்கிறார் ரௌத்திரமாக.

இளைஞர் இயக்கத்தின் தலைவர் டாக்டர் எழிலனோ, ""தமிழக அரசின் தீர்மானம் 27 மாதங்களாக என்ன ஆனது என்பதே இப்போதுதான் தெரியவருகிறது. நீட்டுக்கு எதிரான கொள்கை கொண்ட அ.தி.மு.க., நீட் தேர்விற்கு மாணவர்களை தேர்வுசெய்து கொண்டே நீட் விலக்கு என்று தேர்தல் அறிக்கையில் கொடுத்தபோதே அ.தி.மு.க.வின் சறுக்கல் தொடங்கிவிட்டது. அரசே, நீட் கோச்சிங் சென்டரை ஆரம்பித்தது நீட்டை ஏற்றுக்கொள்வதுபோல் ஆகிவிட்டது. உச்சநீதிமன்றத்தில் நிலுவையிலுள்ள நீட் எதிர்ப்பு வழக்கில் தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. நீட் நிராகரிப்பு முன்கூட்டியே தெரிந்திருந்தால்... ஏன் முதல்வரும் விஜயபாஸ்கரும் வாய் திறக்கவில்லை? மக்கள் மன்றத்தின் மூலம் ஏமாற்றினார்களா?''’என்று கேள்வி எழுப்புகிறார்.

Advertisment

""பாராளுமன்றத்துக்கு இணையானது கிராமசபை என்கிறார்கள். தமிழகம் முழுக்கவுள்ள அனைத்து கிராம சபைகளிலும் நீட்டுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பி வைக்க வேண்டும்''’ என் கிறார் எம்.சி.ஐ. முன்னாள் உறுப் பினர் டாக்டர் த.ப. கலாநிதி ஆலோசனையாக.

“""மத்திய அரசு மறைமுகமாக மாநில அரசுக்கு ஒத்துழைப்பு கொடுத்துள்ளது. அப்படியில்லை என்றால் மீண்டும் ஒரு தீர்மானத்தை சட்டமன்றத்தின்மூலம் அனுப்ப வேண்டும்''’என்று கோரிக்கை வைக்கிறார் நீட் தேர்வால் பாதிக்கப் பட்ட மாணவர்கள் -பெற்றோர்கள் கூட்டமைப்பு தலைவர் டாக்டர் பாலகிருஷ்ணன்.

அனிதா, பிரதீபா, ரித்துஸ்ரீ, வைஷ்யா, மோனிகா என தொடர்ந்து உயிர்ப்பலி வாங்கிக் கொண்டிருக்கும் மத்திய அரசின் கொலைகார நீட்டுக்கு கொஞ்சம் கொஞ்சமாக அடியாளாகிக்கொண் டிருக்கிறது இ.பி.எஸ்.-ஓ.பி.எஸ். அரசு.

-மனோசௌந்தர்