Advertisment

காமெடி நடிகர் மீது கொலைவெறித் தாக்குதல்! -மதுரை பரபரப்பு!

cc

"கலக்கப் போவது யாரு?', "அசத்தப் போவது யாரு?' தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் மூலம் பிரபலமாகி, திரையுலகிலும் "கருப்பசாமி குத்தகைதாரர்', "வெடிகுண்டு முருகேசன்' சீடன் போன்ற படங்களில் நடித்தவர் காமெடி பிரபலம் வெங்கடேஷ் ஆறுமுகம். ரைஸ் அட்வர்டைசிங் என்ற விளம்பர நிறுவனத்தையும் நடத்திவந்தார்.

Advertisment

கடந்த 15ம்தேதி, இரவு 8 மணி அளவில், மதுரையிலுள்ள பூர்வீக வீட்டிற்கு காரில் வந்தவரை, ஐயர் பங்களா பகுதியில் 10 பேர் கொண்ட கும்பல் காரை வழிமறித்து அவர்மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தி விட்டு தப்பியிருக்கிறது. அவரது கார் டிரைவர் மோகன் கொடுத்த தகவலை வைத்து அவரைக் கண்டுபிடித்த உறவினர்களும், நண்பர்களும் தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். தாக்குதல் குறித்து நடிகர் வெங்கடேஷின் தங்கையும், நண்பர் கிறிஸ்டோபரும் தல்லாகுளம் காவல் நிலையத்தில் புகாரளித்தனர்.

Advertisment

cc

வெங்கடேஷின் தங்கையிடம் விசாரித்தோம். "சார் எங்க அண்ணன் காமெடி நிகழ்ச்சிகள் மூலம் ரொம்ப கஷ்டப்பட்டு மேலே வந்தவர். தற்போது சினிமாவிலும் நடித்

"கலக்கப் போவது யாரு?', "அசத்தப் போவது யாரு?' தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் மூலம் பிரபலமாகி, திரையுலகிலும் "கருப்பசாமி குத்தகைதாரர்', "வெடிகுண்டு முருகேசன்' சீடன் போன்ற படங்களில் நடித்தவர் காமெடி பிரபலம் வெங்கடேஷ் ஆறுமுகம். ரைஸ் அட்வர்டைசிங் என்ற விளம்பர நிறுவனத்தையும் நடத்திவந்தார்.

Advertisment

கடந்த 15ம்தேதி, இரவு 8 மணி அளவில், மதுரையிலுள்ள பூர்வீக வீட்டிற்கு காரில் வந்தவரை, ஐயர் பங்களா பகுதியில் 10 பேர் கொண்ட கும்பல் காரை வழிமறித்து அவர்மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தி விட்டு தப்பியிருக்கிறது. அவரது கார் டிரைவர் மோகன் கொடுத்த தகவலை வைத்து அவரைக் கண்டுபிடித்த உறவினர்களும், நண்பர்களும் தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். தாக்குதல் குறித்து நடிகர் வெங்கடேஷின் தங்கையும், நண்பர் கிறிஸ்டோபரும் தல்லாகுளம் காவல் நிலையத்தில் புகாரளித்தனர்.

Advertisment

cc

வெங்கடேஷின் தங்கையிடம் விசாரித்தோம். "சார் எங்க அண்ணன் காமெடி நிகழ்ச்சிகள் மூலம் ரொம்ப கஷ்டப்பட்டு மேலே வந்தவர். தற்போது சினிமாவிலும் நடித்துவருகிறார். இயல்பாகவே காமெடியாக பேசக்கூடிய அண்ணன், அவ்வப்போது பா.ஜ.க.வுக்கு எதிரான பதிவுகளை சமூக வலைத்தளத்தில் நையாண்டியாக, அனைவரும் ரசிக்கும் படி எழுதுவார். அதுதொடர்பாக அவ்வப்போது சிலர் போன் செய்து மிரட்டுவதுண்டு. அப்பல்லாம், அண்ணனை கவனமா இருக்கும்படி சொல்வேன். அண்ணன் அதை சீரியஸாக எடுத்துக்காம அசால்ட்டா விட்டுடுச்சு. இப்ப இந்த சம்பவம் நடந்த பிறகுதான் அதிர்ச்சியாகிட்டோம்.

சம்பவம் நடந்தன்னைக்கு டிரைவர் மோகன் மூச்சிரைக்க ஓடி வந்து, "அக்கா என்னை அடித்துப் போட்டுட்டு, எங்க தலைவரையா கேலி செய்யுற? மோடிஜிக்கு எதிராவாடா போஸ்ட் போடுற?'ன்னு சொல்லிட் டே அவரை கடத்திட்டு போய்ட்டாங்க என்று சொன் னதும், நாங்கள் போலீசுக்கு தகவல் கொடுத்துவிட்டு அண்ணனை தேடத் தொடங் கினோம். அச்சம்பவத்தைப் பார்த்த பொதுமக்களின் உதவியோடு தேடியதில், ஒரு முட்புதரில் காருக்குள் ரத்தம் கொட்டியபடி, இரு கால் களின் எலும்புகளும் உடைந்த நிலையில் சுயநினைவின்றி அண்ணன் முனங்கியபடி கிடந்தார். அவரை மீட்டு தனியார் மருத்துவமனையில் அவசரச் சிகிச்சைப் பிரிவில் சேர்த்துள்ளோம். இரு கால்களும் முற்றிலுமாக சிதைந்துள்ளது'' என்று கதறியபடி கூறினார்.

தல்லாகுளம் காவல் நிலைய ஆய்வாளர் பால முருகனிடம் விசாரித்தோம். "கார் டிரைவர் மோகனிடம் சம்பவம் குறித்து விசாரித்துக் கொண்டு இருக்கிறோம். அவன் முன்னுக்குப்பின் முர ணாகக் கூறுகிறான். வெங்க டேஷின் மனைவியிடமும் விசாரிக்கிறோம். முழு விசாரணைக்குப் பிறகுதான் சொல்ல முடியும்" என்றவ ரிடம், "வெங்கடேஷை அடிக்கும்போது "பாரத் மாதா கி' சொன்னதாகவும், மோடி, அண்ணாமலையின் பெயரைச் சொன்னதாகவும் அப்பகுதியி லிருந்த பொதுமக்கள் தெரி வித்திருக்கிறார்களே?'' என்று விசாரிக்கவும், "இதில் தேவை யில்லாமல் பா.ஜ.க.வை இழுக்காதீர்கள்'' என்றவர், "இச்சம்பவத்தில் வேறு கார ணங்கள் ஏதும் இருக்குமோ வென்றும் விசாரிக்கிறோம்'' என்றார்.

இந்த விவகாரத்தை உதவி கமிஷனர் ஜெகநாதனும் விசாரிக்கத் தொடங்கிய பின்னர், தாக்குதல் நடத்திய கும்பலில், பா.ஜ.க.வை சேர்ந்த ராஜ்குமார், ஆனந்தராஜ், மலைச்சாமி, வைரமுத்து ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் தீர விசாரித்ததில், சொத்துக்கு ஆசைப் பட்ட வெங்கடேஷின் மனைவி பானுமதியும் இத்தாக்குதலுக்கு பின்புல மாக இருப்பது தெரியவந்தது. வெங்கடேஷின் சமூக வலைத்தளப் பதிவுகள், பா.ஜ.க.வினரை மட்டுமல்லாது, பா.ஜ.க. ஆதரவாளரான டிரை வர் மோகனையும் கடுப்பேற்றியுள்ளது. எனவே, தனக்கு நெருக்கமான பா.ஜ.க.வினரை வைத்தே வெங்கடேஷ் மீது தாக்குதல் நடத்தி ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்கத் திட்டமிட்டது தெரியவந்துள்ளது.

cc

தனியார் மருத்துவமனையில் சிகிச்சையிலிருக்கும் நடிகர் வெங்கடேஷை சந்தித்தோம்.

"சமூக ஊடகங்களிலும், பத்திரிகைகளிலும் என்னைப் பற்றி தவறான தகவல்களை வெளியிடுகிறார்கள். உண்மை அதுவல்ல. என் மனைவிக்கும் எனக்கும் விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கு. என்னுடைய சொத்துக்களைக் கேட்டு என மனைவி அடிக்கடி பிரச்சனை பண்ணிக்கொண்டே இருந்தார். போலீஸில் இருக்கும் தன் அக்கா மகன்கள் மூலம் மிரட்டல் விடுத்தார். விவாகரத்து கிடைத்து விட்டால் சொத்துக்கள் தனக்கு கிடைக்காது என்பதால், பா.ஜ.க.வினர் என்னை மிரட்டியதை தனக்குக் சாதகமாக மாற்றி, என் டிரைவர் மோகனும், மனைவியும் சேர்ந்து பணத்தைக் கொடுத்து, பா.ஜ.க.வினரை வைத்தே என்மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தியுள்ளனர். என் இரு கால்களையும் எதிர்திசையில் வளைத்து முறித்து, உருட்டுக் கட்டையால் அடித்தனர். வலி தாங்காமல் நான் சத்தமிட்டதால் அதைக் கேட்டு அப்பகுதியிலிருந்த மக்கள் வரவும் என்னை அப்படியே விட்டுவிட்டு ஓடிவிட்டனர். இல்லையென்றால் என்னை கொன்றிருப் பார்கள். நான் செத்தால் என் சொத்துக்கள் தானாகவே என் மனைவிக்கு போய்விடும் என்று திட்டமிட்டிருக்கிறார்கள். இதையெல்லாம் நினைக்கிறப்ப, நான் உயிர் பிழைத்ததே கடவுள் புண்ணியம். முதலில் 10 பேர் கொண்ட கும்பல் காரை வழிமறித்து நிற்கச் சொன்னபோது, நான் "நிற்க வேண்டாம், காரை வேகமாக ஓட்டு' என்று டிரைவரிடம் சொல்லியும் கேட்காமல், கதவைத் திறந்து டிரைவர் மோகன் ஓடிவிட்டான். அப்போதே இதில் ஏதோ சதி இருக்கிறது என்று நினைத்தேன். என் மனைவியே இப்படி செய்வாள் என்று நினைத்துக்கூட பார்க்கவில்லை'' என்று கண்ணீர் விட்டார். ஊரையே மகிழ்வித்த கலைஞனின் கண்ணீர் பெருந்துயர்!

nkn240623
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe