Advertisment

கொலையா,… தற்கொலையா... -மாணவனின் மரண சந்தேகம்!

ss

ரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகேயுள்ள பாகல்மேடு கிராமத்தில் பிளஸ் ஒன் படிக்கும் மாணவனுக்கும் மாணவிக்கும் ஏற்பட்ட காதல், மாணவனின் உயிரைப்பறித்துள்ளது.

பாகல்மேடு கிராமத்தைச் சேர்ந்த கல்யாணசுந்தரத்தின் மகன் கதிர்செல்வன். தந்தை கல்யாணசுந்தரம் இறந்துபோக அவனது தாயார் ராசாக்கிளிதான் மகனைப் படிக்கவைத்து வருகிறார்.

Advertisment

ss

இந்த நிலையில் கடந்த மாதம் 11-ஆம் தேதி காலை நண்பனைப் பார்த்துவிட்டு வருகிறேன் என்று கூறிச்சென்றவர், அன்று மாலைவரை வீடுவந்து சேரவில்லை. உடனே மகனது செல்போனைத் தொடர்பு கொண்டுள்ளார். "நண்பன் வீட்டில் தங்கியிருக்கிறேன், வந்துவிடுகிறேன்'' என்று கதிர்செல்வன் கூறியுள்ளார்.

மறுநாள் காலைவரை மகன் வராததால், அவனது செல்போனுக்கு மீண்டும் தொடர்ப

ரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகேயுள்ள பாகல்மேடு கிராமத்தில் பிளஸ் ஒன் படிக்கும் மாணவனுக்கும் மாணவிக்கும் ஏற்பட்ட காதல், மாணவனின் உயிரைப்பறித்துள்ளது.

பாகல்மேடு கிராமத்தைச் சேர்ந்த கல்யாணசுந்தரத்தின் மகன் கதிர்செல்வன். தந்தை கல்யாணசுந்தரம் இறந்துபோக அவனது தாயார் ராசாக்கிளிதான் மகனைப் படிக்கவைத்து வருகிறார்.

Advertisment

ss

இந்த நிலையில் கடந்த மாதம் 11-ஆம் தேதி காலை நண்பனைப் பார்த்துவிட்டு வருகிறேன் என்று கூறிச்சென்றவர், அன்று மாலைவரை வீடுவந்து சேரவில்லை. உடனே மகனது செல்போனைத் தொடர்பு கொண்டுள்ளார். "நண்பன் வீட்டில் தங்கியிருக்கிறேன், வந்துவிடுகிறேன்'' என்று கதிர்செல்வன் கூறியுள்ளார்.

மறுநாள் காலைவரை மகன் வராததால், அவனது செல்போனுக்கு மீண்டும் தொடர்பு கொண்டுள்ளார். அந்த செல்போன் ஸ்விட்ச்ஆப் ஆகியிருந்தது. அவரும் அவரது உறவினர்களும் அக்கம்பக்கத்து கிராமங் களுக்குச் சென்று மகனைத் தேடியிருக்கிறார்கள். அன்று மதியம் இவர் தன் மகனைத் தேடுவதையறிந்து அந்த ஊர்வழியாக வந்த ஒருவர், "உனது மகன் குருவாலப்பர்கோவில் என்ற ஊரில் ஒரு வீட்டின் பின்புறமுள்ள குப்பைமேட்டில் பிணமாகக் கிடக்கிறான்'' என்ற தகவலைத் தெரிவித்துள்ளார். இதைக் கேட்டு அலறித்துடித்த அந்த மாணவனின் தாயார் அங்கு ஓடினார். மீன்சுருட்டி போலீசாரும் அங்கு விசாரணை நடத்திக்கொண்டிருந்தனர்.

Advertisment

ஒரு வீட்டிலிருந்து 30 அடி தூரமுள்ள ஒரு குப்பைமேட்டில் உடல் கிடந்தது. போலீஸ் விசாரணையில் மாணவன் உடல்கிடந்த இடமருகில் பிளஸ் 1 படிக்கும் மாணவி ஒருவரின் வீடும் இருந்திருக்கிறது. அந்த மாணவியின் வீட்டில்தான் மாணவன் கதிர்ச்செல்வன் மின்விசிறியில் புடவையைக் கட்டி தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டதாகவும், இறந்துபோனது தெரிந்ததும் அந்த ssமாணவனின் உடலை அவிழ்த்து தரதரவென இழுத்துச்சென்று குப்பைமேட்டில் கொண்டு வீசிவிட்டு சென்றுவிட்ட தாகவும் போலீஸ் தெரிவித்துள்ளது.

போலீஸ் விசாரணையில், அந்த மாணவிக்கும் கதிர்செல்வனுக்குமிடையே தீவிரமாக காதல் இருந்துள்ளது. மாணவனுக்கும் மாணவிக்குமிடையில் அன்று கருத்து வேறுபாடு ஏற்பட, இதன் காரணமாக மாணவி வேறு அறையில் தங்கியிருக்கும்போது மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டதாகக் கூறியுள்ளனர்.

இதுகுறித்து மாணவனின் தாத்தா தேவன் நம்மிடம், "கதிர்செல்வன் அந்த பிளஸ்ஒன் மாணவியுடன் சில மாதங்களாக பழகியிருக்கிறான். இவர்களுக்கு இடையில் காதல் இருந்தது எங்களுக்குத் தெரியாது. அந்த மாணவியின் வீடு அப்பகுதியில் கொஞ்சம் ஒதுக் குப்புறமாக இருந்துள்ளது. அங்கு யாரும் அதிக நடமாட்டமில்லாத நேரத்தில் இருவரும் சேர்ந்து விதவிதமான செஃல்பிகளை எடுத்துள்ளனர். மாணவனை அந்த மாணவி, வீட்டுக்குள் வைத்து யாருக்கும் தெரியாமல் மறைத்துவிடுவார்.

மாணவி மட்டும் தனியறையில் படித்துக் கொண்டிருப்பதாக அவரது குடும்பத்தினர் கருதிக் கொண்டிருந்துள்ளனர். யாருக்கும் தெரியாமல் மாணவனை அடிக்கடி வீட்டுக்கு வரவழைத்து இருவரும் எல்லைமீறி நடந்துகொண்டுள்ளனர். இந்தநிலையில் சம்பவத்தன்று இரவு மாணவியின் வீட்டில் மாணவன் கதிர்செல்வன் தங்கியிருந்துள்ளார். மாணவியின் வீட்டினருக்கு விஷயம் தெரிந்து, மாணவியின் உறவினர்கள் மாணவனைத் தாக்கி கொலைசெய்து குப்பைமேட்டில் தூக்கி வீசிவிட்டனர்''” என குற்றம்சாட்டும் தேவன், “"மாணவனின் செல்போன் அவனது இடுப்பில் சொருகப்பட்டிருந்தது. நெற்றி, வயிற்றுப் பகுதியில் காயம் இருந்தது. ஆனால் மாணவன் தூக்கிட்டுதான் தற்கொலை செய்துகொண்டான் என்று கீழ்மட்ட காவல்துறை முதல் மேல்மட்ட காவல்துறை அதிகாரிகள் வரை உறுதியாகக் கூறுகிறார்கள்'' என்கிறார் தேவன்.

பிரேதப் பரிசோதனை அறிக்கைவந்ததும். மாணவன் தற்கொலையா? கொலையா? என்பது தெரியவரும் என்கிறது காவல்துறை.

இதுகுறித்து மேலும் விவரமறிய மீன்சுருட்டி காவல்நிலைய ஆய்வாளர் பிரேம்குமாரை நாம் தொடர்புகொண்டோம். அவர் நமது அழைப்பை எடுக்காததோடு வாட்ஸ்அப், எஸ்.எம்.எஸ். குறுஞ்செய்திகளுக்கும் பதிலளிக்கவில்லை.

-எஸ்.பி.எஸ்.

nkn041224
இதையும் படியுங்கள்
Subscribe