Advertisment

கொலை, பாலியல் அத்துமீறல்! -கொந்தளித்த புதுச்சேரி மக்கள்!

ss

பிப்ரவரி 14-ஆம் தேதி விடிந்தபோது உலகமே காதலர் தினத்தை கொண்டாட ஆயத்தமாகிக் கொண்டிருக்க, புதுச்சேரிக்கோ அதிர்ச்சிகரமான நாளாக விடிந்தது. புதுச்சேரி ரெயின்போ நகர் ஏழாவது குறுக்குத் தெருவில் பாழடைந்த வீடு ஒன்றில் இரண்டு வாலிபர்கள் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டிருப்பதாகவும், ஒரு வாலிபர் உயிர் இப்போவோ அப்போவோ என இருப்பதாகவும் போலீஸாருக்கு தகவல்சென்றதும் பெரிய கடை காவல்நிலைய போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து, உயிருக்குப் போராடிக்கொண்டு இருந்தவனை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பினர். அந்த இளைஞனும் இறந்துபோனான்.

Advertisment

pp

படுகொலையானவர்கள் யார் என போலீஸ் விசாரணை நடத்தியபோது, புதுச்சேரி உழவர்கரை பகுதியைச் சேர்ந்த 2018-ல் படுகொலை செய்யப்பட்ட பிரபல தாதா தெஸ்தானின் மகன் ரிஷித், ஜெ.ஜெ.நகரைச் சேர்ந்த ஆதி, திடீர் நகரைச் சேர்ந்த தேவா என்பது தெரியவந்தது. இதில் தேவா மீதும், ரிஷித் மீதும் வழக்குகள் உள்ளன. சம்பவ இடத்திலிருந்த சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வுசெய்தபோது,

பிப்ரவரி 14-ஆம் தேதி விடிந்தபோது உலகமே காதலர் தினத்தை கொண்டாட ஆயத்தமாகிக் கொண்டிருக்க, புதுச்சேரிக்கோ அதிர்ச்சிகரமான நாளாக விடிந்தது. புதுச்சேரி ரெயின்போ நகர் ஏழாவது குறுக்குத் தெருவில் பாழடைந்த வீடு ஒன்றில் இரண்டு வாலிபர்கள் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டிருப்பதாகவும், ஒரு வாலிபர் உயிர் இப்போவோ அப்போவோ என இருப்பதாகவும் போலீஸாருக்கு தகவல்சென்றதும் பெரிய கடை காவல்நிலைய போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து, உயிருக்குப் போராடிக்கொண்டு இருந்தவனை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பினர். அந்த இளைஞனும் இறந்துபோனான்.

Advertisment

pp

படுகொலையானவர்கள் யார் என போலீஸ் விசாரணை நடத்தியபோது, புதுச்சேரி உழவர்கரை பகுதியைச் சேர்ந்த 2018-ல் படுகொலை செய்யப்பட்ட பிரபல தாதா தெஸ்தானின் மகன் ரிஷித், ஜெ.ஜெ.நகரைச் சேர்ந்த ஆதி, திடீர் நகரைச் சேர்ந்த தேவா என்பது தெரியவந்தது. இதில் தேவா மீதும், ரிஷித் மீதும் வழக்குகள் உள்ளன. சம்பவ இடத்திலிருந்த சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வுசெய்தபோது, பிப்ரவரி 13-ஆம் தேதி இரவு 3 பைக்குகளில் 7 பேர் இம் மூவரை அழைத்து வருவது பதிவாகியிருந்தது. அழைத்து வருவது ரவுடி தகடு சத்யாவின் ஆட்கள் என தெரியவந்தது.

டி.வி. நகரை சேர்ந்த தகடு சத்யாவுக்கும், அரியாங்குப் பத்தை சேர்ந்த ரவுடி அஸ்வினுக்கும் இடையே யார் பாண்டிச் சேரியில் பெரிய ரவுடி என்கிற போட்டி நடந்துவருகிறது. இதில் 2023-ல் சத்யாவின் நண்பன் முகிலனை, கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் வைத்து அஸ்வின் டீம் கொலை செய்ததாகக் கூறப்படுகிறது. இதனால் இரு தரப்புக்கும் இடையே பகை அதிகமாகி ஒருவர் தலையை மற்றவர் எடுக்க நேரம் பார்த்துக்கொண்டு இருந்திருக்கின்ற னர். இந்நிலையில்தான் டி.வி. நகரில் ரவுடி அஸ்வினின் நெருங்கிய சகா தெஸ்தான் மகன் ரஷீத், ஆதி, கொல்லப்பட்ட முகிலனின் உறவினர் தேவா, மூவரும் வம்மாச்சீரம்பாளையம் பீச்சில் சுற்றிக்கொண்டு இருந் துள்ளனர். அதே கடற்கரையில் சத்யா தனது காதலி யோடு இருந்துள்ளான். மூவரைப் பார்த்துவிட்டு அலர்ட்டாகி, இங்க எதுக்கு வந்திங்க என எச்சரித்து விரட்டியும், அவர்கள் அங்கேயே சுற்றிக்கொண்டு இருந்துள்ளனர். தன்னை போட்டுத்தள்ள வந்துள்ளனர் என சந்தேகப்பட்டு மூவரையும் சத்யாவின் ஆட்கள் அழைத்துச்சென்று கொடூரமாகக் கொலைசெய்துவிட்டு தலைமறை வாகியுள்ளனர் என்கிறார்கள். கொலையாளி யார் எனத் தெரிந்ததில் போலீஸ் நிம்மதியான நிலையில் தமிழ்நாட்டில் செங்கல்பட்டில் சத்யா டீமை கைது செய்துள்ளதாக கூறப்படுகிறது.

Advertisment

புதுச்சேரி -கடலூர் தேசிய நெடுஞ்சாலை யில் தவளைக்குப்பத்தில் செயின்ட் ஜோசப் மேல்நிலைப்பள்ளி உள்ளது. அப்பள்ளியில் அதே பகுதியை சேர்ந்த 6 வயது சிறுமி ஒன்றாம் வகுப்பு படித்துவருகிறாள். கடந்தவாரம் அந்த சிறுமி பள்ளிக்குச் செல்லமாட்டேன் என அழுது அடம்பிடிக்க,... பெற்றோர்கள் மிரட்டி பள்ளிக்கு அனுப்பியுள்ளனர். அதற்கடுத்த நாட்களில் சிறுமி பெண் உறுப்பு வலிப்பதாக சொல்ல, பயந்துபோய் குழந்தையின் தாய் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். மருத்துவர்கள் சோதித்துவிட்டு பாலியல் வன்கொடுமை என்றதும் அதிர்ச்சியடைந் துள்ளனர்.

சிறுமியிடம் பக்குவமாகக் கேட்டபோது, பள்ளியில் பணியாற்றும் அறிவியல் ஆசிரியர் மணிகண்டன் குறித்து கூறியுள்ளது. பெற்றோர்கள், குடும்பத்தினர் சிலருடன் பள்ளிக்குச் சென்று கேட்டபோது, நிர்வாகத்தினர் அதெல்லாம் இல்லை என அலட்சியமாக பதில் தந்துள்ளனர். சி.சி.டி.வி. கேமரா பதிவுகளைக் காட்டுங்கள் எனக் கேட்டபோது மறுத்துள்ளனர். இது யார் பள்ளி தெரியுமா என அதிகாரமாக சவுண்ட் விட்டுள்ள னர். இதில் கடுப்பான பெற்றோர்கள் பள்ளி அலு வலகத்தை அடித்து நொறுக்கினர். பள்ளிக்குள் பொதுமக்களிடம் மணிகண்டன் சிக்க செருப் பாலும், கைகளாலும் அடித்துத் துவைத்தனர்.

ss

அங்கு வந்த போலீஸ் அவனைக் காப்பாற்றி அழைத்துச் சென்றதோடு, பொதுமக்களை மிரட்டி, அடித்தது. இதில் கோபமான மக்கள் சாலை மறியலில் அமர்ந்தனர். மாலை 5 மணிக்கு தொடங்கிய போராட்டம் இரவு 11 மணிவரை நடைபெற்றது. இதனால் புதுவையே ஸ்தம்பித்தது. அங்கு பா.ஜ.க.வைச் சேர்ந்த சட்டப்பேரவை சபாநாயகர் செல்வம் வந்து மக்களிடம் பேச... "போய்யா'' என மக்கள் கூச்சல்போட்டு துரத்தினர், "முதலமைச்சர் இங்கு வரவேண்டும்' என மக்கள் கோஷங்கள் எழுப்பினர். மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன், டி.ஐ.ஜி. சத்யசந்திரா நேரில்வந்து மக்களிடம் சமாதானம் பேசினர். அவனை போக்ஸோ வழக்கில் கைது செய்வதாகவும், பள்ளிக்கு சீல் வைப்பதாகவும் கூறி அதன்படி செய்தனர். இந்த சம்பவத்துக்கு நல்லவநாடு, மூர்த்திக்குப்பம், புதுக்குப்பம் பகுதி மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.

"இதற்கு முன்பு பணியாற்றிய பள்ளியிலும் இதேபோல் செய்து துரத்தப்பட்டவன் இந்த மணிகண்டன் எனக் கூறப்படுகிறது. அந்த பள்ளி உரிமையாளர் ராமு, புதுச்சேரி பா.ஜ.க. மாநில விவசாய அணி துணைத்தலைவராக உள்ளார். சபாநாயகர் செல்வத்துக்கு நெருக்கமானவராம். இதனால் அவரைக் காப்பாற்ற பா.ஜ.க. அரசு முயல்கிறது' என்பதே பொதுமக்கள் குற்றச்சாட்டு.

புதுச்சேரி. அரசியல் கட்சிகள் அனைத்தும் என்.ஆர்.சி. -பா.ஜ.க. அரசுக்கு எதிராக அணி திரண்டு பதவி விலகக்கோரி போராட்டங்களை அறிவித்துள்ளனர்.

nkn190225
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe