சில வருடங்களுக்கு முன்பு நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படை யாகக் கொண்டு, நடிகர் கார்த்தி நடித்து வெளியான 'தீரன் அதிகாரம் 1' திரைப்படம் வெற்றிகரமாக ஓடியது. அந்தப் படத்தில் வட நாட்டுக் கொள்ளையர்களான பவாரியா கொள்ளையர்கள் லாரி மூலம் வந்து நோட்டமிட்டு இரவு நேரங்களில் வீடு புகுந்து, வீட்டில் உள்ள நபர்களை கொடூரமாகத் தாக்கி கொலை செய்து, கொள்ளையடித்துச் செல்வதும், அவர்களை ராஜஸ்தானுக்கே சென்று கைது செய்வதையும் விறுவிறுப்பாகக் காட்சிப்படுத்தி யிருப்பார்கள். பவாரியா கொள்ளையர்களின் கொலை, கொள்ளைகளைவிடக் கொடூரமான கொலை, கொள்ளை, வன்புணர்வுச் சம்பவங்களில் ஈடுபட்டுவரும் தண்டுபாளையம் கேங் பற்றிய பதைபதைக்கும் ரிப்போர்ட் இதோ...
கடந்த 2016 ஜூன் 20ஆம் தேதி, கிருஷ்ணகிரி மாவட்டம், கர்நாடக எல்லையை ஒட்டிய ஓசூர் மாநகராட்சிக்கு உட்பட்ட ஓசூர்- தளி சாலையிலுள்ள இரண்டாவது கிராஸ், ஆறாவது மெயின் ரோட்டில் அமைந்த வீட்டில் குடியிருந்த தீபா என்ற 30 வயது மதிக்கத்தக்க பெண், பட்டப்பகலில் கொடூரமாக கழுத் தறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். தீபா, புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தவர். மதுரையை பூர்வீகமாகக் கொண்ட பாலாஜி என்பவரை திருமணம் செய்தார். பாலாஜி, ஓசூரில் இயங்கிவரும் பிரபல தனியார் கம்பெனியில் வேலை செய்து வருவதால், ஓசூரிலேயே சொந்த வீடு கட்டி, தாயார் வரலட்சுமி, மனைவி தீபா மற்றும் இரு பெண் குழந்தைகளுடன் சந்தோஷமாக வாழ்ந்து வந்தார். இந்நிலையில்தான், கடந்த 2016ஆம் ஆண்டில் தீபா கொடூரமாகக் கொல்லப்பட்ட சம்பவம் நடந்தது.
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்திகிரி காவல் நிலையத்திற்கு தகவல் போக, விரைந்து வந்த போலீசார் விசாரணையைத் துவக்கினர். சம்பவத்தன்று வழக்கம்போல் தீபா காலையில் இரு குழந்தைகளையும் பள்ளி வாகனத்தில் ஏற்றிவிட்டபின், வீட்டிற்கு வந்து துணி துவைத்துக் கொண்டிருந்திருக்கிறார். மாமியார் வரலட்சுமி துணி தைப்பதற்காக வெளியே சென்று விட்டு சுமார் பகல் 12:30 மணி அளவில் வீட்டுக்கு திரும்பியபோது, கதவுகள் திறந்தபடியிருக்க, உள்ளே சென்று பார்த்தபோது, ரத்த வெள்ளத்தில் தீபா கொடூரமாகக் கழுத்தறுக்கப்பட்டு பிணமாக கிடந
சில வருடங்களுக்கு முன்பு நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படை யாகக் கொண்டு, நடிகர் கார்த்தி நடித்து வெளியான 'தீரன் அதிகாரம் 1' திரைப்படம் வெற்றிகரமாக ஓடியது. அந்தப் படத்தில் வட நாட்டுக் கொள்ளையர்களான பவாரியா கொள்ளையர்கள் லாரி மூலம் வந்து நோட்டமிட்டு இரவு நேரங்களில் வீடு புகுந்து, வீட்டில் உள்ள நபர்களை கொடூரமாகத் தாக்கி கொலை செய்து, கொள்ளையடித்துச் செல்வதும், அவர்களை ராஜஸ்தானுக்கே சென்று கைது செய்வதையும் விறுவிறுப்பாகக் காட்சிப்படுத்தி யிருப்பார்கள். பவாரியா கொள்ளையர்களின் கொலை, கொள்ளைகளைவிடக் கொடூரமான கொலை, கொள்ளை, வன்புணர்வுச் சம்பவங்களில் ஈடுபட்டுவரும் தண்டுபாளையம் கேங் பற்றிய பதைபதைக்கும் ரிப்போர்ட் இதோ...
கடந்த 2016 ஜூன் 20ஆம் தேதி, கிருஷ்ணகிரி மாவட்டம், கர்நாடக எல்லையை ஒட்டிய ஓசூர் மாநகராட்சிக்கு உட்பட்ட ஓசூர்- தளி சாலையிலுள்ள இரண்டாவது கிராஸ், ஆறாவது மெயின் ரோட்டில் அமைந்த வீட்டில் குடியிருந்த தீபா என்ற 30 வயது மதிக்கத்தக்க பெண், பட்டப்பகலில் கொடூரமாக கழுத் தறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். தீபா, புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தவர். மதுரையை பூர்வீகமாகக் கொண்ட பாலாஜி என்பவரை திருமணம் செய்தார். பாலாஜி, ஓசூரில் இயங்கிவரும் பிரபல தனியார் கம்பெனியில் வேலை செய்து வருவதால், ஓசூரிலேயே சொந்த வீடு கட்டி, தாயார் வரலட்சுமி, மனைவி தீபா மற்றும் இரு பெண் குழந்தைகளுடன் சந்தோஷமாக வாழ்ந்து வந்தார். இந்நிலையில்தான், கடந்த 2016ஆம் ஆண்டில் தீபா கொடூரமாகக் கொல்லப்பட்ட சம்பவம் நடந்தது.
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்திகிரி காவல் நிலையத்திற்கு தகவல் போக, விரைந்து வந்த போலீசார் விசாரணையைத் துவக்கினர். சம்பவத்தன்று வழக்கம்போல் தீபா காலையில் இரு குழந்தைகளையும் பள்ளி வாகனத்தில் ஏற்றிவிட்டபின், வீட்டிற்கு வந்து துணி துவைத்துக் கொண்டிருந்திருக்கிறார். மாமியார் வரலட்சுமி துணி தைப்பதற்காக வெளியே சென்று விட்டு சுமார் பகல் 12:30 மணி அளவில் வீட்டுக்கு திரும்பியபோது, கதவுகள் திறந்தபடியிருக்க, உள்ளே சென்று பார்த்தபோது, ரத்த வெள்ளத்தில் தீபா கொடூரமாகக் கழுத்தறுக்கப்பட்டு பிணமாக கிடந்ததைப் பார்த்து அதிர்ந்திருக்கிறார். வழக்கை விசாரித்த மத்திகிரி போலீசார், குற்றவாளியைக் கண்டுபிடிக்க மிகவும் சிரமப்பட்டனர். கொலை செய்யப்பட்ட தீபாவின் வீட்டில் எந்தப் பொருளும் கொள்ளையடிக்கப்படவில்லை, தீபா அணிந்திருந்த நகைகளும் அப்படியே கிடந்தன. ஆக, எதற்காக இந்த கொலை அரங்கேறியது என்று புரியவில்லை. துப்புதுலக்க தர்மபுரியிலிருந்து வரவழைக் கப்பட்ட மோப்ப நாய் ஜான்சி, சற்று தூரம் சென்று மெயின் ரோட்டிலேயே நின்று விட்டது. எந்தத் தடயமும் போலீசாருக்கு சிக்கவில்லை. தீபாவின் செல்போனை சோதனை செய்தபோது, அவர் உறவினர் ஒருவரிடம் நீண்ட நேரத்துக்கு தொடர்ந்து பேசி வந்தது தெரியவந்ததால், மனைவி மீதான சந்தேகத்தால் கணவர் பாலாஜியே கொலை செய்திருக்கலாமோ என்ற கோணத்திலும் விசாரித்தனர். பாலாஜி இக்கொலையைச் செய்யவில்லையெனக் கூறியும், அவர்தான் குற்றவாளி என்பதாகத் தீர்மானித்தபடியே அவரை போலீஸ் பாணியில் அடித்து உதைத்து ஒப்புக் கொள்ள வைத்தனர்.
இந்நிலையில் அப்போதைய சேலம் சரக டி.ஐ.ஜி. பொன்.நாகராஜ் இவ்வழக்கை ஆய்வுசெய்ததில், பாலாஜி குற்றவாளியாக இருக்கமாட்டாரெனத் தீர்மானித்து, உண்மையான குற்றவாளியைக் கண்டறிய ஸ்பெஷல் டீமை உருவாக்கினார். அப்போ தைய ஏ.டி.எஸ்.பி. பழனிகுமார், ஆய்வாளர் ரத்தினகுமார் மேலும் இரு போலீசார் கொண்ட ஸ்பெஷல் டீம், பாலாஜியிடம் மீண்டும் விசாரணையைத் துவக்கினார்கள். பாலாஜி, ஸ்பெஷல் டீமிடம், "சார் என் மனைவி நடத்தை சரியில்லையென சந்தேகப்பட்டு நான்தான் கொலை செய்தேனென என்னை ஜெயிலில் போட்டாலும், தண்டனைக் காலம் முடிந்து வெளியே வந்ததும், என் மனைவியைக் கொன்றவர்களைப் பிடிக்கும்படி தான் நான் புகாரளிப்பேன்" என்றதால், பாலாஜியின் கருத்தில் இருக்கும் உண்மை புரிபட்டது. சம்பவம் நடந்தபோது பாலாஜி அலுவலகக் காரில் பயணித்தபடி இருந்ததை, ஜி.பி.எஸ். தொழில் நுட்பம் மற்றும் சக தொழி லாளர்களின் சாட்சியத்தால் உறுதிசெய்தனர்.
கொலை நடந்து 20 நாட் களாகியும் விசாரணையில் முன்னேற்றமில்லாத நிலையில், மத்திகிரி காவல் நிலையத்திலிருந்த ஒரு போலீஸ்காரர், கடந்த மாதத்தில் இதே போலீஸ் லிமிட் டுக்குள் சாந்தா என்ற பெண்ணும் இதேபோல் கழுத்தறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதாக வும், அவரது 5 சவரன் நகை கொள்ளை போனதாகவும் தகவல் கூறினார், இந்த இரு கொலை வழக்கிலும், இரு பெண்களும் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் கொடூரமாக கொலை செய்யப் பட்டிருந்தனர். ஆனால் சாந்தா கொலையில் மட்டும்தான் 5 பவுன் நகை கொள்ளையடிக்கப் பட்டிருந்தது. இதில் கூடுதல் ஒற்றுமையாக, இரண்டு கொலை களும் பகலில் நடந்தது. இரண்டு கொலை நடந்த இடத்திலும் ஒரு சொம்பில் தண்ணீர் இருந்தது. கழுத்து ஆழமாக அறுக்கப்பட் டிருந்தது. இந்த ஒற்றுமைகளின் மூலம் இரண்டையும் செய்தது ஒரே கேங் என்று உறுதியானது. இந்நிலையில், கர்நாடக மாநிலம் விஜயநகர காவல் எல்லைக்குட் பட்ட பகுதியிலும் இதேபோன்ற கழுத்தறுக்கப்பட்ட கொலைகள் நடந்திருப்பதும், நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருந்ததும், அதேபோல சொம்பில் தண்ணீர் இருந்ததும் தமிழக ஸ்பெஷல் டீமுக்கு தெரியவர, கர்நாடகா விரைந்தனர்.
ஏ.டி.எஸ்.பி. பழனிக்குமார் தலைமையிலான டீம், விஜயநகர காவல் நிலைய ஆய்வாளரிடம் பேசியபோது, இங்கு நடந்தது ஒன்று இரண்டு கேஸ் தான். ஆனால் கர்நாடகா முழுக்க இதேபோல் நூற்றுக்கணக்கான கொலைகள் அரங்கேறி இருக்கின்றன என அறிந்து அதிர்ச்சியானார்கள். இதுதொடர்பாக கர்நாடக குற்ற ஆவணக் காப்பகத் திலுள்ள வழக்கு விவரங்களைப் பார்க்கும்படி கூறினார்.
இந்த நிலையில் ஸ்பெஷல் டீம், அப்போதைய சேலம் சரக டி.ஐ.ஜி. யாக இருந்த பொன் நாகராஜிடம், இந்த சம்பவங்களைப் பற்றியும், அதன் கொடூரத்தைப் பற்றியும் விவரித்தது. இந்த கொலை வழக்கின் முக்கியத்துவம் கருதி, ஸ்பெஷல் டீமுக்கு வேண்டிய அனைத்து ஏற்பாடுகளையும் செய்து கொடுத் தார். அதையடுத்து கர்நாடக மாநில குற்ற ஆவணக் காப்பகத்திற்கு சென்ற ஸ்பெஷல் டீம், இந்த கொலை வழக்கு தொடர்பாக அங்கிருந்த சூப்பிரண்டு ஒருவரிடம் விசாரித்தார் கள். அதற்கு அவரோ, "ஓ நீங்கதான் ஸ்காட்லாந்துயார்டுக்கு நிகரான தமிழக போலீசோ?'' என்று கிண்டலாகக் கேட்டிருக்கிறார். அவரின் நக்கலைப் பொருட்படுத்தாத தமிழக ஸ்பெஷல் டீமோ, "சார், எங்க மாநிலத்தில் நடந்த இரண்டு முக்கிய கொலைச் சம்பவம் தொடர்பாக உங்ககிட்ட சில ஆவணங்களை வாங்கத்தான் வந்திருக்கோம். ஒரே பாணியில் நடந்த கொலைகள் பற்றிய விவரங்கள் எங்களுக்கு வேண்டும்'' எனக் கூற, அங்குள்ள போலீசாரோ, "இந்தாங்க மூணு கன்னட படம் இருக்கு. இந்த படத்தை ரூம் போட்டு பார்த்துட்டு மறுநாள் வாங்க'' எனக்கூறி மூன்று கன்னடப் பட சி.டி.க்களை தமிழக ஸ்பெ ஷல் டீமிடம் கொடுத்தார் கள்! தமிழக ஸ்பெஷல் டீமோ "சார், இந்த வழக்கு தொடர்பான ஆவணங் களைக்கேட்டால் பட சி.டி.யை கொடுக்கிறீர்களே!'' எனக்கூற, கர்நாடக போலீ சாரோ, "நீங்க கேட்ட தகவலும், அதைவிட அதிகத் தகவலும் இதுல இருக்கு! முதலில் இதைப் பார்த் துடுங்க'' எனக் கூறியதும் குழம்பிப்போன ஸ்பெஷல் டீம், காவிரிப் பிரச்சனையை மனசுல வச்சுக்கிட்டு நம்மை அலைக்கழிக்கிறார்களோ என்ற எண்ணத்தோடு, ஒரு லாட்ஜில் வைத்து அந்த பட சி.டி.யை போட்டுப் பார்க்க... அப்படியே அதிர்ச்சியில் உறைந்தனர்!
அந்த கன்னடப் படத்தின் பெயர் "தண்டுபாளையா!' அந்தப் படத்தில் வரும் கொலைச் சம்பவங்கள், தமிழகத்தில் நடந்த இரு கொலைகளுக்கு ஒத்துப் போகும்படி இருந்தது. ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ஒரு கொள்ளை கும்பல் ரயிலில் வருவதும், ரயில்வே ட்ராக் அருகே அவர்கள் கூடாரம் அமைத்து, அங்கிருந்து பொம்மைகள் விற்பதைப்போல, தனியாக உள்ள வீட்டை நோட்ட மிடுவதும், அந்தக் கூட்டத்தைச் சார்ந்த பெண்கள் மற்றும் குழந்தைகளை வைத்து வேவு பார்க்க வைப்பதும், பிறகு சரி யான நேரம் பார்த்து, அவர்கள் தேர்வு செய்யும் வீட்டில், வய தானவர்களோ அல்லது தனியா கப் பெண்களோ இருப்பதை அறிந்துகொண்டு, அதற்கேற்றாற் போல் பகல் வேளையில் திட்ட மிட்டு, அக்கூட்டத்தைச் சேர்ந்த பெண்ணோ, குழந்தையோ பசிக்காக தண்ணீரோ உணவோ கேட்க, அதை எடுத்துவர உள்ளே செல் லும்போது... மறைந்திருந்த கூட்டத்தினர், அவர் திரும்ப வரும்போது இரும்பு ராடால் தலை யின் பின்புறம் தாக்கும். தாக்கப் பட்டவர் பெண்ணென்றால், துடிதுடிக்க ரத்த வெள்ளத்தி லேயே வன்புணர்வு செய்வார்கள். அதேநேரம் மற்றவர்கள் வீட்டி லுள்ள பொருட்களை கொள்ளை யடிப்பார்கள். இறுதியாக அந் நபரை கழுத்தில் கூரிய கத்தியால் அறுத்து கொடூரமாகக் கொல் வார்கள். கழுத்தை அறுக்கும் போது எழுப்பும் சத்தத்தை சுற்றியமர்ந்து ரசிப்பார்கள். அந்த படத்தைக் கண்டு ஸ்பெஷல் டீமினர் அதிர்ந்துபோனார்கள்.
மறுநாள் மீண்டும் பெங்க ளூரில் உள்ள குற்ற ஆவணக் காப்பகம் சென்றபோது, இந்த 'தண்டுபாளையா கேங்' வழக்கை முதன்முதலில் கண்டுபிடித்த கர்நாடக முன்னாள் காவல்துறை டி.எஸ்.பி. ஜலபதியை தமிழக ஸ்பெஷல் டீம் சந்தித்தது. அப்போது ஸ்பெஷல் டீமிடம், நினைத்துக்கூடப் பார்க்க முடியாத கொடூர கொலைகார கேங் பற்றி எடுத்துக்கூறினார் டி.எஸ்.பி. ஜலபதி.
"நீங்கள் நினைப்பது போல் இது சாதாரண கேங் கிடையாது. ஒவ்வொருத்தரும் கொடூரமான கொலைகாரர்கள். கொலையை ரசித்து ரசித்து செய்யும் சைக்கோக்கள். இவர்கள், கடந்த நான்கு தலைமுறைகளாகவே இதில் ஈடுபட்டுவருகிறார்கள். இவர்களின் பூர்வீகம் ஆந்திர மாநிலம் அனந்தபுரி மாவட்டம். தெலுங்கு பேசும் போயர் வகுப் பைச் சேர்ந்தவர்கள். அங்கிருந்து இடம்பெயர்ந்து தமிழக, கர்நா டக, ஆந்திர மாநில எல்லையை ஒட்டியுள்ள தண்டுபாளையம் என்ற இடத்திலிருந்தபடி குற்றச் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக 1995க்கு மேல் பெங்க ளூர் மற்றும் அதன் சுற்று வட்டா ரப் பகுதிகளில் அதிகமான கட்டு மானப் பணிகள் நடந்துவந்தன. அதையொட்டி, கட்டிட வேலைக் காக வருவது போல வந்து தங்கி, நோட்டமிட்டு அப்பகுதிகளில் பல கொலைகளை அரங்கேற்றி, கொள்ளையடித்துள்ளனர்'' என்ற வர், மேலும் "நான் காவல் ஆய்வாளராக இருந்தபோது ஒருநாள், ஒரு நகைக்கடையிலிருந்து அழைப்பு வந்தது, ஒருத் தன் தங்க வேல் மற்றும் சின்ன தாக சாமி சிலையை விற்க வந்திருப்பதாகவும் சந்தேகத்தில் அழைப்பதாகவும் கூறினார் கடைக்காரர். உடனே போலீஸ் டீமை அனுப்பி அவனைப் பிடித் தோம். அவனை விசாரித்தபோது, அவன் பெயர் கோத்தி திம்மா என்பதும், கர்நாடக மாநிலம் தண்டுபாளையாவைச் சேர்ந்த கொள்ளைக் கூட்டத்தில் ஒருவன் என்பதும், ஒரு கோயிலில் சிலையையும், முருக வேலையும் கொள்ளையடித்ததும் தெரிய வந்தது. இந்த கொள்ளைச் சம்ப வம் பற்றி விசாரித்தபோதுதான், அங்கிருந்த இரு காவலர்களை அடித்துக் கொன்று, தொண்டை யை அறுத்து கொடூரமாகக் கொலை செய்துவிட்டு, சிலையைக் கொள்ளையடித்தது தெரியவந்து பகீர் என்றது!
விசாரணையின் அடுத்த கட்டம் தொடரும்...