தாசின் பாவாஜி மடத்தின் மடாதிபதி மகந்த் பசந்த் தாஸ் சாவில் மர்மம் இருப்பதாக எழுந்துள்ள புகார், காஞ்சிபுரம் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

mm

உ.பி. அலகாபாத்தை தலைமையிடமாகக் கொண்ட அந்த மடத்தின் வழக்கறிஞர் அரவிந்த்குமார் இதுகுறித்து நம்மிடம் பேசியபோது, கடந்த 2019 அக்டோபர் 1ஆம் தேதி மடாதிபதி மகந்த் பசந்த்தாஸ் இயற்கை மரணம் அடைந்ததாக கூறப்படுகிறது. அப்படியே அது இயற்கை மரணமாக இருந் தாலும் சம்மந்தப்பட்ட மடத்தின் தலைமையிடமான அலகாபாத்துக்கு தகவல் தெரிவித்து அவர்கள் வழக்கப்படி அடக்கம் செய்யாமல், தாமதமாக தலைமைக்கு தகவல் அனுப்பியுள்ளனர். அப்படியிருந்தும் தலைமை அனுப்பிய குண்டூர் மடாதிபதி அனுமன்தாசை உள்ளே அனுமதிக்காமல், ஒரு கும்பல் அவரை தாக்கி விரட்டி யடித்துவிட்டு, அடுத்தநாள் காலையில் மடத்தின் வழக்கத்திற்கு மாறாக, மடத்தில் புதைத்துவிட்டனர்.

mm

Advertisment

இந்த மடத்தைப் பொறுத்தவரையிலும் மடாதிபதி இறந்துவிட்டால் அவரை எரித்து சாம்பலடைக்கப்பட்ட குடுவையை பூஜை செய்து அதை புண்ணியநீரில் கரைப்பதுதான் வழக்கம். இதை மீறி அவரை மடத்தில், அதிலும் மடத்திற்கு சம்மந்தமில்லாதவர்களே அடக்கம் செய்ததன் நோக்கம் என்ன?’’என்று கேள்வி எழுப்பு கிறார்.

அவர் மேலும், ""கணேஷ் தாஸ் மற்றும் ரவிக்குமார் ஆகியோர் போலியான உயில் தயாரித்ததும் மேலிடத்திற்கு தெரியவந்தது. குண்டூர் மடாதிபதி தாக்கப்பட்ட விவகாரமும் தலைமைக்கு தெரியவர, உடனே புதிய மடாதிபதியாக தேவிதாஸை கடந்த 24.10.2019 அன்று தலைமை நியமனம் செய்தது. அவர் மடத்திற்குள் நுழைந்த போது அதே கும்பலை சேர்ந்த ஆறுமுகம், சத்தியநாராயணன், சுடர்மணி, ரவிக்குமார் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்டோர் அவரை தாக்கினார்கள். இதையடுத்து சிவகாஞ்சி புரம் காவல் ஆய்வாளர் ரஜினிகாந்திடம் புகார் அளித்தோம். ஆனால் பலன் இல்லை.

mm

Advertisment

போலி உயில் விவகாரத்தில், எப்.ஐ.ஆர்போடுவதற்கு முன், போலியாக நியமனம் செய்யப்பட்ட கணேஷ்தாஸ், இந்த விவகாரத்திற்கு நான் காரணமில்லை. ஆறுமுகம் மற்றும் ரவிக்குமார் கும்பல்தான்’ என்று எழுதி கொடுத்துவிட்டு ஓட்டம்பிடித்தார். இதன்பின்னரே தேவிதாஸ் மடாதிபதியானார்.

இந்நிலையில், கடந்த 22.5.2020 ஆறுமுகம் என்பவர் ரவுடி கும்பலுடன் வந்து மீண்டும் தகராறு செய்தார். மடத்தின் காவலரான குருநாதனை தாக்கினர். இதனால் மீண்டும் புகார் கொடுத்து ஆறுமுகம், பச்சையப்பன்,பாண்டியன் ஆகியோரை கைது செய்தனர். மேலும் சங்கர், ரோஷன் ஆகியோர் தப்பியோடி முன்ஜாமீன் வாங்கிவிட்டனர்.

இத்தனை பிரச்சனைகளுக்கும் முக்கிய காரணம், மடத்துக்கு சொந்தமான பல கோடி ரூபாய் சொத்துக்களை கைப்பற்ற நடக்கும் முயற்சிதான். அதேபோல, மடாதிபதி மகந்த் பசந்த் தாஸ், தான் இறப்பதற்கு முன்னதாக, தலைமைக்கு போன்செய்து, இங்கு பல குழப்பங்கள் நிலவுவதாகவும், உதவிக்கு ஆட்கள் வேண்டும் என்றும் பேசியுள்ளார். அந்த குழப்ப நிலையில் மடாதிபதி மரணம் அடைந்ததால் மர்மம் உள்ளது என்பது தெளிவாகிறது''’ என்கிறார்.

போலி உயில் விவகாரத்தை வைத்துப் பார்க்கும் போதும் இது இயற்கை மரணமாக இருக்க வாய்பில்லை என்பது உறுதியாகிறது. மேலும், மடத்தை கைப்பற்ற ஆறுமுகம், ரவிக்குமார் கும்பல் தலையிடுவதாலும் மடாதிபதி மரணத்தில் பலத்த சந்தேகம் எழுகிறது. அதனால், மறைந்த மடாதிபதியின் உடலை உடல் கூறு ஆய்வு நடத்தினால் உண்மை தெரியவரும் என்பதால், மாவட்ட எஸ்.பி, மாவட்ட ஆட்சியர், ஆர்.டி. ஓ.வுக்கும் அதுகுறித்து கடிதம் அனுப்பி இருக்கிறோம்’என்கிறார்.

இதுகுறித்து சிவகாஞ்சிபுரம் காவல் ஆய்வாளர் நடராஜனிடம் நாம் கேட்டபோது, ""மடாதிபதி மறைந்தபோது ரஜினிகாந்த் என்ற ஆய்வாளர் இருந்தார். நான் வந்தபின் இந்த மடத்தில் உரிமை கோரி தகராறில் ஈடுபட்ட ஆறுமுகம் உள்ளிட்ட ஐந்து பேர் மீது வழக்கு பதிவு செய்து மூன்று பேரை கைது செய்தோம். மடாதிபதி சாவில் மர்மம் உள்ளதாக சந்தேகித்தால் முறைப்படி கொடுக்கும் புகார் மீது நடவடிக்கை மேற்கொள்வோம்'' என்கிறார்.

-அரவிந்த்