நெல்லை மாஜி மேயர் உமாமகேஸ்வரி, அவரது கணவர் முருகசங்கரன், வேலைக்காரப் பெண் மாரியம்மாள் ஆகிய மூவரும் கடந்த ஜூலை 23-ஆம் தேதியன்று படுகொலை செய்யப்பட்டனர்.

இந்தக் கொலையில் நெல்லை மாவட்ட தி.மு.க. மகளிரணி பொறுப்பில் இருந்த சீனியம்மாளுக்கு தொடர்ப்பு இருப்பதாக அப்போதே போலீ சுக்கு சந்தேகம் இருந்தாலும், சீனியம்மாள் கைது செய்யப்படவில்லை. ஆனால் சீனியம்மாளின் மகன் கார்த்திக்கை கைது செய்தார் நெல்லை மாநகர டி.சி.யான சரவணன்.

kk

அப்போது போலீசிடம் கார்த்திக் அளித்த வாக்குமூலத்தில், “"எம்.எல்.ஏ. சீட் வாங்கித்தருவதாக என் அம்மாவிடம் 30 லட்ச ரூபாய் வாங்கி, ஏமாற்றிவிட்டார் உமா மகேஸ்வரி. கொடுத்த பணத்தை பலமுறை உமாமகேஸ்வரியிடம் கேட்டுப் பார்த்தும் கொடுக்காததால்தான் கொலை செய்தேன்'’ எனச் சொல்லியிருந்தார். மூன்று மாதங்கள் கடந்த நிலையில், இப்போது சீனியம்மாளும் அவரது கணவர் சன்னாசியும் கைது செய்யப்பட்டிருக் கிறார்கள்.

செங்கோட்டை அருகே உள்ள குண்டார்டேம் ஏரியாவில் காஸ்ட்லி யான நிலத்தை விற்றதில் முருகசங்க ரன், சீனியம்மாள், ஒரு புரோக்கர் ஆகியோருக்கு நல்ல கமிஷன் கிடைத் தது.

இது போக சீனியம்மாள் பெயரில் சொத்து எதுவும் தனது கணவர் வாங்கியிருப் பாரோ என்ற சந்தேகம் உமாமகேஸ்வரிக்கு உண்டு.

இதன் உள்விவ காரங்கள் கார்த்திக் கிற்கும் தெரியும். இதன் அடிப்படையில் விசா ரித்தால் மேலும் பல வில்லங்கங்கள் வெளி வரும்’’ என்கிறார்கள் நெல்லை உ.பி.க்கள்.

-பரமசிவன்

Advertisment

______________

இறுதிச்சுற்று

தனிக்குழு!

Advertisment

சுஜித் மீட்புப் பணியின்போது அங்கு இருந்த தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் டாக்டர் ஆர்.ஜி.ஆனந்த்திடம் நாம் பேசியபோது, ""ஒரு கையில் கயிறு கட்டப்பட்ட நிலையில், இன்னொரு கையில் விரல்கள் மூடியிருந்ததால் கட்ட முடியவில்லை. அந்த இடத்தில் 3 அமைச்சர்கள் இருந்து மேற்பார்வையிட்டதால் என்னால் எந்த முடிவுகளையும் சொல்ல முடியவில்லை. பள்ளம் தோண்டத் தொடங்கி அதிர்வு ஏற்பட்ட நிலையில்தான் முதலில் போட்ட முடிச்சும் கழன்று குழந்தை கீழே சென்றது. அதன் பின்னர் எடுத்த அத்தனை முயற்சிகளும் பலனளிக்கவில்லை என்பதுதான் வேதனை''’’என்றார்.

அவர் மேலும், ""இனிமேல் இப்படி ஒரு சம்பவம் நடக்கக்கூடாது. விரைவில் மத்திய அரசுடன் பேசி ஆழ்குழாய் மீட்புக்கென தனிக் குழுவினை உருவாக்குவதுடன் அதற்கு தேவையான உபகரணங்களையும் தயார் செய்வோம். இந்த குழுக்கள் ஆழ்குழாய்க் கிணறுகள் அதிகம் உள்ள மாவட்டங்களில் தயார் நிலையில் இருப்பார்கள்''’என்று தெரிவித்தார்.