இன்ஷுரன்ஸ் பணத்திற் காக நண்பனைக் கொலைசெய்த விவகாரத்தில், இறந்தது டில்லிபாபு என போலீஸ் முடிவு செய்திருந்த நிலையில், டி.என்.ஏ பரிசோதனை முடிவு, இறந்த உடல் ஆணுக்குரியதே இல்லை. பெண்ணுக்குரியது என நிச்ச யித்திருப்பதால் சர்ச்சை கிளம்பியுள்ளது.
இன்ஷுரன்ஸ் பணத்துக் காக நண்பரைக் கொலை செய்துவிட்டு, நாடகமாடிய சுரேஷ் கைதுசெய்யப்பட்டார். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 16-ஆம் தேதி குடிசை வீடு எரிந்ததில் சடலமாகக் கண்டெடுக்கப் பட்டதாக சுரேஷின் உடலை காவல்துறை உடற்கூராய்வு முடித்து அவரது வீட்டில் ஒப்படைத்தது. வீட்டாரும் அந்த உடலை அடக்கம் செய்துள்ளனர்.
அதே செப்டம்பர் மாதம் முதல் டில்லிபாபுவைக் காணவில்லை என டில்லிபாபுவின் தாயார் காவல் நிலையத்தில் புகார் கொடுக்க, அவரை எண்ணூர் போலீசார் அலைக்கழித்துள்ளனர். பிறகு அவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தப
இன்ஷுரன்ஸ் பணத்திற் காக நண்பனைக் கொலைசெய்த விவகாரத்தில், இறந்தது டில்லிபாபு என போலீஸ் முடிவு செய்திருந்த நிலையில், டி.என்.ஏ பரிசோதனை முடிவு, இறந்த உடல் ஆணுக்குரியதே இல்லை. பெண்ணுக்குரியது என நிச்ச யித்திருப்பதால் சர்ச்சை கிளம்பியுள்ளது.
இன்ஷுரன்ஸ் பணத்துக் காக நண்பரைக் கொலை செய்துவிட்டு, நாடகமாடிய சுரேஷ் கைதுசெய்யப்பட்டார். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 16-ஆம் தேதி குடிசை வீடு எரிந்ததில் சடலமாகக் கண்டெடுக்கப் பட்டதாக சுரேஷின் உடலை காவல்துறை உடற்கூராய்வு முடித்து அவரது வீட்டில் ஒப்படைத்தது. வீட்டாரும் அந்த உடலை அடக்கம் செய்துள்ளனர்.
அதே செப்டம்பர் மாதம் முதல் டில்லிபாபுவைக் காணவில்லை என டில்லிபாபுவின் தாயார் காவல் நிலையத்தில் புகார் கொடுக்க, அவரை எண்ணூர் போலீசார் அலைக்கழித்துள்ளனர். பிறகு அவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தபிறகு, நீதிமன்ற உத்தரவின் பெயரில் மீண்டும் எண்ணூர் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில், இறந்தவர் சுரேஷ் இல்லை, டில்லிபாபு எனத் தெரியவந்தது. தான் செய்திருந்த 1 கோடி ரூபாய் இன்ஸ்ஷுரன்ஸ் பணத்திற்காக, தன்னுடைய நண்பனையே கொலைசெய்து எரித்ததாக சுரேஷே ஒப்புக்கொண்டதாக தெரிவித்த போலீசார், கொலைவழக்கு பதிவுசெய்து சுரேஷை சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கில் சுரேஷ் என்று சொல்லப்பட்ட பிரேதத்தை வைத்து விசாரணை செய்த ஒரத்தி போலீசாரும், பிரேதப் பரிசோதனை செய்த செங்கல் பட்டு மருத்துவக் கல்லூரி மருத்துவர்களும், இறந்துபோன சடலம் சுரேஷ் என்பவருடையதுதான் என உறுதியளித்து அன்றே சான்று வழங்கியுள்ளனர். அதன்பிறகு, இறந்துபோனது சுரேஷ் உடல் இல்லை, அது டில்லிபாபுவின் உடல் என சுரேஷே ஒப்புக்கொண்டதன் பெயரில் வழக்கு முடிந்திருந்தது.
மருத்துவர் முதலில் கொடுத்த போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில், மீண்டும் பெயர் மாற்றம் செய்து, இறந்தது டில்லிபாபு என அறிக்கை கொடுக்கவேண்டிய நிலைமை ஏற்பட்டது. அதற்கு அந்தப் பிரேதம் உண்மையிலே டில்லிபாபுடையதுதானா என உறுதிசெய்வதற்கு, உறவினர் டி.என்.ஏ. பெறப்பட்டு சடலத்தின் டி.என்.ஏ.வுடன் பொருந்துகிறதா என சோதனை மேற்கொள்ள வேண்டும்.
அதற்காக போலீஸ், தடய அறிவியல் துறைக்கு பிரேதப் பரிசோதனை மருத்துவர் மூலம் விண்ணப்பம் அளித்திருந்தனர். அந்த விண்ணப்பத்தின் பெயரில் டி.என்.ஏ. பரிசோதனை செய்ததில் திடீர் திருப்பமாக இறந்துபோனதாகச் சொல்லப்படும் உடல் ஆணுடையதே இல்லை. அது ஒரு பெண்ணின் உடல் என தடய அறிவியல் துறை உறுதிப்படுத்தி யுள்ள சம்பவம் மேலும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
இதனால், உண்மையில் இறந்து போனது யார்? அது யாருடைய உடல்? எதற்காக இப்படி நாடகம் ஆடினார்கள்? என்ற கேள்விகள் மீண்டும் எழுந்துள்ளன. 2024, ஜனவரி 31-ஆம் தேதி நக்கீரன் இதழில், இந்த விவகாரம் குறித்து விரிவாகப் பதிவுசெய்ததுடன், “"இன்ஷுரன்ஸ் கொலை? போலீஸ் -மருத்துவர் கூட்டு சதி?' எனத் தெளிவாக செய்தி வெளியிட்டிருந்தோம். தற்போது கொலை விவகாரத்தில் சதி நடந்திருப்பது வெட்ட வெளிச்சமாகி உள்ளது.
இறந்தாகச் சொல்லப்படும் இந்த உடல் பெண்ணுடையது என்றால், டில்லிபாபு எங்கே உள்ளார்? இந்தப் பெண் உடல் யாருடையது? எதற்காக குற்றவாளிக்கு காவல்துறையும், சட்ட மருத்துவரும் துணைபோனார்கள்? என்ற கேள்விகள் எழுந்துள்ளன.
இது குறித்து வழக்குப் பதிந்த அச்சரப்பாக்கம் இன்ஸ்பெக்டர் சிவக்குமாரிடம் கேட்டபோது, "இந்த வழக்கு இன்னும் முடியவில்லை. நான் தற்போது அங்கு பணிபுரிய வில்லை'” என விரிவாகப் பேசமறுத்தார். அதேபோல போஸ்ட் மார்ட்டம் செய்த டாக்டர் ஹரிஷிடம் கேட்டபோது பேச மறுத்துவிட்டார்.
குற்றச் சம்பவங்களில், குற்றவாளிகளுடன் கை கோத்துக்கொண்டு அவர்கள் விரும்பியதுபோல் போஸ்ட் மார்ட்டம் சர்டிபிகேட்டை டாக்டர்கள் தருகிறார்கள் என்ற பொதுமக்களின் பேச்சு இதன்மூலமாக உறுதியாகிறது.
தன் மகனைக் காணவில்லை என புகார் கொடுத்த மூதாட்டியை அலைக்கழித்து, நீதிமன்றத்தை நாடியபிறகும் பொய்யான பதிலைக் கொடுத்துள்ள சம்பவம் நீதிமன்றத் தையே அவமதிப்பதைப் போன்றுள்ளது. மருத்துவம் சம்பந்தமாக காவல்துறைக்கும் நீதித்துறைக்கும எழும் சந்தேகங்களைப் போக்குவது மட்டுமே சட்ட மருத்துவர்களின் வேலை. அதனால்தான் இவர்கள் போலீஸ் சர்ஜன் என அழைக்கப்படுகிறார்கள்.
நீதிமன்றமே இந்த வழக்கை கையிலெடுத்துக்கொண்டு உரிய கண்காணிப்பின் கீழ் பொருத்தமான உயரதிகாரிகளை நியமித்து, இந்த விவகாரத்தில் என்ன தான் நடந்தது, குற்றத்தில் யாருக்கெல்லாம் தொடர்பு என முழுமையாக விசாரணை செய்யவேண்டும். அப்போதுதான் இத்தகைய விவகாரத்தில் எதிர்காலத்தில் தவறு நடப்பதைத் தடுக்கமுடியும்.