Advertisment

கேள்வி கேட்டதால் கொலை! பாதிரியார், தி.மு.க. பிரமுகர் தலைமறைவு!

ss

ன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அருகே மைலோடு பகுதியிலுள்ளது புனித மிக்கேல் முதன்மைத் தூதர் ஆலயம். இந்த கிறிஸ்தவ ஆலயத்தின் பங்கு பேரவையில் அடிக்கடி கணக்கு வழக்கு கேட்டுவந்த பங்கு பேரவை உறுப்பினரை தி.மு.க. ஒ.செ. மற்றும் பாதிரியார் இருவரும் சேர்ந்து அடித்துக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது.

Advertisment

சுமார் 650 குடும்பங்களைக் கொண்ட இந்த கிறிஸ்தவ ஆலயத்தின் பங்கு பேரவையின் தலைவராக பாதிரியார் ராபின்சனும், பொருளாளராக தி.மு.க. தக்கலை வடக்கு ஒன்றிய செயலாளரும் அரசு வழக்கறிஞருமான ரமேஷ்பாபு உட்பட 28 பேர் பொறுப்பாளர் களாக உள்ளனர்.

Advertisment

gag

இந்த பங்கு பேரவையின் உறுப்பினராக இருக்கும் சேவியர் குமார், பங்கு பேரவைக் கூட்டங்களிலும், வாட்சப் குரூப்பிலும், வரவு செலவு கணக்குகளைக் கேட்டு, தலைவருக்கும், பொருளாள ருக்கும் நெருக்கடிகளைக் கொடுத்துவந்தார்.

கடந்த சில நாட்களாக சேவியர் குமாரிடம் பொரு ளாளரும், வேறு சில

ன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அருகே மைலோடு பகுதியிலுள்ளது புனித மிக்கேல் முதன்மைத் தூதர் ஆலயம். இந்த கிறிஸ்தவ ஆலயத்தின் பங்கு பேரவையில் அடிக்கடி கணக்கு வழக்கு கேட்டுவந்த பங்கு பேரவை உறுப்பினரை தி.மு.க. ஒ.செ. மற்றும் பாதிரியார் இருவரும் சேர்ந்து அடித்துக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது.

Advertisment

சுமார் 650 குடும்பங்களைக் கொண்ட இந்த கிறிஸ்தவ ஆலயத்தின் பங்கு பேரவையின் தலைவராக பாதிரியார் ராபின்சனும், பொருளாளராக தி.மு.க. தக்கலை வடக்கு ஒன்றிய செயலாளரும் அரசு வழக்கறிஞருமான ரமேஷ்பாபு உட்பட 28 பேர் பொறுப்பாளர் களாக உள்ளனர்.

Advertisment

gag

இந்த பங்கு பேரவையின் உறுப்பினராக இருக்கும் சேவியர் குமார், பங்கு பேரவைக் கூட்டங்களிலும், வாட்சப் குரூப்பிலும், வரவு செலவு கணக்குகளைக் கேட்டு, தலைவருக்கும், பொருளாள ருக்கும் நெருக்கடிகளைக் கொடுத்துவந்தார்.

கடந்த சில நாட்களாக சேவியர் குமாரிடம் பொரு ளாளரும், வேறு சில பொறுப்பாளர் களும் செல்போனில் கோபத்தோடு திட்டி யதையும் ஆடியோ பதிவு செய்து வாட்சப் குரூப்பில் போட்டிருக்கிறார். இந்நிலையில் கடந்த 20ஆம் தேதி மாலையில் பாதிரியார் ராபின்சன், சேவியர் குமாரை பேச்சுவார்த் தைக்கு தனது இல்லத்துக்கு அழைத்துள்ளார். அங்கு பொருளாளர் ரமேஷ்பாபு உள்ளிட்ட சிலர் மதுபோதையில் இருந்துள்ளனர். அப்போது நடந்த வாக்குவாதத்தில் சேவியர் குமாரை அடித்துக் கொன்றிருக்கிறார்கள் என்றனர் அவரது உறவினர்கள்.

இதுகுறித்து சேவியர் குமாரின் மனைவி ஜெமினி கூறும்போது, "பாதிரியாரும், ரமேஷ்பாபுவும் நேரடியாகவும், செல்போன் மூலமும் என் கணவரை மிரட்டுவதை வழக்க மாக வைத்திருந்தனர். அரசு போக்குவரத்து கழகம் திங்கள் சந்தை பணிமனையில் வேலை பார்த்துவந்த என் கணவரை, ரமேஷ்பாபு தனது அரசியல் செல்வாக்கால் கன்னியாகுமரி பணிமனைக்கு மாற்றி னார். அப்போதே, 'உன்னை இடமாற்றம் மட்டுமில்ல, நான் நினைச்சா டிஸ்மிஸ் கூட செய்ய முடியும். ஏன்னா நான் ஆளுங்கட்சிக்காரன்' எனக்கூறி ஆபாசமாகத் திட்டினார்.

dd

நான் பங்கு பேரவையின் கீழ் செயல்படும் மதர் தெரசா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியராக வேலை பார்க்கிறேன். அப்பள்ளி வளர்ச்சி தொடர்பாக நடந்த கூட்டத்தில், என் கணவர் எழுப்பிய கேள்விகளுக்கு யாரும் ஒழுங்காகப் பதிலளிக்கவில்லை. இதுகுறித்து மறுநாளில் வாட்ஸப் குரூப்பிலும் தெரிவித்தார். இதையடுத்து மறுநாளில் என்னை பள்ளியிலிருந்து சஸ்பெண்ட் செய்தனர். பாதிரியாரிடம் காரணம் கேட்டதற்கு, பேரவைக்கூட்டத்தில் என் கணவர் தேவையில்லாத கேள்விகள் கேட்டதற்காக சஸ்பெண்ட் செய்ததாகக் கூறினார். இதுமட்டுமல்லாமல், என் கணவரை கார் ஏற்றிக்கொல்லவும் முயன்றனர். இந்நிலையில் தான் பேச்சுவார்த்தைக்காக என் கணவரை பாதிரியார் கூப்பிடுவதாக அன்பியம் தலைவர் வின்சென்ட் கூட்டிட்டு போனார். சாயங்காலம் வரை திரும்பவராததால் பாதிரியாரின் இல்லத்துக்கு போனேன். அங்கே மண்டை பிளந்து, ரத்த வெள்ளத்தில் என் கணவர் இறந்து கிடந்தார். என் கணவரை அடிச்சே கொன்னு, என்னையும், இரண்டு குழந்தைகளையும் அனாதை ஆக்கிட்டாங்களே'' எனக் கதறினார்.

சேவியர் குமாரின் கொலைக்கு காரணமானவர்களை கைது செய்யக்கூறி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட தால் காவல்துறையினரும், குழித்துறை மறைமாவட்ட அருட்பணியாளர் பாதிரியார் ஜேசுரத்தினமும் பேச்சு வார்த்தை நடத்தி, உடலை உடற்கூராய்வுக்கு அனுப்பினர். இந்நிலையில் 15 பேர் மீது கொலை வழக்கு பதியப்பட்டு, இருவரை கைது செய்துள்ளனர்.

கொலை தொடர்பாக போலீசார், "சேவியர் குமாரை ரமேஷ்பாபு கன்னத்தில் ஓங்கி அறைய, அவர்களிடமிருந்து தப்பித்து, ஆலய மணியை அடித்து ஊர் மக்களைத் திரட்ட முயன்றுள்ளார். அப்போது அவரைத் தடுத்ததோடு, அங்குள்ள அனைவரும் அவரைத் தாக்கியுள்ளனர். அங்கிருந்த அயர்ன் பாக்ஸால் தலையில் தாக்கி, காலையும் முறித்துள்ளனர். அவர் இறந்தது தெரியவந்ததும் அனைவரும் தலைமறைவாயினர். அவர்களைப் பிடிக்க 3 தனிப் படைகள் அமைக்கப்பட்டுள் ளன'' என்றனர்.

nagar

சேவியர் குமார் கொலையில் அமைச்சர் ஒருவருக்கு தொடர்பு இருப்பதாகவும், கேரளாவுக்கு அவரின் ஆதரவோடு கனிம வளங்கள் கடத்தப்படுவது குறித்து சமூக வலைத்தளத்தில் சேவியர் குமார் பதிவிட்டதால் தான் அமைச்சரின் தலையீட்டால் இக்கொலை நடந்துள்ளது என்றும், கொலையாளிகள் ரமேஷ்பாபுவையும், பாதிரியாரை யும் காப்பாற்றும் முயற்சியில் அமைச்சர் ஈடுபட்டிருப்பதாகவும் கூறி நாம் தமிழர் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள னர்.

அதேபோல், இந்த பாதிரியார் மீது ஏற்கெனவே ஒரு பெண்ணையும் சிறுவனையும் தாக்கியது உட்பட 3 வழக்குகள் இருப்பதாகவும். எந்த ஒரு சர்ச்சிலும் 6 மாதத்துக்கு மேல் பாதிரியராக அவர் இருந்ததில்லை என்றும், எப்போதும் குண்டர் படையோடு தான் இருப்பா ரென்றும் அவர் மீதும் பல்வேறு குற்றச்சாட்டுக்களை கூறு கின்றனர்.

இந்நிலையில், தலைமறை வாகவுள்ள ரமேஷ்பாபுவை, அடிப்படை உறுப்பினர் உள் ளிட்ட அனைத்துப் பொறுப்புக் களிலிருந்தும் நீக்கியுள்ளதாக தி.மு.க. தலைமை அறிவித் துள்ளது.

nkn270124
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe