அது சதயவிழாக் கூட்டம் என நம்பித்தான் முத்தரையர் சமூக மக்கள் வந்தனர். ஆனால், அது ஓர் அரசியல் கட்சி என்பதை வந்த பிறகே உணர்ந்தனர்.
முத்தரையர் முன்னேற்ற சங்கத்தை தொடங்கி, பல ஊர்களிலும் கொடியேற்றிய திருச்சி கே.கே.செல்வகுமார், பெரும்பிடுகு முத்தரையரின் சதயவிழா நாளில், புதுக்கோட்டை மாவட்ட கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள மணல்மேல்குடி பட்டங்காடு கிராமத்தில் கூட்டத்தைக் கூட்டினார்.
""இது ஒரு சாதிக்கான கட்சி அல்ல. நமது இலக்கு, வரப்போகிற சட்டமன்றத் தேர்தல்தான். சுமார் 70 தொகுதிகளில் நம்மால்
அது சதயவிழாக் கூட்டம் என நம்பித்தான் முத்தரையர் சமூக மக்கள் வந்தனர். ஆனால், அது ஓர் அரசியல் கட்சி என்பதை வந்த பிறகே உணர்ந்தனர்.
முத்தரையர் முன்னேற்ற சங்கத்தை தொடங்கி, பல ஊர்களிலும் கொடியேற்றிய திருச்சி கே.கே.செல்வகுமார், பெரும்பிடுகு முத்தரையரின் சதயவிழா நாளில், புதுக்கோட்டை மாவட்ட கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள மணல்மேல்குடி பட்டங்காடு கிராமத்தில் கூட்டத்தைக் கூட்டினார்.
""இது ஒரு சாதிக்கான கட்சி அல்ல. நமது இலக்கு, வரப்போகிற சட்டமன்றத் தேர்தல்தான். சுமார் 70 தொகுதிகளில் நம்மால் வெற்றிபெற முடியும். நமது "முத்தரையர் முன்னேற்ற சங்கம்' இன்று முதல் "தமிழக மக்கள் கட்சி' என்னும் பெயரில் அரசியல் கட்சியாக உருவெடுக்கிறது'' என்று சிவப்பு -மஞ்சள் நிறக் கொடியை உயர்த்திப் பிடித்தார் கே.கே.செல்வகுமார்.
திருச்சி ஆர்.விஸ்வநாதனின் "தமிழ்நாடு முத்தரையர் சங்க'த்திற்கு எதிராகத் தொடங்கப்பட்டதுதான் கே.கே.செல்வகுமாரின் முத்தரையர் முன்னேற்ற சங்கம். இதை இப்போது கட்சியாக மாற்றியது ஏன்? பின்னணியில் இருப்பவர்கள் யார், யார்?
"தி.மு.க.வின் மீது பற்றுதல் கொண்டவர் கே.கே.செல்வகுமார். கனிமொழியின் அனுதாபி. 2016 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க.வுக்கு வாக்கு சேகரித்தவர். அந்தப் பின்புலத்தில்தான் தனிக்கட்சி தொடங்கியிருக்கிறார்' என்கிறார்கள் முத்தரையர் இளைஞர்கள்.
எம்.ஜி.ஆர்., அ.தி.மு.க.வை ஆரம்பித்ததும், அவருடன் இணைந்த ஐந்து எம்.எல்.ஏ.க்களில் ஒருவர் பேராவூரணி சுயேட்சை வேட்பாளரும் முத்தரையர்களின் செல்வாக்குப் பெற்றவருமான குழ.செல்லையா.
அப்போதிருந்தே முத்தரையர்களின் பேராதரவு இரட்டை இலைக்கு கிடைத்தது. ஆனால் கடந்த சட்டமன்றத் தேர்தலில் புதுக்கோட்டை, கரூர் தொகுதிகளில் முத்தரையர் வி.ஐ.பி.கள் புறக்கணிக்கப்பட்டதால் சிலர் அ.தி.மு.க.விலிருந்து வெளியேறி, போட்டி வேட்பாளர்களாக களமிறங்கினர்.
""அப்பவே, எங்க சாதிப் பிரமுகர்களை தி.மு.க.வுக்கு கொண்டுவரும் வேலையை கே.என்.நேருவிடம் கலைஞர் கொடுத்தார். அவருக்கு விருப்பமில்லை. சமீபத்தில் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்ட காவிரி மீட்பு நடைபயணத்தில் கலந்துகொண்ட பெரம்பலூர் எம்.பி. தொகுதி முன்னாள் வேட்பாளரும் ஒ.செ.வுமான சீமானூர் பிரபுவும் கட்சிக்கொடியைப் பிடித்தபடியே மாரடைப்பால் இறந்தார். அவரது படத்திறப்புக்கும் கூட ஸ்டாலினை அழைத்து வரவில்லை கே.என்.நேரு. அவரை மீறி கனிமொழியாலும் வரமுடியவில்லை.
இந்தச் சூழ்நிலையைப் பயன்படுத்திய டி.டி.வி.தினகரன், தனது கட்சியின் முக்கிய பதவிகளை கு.ப.கிருஷ்ணன் போன்றோருக்கு கொடுத்து, முத்தரையரை தங்கள் பக்கம் இழுத்து வருகிறார். இதற்குப் பிறகுதான் கனிமொழி ஆதரவாளரான கே.கே.செல்வகுமார், தி.மு.க. ஊக்குவிப்புடன் தனிக்கட்சி தொடங்கியிருக்கிறார். தேர்தலில் கூட்டணி வைக்கும் கணக்கும் உள்ளது'' என்கிறார்கள் கே.கே.செல்வகுமாரின் ஆட்கள்.
தும்பை விட்டு வாலைப் பிடிக்கும் வேலை!
-செம்பருத்தி