காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கியின் மேலாண்மை இயக்குனர் ஏழை, எளிய மக்களின் வயிற்றிலடித்து பல கோடி ஊழல் செய்துள்ள விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Advertisment

தமிழகத்திலுள்ள அனைத்து கூட்டுறவு வங்கியிலும் மூன்று மாதத்திற்கு ஒருமுறை தணிக்கை செய்யப்படுகிறது. அந்தவகையில் காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கியில் இந்தாண்டு ஜூன் மாதம் 29-ஆம் தேதி இறுதித் தணிக்கை அறிக்கையை வெளியிட்டுள்ள னர். அந்த அறிக்கையில் 31.03.2024-ஆம் தேதி வாங்காத தளவாடப் பொருட்களை வாங்கியதாகக் கணக்கு காட்டப்பட்டது. இந்தச் செய்தியை அப்போதே, “2024, மே 10-ஆம் தேதி நக்கீரனில், "காஞ்சிபுரம் கூட்டுறவு வங்கியில் மெகா ஊழல்’!'’என செய்தி வெளியிட்டிருந்தோம். 

இதனால் சிக்கிக்கொள்வோமோ என்ற அச்சத்தில் அவசர அவசரமாக கொள்முதல் செய்த அந்த தளவாடப் பொருட்களை 01.04.2024 தேதி அடுத்து ஒருநாளில் தேய்மானமாகக் காண்பித்து முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைத்துள்ளனர். இதில் இன்னும் வேடிக்கை என்னவென்றால், தணிக்கை அறிக்கையை முதலில் வங்கியின் மேலாண்மை இயக்குனரான சிவமலர் சமர்ப்பித்த பிறகு, முதலில் கூட்டுறவுத் தணிக்கை துணை இயக்குனர் கணேஷ் தலைமையில் ஒரு டீம் சரி பார்த்து, அடுத்தகட்டமாக வங்கியின் உட்தணிக்கை அலுவலரான கிருஷ்ணகுமார் தலைமையில் தணிக்கை செய்யப்படும். அதன்பிறகு இறுதியாக வி.செந்தில்நாதன் என்பவர் சரிபார்த்து ஊடகங் களில் வெளியிட்டிருந்தார்.  இப்படி மூன்று பேருக்குமே இந்த விவகாரம் ஊழலாகவே தெரி யாமல் சரியாக உள்ளது என அறிவித்துள்ளதுதான் மேலும் சிக்கலை உண்டாக்கியுள்ளது. ஆக அனைவரும் சேர்ந்துதான் 14.13 கோடி மதிப்பிலான ஊழல் செய்துள்ளனர் என்பது தெரியவருகிறது.  

இதோடு நிறுத்திக்கொள்ளாமல் தூய்மைப் பணியாளர்களாக பணிபுரிந்துவருபவர்களுக்கு தமிழக அரசு தொழில்முனைவோராக வளர அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடி திட்டத்தின்கீழ் கழிவுநீர் சுத்திகரிப்பு வாகனம் வாங்க மானியத்துடன் வங்கி கடன்வழங்குகிறது. அந்த வங்கிக்கடன் வழங்குவதிலும் ரூ.34 கோடி ஊழல் செய்துள்ளனர். இந்த கழிவுநீர் வாகனம் வாங்குவதற்கு 54 பேருக்கு, 35% மானியமாகவும்,   66 லட்சம் மதிப்புள்ள ஒரு லாரிக்கு 23 லட்சம் மானிய மாக வழங்கியுள்ளது. இப்படி வழங்கப்பட்ட மானியத்திற்கு, விண்ணப்பம் செய்து அடுத்தநாளே அதற்கான அனுமதி வழங்கி, அதற்கு அடுத்த நாளே அவர்களின் வங்கிக் கணக்கில் பணம் போடப் பட்டுள்ளது. 

Advertisment

ஏழை எளிய மக்கள் விண்ணப்பம் கொடுத் தால் அது குறிப்பிட்ட மாவட்ட அலுவலகத்திற்குச் சென்று அதன்பிறகு அவர்கள் அதனைச் சரிபார்த்து, அதன்பிறகு துறைரீதியாக நேர்முகம் செய்து அதனை வங்கிக்கு அனுப்பி, அதன்பிறகு வங்கி இவர்களுக்கு தரலாமா வேண்டாமா என்பதையெல்லாம் முடிவெடுத்து படிவம் மூன்று அனுப்பிய பிறகே, அதற்கான மானியத்தை அரசு வழங்கியதும்தான் வங்கி கடன் தரும். ஆனால் இங்கு அடுத்தடுத்த நாட்களிலே எப்படி இப்படி மானியத்துடன் கடன் வழங்கப்பட்டது என்பதுதான் கேள்வியாக உள்ளது. 

54 பேருக்கு கொடுக்கப்பட்ட வங்கிக்கடனுக்கு பாதிக்கு மேற்பட்டோர் விண்ணப்பம்கூட பூர்த்தி செய்யாமலும், அவர்களின் கையொப்பமும் பெறாமல் வங்கிக்கடன் வழங்கப்பட்டுள்ளது. இதில் மானியம் 35 சதவீதம்தான் வழங்கவேண்டும் என்பது விதி. அதையும் மீறி 56 சதவீதம்வரை வழங்கப்பட்டுள்ளது. தூய்மைப் பணியாளராக இல்லாதவர்களும், எஸ்.சி, எஸ்.டி. அல்லாதவர் களுக்கும், வெளிமாநிலத்தவருக்கும் இந்த மானியம் வழங்கப்பட்டுள்ளது. அப்படி வழங்கப்பட்டுள்ள வங்கிக்கடனுக்கான கழிவுநீர் வாகனம் இதுவரை வாங்கப் படவும் இல்லை. பயனாளி கழிவுநீர் வாகனம் வாங்கியதை அந்த மேனேஜர் புகைப்படமெடுத்து விண்ணப்பத்தில் இணைத்திருக்க வேண்டும். அதுவும் நடக்கவில்லை. கடன் வழங்கியதற்கான வங்கிக்கணக்கு இல்லை, அப்படி வாங்கியவுடன் இரண்டு மாதத்தில் தொழில்தொடங்கி யிருக்க வேண்டும். இவை எதுவுவே செய்யாமல், வங்கிக் கடன் உறுதிசெய்து, வாகனத்தைப் பெறுவதற்காக லேலண்ட் டைரக்ட் (Kektkabd direct) நிறுவனத்திற்கும், மற்றொரு நிறுவனத்திற்கும் வழங்கியுள்ளது. ஆனால் வாகனம் வரவில்லை. வாங்காத வாகனத்திற்கு பணத்தை தனியார் நிறுவனத்திற்கு கொடுக்கப்பட்டுள்ளது. இதில் தனியார் நிறுவனம், வங்கி இயக்குனரான சிவமலர், காங் கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகையின் உறவினரின் ஜென்றி நிறுவனம் என அனைவரும் சேர்ந்து இந்த மோசடியை செய்துள்ளனர் என்பதை தணிக்கை செய்த அதிகாரி அனைத்துத் தகவலையும் ஆதாரத்துடன் கூட்டுறவுத்துறை செயலாளருக்கு அனுப்பியுள்ளார்.  

வங்கிகள் சரியாக இயங்குகிறதா என்பதை ஆர்.பி.ஐ. விதிகளின் படி நேஷனல் நபார்ட் (nabarad) விசாரணை செய்ததில் இந்த வங்கி மேலாண்மை இயக்குனர் சிவமல ருக்கு கடந்த ஜூனில் பொய்யான கணக்கு காட்டியதற்காக வும் ஆர்.பி.ஐ. விதிகளின்படி நபார்ட் (nabard) 50 ஆயிரம் அபராதம் விதித்துள்ளது. குறிப்பிடத்தக்கது.

Advertisment

இதனைத் தொடர்ந்து சத்யபிரதா சாகு இதுதொடர் பான அனைத்தையும் விசாரிக்க சொல்லியுள்ளாராம்.. 

வெறுமனே திட்டம் மட்டும் இருந்தால் எளிய மக்கள் உயர்ந்துவிட முடியாது. அந்த திட்டம் திறம்பட செயல்பட்டால்தான் மக்களும் சமூகமும் வளரும், அதற்கான பணியைச் செய்யாதவரை எந்த மாற்றமும் நிகழப்போவது இல்லை!

-சே