தமிழ்நாடு முழுவதும் "மக்களைக் காப்போம், தமிழகத் தை மீட்போம்!' என சுற்றுப்பயணம் மேற்கொண்டார் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் இ.பி.எஸ். இ.பி.எஸ் சுற்றுப்பயணம் செல்லும் மாவட்டத்துக்கு ஆட்களை திரட்ட ஒரு தொகுதிக்கு 20 லட்சம் எனச் செலவுக்கு தலைமைக்கழகம் சார்பில் நிதி தந்தனர். இந் நிலையில் சில மா.செ.க்கள் நிர்வாகிகளிடம், கட்டாய வசூல்வேட்டை நடத்தத் தொடங்கினார்கள். இ.பி.எஸ். சுற்றுப்பயணம் முடிந்தும் வசூல்வேட்டை நடத்துகிறார் எங்கள் மா.செ. எனக் குற்றம்சாட்டுகிறார்கள்.
திருவண்ணாமலை மத்திய மாவட்டச் செயலாளர் முன்னாள் எம்.எல்.ஏ. ஜெயசுதா, "இ.பி.எஸ். நிகழ்ச்சிக்காக ஆரணி, போளூர் தொகுதியிலுள்ள கட்சி நிர்வாகிகள் ஒவ்வொருவரும் இவ்வளவு தொகை தரவேண்டும் என பிக்ஸ் செய்து வசூல்வேட்டை நடத்தினார். இதில் சில நிர்வாகி கள், என்னால அவ்ளோ முடியாது, இந்தாங்க என ஒரு லட்சம், 2 லட் சம் எனத் தந்துள்ளனர். அதெல் லாம் கிடையாது. உங்க பேர்ல என்ன எழுதியதோ அதைத் தாங்க, முடியாதுன்னா விடுங்க நான் பார்த்துக்கறேன்னு கோபமா சொல்றாங்க. இ.பி.எஸ். வந்து சென்று 20 நாட்களாகிவிட்டது. ஆரணி முன்னாள் சேர்மன் வி.பி. ராதாகிருஷ்ணன், பி.என்.அம்மன் ரைஸ்மில் கண்ணன் உட்பட சிலரிடம், போன்செய்து நிதி வரல, எப்போ தர்றீங்கன்னு கேட்டிருக் காங்க'' என்கிறார்.
இதுகுறித்து நம்மிடம் மத்திய மாவட்ட நிர்வாகிகள் சிலர், "மறைந்த ராவணன் வழியாகத் தான் 2011-ல் எம்.எல்.ஏ சீட் வாங் கினார். எம்.எல்.ஏ.வான பின்பும் ராவணன் சொல்வதை மட்டுமே செய்துவந்தார். இதனால் 2016-ல் இவருக்கு சீட் தராமல் ஒதுக்கிவிட் டார் அம்மா. முன்னாள் அமைச்சர் அக்ரி.கிருஷ்ணமூர்த்தி சப்போர்ட் டில் சேலம் மா.செ. ஆத்தூர் இளங் கோவன் மூலமாக இ.பி.எஸ்.ஸை நெருங்கி மத்திய மா.செ. பதவியை வாங்கினார். இப்போது இ.பி.எஸ். வீட்டுக்குள் சர்வசாதாரணமாக நுழையுமளவுக்கு நட்பிருக்கிறது என்பதற்காக நிர்வாகிகள் யாரையும் மதிப்பதில்லை.
நிகழ்ச்சிக்கு கட்சி நிர்வாகி களிடம் வசூலிச்சவங்க, யார் எவ்வளவு தந்தாங்க? என்ன செல வாச்சின்னு இதுவரை சொல்லல. எங்களால அவுங்களை எதிர்த்துப் பேசமுடியல. நான் சொல்றதைத் தான் இ.பி.எஸ். கேட்பாருன்னு நேரடியாவே மிரட்டறாங்க. பொதுச்செயலாளர் ஆதரவு இருக்குங்கறதுக்காக எங்களை மட்டமா நடத்தலாமா'' என்கிறார் கள் கோபமாக.
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்த பிரமான்யா (Pramanya Strategy Consulting) கம்பெனி, ஆந்திராவில் சந்திரபாபு நாயுடுவுக்கு தேர்தல் வேலைசெய்து, முதல்வராக்க உதவியது. 2026 சட்டமன்றத் தேர் தல் பணிக்காக இக்கம்பெனியை அ.தி.மு.க. ஒப்பந்தம் செய்துள்ள தாகக் கூறப்படுகிறது. இ.பி.எஸ் சுற்றுப்பயணம் செய்த மாவட்டங் களின் உட்கட்சி நிலவரம் குறித்த ரிப்போர்ட்டை இ.பி.எஸ்.ஸிடம் தந் துள்ளது. அதில் திருவண்ணாமலை, ஆரணி, செய்யார், வேலூர், காட்பாடி தொகுதிகளில் கோஷ்டிப் பூசல் அதிகளவில் உள்ளது. ஆரணியில் முன்னாள் அமைச்சர் சேவூர்.ராமச்சந்தி ரன் கோஷ்டி, மத்திய மா.செ. ஜெயசுதா கோஷ்டி, பேரவை மா.செ. கஜேந்திரன் -பாரி .பாபு கோஷ்டி என மூன்று கோஷ்டிகள் உள் ளன. இவர்கள் பொதுச்செயலாளர் வரவேற்பில்கூட ஒருங்கிணையவில்லை. அதேபோல் வடக்கு மாவட்டத்தில் முன்னாள் அமைச்சர் முக்கூர்.சுப்பிரமணி கோஷ்டி, மா.செ. தூசி.மோகன் கோஷ்டி, தெற்கு மாவட்டத்தில் அக்ரி.கிருஷ்ணமூர்த்தி கோஷ்டி, முன்னாள் எம்.எல்.ஏ. பன்னீர்செல்வம் கோஷ்டி, கிழக்கு மாவட் டத்தில் மா.செ. ராமச்சந்திரன் கோஷ்டி, அக்ரி.கிருஷ்ணமூர்த்தி கோஷ்டி, பேரவை மா.செ. ராஜன் கோஷ்டிகள் உள்ளன. வேலூர் புறநகர் மா.செ. வேலழகன், மாநகர மா.செ. அப்பு, அமைப்புச் செயலாளர் ராமு உட்பட முக்கிய நிர்வாகிகள் தி.மு.க. மா.செ. நந்தகுமார் எம்.எல்.ஏ, அமைச்சர் துரை முருகனுடன் நெருக்கமாக இருக்கிறார்கள். இதனால் வேலூர் மாவட்டத்தில் கட்சி வீக்காக உள்ளது. ஆற்காடு, ராணிப்பேட்டை தொகுதிகளில் அமைச் சர் காந்தியுடன் அ.தி.மு.க. நிர்வாகிகள் நெருக்கமாக இருக்கிறார் கள். வெற்றிக்காக இங்கு எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ரிப்போர்ட்டில் குறிப்பிட்டுள்ளதாகக் கூறுகின்றனர்.
கட்சி நிர்வாகிகளின் பஞ்சாயத்துகளை தீர்க்க சரியான நிர்வாகி இல்லாமல் தவிக்கிறார் இ.பி.எஸ். அது அவருக்கு சொந்த கட்சியினர் மத்தியில் சரிவை உருவாக்கிக்கொண்டே வருகிறது.
படங்கள்: எம்.ஆர்.விவேகானந்தன்