Advertisment

மிஸ்டர் விஜய்... நீங்க பாக்கலை... பாக்கலை...! - பதிலடி கொடுத்த அமைச்சர்!

anbil

 

மிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், திருச்சி பிரச்சாரத்தின் போது "தி.மு.க. ஆட்சி யில் திருச்சியின் வளர்ச்சிக்கு திட்டங்கள் எதுவுமே கொண்டு வரப்படவில்லை' எனப் பேசியிருந்தார். 

Advertisment

அதற்கு மறுநாள் "இரண்டு அமைச்சர்கள் இருந்தும் திருச்சி மாவட்டத்திற்கு எது வுமே செய்யவில்லை' என்ற விஜய்யின் குற்றச்சாட்டு குறித்து நிருபர்கள் கேட்ட போது... அதற்கு தக்க பதிலடி  கொடுத்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி, "பொது வாகவே ஆளுங்கட்சி யாக இருப்பவர்கள் அதைச் செய்யவில்லை, இதை செய்யவில்லை நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அதை எல்லாம் செய்வோம்

 

மிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், திருச்சி பிரச்சாரத்தின் போது "தி.மு.க. ஆட்சி யில் திருச்சியின் வளர்ச்சிக்கு திட்டங்கள் எதுவுமே கொண்டு வரப்படவில்லை' எனப் பேசியிருந்தார். 

Advertisment

அதற்கு மறுநாள் "இரண்டு அமைச்சர்கள் இருந்தும் திருச்சி மாவட்டத்திற்கு எது வுமே செய்யவில்லை' என்ற விஜய்யின் குற்றச்சாட்டு குறித்து நிருபர்கள் கேட்ட போது... அதற்கு தக்க பதிலடி  கொடுத்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி, "பொது வாகவே ஆளுங்கட்சி யாக இருப்பவர்கள் அதைச் செய்யவில்லை, இதை செய்யவில்லை நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அதை எல்லாம் செய்வோம் என்று கூறுவது இயல்புதான். விஜய் இங்கே பிரச்சாரம் செய்துகொண்டிருந்த அதே தருணத்தில் சென்னையில் மாண்புமிகு துணை முதல்வர் சர்வதேச தமிழ் பொறி யாளர்கள் மன்றத்தின் நிகழ்வில் கலந்துகொண்டு 3 ஆயிரம் இளைஞர்களுக்கு வெளிநாட்டில் வேலை செய்வதற்கான பணி  ஆணைகளை வழங்கிக்கொண்டிருந்தார்.   மேலும், 6 ஆயிரம் இளைஞர்களுக்கு பயிற்சியுடன் கூடிய வேலை வாய்ப்பு வழங்குவதற்கும் அப்போது திட்டம் தீட்டப்பட்டது. ஆக்கப்பூர்வமான அந்நிகழ்வில் நானும் கலந்துகொண்டிருந்தேன். இன்று செய்தித்தாள்களை படிக்கும்போதுதான் விஜய் பேசும்போது, "கேட்கல கேட்கல' என பொது மக்களைப் பார்த்துக் கூறியதைப் பார்க்கும்போது, "மக்களுக்கு நாங்கள் செய்துள்ள நல்ல திட்டங்கள் அனைத்தையும் மிஸ்டர் விஜய் பார்க்கல, பார்க்கல' என்றுதான் கூற வேண்டியிருக்கிறது. 

மாண்புமிகு. நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சரின் முயற்சியால் கிட்டத்தட்ட 128 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பேரறி ஞர் அண்ணாவின் பெயரில் 38 ஏக்கரில் கனரக வாகன சரக்கு முனையத்தை அமைத் துக் கொடுத்துள்ளோம். தந்தை பெரியாரின் பெயரில் 236 கோடி ரூபாயில் காய்கறி அங்காடி அமைக்க 22 ஏக்க ரில் அடிக்கல் நாட்டப்பட் டுள்ளது. கலைஞரின் பெயரில் 408 கோடி ரூபாய் மதிப்பில் பஞ்சப்பூரில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் கட்டித் தரப்பட்டுள்ளது. மேலும், இதே பஞ்சப்பூரில் சுமார் 400 கோடி ரூபாய் மதிப்பில் டைடல் பார்க் அமைக்க அடிக்கல் நாட்டியுள்ளோம். மணப்பாறையில் 1,100 ஏக்கரில் சிப்காட் அமைத்து தொழில் புரட்சியை ஏற்படுத்தும் நடவடிக்கைகள் தொடர்ந்து எடுக்கப்பட்டு வரு கின்றன.  தவிர, மணப்பாறையில் 7 கோடி ரூபாய் மதிப்பில் வாரச் சந்தை அமைத்துள்ளோம்.

அப்படியே எங்களின் திருவெறும்பூர் தொகுதிக்கு வாருங்கள். விடுதியுடன் கூடிய அரசு மாதிரி பள்ளிகள் கட்டப்பட்டுள்ளன. இதே தொகுதியில் சர்வதேச ஒலிம்பிக் அகாடமிக்கான முதற்கட்டப் பணிகள் நடந்துவருகின்றன. திருச்சியில் சூரியூர் ஜல்லிக்கட்டு பற்றி பெருமையாக பேசுகிறோம். இதற்காக 3 கோடி ரூபாய் மதிப்பில் ஜல்லிக்கட்டு அரங்கம் அமைத்து, வரவிருக்கும் பொங்கல் பண்டிகையின் போது ஜல்லிக்கட்டு நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. திருச்சி கிழக்கு தொகுதியில் பார்த்தால் 290 கோடி ரூபாய் மதிப்பில் பெருந்தலைவர் காமராஜர் பெயரில் மிகப்பெரிய நூலகம் அறிவுசார் மையமாக அமைக்கப்பட்டுள்ளது''’என, தி.மு.க. ஆட்சியில் திருச்சிக்கு மட்டும் செய்யப் பட்டுள்ள பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் குறித்த பட்டியலைப் போட்டார் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி.

 

nkn170925
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe