ssதி.மு.க. கோட்டையான திண்டுக்கல் தொகுதியை தி.மு.க. கூட்டணிக் கட்சியான மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக் கியதைக் கண்டு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி யும், உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல்துறை அமைச்சர் சக்கரபாணி உள்பட கட்சிப் பொ றுப்பாளர்களும், தொண்டர் களும் முதலில் பெரும் அதிருப்தி யடைந்தனர். இருந்தாலும் தலை மையின் முடிவுக்கு கட்டுப்பட்டு தேர்தலில் பணியாற்ற வேண்டும் என இரண்டு அமைச்சர்களும் உ.பி.க்களுக்கு உத்தரவிட்டுள்ளனர்.

இந்நிலையில் தான் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளராக, மாநிலக்குழு உறுப்பினரும், மாவட்ட செய லாளருமான சச்சிதானந்தம் அறி விக்கப்பட்டார். இவர் ஆத்தூர் தொகுதியிலுள்ள ரெட்டியார் சத்திரம் ஒன்றியத்திலிருக்கும் கட்டச்சின்னாம்பட்டியை சேர்ந்த வர். இப்பகுதியில் இரண்டு முறை பஞ்சாயத்துத் தலைவராகவும் இருந்துள்ளார். அதுபோல் இவ ருடைய மனைவி கவிதாவும் காமாட்சிபுரம் பஞ்சாயத்துத் தலைவராக இரண்டுமுறை இருந் துள்ளார். இவர்களுக்கு வைசாலி, மிருணாளினி ஆகிய இரண்டு மகள்கள் உள்ளனர். இந்த இரண்டு மகள்களுடன், மனைவி யையும் கட்சியின் பல போராட் டத்திற்கு அழைத்துச் சென்று, கட்சியின் வளர்ச்சிக்காக குடும் பத்தோடு களமாடும் செயல்வீரர். இவருடைய தாத்தாவான முத்துச் சாமி தேவர் 35 ஆண்டுகளாக தொடர்ந்து காமாட்சிபுரம் பஞ் சாயத்துத் தலைவராக இருந்து அப்பகுதி மக்களிடம் நல்ல பெயர் எடுத்துள்ளார். அதைத் தொடர்ந்து இவருடைய அப்பா வான ரத்தினவேலுவும் கட்சி யில் ஈடுபாடாக இருந்துள்ளார். சச்சி தானந்தமும் கட்சியில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டார்.

ff

முப்பத்தேழு ஆண்டுகளாக கட்சியில் உறுப்பினராகவும், முப்பது ஆண்டுகளாக கட்சியின் முழுநேர ஊழியராகவும் பணி யாற்றி வந்ததின் பேரில் தான் திண்டுக்கல் பாராளுமன்றத் தொகுதியின் வேட்பாளராக தோழர் சச்சிதானந்தத்தை தலைமை தேர்வு செய்து, தேர்தல் களத்தில் இறக்கியுள்ளது. அதைத் தொடர்ந்துதான் தோழர்களும், கூட்டணிக் கட்சியினரும் தோழரின் வெற்றிக்காகத் தேர்தல் களத்தில் குதித்து, தொகுதி முழுக்க சின்னங்கள் வரையவும், தேர்தல் பிரச்சாரம் செய்யவும் தொடங்கியுள்ளனர்.

Advertisment

இந்நிலையில் திண்டுக்கல் கலைஞர் மாளிகையில் நடை பெற்ற வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில் அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, சக்கரபாணி, மார்க்சிஸ்ட் மாநில தலைவர் பாலகிருஷ்ணன் உள்ளிட்ட கூட் டணிக் கட்சி நிர்வாகிகள், தொண் டர்கள் கலந்துகொண்டனர்.

பாலகிருஷ்ணன் பேசுகையில், "கூட்டணி தர்மத்தை மதிக்கும் ஒரே கட்சி தி.மு.க.'' என்று புகழாரம் சூட்டினார். அமைச்சர் ஐ.பி., "தோழர் சச்சிதானந்தத்தை இம்முறை இந்தியாவிலேயே அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்வோம்'' என்று சூளுரைத்தார்.

Advertisment