""400 கிலோவாட் மின்கோபுர டவர் லைனுக்கு கீழே நின்றால் மின்காந்த அலைகள் நமது உடலில் பாய்கிறது என விவசாயி கள் கூறும்போது அப்படி இருக்காது என்றுதான் பலரும் நினைத்தார்கள். ஆனால் அதை ஆய்வு செய்ய நானே நேரில் சென்றேன். எனது உடம்பில் டெஸ்டரை வைத்துப் பார்க் கும்போது அந்த டெஸ்டர் பிரகாசமாக எரிந்தது. அதுமட்டுமல்ல இரண்டு டியூப் லைட்டை வயரோ, மின்னிணைப்போ இல் லாமல் கையில் வைத்து நிற்கும்போது அந்த டியூப் லைட்கள் பளிச்சென எரிந்தன. ஆக டவர் லைனுக்கு கீழே நின்ற என் உடலில் மின்காந்த அலைகள் தாக்கம் அளவுக்கதிமாக இருப்பதை அறிந்து கொண்டேன்..

mm

இப்பகுதியிலுள்ள 11 பாராளுமன்ற உறுப்பினர்களை அழைத்து சென்னி மலையில் வருகிற 29-ஆம் தேதி இந்த பிரச்சனைக்கு சரியான தீர்வை நோக்கி அடுத்த கட்ட போராட்டத்தை நடத்த வுள்ளோம். அதுமட்டுமில்லாமல் நாடாளு மன்றத்திலும் இந்த உயர்மின் கோபுர பாதிப்பை வலியுறுத்திப் பேசுவேன். விவசாயிகள் பாதிக்கப்படக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறோம்'' என்கிறார் ஈரோடு தொகுதி நாடாளு மன்ற உறுப்பினர் அ.கணேசமூர்த்தி.

தமிழகத்தின் மேற்கு மண்டலத்தை நெருப்பாக மாற்றியுள்ளது உயர்மின் கோபுர விவகாரம். விவசாய விளை நிலங்கள் வழியாக இந்த மின்கோபுரங் கள் அமைப்பதால் விவசாய நிலம் துண்டுபட்டு தங்களது வாழ்வாதாரம் கேள்விக்குறியாக மாறிவிட்டது என கதறுகின்றன, சுமார் 3 லட்சம் விவசாயக் குடும்பங்கள்.

Advertisment

சத்தீஸ்கர் மாநிலத்திலிருந்து பயணம் செய்யும் இந்த மின்பாதை தமிழகத்தின் மேற்கு மாவட்டமான திருப்பூர் அருகே ராசிபாளையம் அருகிலுள்ள நியூபுகலூர் வரை நீள்கிறது. அங்கு சுமார் 400 ஏக்கரில் அமைக்கப்பட்டுள்ள மின் இருப்பு மையத்திலிருந்துதான் தமிழகத்துக்கும், கர்நாடகா, கேரளா போன்ற பல வெளிமாநிலங் களுக்கும் மின்வினியோகம் பகிர்ந்து கொடுக்கப்பட உள்ளது. தமிழகத்தில் உற்பத்தியாகும் காற்றாலை மின்சாரம், சத்தீஸ்கர் மாநிலத்திலிருந்து வரும் மின்சாரம் ஆகியவை நியூபுகலூரிலிருந்து பிரித்தெடுக்கப்பட்டு அனுப்பப்படுகிறது. இதற்கான மின்பாதையாக உயர் மின்கோபுரங்கள் நிறுவப்படுகின்றன.

mm

சில இடங்களில் 60, 70 அடி வரை பில்லர் அமைக்கப்படுகிறது. இந்த டவர் 25 அடி அகலம் கொண்டது. இதில் செல்லும் மின்சார சுற்றுவட்டப்பாதையில் சுமார் 150 அடிக்கு விவசாயிகள் மரம் நடமுடியாது, கிணறுகள் அமைக்கக்கூடாது. பயிர் மட்டுமே செய்யலாம். சில இடங்களில் டவர் லைன் கிராஸ் ஆகும்போது அந்த விவசாய நிலம் அரை ஏக்கர், ஒரு ஏக்கர்வரை கூட பாதிக்கப்படுகிறது. ஒரு டவருக்கும் மற்றொரு டவருக்கும் இடைவெளி 500 மீட்டர், 800 மீட்டர் என நிலத்திற்குத் தகுந்தாற்போல் மாறுபடுகிறது.

Advertisment

திண்டுக்கல், கரூர், ஈரோடு, திருப்பூர், கோவை, நாமக்கல், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி மற்றும் திருவண்ணாமலை வரை இந்த உயர் மின்கோபுரத் தால் விவசாய நிலங்கள் பாதிக்கப்படுகிறது.

dd

இது சம்பந்தமாக தற்சார்பு விவசாயிகள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பொன்னையன், ""ஒரு விவசாயியின் நிலம் இரண்டாகத் துண்டு படும்போது அந்த விவசாயி எப்படி வாழமுடியும்? இந்த டவர் லைனால் மற்றொரு மிகப்பெரிய பாதிப்பு மின்காந்த அலைகள். இதனால் கேன்சர் உட்பட பல்வேறு நோய்கள் ஏற்படுமென கூறுகிறார்கள். இதையெல்லாம் மீறி அரசு இந்த டவர் லைனை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது. பல்வேறு இடங்களில் இதைத் தடுத்தவர்கள், விவசாயிகளை வலுக்கட்டாயமாக கைதுசெய்து அவர்களை சிறையில் அடைக்கிறார்கள்'' என்றார்.

""எனது நிலத்தை எனது அனுமதியே இல்லாமல் அதிகாரிகள் காவல்துறை துணையுடன் வந்து நிலத்தைப் பிடுங்குகிறார்கள். எதிர்த்துக் கேட்டால் கைது செய்து சிறையில் அடைக்கிறார்கள். எந்த திட்டமும் மக்களின் ஆதர வோடுதான் செயல்படுத்த வேண்டும்; ஆனால் சர்வாதி காரப் போக்குடன் இந்த உயர்மின் கோபுர அமைப்பு வேலையை அரசு செய்கிறது'' என்கிறார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில குழு உறுப்பினர் வி.பி. குணசேகரன்.

""இந்த உயர் மின்கோபுரம் ஒரே ஒரு திட்டம் அல்ல. மொத்தம் 14 திட்டங்களை கையில் வைத்துள்ளார்கள். தமிழகத்தில் ஏராளமான நிலங்கள் வழியாக இந்த டவர் லைனை பிரித்துக் கொண்டு செல்ல உள்ளார்கள். அப்படிப் பார்த்தால் ஒட்டுமொத்தமாகவே தமிழகத்தின் நிலங்களைக் கூறு போட்டு எடுத்துக் கொள்ளும் மத்திய-மாநில அரசுகள். அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், பெரிய செல்வந்தர்கள், அரசியல் வாதிகள் நிலங்கள் பாதிக்கப் படும் எனத் தெரிந்தால் அந்த இடத்தில் டவர் நேராக செல்லாமல் வளைந்து நெளிந்து போகிறது. அப்பாவி விவசாயி யின் ஒரு ஏக்கர், இரண்டு ஏக்கர் விவசாய நிலத்தை அபகரித்துக் கொண்டு செல்கிறார்கள்'' என்றார் இத்திட்ட எதிர்ப்பு ஒருங்கிணைப்புக் குழுவிலுள்ள கவின்குமார்.

இப்பகுதியை சேர்ந்த தி.மு.க. கூட்டணி கட்சிகளின் அனைத்து எம்.பி.க்களும் போராட்ட களத்தில் இறங்கு வதால்... இந்த மின்கோபுர விவகாரத்தில் தங்களுக்கு நீதிகிடைக்கும் என்ற மெல்லிய நம்பிக்கை விவசாயிகளிடம் ஏற்பட்டிருக்கிறது.

-ஜீவாதங்கவேல்