வருகிற நாடாளுமன்றத் தேர்தல் ஒரு பெரிய சதுரங்க ஆட்டத்தையே தமிழக அரசியல் களத்தில் உருவாக்கியுள்ளது. பா.ஜ.க.வுடன் கூட்டணியிலிருந்து விலகி யிருக்கும் அ.தி.மு.க., அ.தி.மு.க.வுக்குப் போட்டியாக கடந்த சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க., பா.ஜ.க. கூட்டணியில் இருந்த கட்சிகளை தங்கள் பக்கம் இழுக்கும் பா.ஜ.க. என தமிழக அரசியலே போட்டிக்கான அரசியலாக மாறிவிட்டது.
கடந்த சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றிருந்தவர் புதிய தமிழகம் கிருஷ்ணசாமி. அவர் பா.ஜ.க. கூட்டணியில் தென்காசி தொகுதியைக் கேட் கிறார். அவரது மகன் ஷ்யாமை வேட்பாளர் ஆக்க முயற்சி செய் கிறார். ஆனால், பா.ஜ.க.வில் ஸ்ரீதர் வேம்பு என்கிற தொழிலதிபர் அவ ரது நண்பரான அனந்தன் அய்யாசாமி என்கிற தலித்தை நிறுத்தி வைக்கிறார். அத்துடன் தென்காசி, திருநெல் வேலி, தூத்துக்குடி ஆகிய தொகுதிகளின் தேர்தல் செலவை நான் பார்த்துக் கொள்கிறேன் என அமித்ஷாவிடம் பேசிவிட்டார். அதனால் கிருஷ்ணசாமிக்கு தொகுதியில்லை. அவரை பா.ஜ.க. கூட்டணியிலிருந்து பிரித்து அ.தி.மு.க. கூட்டணியில் இணைக்க எடப்பாடி பேசி வருகிறார்.
எடப்பாடி அத்துடன் நிற்கவில்லை. அகில இந்திய அளவில் பா.ஜ.க. எதிர்ப்பு முஸ்லிம் வாக்குகள் காங்கிரஸ் கட்சிக்குப் போய்விடாமல் தடுக்க தனித்துப் போட்டியிட்டு அந்த வாக்குகளைப் பிரிப்பவர் அகில இந்திய முஸ் லிம் மஜ்லீஸ் கட்சியின் தலைவர் ஓவைசி. அவர் கடந்த பாராளுமன்றத் தேர்தலில் வேலூர் தொகுதியில் போட்டி யிட்டு தி.மு.க.வுக்குப் போகும் முஸ்லிம் ஓட்டுக்களைப் பிரித்தார். அவ ரை அழைத்து வந்து அ.தி. மு.க.வுடன் கூட்டணி அமைக்க ஒரு டீம் வேகமாக வேலை பார்த்து வருகிறது. எஸ்.டி.பி.ஐ., தமீமுன் அன்சாரி இவர்களுடன் ஓவைசியும் எடப்பாடியுடன் கை கோர்க்கிறார். இது தவிர மைனாரிட்டி சமூகத்தில் சின்னச் சின்ன சர்ச்சுகளை நடத்துபவர்கள், லெட்டர்பேட் முஸ்லிம் அமைப்புகள் என எல்லோரிடமும் அ.தி.மு.க.வினர் பேசி வருகிறார்கள். “வாங்க எடப்பாடியைப் பாத்துட்டுப் போங்க! பணம் வாங்கிக்கோங்க எனக் கூவிக்கூவி அழைப்பதுதான் அ.தி.மு.க. வின் சமீபத்திய மூர் மார்க்கெட் அரசியல்'' என்கிறார்கள் அ.தி.மு.க.வினர். யாராயிருந் தாலும் 20 கோடி கொடுங்க. எம்.பி. சீட்டுல போட்டி போடுங்க, ஜெயிச்சா எம்.பி. தோத்தா உங்களுக்கு கட்டாயம் எம்.எல்.ஏ. சீட் என்பதுதான் எடப்பாடியின் லேட்டஸ்ட் வெல்லமண்டி வியாபாரம்.
சேலம் பாராளுமன்றத் தொகுதியை சேலத்தில் பிரபலமான காண்ட்ராக்டர் கம் ரியல் எஸ்டேட் வியாபாரி வாங்கிவிட்டார். ஈரோடு தொகுதியை ‘ஆற்றல்’ அறக்கட்டளை வைத் திருக்கும் அசோக்குமாருக்கு எடப்பாடி விற்றுவிட்டார். மதுரை தொகுதியை அசோக்குமாரைப் போலவே அ.தி.மு.க.விலிருந்து பா.ஜ.க.வுக்கு வந்த டாக்டர் சரவணன் வாங்கிவிட்டார். விருதுநகர் தொகுதியில் ராஜ் சத்யன், தென்சென்னை டி.ஜெயக்குமார் மகன் ஜெயவர்த்தன், ராமநாதபுரம் அன்வர் ராஜா, கிருஷ்ணகிரி கே.பி.முனுசாமி மகன், நெல்லை அம்மா செல்வக்குமார், கரூர் எம்.ஆர்.விஜய பாஸ்கர், கன்னியாகுமரி நாசரேத் பசீலியான் என அ.தி.மு.க. லிஸ்ட் ரெடியாகிக் கொண்டிருக்கிறது. இதில் காசு தர மறுத்த வளர்மதியின் மகனுக்கு சீட் இல்லை என்று சொல்லிவிட்டாராம் எடப்பாடி.
தே.மு.தி.க., பா.ம.க. இரண்டு கட்சிகளும் அ.தி.மு.க.வுக்கு வரும் என எடப்பாடி எதிர்பார்த்தார். கள்ளக்குறிச்சியில் விஜயகாந்த் அமைத்த பேருந்து நிறுத்த நிழற்குடையை ஒரு கால்வாய் தோண்டுவதற்காக உள்ளாட்சி அமைப்பு இடித்து விட்டது. விஜயகாந்த் மறைவுக்குப் பிறகு ஆளும் தி.மு.க. தலைமை பிரேமலதாவிடம் நெருக்கமாக இருக்கிறது. விஜயகாந்தின் அஞ்சலி நிகழ்வில் முதல்வருக்கு பிரேமலதா நன்றி கூறினார். ஒரு போனில் சொன்னாலே நிழற்குடை அகற்றல் விவகாரம் முடிவுக்கு வந்துவிடும். அதை மறுத்து 20ஆம் தேதி கள்ளக்குறிச்சியில் உண்ணாவிரதம் என தி.மு.க. அரசைக் கண்டித்து போராட்டத்தை அறிவித்திருக்கிறார் பிரேமலதா. இது அவர் பா.ஜ.க. கூட்டணிக்குப் போவதற்கான அடையாளம்.
பா.ம.க.வும் பா.ஜ.க. கூட்டணிக்கு செல்கிறது. அன்புமணிமேல் இந்தூர் மருத்துவக் கல்லூரிக்கு அனுமதி கொடுத்தது தொடர்பான வழக்கு இருக்கிறது. ஆகவே, பா.ம.க., தே.மு.தி.க., பா.ஜ.க., ஜான் பாண்டி யன், ஓ.பி.எஸ்., டி.டி.வி., சசிகலா என ஒரு அணியை பா.ஜ.க. அமைத்து வருகிறது. எஸ்.டி.பி.ஐ. ஒவைசி கட்சி, புதிய தமிழகம் என ஒரு அணியை அ.தி.மு.க. அமைத்து வருகிறது. தி.மு.க. கூட்டணியில் புதிதாக கமல் கட்சி ம.நீ.ம. இணைந்து களம் காண்கிறது. நாம் தமிழர் கட்சியை அ.தி.மு.க. கூட்டணியில் கொண்டுவர எடப்பாடி செய்த முயற்சி தோல்வியில் முடிந்தது.
தி.மு.க. கூட்டணியில் எம்.பி. வேட் பாளர்கள் தேர்வு மும்முரம் அடைந்துள்ளது. பெரும்பாலான பழைய எம்.பி.க்களுக்கு சீட் இல்லை. அதேபோல் கூட்டணிக் கட்சிகளில் தொகுதிகளும் மாறும் என அலற வைக்கும் செய்திகள் தி.மு.க. கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அடுத்த மாதம் முதல்வர் வெளிநாடு செல்கிறார். அதன்பிறகு வேட் பாளர், தொகுதி பற்றிய பேச்சுவார்த்தைகள் தி.மு.க. கூட்டணியில் முடிவு செய்யப்படும் என்கிறது தி.மு.க. வட்டாரங்கள்.