எம்.பி. தொகுதி குறைப்பு! பா.ஜ.க. சூழ்ச்சியை முறியடிக்கும் முதல்வர்!

ss

நாடாளுமன்றத் தொகுதி மறுவரையறையின் மூலம் தமிழகத்தில் எம்.பி.க்களின் எண்ணிக்கையை குறைக்க நடக்கும் ஆபத்தை தடுத்து நிறுத்த, அனைத்துக் கட்சிக் கூட்டத்தை மார்ச் 5-ந்தேதி கூட்டியிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின்.

இது குறித்து அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கு கடிதம் எழுதியுள்ள ஸ்டாலின், "2026 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையிலான மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கை மிகுந்த ஆபத்தானது. நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டின் பலம் குறைகிறது. தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவத்தில் சமரசம் என்கிற பேச்சுக்கே இடமில்லை. தமிழ்நாட்டின் எதிர் காலத்தைப் பாதிக்கும் இந்த மிக முக்கியப் பிரச்சனை யைப் பற்றி ஆலோசிக்க அனைத்துக் கட்சிகளையும் அழைக்கிறேன். கட்சி வேறுபாடுகளைக் கடந்து ஓரணியில் திரள்வோம்; சூழ்ந்துள்ள ஆபத்தை நம் ஒற்றுமையால் வெல்வோம்'’என்று குறிப்பிட்டிருக்கிறார்.

ss

பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய முக்கிய அறிவிப்புகள் குறித்த இறுதிக்கட்ட ஆலோசனைக்காக 25-ந்தேதி அமைச்சரவையை கூட்டி விவாதித்தார் முதல்வர் ஸ்டாலின். அதில், ’ஒன்றிய அரசின் மறு சீரமைப்பு நடவடிக்கையின் ஆபத்தை பற்றியும் விளக்கியிருக்கிறார். அப்போது, ”துவக்க நிலையிலேயே இந்த ஆபத்தை தடுத்தாக வேண்டும்; தமிழ்நாட்டின் எம்.பி.க்களின் எண்ணிக்கையை குறைக்கத் திட்டமிடும் பா.ஜ.க.வின் அரசியல் சதியை முறியடிக்க வேண்டும். இந்த பிரச்சனையில், நாம் மட்டும் முடிவுகளை எடுப்பதற்கு பதிலாக, அனைத்துக் கட்சி தலைவர் களையும் அழைத்து விவாதித்து முடிவெடுக்கலாம் என அமைச்சரவையில் வலியுறுத்தப்பட்டது. அதன்படி, அனைத்துக் கட்சிகளின் கூட்டத்தைக் கூட்டியுள்ளார் முதல்வர்” என்கின்றனர்.

முதல்வர் ஸ்டாலின் திடீரென்று இப்படி ஒரு பிரச்சனையை கையிலெடுக்க வேண்டிய அவசியம் என்ன? தொகுதி மறுசீரமைப்பின் பின்னணிகள் என்ன? என்பது பற்றி பல்வேறு தரப்

நாடாளுமன்றத் தொகுதி மறுவரையறையின் மூலம் தமிழகத்தில் எம்.பி.க்களின் எண்ணிக்கையை குறைக்க நடக்கும் ஆபத்தை தடுத்து நிறுத்த, அனைத்துக் கட்சிக் கூட்டத்தை மார்ச் 5-ந்தேதி கூட்டியிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின்.

இது குறித்து அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கு கடிதம் எழுதியுள்ள ஸ்டாலின், "2026 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையிலான மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கை மிகுந்த ஆபத்தானது. நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டின் பலம் குறைகிறது. தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவத்தில் சமரசம் என்கிற பேச்சுக்கே இடமில்லை. தமிழ்நாட்டின் எதிர் காலத்தைப் பாதிக்கும் இந்த மிக முக்கியப் பிரச்சனை யைப் பற்றி ஆலோசிக்க அனைத்துக் கட்சிகளையும் அழைக்கிறேன். கட்சி வேறுபாடுகளைக் கடந்து ஓரணியில் திரள்வோம்; சூழ்ந்துள்ள ஆபத்தை நம் ஒற்றுமையால் வெல்வோம்'’என்று குறிப்பிட்டிருக்கிறார்.

ss

பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய முக்கிய அறிவிப்புகள் குறித்த இறுதிக்கட்ட ஆலோசனைக்காக 25-ந்தேதி அமைச்சரவையை கூட்டி விவாதித்தார் முதல்வர் ஸ்டாலின். அதில், ’ஒன்றிய அரசின் மறு சீரமைப்பு நடவடிக்கையின் ஆபத்தை பற்றியும் விளக்கியிருக்கிறார். அப்போது, ”துவக்க நிலையிலேயே இந்த ஆபத்தை தடுத்தாக வேண்டும்; தமிழ்நாட்டின் எம்.பி.க்களின் எண்ணிக்கையை குறைக்கத் திட்டமிடும் பா.ஜ.க.வின் அரசியல் சதியை முறியடிக்க வேண்டும். இந்த பிரச்சனையில், நாம் மட்டும் முடிவுகளை எடுப்பதற்கு பதிலாக, அனைத்துக் கட்சி தலைவர் களையும் அழைத்து விவாதித்து முடிவெடுக்கலாம் என அமைச்சரவையில் வலியுறுத்தப்பட்டது. அதன்படி, அனைத்துக் கட்சிகளின் கூட்டத்தைக் கூட்டியுள்ளார் முதல்வர்” என்கின்றனர்.

முதல்வர் ஸ்டாலின் திடீரென்று இப்படி ஒரு பிரச்சனையை கையிலெடுக்க வேண்டிய அவசியம் என்ன? தொகுதி மறுசீரமைப்பின் பின்னணிகள் என்ன? என்பது பற்றி பல்வேறு தரப்புகளிடம் விசாரித்தோம்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவின் புதிய நாடாளுமன்றக் கட்டடத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி. அப்போது, கட்டடத்தின் அருமை பெருமைகளை எல்லாம் சுட்டிக்காட்டி பேசிவிட்டு, ”நாடாளு மன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை வருங்காலத்தில் அதிகரிக்கும். அதனால் தான் புதிய நாடாளுமன்றம் கட்டுவது காலத்தின் தேவையாக இருந்தது” என்றார்.

பிரதமர் மோடியின் பேச்சின் உள்ளர்த்தம் அறிந்த தமிழகம் உள் ளிட்ட தென்மாநிலங்களில் அப்போதே சர்ச்சைகள் எழுந்தன. நாடாளுமன்றத் தில் தென் மாநிலங்களின் பிரதிநிதித் துவத்தை குறைக்கும் முயற்சி இது என்கிற விமர்சனங்களும் எதிரொலித்தன. இதனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக அமைதியாக இருந்தது இந்த பிரச்சனை.

இந்த நிலையில்தான், ”மக்கள் தொகை கணக்கெடுப்பினை 2026-ல் முடிக்க ஒன்றிய அரசு தீவிரமாகத் திட்டமிடுகிறது. அதாவது, 2029 நாடாளுமன்றத் தேர்தலை மையப்படுத்தி யும், ஒரே நாடு ஒரே தேர்தல் கொள்கையை மனதில் நிறுத்தியும் இந்த திட்டத்தினை ஒன்றிய அரசு முன்னெடுக்கிறது. மக்கள் தொகை கணக்கெடுப்பின் புள்ளிவிபரங்களை வைத்து நாடாளுமன்ற தொகுதிகளில் மறுசீரமைப்பு நடவடிக்கையும் தொடங்கும்.

அதன் மூலம், தமிழ் நாட்டில் எம்.பி. தொகுதிகள் குறைவதற்கு அதிக வாய்ப்பு இருக்கிறது. அப்படி, எம்.பி.க்களின் எண் ணிக்கை குறைவது எதிர்காலத்தில் அரசியல் ரீதியாகவும், பொருளாதாரம்- கல்வி- மொழி- வளர்ச்சி உள்ளிட்ட பல்வேறு காரணிகள் ரீதியாகவும் தமிழகம் மிகப்பெரிய ஆபத்தை எதிர்கொள்ள வேண்டியதிருக்கும். இப்போதே விழித்துக்கொள்ளுங்கள் என்று முதல்வர் ஸ்டாலினுக்கு தகவல் சொல்லப்பட்டிருக்கிறது. இதனையடுத்துதான், இந்த விவகாரத்தில் சீரியஸ் காட்டியிருக்கிறார் முதல்வர்”என்கின்றன உளவுத்துறை வட்டாரங்கள்.

தொகுதி மறுவரையறை செய்வதன் அடிப்படை நோக்கம் குறித்து ஓய்வுபெற்ற தேர்தல் ஆணையத்தின் முன்னாள் அதிகாரி ஒருவரிடம் நாம் விசாரித்தபோது, "இந்தியா சுதந்திரமடைந்ததற்கு பிறகு மக்கள் தொகை அடிப்படையில் ஒவ்வொரு 10 ஆண்டுகளை கடந்து நாடாளுமன்ற தொகுதிகளை மறுசீரமைப்பு செய்யவேண்டும் என தீர்மானிக்கப்பட்டது. இதற்காக, தொகுதி மறுசீரமைப்பு ஆணைய சட்டமும் 1952-ல் உருவானது. அப்போது நாடாளுமன்றத்தின் உறுப்பினர் எண்ணிக்கை 494.

mp

அதன்பிறகு 1963, 1973-களில் எம்.பி.க்களின் எண்ணிக்கையும் அதிகரித்தது. 1973-ல் எம்.பி.க்களின் எண்ணிக்கை 543. இப்போது வரை இந்த எண்ணிக்கையே நீடித்துவருகிறது. இதற்கு காரணம், இந்திரா காந்தி. 1975-ல் பிரதமராக இருந்த இந்திரா, நாடு முழுவதும் எமர்ஜென்சியை டிக்ளேர் செய்ததுடன் மக்கள் தொகையை கட்டுப்படுத்தும் திட்டத்தினையும் தீவிரப்படுத்தினார். அந்த திட்டத்தை முழு மையாக நிறைவேற்றுவதற்காக, தொகுதி மறு சீரமைப்பை 25 ஆண்டுகள் நடத்தக்கூடாது என முடிவெடுத்து அறிவித்தார். இதற்காக, அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தமும் கொண்டுவந்தார் இந்திராகாந்தி.

இதனையடுத்து, மக்கள் தொகை அதிகரிப்பைக் கட்டுப்படுத்தும் விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்தியது மத்திய அரசு. அதற்காக பல நடவடிக்கைகளும் எடுக்கப் பட்டன. இந்த சூழலில், 25 ஆண்டுகால அவகாசம் 2001-ல் முடிந்தபோது, தொகுதி மறுசீரமைப்பு செய்ய வேண்டிய சூழல் உருவானதால், அன்றைக்கு மத்தியில் ஆட்சியில் இருந்த பா.ஜ.க. தலைமையிலான தி.மு.க. உள்ளிட்ட தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் பிரதமர் வாஜ்பாய், மக்கள் தொகையை கட்டுப்படுத்தும் திட்டத்திற்கான கால அவகாசத்தை மேலும் 25 ஆண்டு களுக்குத் தள்ளிவைத்தார். இதற்காக அரசியலமைப்பு சட்டத்தில், 84-வது முறையாக திருத்தம் செய்யப்பட்டது.

அந்த 25 ஆண்டு கால அவ காசம்தான் 2026-ல் முடிவுக்கு வருகிறது. முந்தைய பிரதமர்கள் போல, தற்போதைய பிரதமர் மோடி கால அவகாசத்தை நீட்டிக்க விரும்பவில்லை எனத் தெரிகிறது. அதனால்தான், தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கையை கையிலெடுக்கிறார்கள். இந்த நடவடிக்கை, மக்கள் தொகையை கட்டுப் படுத்தும் திட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தியிருக்கும் தமிழ்நாடு உள்ளிட்ட தென்மாநிலங்களை மிகவும் பாதிக்கும் அபாயம் இருக்கிறது''’என்று விரிவாக சுட்டிக்காட்டினார்.

எந்த வகையில் தமிழகத்திற்கு ஆபத்து என மேலும் விசாரித்தபோது, "மக்கள் தொகை கட்டுப்படுத்தும் திட்டத்தின்படி, நாம் இருவர் நமக்கு இருவர் என்கிற கோட்பாட்டினை முழுமையாக நிறைவேற்றிய மாநிலம் தமிழ்நாடு. அதேபோல, கேரளம், கர்நாடகா, ஆந்திரம் மாநிலங்களும் இதில் அடங்கும். ஆனால், உத்தரபிரதேசம், பீகார், ராஜஸ்தான், மத்தியபிரதேசம் உள்ளிட்ட வட மாநில அரசுகள் இதனை நிறைவேற்ற அக்கறை காட்டவில்லை. இதனால், அங்கெல்லாம் மக்கள் தொகை ஏகத்துக்கும் அதிகரித்துள்ளன. சுருக்கமாகச் சொல்வதானால், இந்தியாவின் மொத்த மக்கள் தொகையில் 49 சதவீதம் பீகார், உ.பி., ம.பி, மேற்குவங்கம், மகாராஷ்டிரா ஆகிய 5 மாநிலங்களில் மட்டுமே இருக்கின்றனர்.

அந்த வகையில், தொகுதி மறுசீரமைப்பு செய்தால் இந்த 5 மாநிலங்களுடன் மேலும் சில வட மாநிலங்கள் மட்டுமே அதிக எண்ணிக் கையில் எம்.பி.க்களை பெறுவார்கள். அதனால், மக்கள் தொகை கட்டுப்பாடு இந்தியா முழுவதும் நிலைபெறாமல் ஏற்றத் தாழ்வுகளுடன் இருக்கும் சூழலில், மக்கள் தொகை அடிப்படையில் மறுசீரமைப்பு செய்தால் தென்மாநிலங்கள் பெரிதும் பாதிக்கப்படும்.

குறிப்பாக, ஒவ்வொரு மாநிலத்திலிருந்தும் எத்தனை எம்.பி.க்கள் நாடாளுமன்றத்துக்குள் செல்லவேண்டும் என்பதை மறுசீரமைப்பு என்கிற பேரில் திட்டமிடுகிறார்கள். இதில், அரசியல் சூழ்ச்சியும் சதியும் இருக்கிறது. அதாவது, ஒரு தொகுதிக்கு குறிப்பிட்ட எண்ணிக்கையில் மக்கள் தொகையை நிர்ணயிப்பது. அந்த வகையில், 2 விதமான திட்டத்தை வைத்திருக்கிறது ஒன்றிய அரசு.

முதல் திட்டம், எம்.பி.க்களின் எண்ணிக்கையை 543-லிருந்து 848 ஆக அதிகரிக்கச் செய்வது. மற்றொன்று, 543-யை மாற்றாமல் மறுசீரமைப்பு செய்வது. இதில் எதைச் செய்தாலும் தமிழகம் பாதிக்கும். முதல் திட்டத்தின்படி 848ஆக எண்ணிக்கை அதிகரித்தால், தமிழகத்திலுள்ள 39 தொகுதிகளுடன் கூடுதலாக 10 தொகுதிகள் மட்டுமே கிடைக்கும். ஆனால், மக்கள் தொகை அதிகமாக இருப்பதால் உத்தரப்பிரதேசத்திற்கு 63 தொகுதிகளும், பீகாருக்கு 39 தொகுதிகளும், ராஜஸ்தானுக்கு 25 தொகுதிகளும் கூடுதலாக கிடைக்கும். வடமாநிலங்களில் மட்டுமே இப்படி அதிகபட்ச கூடுதல் தொகுதிகள் கிடைக்க வழிவகை காணப்பட்டுள்ளது.

இரண்டாவது திட்டத்தின்படி, தற்போதுள்ள 543 தொகுதிகளை மாற்றாமல் தொகுதி மறுசீரமைப்புச் செய்யப்படும்போது, 39 எம்.பி.க்களைப் பெற்றுள்ள தமிழ்நாடு 8 தொகுதிகளை இழந்து அதன் எண்ணிக்கை 31 ஆகக் குறையும். அதாவது, குறைந்தளவு மக்கள் தொகை கொண்ட தொகுதியை மற்றொரு தொகுதியுடன் இணைத்துவிடுவர். தமிழகத்தில் குறைந்தால், வடமாநிலங்களிலும் குறையத்தானே செய்யும் என வாதிடுவார்கள். அதில் உண்மையில்லை. ஏனெனில், மக்கள் தொகை அதிகரிப்பால் வட மாநிலங்களுக்கு தற்போதுள்ள எண்ணிக்கையைவிட கூடுதல் தொகுதிகள் கிடைக்கும்.

இப்படி, ஒன்றிய பா.ஜ.க. அரசு திட்ட மிடும் 2 சூழ்ச்சிகளிலும் தமிழ்நாடுதான் அதிகம் பாதிக்கும். அதனால், இதனை அனுமதித்தால், எதிர்காலத்தில் தமிழகத்தின் கல்வி, பொருளாதாரம், சுகாதாரம், நிதி, வளர்ச்சி, மொழி உள்ளிட்ட அனைத்து உரிமைகளையும் ஒன்றிய அரசு பறித்துக்கொள்ளும். அதுமட்டு மல்ல, நாடாளுமன்ற பெரும்பான்மையை வைத்து தமிழகத்தையும், தமிழினத்தையும் ஒடுக்கும் நடவடிக்கைகள் தீவிரமாகும். அதனால், டெல்லியின் சூழ்ச்சியை முறியறிடிக்க வேண்டியது காலத்தின் தேவை. இல்லை யெனில், டெல்லியின் அடிமையாகும் தமிழ்நாடு''’என்று விவரிக்கிறார்கள் தமிழுணர்வு மிக்க ஐ.ஏ.எஸ். அதிகாரிகள்.

nkn010325
இதையும் படியுங்கள்
Subscribe