ந்தனக் கடத்தல் வீரப்பனைத் தேடும் வேட்டை வீரப்பனோடு மட்டும் சம்பந்தப்பட்டதில்லை... வீரப்பனைத் தேடுகிறோம், வீரப்பனைப் பிடிக்கிறோம் என்ற பெயரில் காவல்துறையினர் அப்பகுதி மலைவாழ் கிராம மக்களை அடித்துத் துன்புறுத்தி, சித்ரவதை செய்து கொடுமைப்படுத்தினர். வீரப்பனை தேடிப் பிடிப்பதற்காக காவல்துறை முயற்சி மேற்கொண்டுவந்த வருடங்களில், அவன் பிடிபடாததால் சத்தியமங்கலத்தைச் சுற்றியுள்ள மலைப் பகுதிகளில் வசித்த மக்கள், காவல்துறையின் கெடுபிடிக்கும் அடக்குமுறைகளுக்கும் ஆளாகினர்.

vv

வீரப்பனது முகமே தெரியாதிருந்த சூழலில்... வீரப்பன் யார் என அடையாளப்படுத்தியதோடு, காவல்துறையின் அத்துமீறலுக்கு ஆளாகி துயரம் அனுபவித்துவந்த சுற்றுவட்டாரப் பகுதி மக்களின் துயரத்தையும் நக்கீரன்தான் தொடர்ந்து அடையாளம் காட்டி வந்தது.

1993-ஆம் ஆண்டு, சத்தியமங்கலத்தைச் சுற்றியுள்ள கிராமங்களில் வசிக்கும் மக்களை, வீரப்பனை பிடிக்கப்போகிறோம் என்று கிளம்பிய காவலர்கள் விசாரணை என்ற பெயரில் அழைத்துச்சென்று குழந்தைகள், பெண்கள், வயதானவர்கள் என்று பாரபட்சம் பார்க்காமல் ஈவிரக்கமின்றி கடுமையாகத் தாக்கினார்கள். பலரை சிறைக்குள்ளேயே அடித்தும், துப்பாக்கியால் சுட்டும் கொன்றிருக்கிறார்கள். சிறைக்குள் வைத்து தலைகீழாக கட்டிவைத்து அடிப்பது, உருட்டுக் கட்டையால் அடிப்பது, மின்சாரத்தை உடம்பில் செலுத்துவது, ஆணிச் செருப்பால் அடிப்பது, காயத்தில் மிளகாய்ப் பொடியை தூவுவது, பெண்களை கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்வது, அப்படி பிறக்கும் குழந்தைகளை விஷ ஊசி செலுத்தி கொல்வது, தடா சட்டத்தின் கீழ் ஒன்பதரை ஆண்டுகள் சிறையில் அடைத்தது என இன்னும் ஜீரணிக்க முடியாத தாக்குதலை அந்த மக்களுக்கு போலீசார் கொடுத்தார்கள்.

Advertisment

காவல்துறையின் இந்த கொடூர தாக்குதலை நக்கீரனில் தொடர்ந்து செய்தியாக வெளியிட்டது மட்டுமின்றி டில்லியிலுள்ள மனித உரிமை ஆணையத்தில் நக்கீரன் சார்பில் புகாரும் கொடுக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் பழங்குடியின அமைப்புகள் சார்பாகவும் புகார்கள் கொடுக்கப்பட்டது. இந்நிலையில் தொடர் அழுத்தத்திற்குப் பிறகு சதாசிவம் கமிட்டி அமைக்கப்பட்டு, அவர்கள் மக்களை நேரடியாகச் சந்தித்து 6 அமர்வுகளாக விசாரணை மேற் கொண்டனர்.

vv

பின் உயர்நீதிமன்றத்தில் இது வழக்காக தொடுக்கப்பட்டது. இதில் பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் எஸ்.டி.எஃப். அதிகாரிகள் என சுமார் 300-க்கும் அதிகமானோர் தங்களின் வாக்குமூலங் களைப் பதிவு செய்தனர். இக்கமிட்டியானது 192 பாதிக்கப்பட்ட சாட்சியங்களில் 89 நபர்களைத் தேர்வு செய்தது. இவர்களுக்கு, 2000-ஆம் ஆண்டு கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தலின்போது வீரப்பனால் கோரிக்கை வைக்கப்பட்டு, இரு மாநில அரசுகளால் தலா ரூபாய் 5 கோடி ஒதுக்கப்பட்டி ருந்தது. அந்த 10 கோடியில் இரு மாநில அரசுகளும் 2.80 கோடி இடைக்கால இழப்பீடாகக் கடந்த 2007-ஆம் ஆண்டு கொடுத்திருந்தன.

Advertisment

இந்நிலையில் இடைக்கால இழப்பீடு கொடுத்து 14 ஆண்டுகள் ஆகிய பின்பு, பாதிக்கப்பட்ட மக்களே ஒன்றுகூடி "விடியல் மக்கள் கூட்டமைப்பு -லக்கம்பட்டி' என்ற பெயரில், முருகேசன் தலைமையில் சென்னை உயர்நீதி மன்றத்தில் மீதமுள்ள 7.20 கோடி பணத்தையும் முழு நிவாரணமாக வழங்கவேண்டும் என்று வழக்குத் தொடர்ந்துள்ளனர். இந்த மனு கடந்த 12-03-2021-ல் நீதிபதி அப்துல்குத்தூஸ் முன் விசாரணைக்கு வந்தது.

அக்டோபர் 27-ஆம் தேதி விசாரணையில் நீதிமன்றம், தலைமைச் செயலருக்கு பதிலளிக்குமாறு உத்தரவு பிறப்பித்தது. அதில், "ஏன் இந்த மக்களுக்கு மீதமுள்ள நிதி வழங்கவில்லை, வழங்குவோம் என்றால் எப்போது? வழங்கமாட்டோம் என்றால் ஏன், என்ன காரணம்? இதை 4 வாரத்திற்குள் விசாரித்து விளக்கமளிக்க வேண்டும்' என்று உத்தரவு பிறப்பித்தது.

vv

இந்நிலையில் கர்நாடக கூட்டு அதிரடிப் படையால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக தொடர்ந்து குரல் கொடுத்துவரும் மகளிர் பிரிவான இந்திய மாதர் தேசிய சம்மேளன தலைவி ஆனிராஜா, கடந்த 20-ஆம் தேதி பிற்பகல் 12:30-க்கு தலைமைச் செயலாளரை சந்தித்தார். அவரோடு நன்னிலம் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பத்மாவதி, "விடியல் பீபிள் பவுண்டேஷன்' மேனேஜிங் டைரக்டர் முருகேசன் மற்றும் பாதிக்கப்பட்ட மக்கள் அனைவரும் உடனிருந்தனர். இறுதியாக, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினையும் நேரில் சந்தித்துப் பேசினர். அப்போது முதல்வரும், "இந்த மனுமீது கூடிய விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்'' என்று உறுதியளித்துள்ளார்.

"விடியல் பீபிள் பவுண் டேஷன்'' மேனேஜிங் டைரக்டர் முருகேசனிடம் நாம் இந்த சந்திப்பு குறித்து கேட்டபோது, “"எங்கள் வாழ்க்கையில் நாங்கள் படாத கஷ்டங்கள் இல்லை. என் வீட்டில் இரண்டுபேரை காவலர்கள் கொன்றுவிட்டார்கள். என்னோடு இருக்கும் வயதான பெண்கள் அனைவரும் தங்களுடைய வீட்டிலிருக்கும் அனைத்து ஆண்களையும் இழந்துள்ளார்கள். இப்போது தான் எங்களுடைய பல ஆண்டு கால போராட்டத்திற்கு ஒளி கிடைக்க ஆரம்பித்துள்ளது. வழக்கில் தொடர்புடையவர்களுக்கு வயதாகி விட்டது அவர்களை அழைத்துக்கொண்டு நானும் நடையாய் நடக்கிறேன்.

எங்கள் கஷ்டங்களை உணர்ந்த கலைஞர், அவரது ஆட்சியில் முதற் கட்டமாக 2.80 கோடி ரூபாயை தரவேண்டு மென அறிவித்தார். தற் போது ஆட்சிப் பொறுப் பில் அவரது மகன் ஸ்டாலின் இருக்கிறார். அவருக்கு எங்கள் கஷ்டம் தெரியும். எங்களை நேரில் அழைத்து விசாரித்தது மிகுந்த மகிழ்ச்சியையும் நம்பிக்கையையும் தரு கிறது''’என்றார்.