ஆந்திரா சேஷாசலம் செம்மரக் கடத்தல் என்பது இந்தியா முழுவதும் புகழ்பெற்றது. செம்மரம் வெட்டவந்தவர்கள், வெட்டியவர்களென ஆயிரக்கணக்கான வழக்குகள் சித்தூர், கடப்பா, அனந்தப்பூர் மாவட்டங்களில் உள்ளன. கடந்த செப்டம்பர் 1-ஆம் தேதி திருப்பதியில் உள்ள செம்மரக் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் செம்மரம் வெட்ட வந்தவர்கள் என 20 பேரை நகரிபுத்தூர் அருகே கைது செய்தனர். கைதானவர்களில் 5 பேர், 18 வயது நிரம்பாத சிறார்கள் என்பதை அறிந்து அதிர்ச்சியாகினர்.
கைதானவர்கள் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவர்களென்றும், அமரேசன் என்கிற புரோக்கர்தான் இவர்களை அனுப்பியுள்ளான் என்கிற தகவலையும் வைத்துக்கொண்டு யாரிந்த அமரேசன்?, இப்படி எவ்வளவு சிறார்களை சட்டவிரோத தொழிலுக்கு கொண்டுவந்துள்ளான் என கண்டுபிடிக்க டி.எஸ்.பி முரளிதர் தலைமையில் டீம் அமைத்து விசாரிக்க உத்தரவிட்டுள்ளார் செம்மரக் கடத்தல் தடுப்பு அதிரடிப்படை பிரிவின் எஸ்.பி. சுந்தர்ராவ். ஆகஸ்ட் மாதம் மத்தியில் திருவண்ணாமலை மாவட்டம், ஜமுனாமத்தூர் பட்டிகொல்லை கிராமத்தை சேர்ந்த மேல்நிலைப்பள்ளியில் படித்துவந்த 16 வயதுக்குட்பட்ட 4 பெண் பிள்ளைகள், கல்லாத்துர் கிராமத்தை சேர்ந்த 3 பெண்
ஆந்திரா சேஷாசலம் செம்மரக் கடத்தல் என்பது இந்தியா முழுவதும் புகழ்பெற்றது. செம்மரம் வெட்டவந்தவர்கள், வெட்டியவர்களென ஆயிரக்கணக்கான வழக்குகள் சித்தூர், கடப்பா, அனந்தப்பூர் மாவட்டங்களில் உள்ளன. கடந்த செப்டம்பர் 1-ஆம் தேதி திருப்பதியில் உள்ள செம்மரக் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் செம்மரம் வெட்ட வந்தவர்கள் என 20 பேரை நகரிபுத்தூர் அருகே கைது செய்தனர். கைதானவர்களில் 5 பேர், 18 வயது நிரம்பாத சிறார்கள் என்பதை அறிந்து அதிர்ச்சியாகினர்.
கைதானவர்கள் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவர்களென்றும், அமரேசன் என்கிற புரோக்கர்தான் இவர்களை அனுப்பியுள்ளான் என்கிற தகவலையும் வைத்துக்கொண்டு யாரிந்த அமரேசன்?, இப்படி எவ்வளவு சிறார்களை சட்டவிரோத தொழிலுக்கு கொண்டுவந்துள்ளான் என கண்டுபிடிக்க டி.எஸ்.பி முரளிதர் தலைமையில் டீம் அமைத்து விசாரிக்க உத்தரவிட்டுள்ளார் செம்மரக் கடத்தல் தடுப்பு அதிரடிப்படை பிரிவின் எஸ்.பி. சுந்தர்ராவ். ஆகஸ்ட் மாதம் மத்தியில் திருவண்ணாமலை மாவட்டம், ஜமுனாமத்தூர் பட்டிகொல்லை கிராமத்தை சேர்ந்த மேல்நிலைப்பள்ளியில் படித்துவந்த 16 வயதுக்குட்பட்ட 4 பெண் பிள்ளைகள், கல்லாத்துர் கிராமத்தை சேர்ந்த 3 பெண் பிள்ளைகள் என ஜமுனாமத்தூரை சேர்ந்த 16க்கும் மேற்பட்ட சிறுமிகள் சேலத்தில் உள்ள ஒரு பனியன் கம்பெனியில் வேலை செய்துவந்துள்ளனர். அவர்களில் சிலர் தங்களை மீட்க வேண்டும் என தாங்கள் படிக்கும் அரசுப்பள்ளி ஆசிரியர் மகாலட்சுமியிடம் அழுதுள்ளனர். அவர் வழியாக அரசின் குழந்தைகள் நல பாதுகாப்பு அமைப்பு மூலம் சமூக ஆர்வலர்கள் உதவியுடன் பெரும் போராட்டத்துக்கு பின்பு அந்தப் பெண்பிள்ளைகள் மீட்கப்பட்டுள்ளனர். இந்த விவகாரத்தில் குழந்தை தொழிலாளர்களை கம்பெனி களுக்கு அழைத்து சென்றுவிட்ட புரோக்கர்களென திருப்பத்தூர் மாவட்டம் வெங்கலாபுரம் கிராமத்தை சேர்ந்த ஹரி, அவரது மனைவி கற்பகம், சேலம் மாவட்டத்தை சேர்ந்த முத்துசாமி, பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த அழகுவேல் ஆகியோரை ஜமுனாமத்தூர் இன்ஸ்பெக்டர் ஜெனார்த்தனன் கைது செய்து சிறையில் அடைத்துள்ளார்.
மலைவாழ் சிறார்கள் குழந்தை தொழிலாளர்களாக உருவாவது குறித்து மலைவாழ் மக்கள் மத்தியில் இயங்கும் சமூகஆர்வலர்களிடம் கேட்டபோது, ஜவ்வாதுமலை என்பது திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர் மாவட்டங்களை உள்ளடக்கியது. பல ஆண்டுகளாகவே மலைவாழ் மக்களை தவறான வழியில் ஈடுபடுத்த பல கும்பல்கள் உள்ளன. தொடக்கத்தில் சந்தனமரக் கடத்தலுக்கும் பின்பு சாராயம் காய்ச்சி விற்பதற்கும், அதன்பின் செம்மரம் வெட்டிக் கடத்தவும் இவர்களை பயன்படுத்திவந்தார்கள். மலையில் வேலை வாய்ப்பு என்பது மிகமிகக்குறைவு. தரைத்தளத்தில் வசிப்பவர் களுக்கு விவசாயம் இல்லையெனில் கட்டட வேலைக்கு, துணி கடைக்கென வேறு வேலைகளுக்கு செல்ல பல வாய்ப்புகள் உள்ளன. ஆனால் மலைவாசிகளுக்கு விவசாயம் இல்லையெனில் வேறு வேலை பார்க்க அடிவாரத்துக்குத்தான் வரவேண்டும். அதில் பல சிக்கல்கள் உள்ளன. குறைந்த கூலிக்கு மாங்குமாங்கென சலிக்காமல் வேலை செய்வார்கள். அதனால் மலைவாசிகளை கேரளா, ஆந்திரா, கர்நாடகா பகுதிகளை சேர்ந்தவர்கள் வேலைக்கு அழைத்துச் செல்வார்கள். இதற்கென மலை அடிவாரத்திலுள்ள திருப்பத்தூர், வாணியம்பாடி, ஆலங்காயம், போளூர், கண்ணமங்களம், அணைக்கட்டில் புரோக்கர்கள் உள்ளார்கள். இவர்களிடம் சொல்லிவிட்டால் எந்த வேலைக்கு எப்படிப்பட்ட ஆட்கள் தேவையென தேர்வு செய்து அனுப்பி வைப்பார்கள்.
கொரோனாவால் பள்ளி, கல்லூரிகள் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக மூடப்பட்டுள்ளன. விடுதியில் தங்கி படித்த பிள்ளைகள் தங்களது வீடுகளுக்கு வந்துள்ளனர். ஆன்லைன் வகுப்பு என்பதெல்லாம் இவர்களுக்கு எட்டாக்கனி, அதனால் வீட்டிலேயே உள்ளனர். இவர்கள் தான் தற்போது புரோக்கர்களின் குறியாக இருக்கிறது. ஆந்திராவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் அடிக்கடி சுட்டுக்கொல்லப்படுவ தாலும், பிடித்து சிறையில் வைத்து சித்தரவதை செய்வதாலும் மலை வாசிகள் பலர் மரம்வெட்டச் செல்ல தயங்குகின்றனர். இதனால் அதிகமாக பணம் தருகிறோம் என பேசி, இளம் வயதினரை செம்மரம் வெட்டவும், பெண்பிள்ளைகளை கம்பெனி களுக்கும் கொண்டு சென்றுவிடு கிறார்கள். பெண்பிள்ளைகளை அழைத்துச் சென்று கம்பெனியில் விட்டால் தலைக்கு 5 ஆயிரம் என கமிஷன் தருகிறார்கள். அதேபோல் உழைத்து சம்பாதிக்கும் இந்தப் பிள்ளைகளின் சம்பளத்திலிருந்து மாதம் 10 சதவீதம் இந்த புரோக்கர்களுக்கு கமிஷனாக கிடைக்கும், இதில் புரோக்கர்கள் கொழித்துப்போய் வாழ்கிறார்களென விவரித்தார்கள்.
செப்டம்பர் 1-ஆம் தேதி தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர் சரஸ்வதி ரங்கசாமி ஜவ்வாது மலையில் ஆய்வுசெய்தார். இதுகுறித்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் செல்வியிடம் கேட்டபோது, "கிராம அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. சேர்மன் ஆய்வுக்காக வந்தபோது அந்த கமிட்டி கூட்டத்தில், சிறார் திருமணம், அவர்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள், சிறார் தொழிலாளர்கள் குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தவேண்டும், தவறுகள் நடந்தால் குழந்தைகளை காக்க உடனடியாக அதிகாரிகளுக்கு தகவல் கூறவேண்டும்னு சொன்னாங்க. கடந்த 3 மாதத்தில் மட்டும் சேலம், கள்ளக்குறிச்சி, திருப்பூர், ஈரோட்டில் வேலை செய்த சுமார் 20-க்கும் மேற்பட்ட சிறார்களை மீட்டுருக்கோம். புரோக்கர்கள் சிலரை கைது செய்ய நடவடிக்கை எடுத்திருக்கோம்'' என்றார்.
மலையில் வருவாய்த்துறை, ஊரகவளர்ச்சித்துறை, சுகாதாரத்துறை, காவல்துறை, கல்வித்துறை அதிகாரிகளுக் குள் இணைப்பு கிடையாது. சிறார்களுக்கு நடக்கும் பாலியல் விவாகம், பாலியல் பிரச்சினை, சிறார் தொழிலாளர்களாக அனுப்புவது, சட்டவிரோத தொழிலுக்கு பயன்படுத்துவது போன்றவை மேற்கண்ட துறையினருக்குத் தெரியாமல் நடப்பதில்லை. ஆனால் அதனை அதிகாரிகள் சம்பந்தப் பட்ட துறைக்கோ, உயர்அதிகாரிகளிடமோ சொல்வதில்லை. இதுதான் பல பிரச்சினைகள் தீர்க்க முடியாமல் போவதற்கு காரணம். அதிகாரிகளின் மனக்கதவுகள் திறந்தால் மட்டுமே பிரச்சினைகள் தீரும். அதற்கு அரசுதான் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்கிறார்கள்.