தி.மு.க. மாநில இலக்கிய அணி இணைச் செயலாளரும் தி.மு.க. தலைமைக் கழகப் பேச்சாளர்களில் ஒருவருமான ஈரோடு இறைவன், தி.மு.க. இளைஞரணியின் வரலாற்றை ஆவணப் படுத்தும் நோக்கோடு எழுதியுள்ள நூல், "தி.மு.க. இளைஞர் அணி -தாய்ப்பயணம்'. இந்நூல் நக்கீரன் பதிப்பகத்தின் வெளியீடாக, இரண்டு பாகங்களாக வெளிவந்துள்ளது. விலை ரூ.475
தி.மு.க.வின் இளைஞரணி, மிக நீண்ட வரலாறு கொண்டது. அந்த வரலாற்றை இரண்டு பாகங்களுக்குள் கொண்டுவருவது அசாத்தியமான விஷயம். அதனை நூலாசிரியர் ஈரோடு இறைவன் மிகச்சிறப்பாக செய்திருக்கிறார். 1980ஆம் ஆண்டு, ஜூலை 20ஆம் தேதி, மதுரை ஜான்சிராணி பூங்காவில் தி.மு.க. இளைஞர் அணி தொடங்கப் பட்டது. ஆனாலும் அதற்கு முன்னரே வேறு பெயரில் தி.மு.க. இளைஞரணியை மு.க.ஸ்டாலின் உருவாக்கி செயல்படுத்தி வந்திருக்கிறார். அது குறித்த பல்வேறு தகவல்கள் இந்நூலில் விரிவாக இடம்பெற்றுள்ளன.
"1966ஆம் ஆண்டில், கலைஞரின் கோபாலபுரம் இல்லம் அருகே "இளைஞர் தி.மு.க.' அமைப்பினை மு.க.ஸ்டாலின் தொடங்கினார். இதுதான் தி.மு.க. இளைஞரணிக் கான தொடக்கப்புள்ளி. அப்போது தி.மு.க. ஆட்சிப்பொறுப்புக்கே வராத காலகட்டம். மொழிப்போராட்டம், இட ஒதுக்கீடு, பெண்ணுரிமை எனப் பல தளங்களில் போராட் டங்களை முன்னெடுத்து வந்த காலம். அப்போது, இளைஞர் தி.மு.க. சார்பில் போராட்டங்களை முன்னெடுத்ததோடு, தேர்தல் பிரச்சாரங்களிலும் கலந்துகொண்டார் மு.க.ஸ்டாலின்.
பின்னர், தமிழக அளவில், 12.1.1873ஆம் ஆண் டில் "இளைஞர் தி.மு.க.' அணி, கலைஞர் தலைமை யில், பேராசிரியர் அன்பழகனால் தொடங்கப்பட் டது. அப்போது, இளைஞர் தி.மு.க. சார்பில் 'முரசே முழங்கு', 'திண்டுக்கல் தீர்ப்பு' ஆகிய நாடகங்களில், கலைஞர் வேடமிட்டு மு.க.ஸ்டாலின் நடித்த செய்திகளை இந்நூலில் பகிர்ந்திருக்கிறார் நூலாசிரி யர். 31.11.1976ஆம் தேதி மிசா சட்டத்தின்கீழ் தி.மு.க. அரசு கலைக்கப்பட்ட பின்னர், மு.க.ஸ்டாலினை கைது செய்யவந்த காவல்துறையினரோடு கலைஞ ரின் உரையாடல்கள், மிசாவில் கைதான தி.மு.க. நிர்வாகிகள் குறித்த விவரங்கள், சிறைச்சாலை யினுள் நடந்த கொடுமைகள், மிசா காலகட்டத்தின் அரசியல் சூழல் என அனைத்தையும் எழுத்தின் மூலம் காட்சிப்படுத்தியுள்ளார். .
தி.மு.க. இளைஞரணியின் செயலாளராக இருந்த மு.க.ஸ்டா-ன், அவரது அயராத உழைப் பின் காரணமாக தி.மு.க.வில் அடுத்தடுத்த நிலை களுக்கு உயர்ந்து, தி.மு.க. தலைவராக உருவெடுத்து, தமிழக முதல்வராகப் பொறுப்பேற்ற நிலையில், மு.க.ஸ்டா-னுக்கு அடுத்து தி.மு.க. இளைஞ ரணிக்கு தலைமையேற்று, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சிறப்பாக செயல் பட்டுவருவது குறித்த விவரங்களையும் இந்நூலில் விரிவாக விவரித்துள்ளார் நூலா சிரியர். இரண்டு பாகங்களாக வந்துள்ள இந்த நூல், தி.மு.க. இளைஞரணியின் தோற்றம், வளர்ச்சி குறித்து தெரிந்து கொள்ள விரும்பும் அனைவரும் வாங்கிப் பாதுகாக்கவேண்டிய நூலாக அமைந் துள்ளது.
-தெ.சு.கவுதமன்
தொடர்புக்கு : 96770 81373, 044-2688 1700
புத்தகங்களை ஆன்லைன் மூலம் பெற
books.nakkheeran.in