Advertisment

சேர்மன் குவித்ததில் கொசுறு! கவுன்சிலர்களைக் கவனித்த விருதுநகர் எம்.எல்.ஏ.!

ss

தீபாவளி கடந்த பிறகும், கவுன்சிலர்கள் பெற்ற ‘அன்பளிப்பு’ குறித்த விவாதம் தொடர்ந்தபடியே இருக்கிறது விருது நகரில்.

Advertisment

ஆளும் கட்சிக்காரரான துளசிராமன், தோழமைக் கட்சி கவுன்சிலர்களை அழைத்து நடத்திய ரகசியக் கூட்டத்தின் பின்னணியில் ‘சதி’ எதுவும் இருக்குமோ என்று சந்தேகப்பட்ட விருதுநகர் நகர்மன்றத் தலைவர் மாதவன், விஷயத்தை விருதுநகர் எம்.எல்.ஏ. ஏ.ஆர்.ஆர். சீனிவாசனிடம் கூற, அவர் பஞ்சாயத்து நடத்தி தலைக்கு ரூ.25000 தந்து, அதிருப்தி கவுன்சிலர் களை ஆளுக்கொரு திசையாகப் பிரித்துவிட்டார். ஆனாலும்

தீபாவளி கடந்த பிறகும், கவுன்சிலர்கள் பெற்ற ‘அன்பளிப்பு’ குறித்த விவாதம் தொடர்ந்தபடியே இருக்கிறது விருது நகரில்.

Advertisment

ஆளும் கட்சிக்காரரான துளசிராமன், தோழமைக் கட்சி கவுன்சிலர்களை அழைத்து நடத்திய ரகசியக் கூட்டத்தின் பின்னணியில் ‘சதி’ எதுவும் இருக்குமோ என்று சந்தேகப்பட்ட விருதுநகர் நகர்மன்றத் தலைவர் மாதவன், விஷயத்தை விருதுநகர் எம்.எல்.ஏ. ஏ.ஆர்.ஆர். சீனிவாசனிடம் கூற, அவர் பஞ்சாயத்து நடத்தி தலைக்கு ரூ.25000 தந்து, அதிருப்தி கவுன்சிலர் களை ஆளுக்கொரு திசையாகப் பிரித்துவிட்டார். ஆனாலும், மொத்தம் உள்ள 36 கவுன்சிலர்களில் தி.மு.க. -2, காங்கிரஸ் -2, அ.தி.மு.க. -3, சி.பி.எம். -1, சுயேச்சை -1 என 9 கவுன்சிலர்கள் “உங்க பணமே வேண்டாம்...’என்று ஒதுங்கிக்கொண்ட னர். ரகசியக் கூட்டம் நடத்தியதன் பலனாக, வைஸ்-சேர்மன் தனலட்சுமியின் கணவர் துளசிராமனுக்கு ரூ.1 லட்சம் கிடைத்தது.

vv

தி.மு.க. எம்.எல்.ஏ. ஏ.ஆர்.ஆர்.சீனிவாசனின் கவனிப்பை நிராகரித்த 20-வது வார்டு காங்கிரஸ் கவுன்சிலர் செல்வரத்னா சார்பில் நம்மிடம் பேசிய அவருடைய கணவர் திலக் "ஆமாங்க.. துளசிராமன் கூப்பிட் டாருன்னு எல்லாரும் போய் பேசினாங்க. நானும் அவங்ககூட எம்.எல்.ஏ.வ பார்க்கப் போயிருந்தேன். காங் கிரஸ் கவுன்சிலர்கள் மொதல்ல பணம் வாங்கல. பணம் வாங்குறதுல எனக்கு உடன்பாடு இல்ல. நான் வாங்கல...''’என்றார்.

vv

வைஸ்-சேர்மன் தனலட்சுமியின் கணவர் துளசிராமனிடம் பேசினோம். "எல்லா கவுன்சிலர் களும் ஒற்றுமையா இருந்து நல்லது செய்யணும் கிறது என்னோட ஆசை. வார்டுல ஏதாச்சும் நல்லது நடக்கணும்னு பொதுமக்கள் எதிர்பார்க் கிறாங்க. எல்லாரும் நல்லா இருக்கணும்னு எம்.எல்.ஏ. நினைப்பாரு. அதுக்காக அவரு கூப் பிட்டு பேசினாரு. ஏரியாக்கள்ல வேலை நடக்கணும். அதிகாரிகள் நல்லபடியா செஞ்சு கொடுக்கணும்னு.. நாங்க எங்களோட கருத்த சொன்னோம்'' என்றவ ரிடம் "உங்களுக்கு மட்டும் தீபாவளி கவனிப்பு ரூ.1 லட்சமாமே?''’ என்று இடைமறித்தபோது, "நாங் கள்லாம்.. எங்களுக்கு ரூபா வேணாம்னுதான் சொன்னோம். பணத்த பெரிசா நினைக்கக்கூடியவர்கள் நாங்கvv கிடையாது''’என்று ஒரே போடாகப் போட்டார்.

விருதுநகர் எம்.எல்.ஏ. சீனிவாசன் நமது லைனில் வருவதைத் தவிர்த்த நிலை யில், விருதுநகர் நகர்மன்றத் தலைவர் மாதவனைத் தொடர்புகொண்டோம். "உங்களுக்கு யாரோ தப்பான தகவல் கொடுத்திருக்காங்க. மற்ற விபரம் எதுவும் எனக்கு தெரியாது. நீங்க ஏதோ சொல்றீங்க.. நான் கேட்டுக்கிறேன். இல்லாதத மிகைப்படுத்தி சொல்லிருக்காங்க. இத பெருசாக்க ணும்னு நினைக்கிறாங்க''’என்றார்.

கொடுத்தது எம்.எல்.ஏ. என்றாலும் அந்தப் பணம் அவருடையது அல்ல. மத்திய நிதியில்கூட 10 சதவீதம் கமிஷன் அடித்து சேர்மன் குவித்ததில் ‘கொசுறு’ கவுன்சிலர்களுக்குப் போனது. 9 கவுன் சிலர்கள் தீபாவளிப் பணம் பெறாதது, விருதுநகர் நகர்மன்றத்தில் இதுவே முதல்முறை. இதில் கொடுமை என்னவென்றால், தீபாவளி கொண் டாடாத கவுன்சிலர்கள் மூவர் ‘அன்பளிப்பு’ பெற்றதுதான்!

-ராம்கி

nkn291022
இதையும் படியுங்கள்
Subscribe