Advertisment

மாணவிகளுக்கு மார்பிங் டார்ச்சர்! - சிதம்பரம் பல்கலை. சர்ச்சை!

ss

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் முதுகலையில் பயிலும் மாணவிகள் 2 பேருக்கு கடந்த மார்ச் மாத இறுதியில் தொலைபேசி அழைப்பு ஒன்று வந்துள்ளது. அதில் பேசிய வாலிபர் ஒருவர், "என்னம்மா ரேட்? எப்ப வரீங்க?'' எனக் கேட்டுள்ளார். இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த மாணவிகள், ராங் நம்பர் எனக்கூறி இணைப்பைத் துண்டித்துள்ளனர்.

பின்னர் தொடர்ந்து இதுபோன்ற மோசமான பாலியல் நோக்குடனான அழைப்புகள் வந்துள்ளன. எதிர்முனையில் பேசிய ஆண் குரல்களிடம் கடுமையாகப் பேசியபோது, "இன்ஸ்டாவில் முழு உடலை யும் காட்டி நம்பர் போடுறீங்க, கூப்பிட்டா வரமாட்டீங்களா?'' எனக் கேட்டுள்ளனர். இதைக் கேட்டவுடன் மாணவிகளுக்கு தலையே சுற்றியுள்ளது. பின்னர் இன்ஸ்டா பக்கத்திற்கு சென்று பார்த்துள்ளனர்.

Advertisment

aa

அதில் மாணவிகளின் முகத்தை போட்டு நிர்வாணக் கோலத்தில் வேறு ஒரு உடலுடன் மார்பிங் செய்து, "கால்கேர்ள்' என அவ

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் முதுகலையில் பயிலும் மாணவிகள் 2 பேருக்கு கடந்த மார்ச் மாத இறுதியில் தொலைபேசி அழைப்பு ஒன்று வந்துள்ளது. அதில் பேசிய வாலிபர் ஒருவர், "என்னம்மா ரேட்? எப்ப வரீங்க?'' எனக் கேட்டுள்ளார். இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த மாணவிகள், ராங் நம்பர் எனக்கூறி இணைப்பைத் துண்டித்துள்ளனர்.

பின்னர் தொடர்ந்து இதுபோன்ற மோசமான பாலியல் நோக்குடனான அழைப்புகள் வந்துள்ளன. எதிர்முனையில் பேசிய ஆண் குரல்களிடம் கடுமையாகப் பேசியபோது, "இன்ஸ்டாவில் முழு உடலை யும் காட்டி நம்பர் போடுறீங்க, கூப்பிட்டா வரமாட்டீங்களா?'' எனக் கேட்டுள்ளனர். இதைக் கேட்டவுடன் மாணவிகளுக்கு தலையே சுற்றியுள்ளது. பின்னர் இன்ஸ்டா பக்கத்திற்கு சென்று பார்த்துள்ளனர்.

Advertisment

aa

அதில் மாணவிகளின் முகத்தை போட்டு நிர்வாணக் கோலத்தில் வேறு ஒரு உடலுடன் மார்பிங் செய்து, "கால்கேர்ள்' என அவர்களது செல்போன் எண்களை பதிவு செய்துள்ளனர். இதுகுறித்து மாணவிகள் தங்கள் பெற்றோர்களி டம் கூறி அழுதுள்ளனர். சக மாணவர்கள் யாரா வது செய்திருக்கக்கூடும் எனக்கருதி, பெற்றோர் களுடன் வந்து பல்கலைக்கழக நிர்வாகத்திடம் புகாரளித்தனர். புகாரின் பேரில் அவர்கள் விசா ரணை மேற்கொண்டபோது 4 மாணவர்கள் மீது சந்தேகம் இருப்பதாகக் கூறியதால், மாணவிகள் பயிலும் அதே துறையைச் சேர்ந்த 4 பேரை சஸ்பெண்ட் செய்துள்ளனர்.

இதுகுறித்த தகவல் நமக்கு கிடைக்க, உடனடியாக பல்கலைக்கழகத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டோம். அதில், 4 மாணவர்களை சஸ் பெண்ட் செய்தது உண்மை தான் என்பது தெரியவந்தது. இதில் என்ன கொடுமைன்னா, அதில் ஒரு மாணவன், பல்கலைக்கழகத்தில் ஒரு துறையின் தலைவராக உள்ளவரின் மகன், அடுத்து தமிழகம் முழுவதும் பிரபல மான பிரியாணிக் கடையின் சிதம்பரம் கிளையின் உரிமையாளரின் மகன் உள்ளிட்ட 4 மாணவர்கள் எனக் கூறினார்கள்.

Advertisment

ss

இதில் சில பேராசிரியர்கள், "அவர்கள் தான் குற்றவாளிகள் என்பதற்கான சரியான ஆதாரம் இல்லை. சிலரைப் பிடிக்காததால் இந்த பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன'' என்றும் கூறினார்கள். பின்னர் சம்பந்தப்பட்ட துறையின் தலைவராக இருந்த அருளை அவரது அலுவலகத்தில் சந்தித்துப் பேசுகையில், சந்தேகத்தின் அடிப்படையில் 4 பேரை விசாரித்து நடவடிக்கை எடுத்துள்ளோம். தொழில்நுட்ப ரீதியாக சைபர் கிரைம் போலீ சார் விசாரணை மேற்கொண்டால்தான் சரியா கத் தெரியவரும்'' என்றும் கூறினார். மேலும், "இதுகுறித்து பல்கலைக்கழக பதிவாளர், அண்ணாமலை நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளதையொட்டி காவல்துறையினர் சம்பந்தப்பட்ட மாணவிகள் மற்றும் பேராசிரியர்கள், மாணவர்களிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்'' என்றார்.

அண்ணாமலைநகர் ஆய்வாளர் அம்பேத்கரோ, "இதில் மற்ற வழக்குகளைப்போல் உடனடியாகக் கைது செய்ய முடியாது. மிகவும் சென்சிடிவானது. பல்கலைக்கழக நிர்வாகம் எந்த ஆதாரத்தையும் வழங்கவில்லை. நாங்களே இதுகுறித்து கடந்த 15 நாட்களுக்கு மேலாக, தப்பான நபரை கைது செய்துவிடக்கூடாது என்று மிகவும் பொறுமையாக விசாரணை மேற்கொண்டோம். காவல்துறை விசாரணையில் மாணவிகளுக்கு எதிரிகளிடமிருந்து எந்த ஆபத்தும் வந்துவிடக்கூடாது என்பதில் தெளிவாக இருந்தோம். இதில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட மாணவர்களுக்கு சம்பந்தம் இல்லை. வழக்கை முடிப்பதாக இருந்தால் சஸ்பெண்ட் செய்யப்பட்ட 4 பேரில் இருவரை கைது செய்து வழக்கை முடித்திருக்கலாம். சம்பந்தமில்லாதவர் பாதிக்கப்படக்கூடாது. அதிலும் அனைவரும் மாணவர்கள். அவர்களின் எதிர்கால வாழ்க்கையே போய்விடும் என மிகவும் கவனமாக இந்த வழக்கை கையாண்டோம்.

தீவிரமாக விசாரித்ததில், புகாரளித் துள்ள மாணவியின் தோழியின் ஆண் நண்பரான நக்கீரன் என்பவரை பிடித்துள் ளோம். இவர், சிதம்பரம் அருகிலுள்ள தெற்கு சாலியந்தோப்பு கிராமத்தை சேர்ந்தவர். மென்பொறியாளராகப் பணியாற்றும் இவர்தான் இந்த வேலையை செய்தவர் என்பது தெரியவந்துள்ளது. இவர் பள்ளிப் பருவத்திலிருந்தே பழகி வந்துள்ளார். தற்போது திடீரென்று பேச மறுத்து விட்டதால்... அந்த கோபத்தில் இதுபோன்ற வக்கிர புத்தியுடன் நடந்துகொண்டுள்ளார். மேலும், அவரது தொலைபேசி மற்றும் மடிக்கணினியைக் கைப்பற்றி ஆய்வுசெய்து வருகிறோம். அவரை ஞாயிற்றுக்கிழமை இரவு நீதிமன்றக் காவலுக்கு அனுப்பி யுள்ளோம்'' என்றார்.

"காவல்துறை சார்பில், இது போன்ற சம்பவங்கள் மாணவர் களின் வாழ்க்கையை சீரழித்துவிடும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்படும். இதுபோன்ற செயல் களில் ஆசிரியர்களோ, மாணவர் களோ ஈடுபட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்'' என மாவட்ட எஸ்.பி. ஜெயக்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

-காளிதாஸ்

nkn100525
இதையும் படியுங்கள்
Subscribe