"ஹலோ தலைவரே, டெல்லி சென்ற தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி. புதிய அசைன்மெண்ட்டுகளோடு திரும்பிவந்திருக்காராம்.''

"என்ன அசைன்மெண்ட்?''”

RNRavi

"தமிழகத்தின் புதிய கவர்னராகப் பொறுப்பேற்ற ஆர்.என்.ரவி, கடந்த வாரம் டெல்லிக்குச் சென்றார். அங்கு, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், உள்துறை அமைச்சர் அமீத்ஷா உள்ளிட்டோரைச் சந்தித் தார். அமீத்ஷாவைச் சந்தித்தபோது, தமிழக அரசின் நிர்வாகம் சம்மந்தப்பட்ட விவகாரங்கள்ல, நீங்க எந்தவித சமரசமும் செய்துக் காதீங்க. அதேபோல், மத்திய-மாநில அரசுகளின் திட்டங்களை தமிழக அமைச்சர்கள் எப்படி கையாளுறாங்கன்னு கவனிங்க. மேலும் முதல்வர் மு.க.ஸ்டாலின், அவரது மகன் உதயநிதி, மருமகன் சபரீசன் ஆகியோரைத் தீவிரமாக் கண்காணிச்சி, மாதம் ஒருமுறை ரிப்போர்ட் கொடுங்கன்னு அவரிடம் அமீத்ஷா சொல்லியிருக்காராம்.''”

Advertisment

"கவர்னர்னாலே கண்காணிப்பு பணிகள் இருக்கத்தானே செய்யும்!''”

"பா.ஜ.க.வுக்குப் போனால் செல்வாக்கா இருக்கலாம்ன்னு நினைச்சி, காங்கிரசிலிருந்து தாவினார் நடிகை குஷ்பு. சட்டமன்றத் தேர்தல்ல சீட் வாங்கி நின்னும், அவரால் ஜெயிக்க முடியலை. இதன்பிறகு மாநிலத் தலைமை கூட அவரைக் கண்டுக்கலையாம். குஷ்பு அதிருப்தியா இருக்கிற தகவல் கசிய, மாநிலத் தலைவர் அண்ணாமலை, யாரும் யாரையும் தூக்கிச் சுமக்க முடியாதுன்னு சொல்லிட்டாராம். டெல்லி பா.ஜ.க. தலை மையும், கட்சிக்கு உழைக்கிறவங்களுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுங்க. சும்மா, பாப்புலாரிட்டி என்பதற்காக யாருக்கும் பல்லக்கு தூக்காதீங்கன்னு சொல்லிடிச்சாம்.''”

"டெல்லி நிலவரம் தெரிந்ததாலதான், உத்தரப்பிரதேசத்தில் விவசாயிகள் உயிர்ப் பறிப்பு தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிச்சி ட்வீட் பண்ணியிருந்தாரா குஷ்பு?''”

Advertisment

"ஆமாங்க தலைவரே, தமிழக பா.ஜ.க தலைவராக அண்ணாமலை வந்த பிறகு, இன்னும் புதிய நிர்வாகிகள் நியமிக்கப்படலை. அதனால் ஒரு புதிய பட்டியலை அவர் தயாரிச் சிருந்தார். அதில் சீனியர்கள் பலரின் பெயர் விடுபட்டிருந்தது. அதனால், கட்சியின் தேசியத் தலைமை, அந்தப் பட்டியலுக்கு ஒப்புதல் அளிக்கலை. இது குறித்து தேசியத் தலைவர் நட்டாவை சந்தித்து சமீபத்தில் விளக்கம் கொடுத்திருந் தார் அண்ணாமலை. அதைக் கேட்ட நட்டா, அவருக்கு சில உத்தரவுகள் போட்டிருக்கார். அதன் படி மறுபடியும் ஒரு புதிய பட்டிய லைத் தயாரிச்சார் அண்ணாமலை.''”

kushbu

"அதாவது ஓ.கே. ஆகுமா?''”

"அதுலயும் சிக்கல்தாங்க தலைவரே. புதிய பட்டியலில் தங்களின் சிபாரிசுகள் பெயர்களைச் சேர்க்கனும் என்றும், தாங்கள் சொல்லும் நபர்களுக்குப் பதவிகளைத் தரவேண்டும் என்றும், கட்சியில் அதிகாரம் செலுத்தும் மாநில -மாவட்ட முக்கிய புள்ளிகள், அண்ணாமலைக்கு நெருக்கடி கொடுக் கறாங்களாம். எங்களின் பரிந்துரைகளை நீங்க ஏற்கலைன்னா, உங்களைப் பற்றிய பல ரகசியங்களை தேசியத் தலைமைக்குப் புகா ராக அனுப்பி வைப்போம்ன்னு அவங்க எல்லாம் உறுமுறாங்களாம். இந்த நிலையில், உள்ளாட்சித் தேர்தல் முடிந்ததும் புதிய பட்டிய லுடன் டெல்லிக்கு பறக்கத் திட்டமிட்டிருக்கிறாராம் அண்ணாமலை.''

"அ.தி.மு.க.வில் எடப்பாடிக்கும் ஓ.பி.எஸ்.சுக்கும் மறுபடியும் முட்டிக்கிச்சே?''”

"ஆமாங்க தலைவரே, வருகிற நவம்பரில் அ.தி.மு.க. பொதுக்குழுவைக் கூட்டி, தான் கட்சியின் பொதுச் செயலாளராக முடிவெடுத்திருக்கிறாராம் எடப்பாடி. ஓ.பி.எஸ்.சை டம்மி பதவியான கட்சியின் அவைத் தலைவர் பதவியில் உட்கார வைக்கும் முயற்சியிலும் அவர் இருக்கிறாராம். இதற்காக அவர் அனைத்து ஏற்பாடுகளையும் செய்துவருகிறார். இந்த நிலையில் தனக்கென்று பெரிய அளவுக்கு ஆதரவு இல்லாத ஓ.பி.எஸ்.சோ, மாஜியான சி.வி.சண்முகத்துடன் கைகோத்து, எடப்பாடியை எதிர்க்க முனைந்திருக்கிறார். அதனால்தான், தேர்தலில் அ.தி.மு.க. ஆட்சியைப் பறிகொடுக்கக் காரணம், எடப்பாடி வகுத்த மோசமான தேர்தல் வியூகம்தான்னு சண்முகம் சொல்லிக்கொண்டிருக்கிறார். இப்போது எடப்பாடிக்கு எதிராகப் பள்ளம் வெட்டத் துடிக்கிறது இந்தக் கூட்டணி.''”

rr

"சசிகலா குடும்பத்திலும் சச்சரவு தெரியுதே?''”

"உண்மைதாங்க தலைவரே, தினகரன் மகள் ஹரணி திருமணத்தில் கலந்துகொண்ட சசிகலா, உறவினர்களிடம் சரியா முகம் கொடுக்கலையாம். இளவரசி மகன் விவேக்கை, ஜெ.தான் அதிக செல்லம் கொடுத்து வளர்த்தார். ஜெ.வின் விருப்பத்தையும் புறக்கணிப்பையும் மீறி, விவேக்குக்கு, மரக்கடத்தல் பேர்வழியான கட்டை பாஸ்கர் குடும்பத்தில் பெண் எடுத்து திருமணம் செய்து வைத்தார்கள் சசிகலாவும் இளவரசியும். அங்கேயும் பிரச்சினை என்பதால் சசிகலாவுக்கு கவலை அதிகமாயிடிச்சி.''”

"அ.தி.மு.க. மாஜி மந்திரி ஒருத்தர் தொடர்பான வில்லங்க ஆடியோக்கள் இப்ப வெளியாகி பரபரப்பூட்ட ஆரம்பிச்சிருக்கே?''”

”"ஆமாங்க தலைவரே, கடந்த அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தின் கொங்கு மண்டல மாஜி அமைச்சர், மடத்துகுளம் பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்மணியிடம் நெருக்கமான நட்பு காட்டி, தான் வசித்த கிரீன்வேஸ் இல்லத்திலேயே தங்க வைத் திருந்து, ஆட்சி அதிகாரம் போனபிறகு கழற்றி விட்டுவிட்டாராம். இதனால் எரிச்சலான அந்த பெண், "நான் சொந்த ஊருக்கே வந்து, rrஉங்க மனைவி இருக்கும்போதே உன்னுடன் குடும்பம் நடத்து கிறேன்... பார்க்கிறாயா?' என்று ஆடியோவில் சவால் விட்டிருப்ப தோடு, மாஜி தன்னிடம் கொஞ்சிப் பேசிய ஆடியோக்களையும் வெளியிடத் தொடங்கிவிட்டாராம். மேலும், அதிகாரத்தில் இருந்தபோது அவர், அதிகாரிகள் பலரையும் மிரட்டிய ஆடியோக் களையும் வெளியிட்டு, அவருக்கு பலமான அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துக்கொண்டிருக்கிறாராம். இதனால் தனது அரசியல் கேபிள் கனெக்ஷன் "கட்' ஆகிடுமோன்னு மாஜி மிரள்கிறாராம்.''”

"தலைமைச்செயலாளர் பற்றியும் ஒரு பரபர தகவல் பரவிக்கிட்டு இருக்குதே?''”

"அது வந்துங்க தலைவரே... முதல்வர் மு.க.ஸ்டாலின், மாணவர் விடுதி, காவல் நிலையம்னு அங்கங்கே திடீர் விசிட் அடித்து, அதிரடி ஆய்வுகளை நடத்தி, மக்கள் மத்தியில் உற்சாகத்தையும் நம்பிக்கையையும் ஏற்படுத்திக்கிட்டு இருக்கிறார். இந்த நிலையில் கோட்டையில் இருக்கும் முதல்வர் குறை தீர்க்கும் பிரிவிற்கும் கடந்த வாரம் வந்து, பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டார், அப்போது ஒரு இளம்பெண்ணும், அவரது தாயும் முதல்வரிடம் தங்கள் குறைகளைச் சொல்ல, அதை அவர் அக்கறையுடன் கேட்டார். அந்தப் பெண்ணையும் அவரது அம்மாவையும் முதல்வர் வருவதற்கு சற்று முன்பு, அங்கே அழைத்து வந்தவர் தலைமைச் செயலாளர் இறையன்பு. குறை தீர்க்கும் பிரிவுக்கு முதல்வர் வருகிறார் என்பது தெரிந்ததால், அவரது கவனத்திற்கு பிரச்சினை செல்லும் வகையில் இந்த ஏற்பாடுன்னு அங்கே இருந்த ஊடகத்தினர் சொல்றாங்க.''”

"வைகோ மகன் வையாபுரியின் அரசியல் பிரவேசம் பற்றி தகவல்கள் கசியுதே, எப்ப களமிறங்கப்போறாராம்?''”

’"வைகோவின் ஆவேசக் குரல் அண்மைக்காலமா பலமா ஒலிக்கலை. அவரது வயது காரணமாக உடல்நலனில் அக்கறையும் ஓய்வும் தேவைப்படுது. கட்சியினர் பலரும் துரை வையாபுரியை, நேரடி அரசியலில் களம் இறக்க வலியுறுத்திய நிலையில், துரை வையாபுரியும் தன் பெயரை, துரை வைகோ என்று மாற்றியிருக்கிறார். நேரடி அரசியலுக்கு வருவதற்கான பொருத்தமான சூழலை எதிர்பார்த்திருக்கிறார் துரை வையாபுரி.''”

"திரைப்பட இயக்குநர் ஒருத்தரும் நேரடி அரசியலுக்கு வர ரெடியாகுறாராமே?''”

"ஆமாங்க தலைவரே, பிரபல இயக்குநர்களில் ஒருவரான வெற்றிமாறன் சமீபத்தில் தனது பிறந்தநாளை, போஸ்டர், விளம்பரம் என்று வெகு விமரிசையாகக் கொண்டாடி இருக்கார். இதில் அரசியல் கட்சியினரும் சினிமா பிரபலங்களும்கூட கலந்துக்கிட்டு வெற்றிமாறனை வாழ்த்தியிருக்காங்க. இதை கவனித்த அவரது நட்பு வட்டாரம் வெற்றிமாறன், ஆளுந்தரப்பின் ஆதரவில் நேரடி அரசியல் களத்தில் அவரைப் பார்க்கலாம் என்று சொல்கிறது. இதற்கிடையே, 6 சைமா விருதுகளைப் பெற்ற வெற்றிமாறனின் "அசுரன்' படம், சர்வதேச விருதுக்கான பயணத்தைத் தொடங்கி இருக்குதாம்.''”

"டான்ஸ் ஆடி பக்தர்களைச் சேர்த்து, பணம் பெருக்கி, பள்ளிக் கூடம் கட்டி அதை பா-யல் கூடமாக்கியவர் சிவசங்கர் பாபா. அவர்மீது ஆதாரத்துடன் தெரிவிக்கப்பட்ட புகார்களால் பல போக்ஸோ சட்டங்கள் பாய்ந்தன. வழக்கின் ஆரம்ப வேகம் இப்போது இல்லை. சிவசங்கர் பாபா மீது சார்ஜ் ஷீட்டோ, குண்டாஸோ போடவில்லை. காரணம், போன ஆட்சியில் அதிகாரத்துடன் இருந்த வக்கீலே இப்போதும் செல்வாக்குடன் இருந்தபடி, சிவசங்கரை குண்டாஸ் பாயாமல் காப்பாற்றுகிறாராம். இதற்காக அவருடைய அக்கவுண்டுக்கு கடல் கடந்து பணம் வருகிறதாம்.''