நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில், மாவட்ட, ஒன்றிய, நகரப் பொறுப்புகள் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளுக்கும், அணிகளுக்கும் நிர்வாகிகளை நியமித்து வரு கிறார்கள். அதோடு வாக்குச்சாவடி கமிட்டி களையும் அமைத்து வருகிறார்கள். இந்நிலை யில், கட்சிப் பதவிகளுக்கு பணம் வசூலிக்கப் படுகிறது. பணம் இல்லையேல் பதவியில்லை என்ற நிலையை உருவாக்கியுள்ளனர் என்று, கடந்த 27ஆம் தேதி விழுப்புரத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொண்ட சீமான் குமரேசன், இளையராஜா, கோலியனூர் சுரேஷ் உள்ளிட்ட இருபதுக்கும் மேற்பட்டோர் குற்றச்சாட்டுகளை அள்ளி வீசினார்கள்.
"மாவட்ட செயற்குழு உறுப்பினர் பதவிக்கு என்னிடம் மாவட்ட செயலாளர் குஷி மோகன் நாலு லட்சம் பணம் கேட்டார்'' என்றார் குமரேசன். "நகரச் செயலாளர் உட்பட 15 பேர் கொண்ட பொறுப்பாளர்களுக்கு லட்சக்கணக் கில் பணம் கேட்டார். குறிப்பாக நகர செயலாள ராக என்னை ஏற்கனவே முடிவுசெய்த நிலை யில்,
நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில், மாவட்ட, ஒன்றிய, நகரப் பொறுப்புகள் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளுக்கும், அணிகளுக்கும் நிர்வாகிகளை நியமித்து வரு கிறார்கள். அதோடு வாக்குச்சாவடி கமிட்டி களையும் அமைத்து வருகிறார்கள். இந்நிலை யில், கட்சிப் பதவிகளுக்கு பணம் வசூலிக்கப் படுகிறது. பணம் இல்லையேல் பதவியில்லை என்ற நிலையை உருவாக்கியுள்ளனர் என்று, கடந்த 27ஆம் தேதி விழுப்புரத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொண்ட சீமான் குமரேசன், இளையராஜா, கோலியனூர் சுரேஷ் உள்ளிட்ட இருபதுக்கும் மேற்பட்டோர் குற்றச்சாட்டுகளை அள்ளி வீசினார்கள்.
"மாவட்ட செயற்குழு உறுப்பினர் பதவிக்கு என்னிடம் மாவட்ட செயலாளர் குஷி மோகன் நாலு லட்சம் பணம் கேட்டார்'' என்றார் குமரேசன். "நகரச் செயலாளர் உட்பட 15 பேர் கொண்ட பொறுப்பாளர்களுக்கு லட்சக்கணக் கில் பணம் கேட்டார். குறிப்பாக நகர செயலாள ராக என்னை ஏற்கனவே முடிவுசெய்த நிலை யில், நான் பணம் தர மறுத்ததால், தி.மு.க.வி லிருந்து சமீபத்தில் எங்கள் கட்சியில் இணைந்த முபாரக் என்பவருக்கு நகரச்செயலாளர் பதவி கொடுக்கப்பட்டுள்ளது'' என்கிறார் இளைய ராஜா.
"கோலியனூர் ஒன்றிய செயலாளர் பதவிக்கு 4 லட்சம் பணம் கேட்டார்கள். தர வில்லையென்றதும் வேறு நபருக்கு அந்த பதவி வழங்கப்பட்டுள்ளது" என்கிறார் கோலியனூர் சுரேஷ். நாங் கள் பல்லாண்டு களாக ரசிகர் மன்றத்திலிருந்து, பல்வேறு நலத் திட்ட உதவிகள் வழங்கி வரு கிறோம். ஆனால் கட்சி ஆரம்பிக்கப் பட்டபிறகு, பணத் தை மட்டுமே நோக்க மாகக்கொண்டு பதவி களை வழங்குகிறார் மாவட்ட செயலாளர் மோகன்.
"பதவிகளுக்கு பணம் கேட்க லாமா?' என்று மாவட்ட செயலாள ரிடம் கேட்டபோது, கட்சித் தலைமை கேட்பதாகத் தலைமையின் மீது பழி போடு கிறார். தலைவர் விஜய் இதுபோன்ற செயல் களை ஏற்றுக்கொள்ளமாட்டார் என்பது எங்க ளுக்கு தெரியும். இதுகுறித்து பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்துக்கு வாட்ஸப் மூலம் பலமுறை தக வல் தெரிவித்தும் அவர் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே இவ்விவகாரத்தை தலைவர் விஜய் பார் வைக்கு கொண்டுபோவதற்காகவே இந்த சந்திப்பை நடத்துகிறோம். மற்றபடி கட்சித் தலைவர்மீது எந்த கோபமும் இல்லை. கட்சிக்கு கெட்ட பெயர் ஏற்படுத்தும் நோக்கமும் இல்லை'' என்றார்கள்.
கட்சிப் பதவிக்கு பணம் கேட்டதாக எழுப்பப் படும் குற்றச்சாட்டுகள் குறித்து குஷி மோகன் தரப்பில் கேட்டோம். "யாரிடமும் கட்சிப்பதவிக்கு பணம் கேட்கவில்லை. முற்றிலும் பொய்யான குற்றச் சாட்டுகளைத் தெரிவித்துள்ளனர். ஏற்கெனவே தளபதி மன்றத்தில் இருந்தவர்களுக்கும், பல்வேறு கட்சிகளிலிருந்து வந்தவர்களில் தகுதியானவர் களுக்கும் பதவிகள் வழங்கப்படுகிறது. தேர்தல் ஆணைய விதிமுறைப்படி பொறுப்பாளர்களுக்கு விதிக்கப்பட்ட கட்டணத்தை வங்கிக் காசோலை மூலம் செலுத்த வேண்டும். அதை தேர்தல் ஆணையத்திற்கு கட்சித்தலைமை அனுப்பி வைக்கும். அந்த நடைமுறைப் பணியைத்தான் செய்து வருகிறோம். விழுப்புரத்தில் அனைத்துத் தரப்பினரையும் திருப்திப்படுத்தும் வகையில் பதவிகளை வழங்கி வருகிறோம். இதில் எந்த முறைகேடும் இல்லை. கட்சிக்கு கெட்ட பெயரை ஏற்படுத்தும் நோக்கத்தில், தி.மு.க.வின் மறைமுகத் தூண்டுதலில் அதுபோன்ற குற்றச்சாட்டுகளை வைக்கிறார்கள். கட்சித் தலைமைக்கு உண்மைத்தன்மை தெரியும். இவர்களது பொய்க் குற்றச்சாட்டுகள் ஒருபோதும் மக்களிடம் எடுபடாது'' என்றனர்.
"கட்சி வளர்ச்சியைக் கண்டு நடுங் கிக்கொண்டிருக்கும் தி.மு.க.வினர், எங்கள் கட்சிக்குள்ளே ஊடுருவி இதுபோன்ற சதிச் செயல்களை செய்து கெட்டபெயரை உருவாக்க முயற்சிக்கிறார்கள். கட்சியில் பதவிக்கு பணம் கேட்கிறார்கள் என்ற குற்றச்சாட்டு எழுந்தால் முறைப்படி கட்சித்தலைமைக்கு புகாரளிக்க வேண்டும். புகார்மீது நடவடிக்கை இல்லையென்றால் தான் அதை வெளிப்படுத்தவேண்டும். ஆனால் இவர்களோ, எடுத்தவுடன் பிரஸ்மீட் நடத்துகிறார்கள். இதன்மூலம் கட்சியின் நற்பெயரைக் கெடுக்க நினைக்கிறார்கள். 2026 தேர்தல் இதற்கெல்லாம் பதில் அளிக்கும்'' என்கிறார்கள் தமிழக வெற்றிக் கழகத்தினர்.
சென்னையில் நடைபெற்ற முதல் பொதுக்குழுக் கூட்டத்தில் விஜய், தி.மு.க.வை மிகக்கடுமையாக சாடிப் பேசினார். "ஜனநாயக ரீதியாக என் கட்சித் தொண்டர்களை, மக்களைச் சந்திக்கத் தடை போடுவதற்கு நீங்கள் யார்? தடையை மீறி அந்த மக்களை சந்திக்க நான் தயாராக உள்ளேன். ஆனால் சட்டத்தை மதிக்க வேண்டும் என்ற ஒரே காரணத்துக்காகத்தான் அமைதியாக இருக்கிறேன். ஆற்றுத் தண்ணீரை வேண்டுமானால் அணை போட்டுத் தடுக்கலாம், காற்றைத் தடுக்க முடியாது. மீறித் தடுக்க நினைத்தால் காற்று சூறாவளியாக மாறும்'' என்றெல்லாம் மிகக்கடுமையாக விஜய் பேசினார். அவரது கடுமைக்கான பல்வேறு காரணங்களில், விழுப்புரத்தில் விஜய் கட்சிக்கு எதிராகச் சிலர் பகிரங்கமாக ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்ததில் தி.மு.க.வின் ப்ளே இருப்பதாக விஜய் நினைத்ததும் ஒரு காரணமென்று சொல்கிறார்கள் இப்பகுதியை சேர்ந்த த.வெ.க.வினர்.