மிழகத்தில் பிரபலமான சன், விஜய், ஜீ தொலைக்காட்சிகளில் சீரியல் நடிகையாக நடித்துவருபவர் ரிஹானா பேகம். சில நாட்களுக்கு முன்பு அவர்மீது பூந்தமல்லி காவல் நிலையத்தில் ராஜ்கண்ணன் என்பவர் திருமண மோசடிப் புகார் ஒன்று கொடுத்திருந்தார். அந்த புகாரில், ஏற்கெனவே திருமணம் நடந்து, ரிஹானாவுக்கு விவாகரத்து ஆகாமலே அவரை ஏமாற்றி திருமணம் செய்ததாகவும், 18 லட்சம் பணத்தை ஏமாற்றிவிட்டதாகவும், அதனைப் பெற்றுத்தர நடவடிக்கை எடுக்குமாறும் தெரிவித்திருந்தார். இதில் ட்விஸ்ட்டாக, ராஜ்கண்ணன் தான் தன்னிடம் 18 லட்சம் ரூபாயை ஏமாற்றியதாக அவர்மீது ரிஹானா பேகம் ஆவடி கமிஷனர் அலுவலகத்தில் புகாரளித்துள்ளார். இப்படி ஒருவர் மீது ஒருவர் புகாரளித்ததால் சர்ச்சை கிளம்பியுள்ளது.

Advertisment

actress

இந்த பிரச்சனை எப்படி கிளம்பியதென்று பார்த்தால், ராஜ்கண்ணனுக்கும் நடிகை ரிஹானா பேகத்திற்கும் 2023ஆம் ஆண்டு ரிஹானாவின் தோழி மூலமாக பழக்கம் ஏற்பட்டுள்ளது. ரிஹானா பேகத்தின் தோழியும் கண்ணனும் லிவிங் டுகெதரில் இருந்திருக்கின்றனர். அவர்களிடையே பிரச்சனை எழ, அதை தீர்த்துவைக்கும் வகையில் ரிஹானா பேசியுள்ளார். இதில், ரிஹானா பேகத்துக்கும் கண்ணனுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில் கண்ணன் பிசினஸ் செய்யப்போவதாகவும், ரிஹானாவுக்கு ஆர்வமிருந்தால் பார்ட்னராக இணைந்து செயல்படலாமென்றும் சொல்ல, ரிஹானா அதுகுறித்து விவரம் கேட்டிருக்கிறார். வேளச்சேரியிலுள்ள பீனிக்ஸ் மால் முன்புள்ள கட்டடத்தில் வாடகைக்கு எடுத்து, 'பாய்சன் ரெஸ்டோ பார் லவுஞ்ச்' என்ற பெயரில் தொடங்கவுள்ளதாகவும், விருப்பமிருந்தால் 20 லட்சம் கொடுங்க, மாதம் உங்களுக்கு 5 லட்சம் வருமானமாக வந்துவிடும் எனச் சொல்லி யிருக்கிறார். ஏற்கெனவே கணவரை பிரிந்து வாழும் ரிஹானா பேகத்திற்கு, தன் குடும்பத்தை நடத்துவதற்கு இந்த பிசினஸ் வருமானம் உதவியாக இருக்குமென எண்ணி, தன் பங்காக 15 லட்சம் ரூபாய் கொடுத்துள்ளார்.

Advertisment

அதன்பின்னர், கண்ணன் சொன்னபடி ஒரு மாதம்கூட ஒழுங்காக பணம் கொடுக்கவில்லையாம். இதனால் ஆத்திரமடைந்த ரிஹானா கேள்வி யெழுப்ப, தொழில் நஷ்டத்தில் செல்வதாகவும், கொஞ்சம் பொறுத்துக்கொள்ளும்படியும் சொன்னதால் வேறு வழியில்லாமல் பணத்திற்காகக் காத்திருந்துள்ளார். இந்த சூழ்நிலையில் கண்ணன் வேறொன்றை திட்டமிட்டு, ரிஹானாவை தொடர்புகொண்டு, "உனக்கு ஒரு எதிர்பாராத ஆச்சர்யம் நிகழப்போகிறது'' எனக்கூறி வர வழைத்துள்ளார். ரிஹானாவும், தனது பணத்தைத் தான் தரப்போகிறாரென்ற எண்ணத்தோடு சென்றுள்ளார். ஆனால் அங்கோ, பணத்தை எதிர்பார்த்த ரிஹானாவுக்கு, அவரை கண்களை மூடச்சொல்லி, திடீரென தாலியைக் கட்டி பேரதிர்ச்சியை கொடுத்துள்ளார் கண்ணன்.

ரிஹானா கணவரைப் பிரிந்துவாழும் சூழலில், அவரை மனைவியாக்கிக்கொண்டால், கொடுத்த பணத்தை அவர் திரும்பக் கேட்கமாட் டார் என்று திட்டமிட்டே இப்படி செய்திருக் கிறாராம். மேலும் தன்னுடைய காரில் அழைத்துச் சென்று பாட்ஷா பட பாணியில் "நான் யாரு என்று தெரியுமா?" என காரில் இருந்த கத்திகளைத் தூக்கிக் காட்டி, "என்னுடைய பெயர் கண்ணன் இல்லை அழகர்சாமி. நான் பெசன்ட் நகரில் பிறந்து வளந்தவன். சிறுவயதிலேயே சிறைக்குச் சென்றவன். பிறகு பல பிரபல ரவுடிகளுடன் கொலைகளைச் செய்துள்ளேன். என்மீது 76 வழக்கு கள் உள்ளன. என்னை ஏற்றுக்கொள்ளவில்லை என்றால் உன் ஆசைக்குழந்தைகள் என்ன ஆவார்கள் என்று எனக்கே தெரியாது'' என மிரட்டவே, வேறுவழியில்லாமல் தன்னுடைய குழந்தைகளுக்காக சில காலம் கண்ணன் சொல்லும்படி வாழ்ந்துள்ளார்.

Advertisment

பிறகு மேலும் சொல்லமுடியாத அளவிற்கு பல பிரச்சனைகளை எதிர்கொண்டதால், உடனே மகளிர் ஆணையத்தில் 2024-ஆம் ஆண்டு புகார் கொடுத்துள்ளார் ரிஹானா. அந்த புகாரை மகளிர் ஆணையம் விசாரித்ததில், கண்ணன் செய்த அனைத்தும் வெட்ட வெளிச்சமானது. அதை யடுத்து, இனிமேல் ரிஹானா பேகத்திற்கும் அவருக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்றும், அவரோடு எந்த பிரச்சனையும் செய்ய மாட்டேனென்றும், ரிஹானாவிடம் வாங்கிய பணத்தை நீதிமன்றத்தின் மூலமாகக் கொடுத்து விடுவதாகவும் எழுத்துமூலமாக எழுதிக்கொடுத்து விட்டுச் சென்றுள்ளார் கண்ணன்.

இது முடிந்து ஒரு வருடம் கழித்து மீண்டும் தற்போது ஜூன் 15ஆம் தேதியன்று பூந்தமல்லி காவல்நிலைத்தில், "ரிஹானா பேகம் என்பவர் ஏற்கெனவே திருமணம் நடந்து, அவருக்கு விவாக ரத்து ஆகாமலே என்னை ஏமாற்றி திருமணம் செய்துகொண்டதோடு, எனது 18 லட்சம் பணத்தை ஏமாற்றிவிட்டார்' என்று புகார் கொடுத்திருந்தார் கண்ணன். அதன்படி இருவரையும் 18ஆம் தேதி பூந்தமல்லி காவல் நிலையில் விசாரணைக்கு ஆஜராகச்சொல்ல, ரிஹானாபேகம் அன்று ஆஜராகவில்லை. ரிஹானா பேகமோ, 'கண்ணனின் பணத்தை நான் ஏமாற்றவில்லை அவர்தான் என்னை ஏமாற்றினார்' என்று ஆவடி கமிஷனர் அலுவலகத்தில் புகாரளித்துள்ளார். இதனால் இருவரையும் மற்றொரு நாளில் விசாரணைக்கு ஆஜராகும்படி உத்தரவிட்டுள்ளதால், கூடிய விரைவில் விசாரணை செய்யவுள்ளனர். அந்த விசாரணையின் முடிவில் இருவரில் யார் குற்றவாளியென்பது அம்பலமாகக்கூடும். இவர்களது விவகாரம், சீரியலைவிட பெரிய அளவில் ட்விஸ்டோடு போய்க்கொண்டிருக்கிறது!

-சே